இந்த எழுத்து நமக்கு பிடித்த வேலைதான். ஆனா எழுதறதுக்கு ரொம்ப மெனக்கெடனும். ஆனா படிக்கிறது அப்படி இல்லை. நிறைய நிறைய படித்துக் கொண்டே இருக்கலாம். இதுல நாம என்ன புதுசா எழுதறது... அப்படிங்கிற தயக்கம் நிறையவே இருந்தது. இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.
நானும் வாசிக்க தொடங்கியது பொன்னியின் செல்வனில்தான். அப்பொழுது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைவு. மூன்று முறை கல்கியில் தொடராக வெளிவந்து அதை எனது மாமா தனியாக புத்தகமாக பைண்ட் செய்து வைத்திருந்தார். அந்தக் கதையோடு வெளிவந்த படங்களில் யாருடையது நன்றாக இருக்கும்? மனியமா? வினுவா? மனியம் செல்வனா? (நான்காவது பதிப்பு பத்மவாசனின் படங்களோடு வந்தது) இப்படிப்பட்ட சூடான விவாதங்களில் உந்தப்பட்டு அந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். பின்னர் ஒவ்வொரு பள்ளி விடுமுறையும் புத்தகம் படிப்பதிலே கழிந்தது. காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது கையில் எடுக்கும் புத்தகம் இரவு படுக்கை வரை கையிலேயே இருக்க வேண்டும். பசி, வெளிச்சம், தூக்கம், சுற்றம் தெரியாத ஒரு மோன நிலைதான்.
மாமாவிடம் பெரிய லைப்ரரி இருந்தது. எல்லா எழுத்தாளர்களிலும் குறைந்தது 20 புத்தகங்களாவது இருக்கும். கல்கி, தேவன், சாண்டில்யன், சுஜாதா, சிவசங்கரி, பாலகுமாரன், லக்ஷ்மி, ரா.கி. ரங்கராஜன், தி ஜா, ஜெயகாந்தன், மெரீனா, ஸ்டெல்லா புரூஸ், அகஸ்தியன், கடுகு, பாக்கியம் இராமசாமி, சோ இராமசாமி, எஸ்ஏபி, புனிதன், சாவி இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களை தேடித் தேடிப் படித்தாகி விட்டது. ராஜெஷ்குமார், ராஜேந்திரகுமார், ப.பிரபாகர், சுபா போன்றவர்கள் மாதம் 30 துப்பறியும் நாவல்கள் எழுதிய காலம். புதிய நாவல்கள், பழைய பைண்ட் நாவல்கள் என்று எப்பொழுதும் பெரிய விருந்துதான். பின்னர் ஜெஃபரி ஆர்ச்சர், ஜான் கிரிஷம், ஸிட்னி ஷெல்டன் போன்றோர் அறிமுகமாகி pulp fiction-களில் திளைத்த காலமும் உண்டு. இன்றும் ஆர்ச்சரின் சிறுகதைகள் ஒரு சிறந்த வாசிப்பனுபவம்.
கதைகள் படிப்பது நேர விரயம் என்ற ஒரு கட்டுபாட்டில் கல்லூரிக்காலம் வரை கழிந்தது. பிறகு வேலையில் சேர்ந்த பின் அறிமுகமானது திண்ணை. திண்ணையில் அப்பொழுது நிறைய பேர் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து இணையம் மூலமாக புதுமைப் பித்தன், அசோகமித்திரன், சுந்தர இராமசாமி, ஜெயமோகன், இரா முருகன், சாரு நிவேதிதா, நகுலன், பிரமீள் (எ) தர்மு சிவராமு போன்ற பலரையும் தேடித் தேடி வாசித்துக் கொண்டுதானிருக்கிறேன். யாரையும் விட்டுவிட மனமில்லை.
நிறையப் பதிவுகள் படிக்கின்றேன். நிறையப் புரிதல்கள் கிடைக்கின்றன. இன்னமும் எழுதுவதில் தயக்கமாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து எழுதி பார்ப்போம். இல்லையென்றால் மீண்டும் படிக்க போய்விட வேண்டியதுதான்.
27 மறுமொழிகள்:
எழுத ஆரம்பித்ததற்கு மகிழ்ச்சி.
ஆஹா, நீங்க கல்கில ஆரம்பிச்சீங்களா...? நான் முதலில் அம்புலி மாமா / பாலமித்ரா / மந்திரக் கதைகளில் தொடங்கினேன். பிறகு தமிழ்வாணன். 6ம் வகுப்பு படிக்கும்போது பாலகுமாரனைப் பார்க்க சிம்சன் நிறுவன சாலையோரத்தில் காத்துக் கிடந்தது ஞாபகமிருக்கிறது.
