கந்தசாமி முதன்முதலில் அந்த இடத்தைப் பார்க்கின்றார். எங்கும் ஒரு சுகந்த நறுமணம். பளிச்சென்று துடைத்து வைத்தார்ப் போல சுற்றுபுறம் தெளிவாக இருக்கிறது. நிறைய நடமாட்டங்களோடு, ஆனால் ஆரவாரம் இல்லாமல் இருக்கிறது. யாரும் பரபரப்போ, வேகமோ இல்லாமல் நேரத்தை நிறுத்தி வைத்த மாதிரி அமைதியாக இருக்கிறார்கள்.
அட அந்தப் பெரும் வலி என்னதான் ஆனது? இப்பொழுது என்னவோ எடைகுறைந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அருகே ஒரு குரல்.
'வாருங்கள். வாருங்கள்.' என்றவாறே வந்தார் ஒரு அழகிய மனிதர். அவர் தலைமுடி, தாடி எல்லாம் மினுமினுப்பாக கவர்ச்சியாக இருக்க புன்முறுவலோடு கந்தசாமி அருகில் வந்தார்.
'எடை குறைந்த மாதிரிதான் இருக்கும். பயப்படாதீர்கள். இந்த பானத்தை குடியுங்கள். தெம்பாக இருக்கும். மனநிலை கொஞ்சம் சீரடையும்' என்றார்.
கனவில் இருந்து விழிக்கும் மனநிலையில் அவரை மலங்க மலங்க பார்த்தார்.
'நண்பரே! பூமியில் உங்கள் ஆயுட்காலம் முடிவடந்துவிட்டது. அதனால் இங்கு வந்திருக்கின்றீர். இங்கு வரும் எல்லா மனிதர்களுக்கும் முதலில் தோன்றும் குழப்ப நிலைதான் இது. பயப்பட ஏதுமில்லை'
கந்தசாமிக்கு மூளை சட்டென மரத்துவிட்டது போல் இருந்தது. தட்டுத் தடுமாறி கேட்டார் 'இது என்ன இடம்? நீங்க யாரு? நான் என்ன ஆகிவிட்டேன்?'
'நண்பரே, நீங்கள் வந்திருப்பது கடவுள்கள் உலகம். நான் இங்கு ஒரு கடவுள். இங்கு எல்லாரும் கடவுள்கள்தான். உங்களின் பூலோக வாழ்வை நிலுவை செய்து பார்த்து உங்களுக்கு தீர்ப்பு சொல்லப்படும். அதற்குதான் இங்கு வந்திருக்கிறீர்கள். இதோ இன்னமும் கொஞ்ச நேரத்தில் வழக்கு தொடங்கிவ்டும்'
'கடவுள்கள் உலகமா? இதுவா?' என்று குழப்பமாக கேட்கிறார்.
'இங்கு நிறைய உலகங்கள் இருக்கின்றன. உங்கள் வழக்கு முடிவில் உங்களுக்கான உலகம் அறிவிக்கப்படும். கவலைப் படாதீர்கள். எல்லாம் சுபமாக முடியும்'
அதற்குள் அங்கு கொஞ்சம் பரபரப்பு ஏற்படுகிறது. நிறைய பேர் கந்தசாமியை அருகில் வந்து பார்த்து செல்கிறார்கள். குழப்ப நிலையிலிருந்த கந்தசாமிக்கு இப்பொழுது கொஞ்சம் பயமாகப் போய்விட்டது.
அந்தக் கடவுள்கள் முகத்தில் எப்பொழுதும் ஒரு அலுப்பு களை இருக்கிறது. அவர்கள் இமைப்பது இல்லை. புதிதாக ஒரு மனிதனைப் பார்க்கும் ஆர்வம் கண்களில் மின்னினாலும், ஒரு விட்டேத்தியான பாவனையில்தான் இருந்தார்கள்.
தாடிக் கடவுள் கேட்டார்,
'பிரயாணம் எப்படி இருந்தது?'
'பிரயாணித்ததே தெரியவில்லை. மரண வலியிலிருந்து விடுபட்டேன் என்று நினைத்தேன். பார்த்தால் இங்கு உங்கள் முன்னால் இருக்கிறேன்'
'நல்லதுதான். சிலருக்கு இந்த வகை பிரயாணத்தில் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு'
கந்தசாமி மெதுவாகக் கேட்டார் 'இங்கு எங்களது மூதாதையர் எல்லாம் இருப்பார்களா?'