10 அல்லது 11 வயதிலிருந்து சுஜாதா. 17 வயதிலிருந்து ஜெயகாந்தன். முதலில் சுஜாதா மூலமாகவே பல இலக்கிய எழுத்தாளர்கள் (ஞானக்கூத்தன் / வண்ணதாசன் / வண்ண நிலவன்...) பரிச்சயமேற்பட்டது. ஆனால், தீவிர எழுத்தாளர்களைப் படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சுஜாதா பிடிக்காமல் போய் விட்டது :)
உங்களுடைய பின்னூட்டங்கள் உங்களுடைய வாசிப்பின் விரிவான எல்லைகளைக் காண்பிக்கின்றன. நீங்கள் நிச்சயம் நன்றாக எழுதமுடியும் என்பது என் எண்ணம்.
ஜ்யோவ்ராம் சுந்தர்,
உங்கள் பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி. அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், மற்றும் இந்திரஜால், ராணி, முத்து, லயன் காமிக்ஸ்களும் அடக்கம்தான் :-).
ஆனால் பொன்னியின் செல்வன் ஒரு பெரிய உந்துதல். அது ஒரு நாட்டிய அரங்கேற்றம் போல் எங்கள் வீட்டில் ஒரு நிகழ்வு.
இது வரை ஒரு எழுத்தாளரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்ததில்லை. ஒரே ஒரு முறை சுஜாதாவை நேரில் சந்தித்த பொழுது சம்பிரதாயமாக 'உங்கள் கண் எப்படி இருக்கிறது' (அவர் கண் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அணியும் ஒரு கண்ணாடியை கையில் வைத்திருந்தார்) என்று கேட்டுவிட்டு வந்து விட்டேன். இத்தனைக்கும் அவர் ஆக்கங்கள் அத்தனையும் விடாமல் படித்து இருக்கிறேன் :-))
கூச்சம் மட்டுமல்ல. அவர்களை சங்கடப் படுத்த வேண்டாம் என்ற எண்ணமும்தான்.
//ஆனால், தீவிர எழுத்தாளர்களைப் படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சுஜாதா பிடிக்காமல் போய் விட்டது :)//
ஆம். அவரோட 'யவனிகா' படித்த பொழுது நிரம்பவும் ஏமாற்றமாகவே இருந்தது. அவருடைய புதினங்களை விட சிறுகதைகளும், கட்டுரைகளும் இப்பொழுதும் படிக்கப் பிடிக்கும்.
//தொடர்ந்து எழுதி பார்ப்போம். இல்லையென்றால் மீண்டும் படிக்க போய்விட வேண்டியதுதான்//
என்ன பயமுறுத்தறீங்களா? :-)
படிக்க எல்லாம் தனியாப் போக வேணாம்! எழுதிக்கிட்டே படிங்க! பின்னூட்டத்தைச் சொல்லலை! பதிவையும் தான்! :-)
சரி, நீங்க பதிவு போடத் துவங்கிய உடனேயே ஒருத்தர் ஊரைக் காலி பண்ணறாரே!
என்ன விசயம் ஸ்ரீதர் அண்ணாச்சி? :-)
//உங்களுடைய பின்னூட்டங்கள் உங்களுடைய வாசிப்பின் விரிவான எல்லைகளைக் காண்பிக்கின்றன//
ரிப்பீட்டே!
நான் பூந்தளிர்-ல ஆரம்பிச்சேன் ஸ்ரீதர்! அப்படியே அமர் சித்ர கதா! அப்பாலிக்கா பாலகுமாரன், சுஜாதா, ஞானக் கூத்தன், நா.பிச்சமூர்த்தி, தேவநேயப் பாவாணர், அறிஞர் அண்ணா, மு.வ, கல்கி என்று பின்னுக்குப் போய், மறுபடியும் சுஜாதாவிடமே முன்னுக்கு வந்தேன்! :-))
ஜெஃபரி ஆர்ச்சர் ஃபேவரிட்!
பாக்கெட் நாவல் என்னிக்குமே நம்ம லாக்கெட் நாவல்! சர்வ கவலை நிவாரணி! :-)
ரோமானிய இலக்கியங்கள், சங்கத் தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பிரபந்தங்கள், மில்டன், ஷேக்ஸ்பியர்-ன்னும் தனியா ஒரு ரவுண்டு!
அடிச்சி ஆடுங்க!