'எல்லாரும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தேடிப் பார்க்கலாம். யாரையாவது பார்க்க விரும்புகிறீர்களா?'
சட்டென ஒரு ஆசை,
'எங்கள் உலக அகிம்சா மூர்த்திகளை பார்க்க முடியுமா?'
'அவர்களுக்கு என்ன எப்பொழுதும் தியானம்தான். வேறு பணி ஒன்றும் கிடையாது இல்லையா. இங்கு உபதேசம் செய்து யார் கேட்கப் போகிறார்கள் சொல்லுங்கள்? என்ன ஆட்டுப் பாலுக்கு அவ்வளவு மு க்கியத்துவம் கொடுப்பதில்லை என்று ஒரு சின்ன மனக் குறை இவருக்கு உண்டு.' என்று சிரித்தார்.
'நான் ஒரு புத்தகம் படித்தேன். அவருக்கு ஒரு பெண் வாரிசு இருந்ததாக. அவரிடம் கேட்டு தெளிவு பெறலாமா?'
'அட என்னப்பா! அதெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது போய் அதெல்லாம் நினைவுப் படுத்தி சொல்ல முடியுமா என்ன?'
கடவுள்கள் உலகம் பக்தி பரவசமாக, எங்கும் பஜனைப் பாடல்களுடன், விசுவாசிக்கிறவர்களின் பிரச்சாரங்களோடு, ஆத்ம விசாரமும் சத்வ தேடலுமுமாக அல்லவா அவர் கற்பனை பண்ணி வைத்திருந்தார். இங்கு வித்தியாசமாக இருக்கிறதே.
அவர் நினைப்பதை படித்த மாதிரி தாடிக் கடவுள் 'பூலோக பழக்கவழக்கங்கள் இங்குக் கிடையாது. இங்கு பெரும்பாலும் எப்பொழுதும் அமைதியாகத்தான் பொழுது கழியும்' என்று சொன்னார். அவர் குரலில் கொஞ்சம் சலிப்பு இருந்தது போல் பட்டது.
கந்தசாமிக்கு கொஞ்சம் வெட்கமாக போய்விட்டது. எவ்வளவு நாட்கள் தவமிருந்திருக்கிறோம் கடவுளைக் காண. நேரில் கண்டவுடன் எப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் வருகிறது பார் என்று தன்னைத்தானே நொந்து கொண்டார்.
'அது கிடக்கிறது விடுங்கள். உங்கள் பூமியின் சீதோஷ்ண நிலை எப்படி இருக்கிறது? கால மாற்றங்கள் கொஞ்சம் தடாலடியாக இருக்கிறது என்று அறிகிறேன்'
'ஆம் சுவாமி. பொதுவாகவே உஷ்ணம் கூடிக் கொண்டே வருகிறது ஒவ்வொரு வருடமும். சக்தி கேந்திரங்களும் எரிபொருளும் பெரும் பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன'
தாடிக் கடவுள் இன்னொரு திசையைக் காட்டி
'அதோ வருகிறாரே. அவரைத்தான் கேட்கவேண்டும்' என்றார்
செக்கச் செவேலேன்று நெருப்பாக ஒரு கடவுள் வருகிறார். கூடவே தகிக்கிறது அந்த இடமே. 'எப்பா, என்ன எரிச்சலாக இருக்கிறது.' என்றவாறே வந்தவர் கந்தசாமியைப் பார்த்து புன்னகைக்கிறார்.
தாடிக் கடவுள் 'பின்னே. நாள் முழுவதும் எரிந்து கொண்டே இருந்தால், அப்படித்தான். இன்று கொஞ்சம் தாமதம் போல?' என்று பரிவுடன் சொல்கிறார்.
'என்ன செய்வது. எல்லாம் அந்த நிலவு தாமதமாக வந்ததால்தான்' கந்தசாமியைப் பார்த்தவாறே வந்தவர், அருகில் வந்து சற்று உற்றுப் பார்த்துவிட்டு
'உங்களை நிறைய முறை பார்த்திருக்கிறேன். ஆனால் எப்பொழுதும் என்னைக் குளிர்கண்ணாடியுடனே பார்ப்பீர்களா, அதான் சட்டென அடையாளம் தெரியவில்லை.' என்றார் சிரித்துக் கொண்டே.