எப்படியும் நாங்களும் உங்களை அடிச்சி ஆடத் தான் போறோம்!:-)
வாழ்த்துக்கள் ஸ்ரீதர் அண்ணாச்சி!
//சரி, நீங்க பதிவு போடத் துவங்கிய உடனேயே ஒருத்தர் ஊரைக் காலி பண்ணறாரே!
என்ன விசயம் ஸ்ரீதர் அண்ணாச்சி? :-)//
யாரைச் சொல்றீங்க? விட்டா அவர்தான் நான்னு சொல்வீங்கப் போல :-)) நல்லா கெளப்புறீங்க பீதிய.
//ரோமானிய இலக்கியங்கள், சங்கத் தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பிரபந்தங்கள், மில்டன், ஷேக்ஸ்பியர்-ன்னும் தனியா ஒரு ரவுண்டு!//
ஆஹா! அப்ப இதைப் பத்தி ஒரு அறிமுகம் செய்து வைக்கலாமே. :-)
//எப்படியும் நாங்களும் உங்களை அடிச்சி ஆடத் தான் போறோம்!:-)//
ஒரு படத்தில் வடிவேலுவை முத்துக்காளை 'வா... செத்து செத்து விளையாடலாம்'னு கூப்பிடுவாரே அது ஏன் இப்ப ஞாபகத்துக்கு வருதுன்னு தெரியலை. :-))
//வாழ்த்துக்கள் ஸ்ரீதர் அண்ணாச்சி!//
நாங்கல்லாம் மூணாங்கிளாசில எழுத்துக்கூட்டிக்கிட்டு இருந்திருப்போம்ல...
கல்கண்டு .. தமிழ்வாணன்... அப்படியே கொஞ்சூண்டு தூரம்போச்சு...
வரவேற்பு சொல்லணும்ல ..
வாங்க .. வாங்க
//வரவேற்பு சொல்லணும்ல ..
வாங்க .. வாங்க//
வந்துட்டோம்ல :-)
வாத்தியார் வரச் சொல்லிட்டிங்க. அப்புறம் வீட்டுப் பாடம் எங்கன்னு மிரட்ட மாட்டிங்கன்னு நம்பறேன் :-))
தமிழ்வாணனை படித்தது இல்லை. அவருடைய வர்ணணைகளை இணையத்தில் ஆங்காங்கே படித்ததுண்டு. 'சங்கர்லால்' திரைப்படத்தில் துப்பறிந்ததை ஒரு சிலக் காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.
அவருடைய துணுக்குச் செய்திகளுக்கு பெரும் வீச்சு இருந்தது என்பது உண்மைதான்.
ஸ்ரீதர் நாராயணன்,
புதிய களம் தொடங்கியதற்கு வாழ்த்துகள்.
வாங்க வாங்க.
WELCOME... WELCOME :))
அறிமுக பதிவே நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.
இந்த Sri ய எப்டிங்க தமிழ்ல தட்டச்சு செய்யிறது?
நல்வரவு!
நான் முதலில் படிக்காரம்பிச்சது தினமணி
கண்ணன்,
வாழ்த்துகளுக்கு நன்றி :-)
இளா,
வந்தாச்சு, வந்தாச்சு :-)
சென்ஷி,
நீங்க ஆங்கிலத்தில வரவேற்பதற்கும் பின்னாடி போட்ட ஸ்மைலிக்கும் ஏதோ பின்நவீனத்துவ சூழல் காரணமாயிருக்கும்னு கண்டிப்பா நம்பலை நான் :-)
ஜோசப்,
நன்றி. தொடர்ந்து எழுதத்தான் திட்டம். பார்ப்போம் :-)
நீங்க தமிழில் எழுத எந்த நிரலி பாவிக்கிறீர்கள்? e-கலப்பை என்றால் s+r=ஸ்ரீ கொடுக்கும்.
மோகன்,
அப்ப நீங்க 'கன்னித்தீவு' படிக்கும் வாய்ப்பை இழந்திட்டீங்களா? :-))
வாங்க வாங்க :-)
எல்லாரும் அவுங்க முதல்ல என்ன படிச்சாங்கனு சொல்லனுமா?
நான் முதல்ல பாட புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். அது சரியா படிக்கலனு ஆனதுக்கு அப்பறம் சிறுவர் மலர் படிக்க ஆரம்பிச்சேன்...
இப்ப எதுவுமே படிக்கறதில்லை... அப்பாடா... நானும் சொல்லிட்டேன் :-)
பதிவுகளில் எழுத வந்ததற்கு வாழ்த்துகள் நண்பா...