கந்தசாமிக்கு மீண்டும் சங்கோஜமாகப் போய்விட்டது. சே... எவ்வளவுப் பெரிய கடவுள். அவரை சாதாரணக் கண்ணால் பார்க்காமல் இப்படி.... ஒரு வேளை தப்பாக நினைத்திருப்பாரோ?
'நம்மிடம் கடன் வாங்கித்தான் நிலவின் பிழைப்பு ஓடுகிறது. ஆனால் அவர்தான் உங்கள் உலகத்தில் பிரபலம். காதல் கவிதைகளில் பின்னியெடுக்கிறார்களே' பெருமூச்சுப் போல. பெரும் தீப்பிழம்பாக வந்தது மூச்சு.
இந்த சூட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா என்று கேட்கலாமே என்று நினைப்பதற்க்குள் அடுத்த திசையை நோக்கி வேகமாக சென்று விட்டார். அட அவர்தானே பூமிக்கு சக்தி ஆதாரம் அவரைத் எதற்கு தாமதப் படுத்துவானேன் என்று விட்டுவிட்டார்.
அப்பொழுதுதான் அந்த அழகியக் கடவுளைப் பார்த்தார். சுருண்ட கூந்தலுடன், வெள்ளை வேளேரென்று கடைந்தெடுத்த சிலை போல் அப்படி ஒரு அழகு. ஆனால் அவருடைய கைகள் இரண்டும் காணவில்லை.
'அதுதான் காதல் கடவுள்' என்றார் தாடிக் கடவுள்.
'கையில்லாமல் எப்படி அவரால் இருக்க முடிகிறது?' என்றார் கந்தசாமி.
'என்ன செய்வது? காதல் கடவுள் அப்படித்தானே இருக்க வேண்டியிருக்கிறது. கஷ்டம்தான்'
கந்தசாமிக்கு திடீரென்று அந்தக் கேள்வி தோன்றியது.
'ஆமாம். இவ்வளவு கடவுள்கள் இருக்கின்றீர்கள், பூவுலகின் ஏன் இப்படி பிணிகள், பேரழிவுகள், ஏற்றத் தாழ்வுகள்? எல்லா மனிதர்களும் இன்புற்று இருக்க என்னதான் செய்யப் போகிறீர்கள்?'
'இங்கு வரும் மனிதர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார்கள். சில சமயம் பெரும் திருவிழாக் கூட்டமாக இருக்கும். நாட்கணக்கில் வழக்குகள் தீர்ப்பு சொல்லப்படும். ' என்றார் புன்னகையுடன்.
'ஆனால் அவர்களின் உறவினர்கள் அங்கே பூவுலகில் துணையை இழந்து அல்லல்படுவார்களே. அதற்கு என்ன நிவாரணம்?'
'ஆம். அது சோகம்தான். அதைவிடப் பெரிய சோகம், அந்த சோகம் எங்களுக்கு பெரும்பாலும் புரிவதே இல்லை' என்றார்.
திடீரென்று கடவுள்களின் மத்தியில் ஒரு பரபரப்பு. ஒரு சின்னக் குழு கந்தசாமியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
தாடிக் கடவுள் கந்தசாமியிடம் 'உங்கள் வழக்கு தொடங்கப் போகிறது.' என்றார்
கந்தசாமி பரபரப்பாக 'யார் தீர்ப்பு சொல்லப் போகிறார்கள்?'
'தலைமைக் குழு வருகிறார்கள். அங்கேப் பாருங்கள்' ஒரு கடவுள் மூக்கை சிந்திக் கொண்டே பெரிய துணியில் துடைத்துக் கொண்டே வந்தார். 'பாவம். ஒரு நாளைக்கு ஆறு ஏழு முறை குளித்தாகிறது அவர்' என்றார் தாடிக் கடவுள்.
அழகிய பொன்னிற கூந்தலோடு இருந்த கடவுள் கந்தசாமியைப் பார்த்து
'எப்படி இருக்கிறீர்கள் கந்தசாமி. நலமா? எப்பொழுதும் பரபரப்பாகத்தான் பார்க்க வருவீர்கள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் நம் சந்திப்பு இருந்ததில்லை.' மோகனச் சிரிப்பு 'பெரும்பாலும் மனிதர்களின் வாழ்க்கை பரபரப்பானதுதான்'
கந்தசாமிக்கு மூச்சே நின்று விடுவது போல் இருந்தது. இந்த மூச்சு நின்றதாலதானே தான் இங்கு இருக்கிறோம் என்று நினைவுக்கு வந்து கூச்சமுடன் 'என்ன செய்வது சுவாமி. ஆலயங்களில் எக்கச்சக்கக் கூட்டம்... சில நொடிகள்தான் தங்களை தரிசிக்க அனுமதிக்கிறார்கள்'
'அது சரி! இப்பொழுதுதான் உங்களை சற்று நிதானமாக, ஆசைதீர, கண் குளிர பார்க்க முடிகிறது. ' என்றார் அந்தக் கடவுள்.
தாடிக் கடவுள் தன் தொண்டையை செருமிக் கொண்டு கந்தசாமியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக படித்து காண்பித்தார். கந்தசாமி சின்ன படபடப்போடு இருக்க எல்லாரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் திருப்திகரமாகவே எழுதப் பட்டிருந்தது. நிறைய ஆமோதிப்புகள் தெரிந்தன கடவுள்களின் மத்தியில்.
நீளமான கரங்களைகொண்ட நெடிதுயர்ந்த கடவுள் சொன்னார் 'கந்தசாமி. உங்களின் பூலோக வாழ்க்கை மிக திருப்திகரமாக இருக்கிறது. எங்கள் கணக்குப்படி எல்லா வகையிலும் நீங்கள் சராசரிக்கு வெகுமேலே இருக்கிறீர்கள். உங்களுக்கு மோட்சம் சிபாரிசு செய்யப்படுகிறது. ' எல்லோரும் ஆரவாரித்தனர். அந்தக் கடவுள் தொடர்ந்து 'உங்களுடைய அப்பழுக்கில்லா வாழ்க்கையை மெச்சி உம்மை எம்மில் ஒருவராக்கினோம். நீரும் ஒரு கடவுள் ஆவீராக'
கந்தசாமிக்கு விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சி. மகிழ்ச்சியும் புல்லரிப்பும் கலந்த இனம்புரியாத உணர்ச்சி. ஜென்ம சாபல்யம் என்று சொல்வார்களே அதுதானே இது. தெண்டனிட்டு அவர் முன் விழுந்து நமஸ்கரித்தார்.
நெடிய கடவுள் தொடர்ந்து 'உங்களுக்கான சலுகைகள் மற்றும் சிறப்புகள்' என்று நீண்ட பட்டியலைப் படிக்கிறார். கந்தசாமிக்கு ஆனந்தம் பெருக்கெடுக்க கண்கள் நிறைய பெருமளவில் உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறார். அவருடைய வாழ்க்கையின் பயன் அல்லவா அது.
மீண்டும் ஒரே ஆரவாரம். எல்லாக் கடவுள்களும் உற்சாகமாக கரவொலி செய்தார்கள்.
நடுக் கடவுள் திரும்பி கூட்டத்தைப் பார்த்தார். 'இப்பொழுது உங்களில் ஒருவர் மனிதனாகும் வாய்ப்பு' என்று முறுவலித்தார்.
'நான்... நான்...' 'எனக்கு! எனக்கு!' என்று பல குரல்கள் எழுந்தன. பரபரப்பாக பல கடவுள்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர்.
'அட! என்னப்பா தள்ளுமுள்ளு! பொறுமை. பொறுமை. வழக்கம் போல் குடவோலை சீட்டுப் போட்டு எடுக்கலாம் நண்பர்களே. உங்களில் ஒருவருக்கு அந்தப் பொன்னான வாய்ப்புக் கண்டிப்பாக இருக்கிறது' என்றார் நடுக் கடவுள்.
கதை சொல்லும் நேரம்...
சிறுகதை போட்டிகள்:- சிறில் அலெக்ஸ் போட்டி, ஜெயமோகன் தேர்வு, சுஜாதா நினைவு சிறுகதைப் போட்டி, சங்கமம், உரையாடல், சர்வேசன்
இதுவரை வெளியான சிறுகதைகள்
இதுவரை வெளியான சிறுகதைகள்
கடவுளும் கந்தசாமியும்
July 18, 2008எழுதியது Sridhar V at 7/18/2008 11:35:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
24 மறுமொழிகள்:
அவ்வுலகை விட சிறப்பானதா இவ்வுலகம்?.ஆனால் இங்கு வாழ பொருள் வேண்டுமே.கடவுளுக்கும் அது தெரிந்திருக்கும், அதனால் கடவுள் ஒரு பொருள்முதல்வாதி, அதனால் கடவுளும் ஒரு நாத்திகர்.