வெட்டி,
வரவேற்புக்கு நன்றி. :-)
நீங்க பெரிய படிப்பாளிதான். ஒத்துக்கறேன். :-)
நான் படிச்ச எலிமெண்டரி ஸ்கூல்ல ஹோம் ஒர்க் கொடுத்து கைய ஒடிச்சிடுவாங்க. முழுப் பரீட்சை லீவுலதான் எந்த கதை புக்கும். அப்புறமா மதுரையின் பிரசித்திப் பெற்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளில சேர்ந்தேன். நோ ஹோம் வொர்க். எஞ்சாய் மாடி-ன்னு ஆயிடுச்சி :-)
சிவராமன் சார்,
உங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. :-)
மிகவும் தாமதமா வந்து சொல்றேன்...வாங்க!வாங்க!
அப்பொழுது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைவு//
மூனாம்ப்புல தான் எங்களூக்கெல்லாம் ஓரோன்ஒன்னு ஆர்மிச்சாங்க :)
இதுல நாம என்ன புதுசா எழுதறது... அப்படிங்கிற தயக்கம் நிறையவே இருந்தது. இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.//
அப்படியெல்லாம் நினைத்தால் நானெல்லாம் எழுத முடியுமா?
‚¾÷
þó¾ô Àì¸õ þô§À¡¾¡ý ÅÃ
ÓÊïºÐ.
¯¹¸û À¾¢×¸Ç¢ø ¿øÄ ¸ñ§½¡ð¼õ þÕ츢ÈÐ.
¿¡Ûõ ÁШà §ºÐÀ¾¢ Á¡½Åý ¾¡ý.
ÓýÒ ¿¢¨È ÀÊò¾ÐñÎ! ±Ø¾¢ÂÐõ ¯ñÎ! þô¦À¡ ¦¸¡ïºõ ¼î Å¢ðÎô §À¡öÅ¢ð¼Ð.
þÉ¢ «Êì¸Ê ÅÕ§Åý.
¿¡½¡.
// Naana said...
‚¾÷
þó¾ô Àì¸õ þô§À¡¾¡ý ÅÃ
ÓÊïºÐ.
¯¹¸û À¾¢×¸Ç¢ø ¿øÄ ¸ñ§½¡ð¼õ þÕ츢ÈÐ.
¿¡Ûõ ÁШà §ºÐÀ¾¢ Á¡½Åý ¾¡ý.
ÓýÒ ¿¢¨È ÀÊò¾ÐñÎ! ±Ø¾¢ÂÐõ ¯ñÎ! þô¦À¡ ¦¸¡ïºõ ¼î Å¢ðÎô §À¡öÅ¢ð¼Ð.
þÉ¢ «Êì¸Ê ÅÕ§Åý.
¿¡½¡.
//
Naana,
நீங்க TSCII-ல மறுமொழி போட்டிருக்கீங்கப் போல. அதுக்கு உண்டான Font இல்லாம எல்லாருக்கும் தெரியாதே. Unicode-ல மாத்திப் போடுங்களேன் ப்ளீஸ்.
// Naana said...
‚¾÷
þó¾ô Àì¸õ þô§À¡¾¡ý ÅÃ
ÓÊïºÐ.
¯¹¸û À¾¢×¸Ç¢ø ¿øÄ ¸ñ§½¡ð¼õ þÕ츢ÈÐ.
¿¡Ûõ ÁШà §ºÐÀ¾¢ Á¡½Åý ¾¡ý.
ÓýÒ ¿¢¨È ÀÊò¾ÐñÎ! ±Ø¾¢ÂÐõ ¯ñÎ! þô¦À¡ ¦¸¡ïºõ ¼î Å¢ðÎô §À¡öÅ¢ð¼Ð.
þÉ¢ «Êì¸Ê ÅÕ§Åý.
¿¡½¡.
//
Naana,
நீங்க TSCII-ல மறுமொழி போட்டிருக்கீங்கப் போல. அதுக்கு உண்டான Font இல்லாம எல்லாருக்கும் தெரியாதே. Unicode-ல மாத்திப் போடுங்களேன் ப்ளீஸ்.
//‚தர்
இந்தப் பக்கம் இப்போதான் வர
முடிஞ்சது.
உஙகள் பதிவுகளில் நல்ல கண்ணோட்டம் இருக்கிறது.
நானும் மதுரை சேதுபதி மாணவன் தான்.
முன்பு நிறைய படித்ததுண்டு! எழுதியதும் உண்டு! இப்பொ கொஞ்சம் டச் விட்டுப் போய்விட்டது.
இனி அடிக்கடி வருவேன்.
நாணா.//
நன்றி அதியன்!
Post a Comment