ஜாலிஜம்பர்,
//அவ்வுலகை விட சிறப்பானதா இவ்வுலகம்?.//
அப்படியும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கடவுள்களைத்தான் கேட்கனும் :-)
//அதனால் கடவுளும் ஒரு நாத்திகர்.//
இருக்கலாம். யார் கண்டது? :-))
ஸ்ரீதர்,
இந்த வலைப்பக்கத்தில் ஐன்ஸ்டீன் மேற்கோள் ஒன்று இருந்ததே.அந்த வரிகளை தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.
இருக்கிறத விட்டுட்டு பறக்கிறத பிடிக்க ஆசைப்படக்கூடாதுன்னு சொல்லுங்க அண்ணே கடவுள்ட, MKU computer பசங்க எல்லாம் Biology, Biotech dept பொண்ணுங்களை சைட் அடிக்க ஓடி வர ஆசைப்படுற மாதிரி !!!
வசிக்கும் பூமியை மதித்து , எல்லா உயிரையும் நேசித்து, அன்பை மட்டுமே செல்வமாக கொண்டு வாழ்ந்தால் இவ்வுலகம் சிறந்ததுதானே. கடவுளும் வந்து வாழ ஆசை படலாம் தானே ?
அருமையான நடையில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
மிகவும் நன்றாக இருக்கிறது. என்ன மாதிரி மொக்கச்சாமிகளூக்குத்தான் பின்னூட்டம் வரும்.இது போன்ற தரமான பதிவுகளுக்கு பெரும்பாலும் அதிகம் வராது.அதைப்பற்றிய கவலை இன்றி தயவு செய்து இது போலவே தொடர்ந்து எழுதுங்க.வாழ்த்துகள்
ஸ்ரீதர்.. கதை நன்றாயிருக்கிறது.
கந்தசாமியைத் தவிர்த்திருக்கலாம் :-) Will lead to unnecessary comparison :-)
ஜாலிஜம்பர்..அக்கறைக்கு இக்கறை பச்சை!
எவ்ளோ யோசிக்கவைக்கிற ஒரு ஸ்டேட்மெண்ட் உங்க பின்னூட்டத்துல!
//கடவுளும் ஒரு நாத்திகர்.//
தூள்!
//இந்த வலைப்பக்கத்தில் ஐன்ஸ்டீன் மேற்கோள் ஒன்று இருந்ததே.அந்த வரிகளை தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.//
ஆஹா... அதை கவனித்திருக்கிறீர்களா? நல்ல வாசகம். ஆனால் கொஞ்சம் மிகையாக இருக்கிற மாதிரி இருந்ததினால் கழட்டி விட்டேன். :-)
//MKU computer பசங்க எல்லாம் Biology, Biotech dept பொண்ணுங்களை சைட் அடிக்க ஓடி வர ஆசைப்படுற மாதிரி !!!//
வாங்க அண்ணே. தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாயுறதுதானேண்ணே. அதெல்லாம் 'ஆசைப் படக்கூடாதுன்னு' சொன்னா எப்படிண்ணே? :-)
மது,
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
புதுகை அப்துல்லா,
:-)) கவலை எதுக்கு? சிலசமயம் மௌனத்தைவிட சிறந்த மறுமொழி கிடையாது என்று சொல்வார்கள்.
'மொக்கை'ன்னு எதையும் ஒதுக்கிட முடியாது. ஜனரஞ்சகமா எழுதறதும் தரமான பதிவுதான்கிறது எனது எண்ணம் :-)
சுரேஷ்,
என்ன பண்றது, கடவுளோட பேசப் போனாலே கந்தசாமிப் பிள்ளைதானே ஞாபகத்துக்கு வர்றார். :-)
'ஆசைப் படக்கூடாதுன்னு' சொன்னா எப்படிண்ணே? :-)////
அப்படியெல்லாம் எதுவும் சொல்லலண்ணே, உங்க பால்ய !காலத்த (MKU - computer science - Biology பொண்ணுங்க, பாண்டி கடை, ICC tea கடை) chaos theory வச்சும் (அய்யோ சுரேஷ்ண்ணே முறக்கிறாரு) கொஞ்சம் ஞாபகப்படுத்தலாம்ன்னு நினைச்சேன்
அங்கயே போய்ட்டு வந்த ஒரு உணர்வைத் தந்தது நடை.
//பாண்டி கடை, ICC tea கடை//
யாருப்பா அது... கொசுவர்த்தி சுத்தி உடுர்றது? பேரைப் போட்டுச் சொல்லுங்கப்பா. :-))
தருமி ஐயா,
உங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.:-)
மோட்சம் போயிட்டு வந்து எஃபெக்ட்டு இருந்துச்சி அண்ணாச்சி! :)
//அதனால் கடவுளும் ஒரு நாத்திகர்.//
இருக்கலாம். யார் கண்டது? :-))//
நான் கண்டேன்!
கடவுள் நாத்திகர் தான்! சந்தேகமே இல்ல! :)
எத்தனை ஆத்திகர்களை உருவாக்குகிறார்!
நாத்திகர்கள் தான் ஆத்திகர்களை உருவாக்குகிறார்கள்!
ஆத்திகர்கள் பதிலுக்கு நாத்திகர்களை உருவாக்குகிறார்கள்! :))
//கந்தசாமியைத் தவிர்த்திருக்கலாம் :-) Will lead to unnecessary comparison :-)//
அது தானே வேணும் எங்க ஸ்ரீதர் அண்ணாச்சிக்கு?
அதைப் போயி தவிர்த்து இருக்கலாம்-னு சொல்றீங்களே பெனாத்தலாரே!
இறைவா, ஸ்ரீதரை நண்பர்களிடம் இருந்து காப்பாத்துப்பா! :))
//அட! என்னப்பா தள்ளுமுள்ளு! பொறுமை. பொறுமை. வழக்கம் போல் குடவோலை சீட்டுப் போட்டு எடுக்கலாம் நண்பர்களே. உங்களில் ஒருவருக்கு அந்தப் பொன்னான வாய்ப்புக் கண்டிப்பாக இருக்கிறது' என்றார் நடுக் கடவுள்.//
சூப்பர்...
KRS அண்ணாச்சி,
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். நீங்க கண்டு விண்ட கர்மயோகி :-)
//இறைவா, ஸ்ரீதரை நண்பர்களிடம் இருந்து காப்பாத்துப்பா! :))//
இந்த ஒரு வரிக்குள்ள ஓராயிரம் மேட்டர் சொல்லிட்டிங்களே. :-)) இ.கொ. இருந்தா ஒரு அரைப் பக்கம் விளக்கம் எழுதிக் கொடுப்பார். என்ன செய்யுறது அவர் இப்போ வெகேஷன்ல ஒரே பிஸியாயிருப்பார். :-))
வெட்டி,
ரொம்ப நன்றிங்க. :-)
ரவி அண்ணாச்சி,
கடவுளுக்கு மோட்சம்னு ஒரு டைட்டில் யோசிச்சேன். ஆனா அதுக்கு வேற ஒருத்தர் பேடண்ட் வாங்கி பெரிய புத்தகம் எழுதிட்டார். அதுனால குழப்பம் இல்லாம் 'பெரியவங்க' பாதையில 'கந்தசாமியை' ('பிள்ளை' சென்ஸார்ட்) கூப்பிட்டுட்டு வந்திட்டேன். :-))
யாருப்பா அது... கொசுவர்த்தி சுத்தி உடுர்றது? பேரைப் போட்டுச் சொல்லுங்கப்பா. :-))////////
உங்க மாதிரி தெகிரியமா பின்னூட்டத்துக்காத்தேன்ன்னு ஒரு கணக்கு ஆரம்பிக்காமல், அப்புறமா அது பதிவா மாறிடுமோன்னு ஒரு பயத்தாலேபோய்ட்டிருக்கு.
//பாண்டி கடை, ICC tea கடை//
ஆனாலும் MKU computer science பசங்களையும் Biology பொண்ணுகளையும் கலக்காம, பாண்டி கடைய மட்டும் பத்தி பேசி நல்ல பையனா இருக்கீகளேண்ணே !
//உங்க மாதிரி தெகிரியமா பின்னூட்டத்துக்காத்தேன்ன்னு ஒரு கணக்கு ஆரம்பிக்காமல்//
ஹி.. ஹி.. நம்மள ரொம்பவே வாட்ச் பண்ணியிருக்கீங்கப் போல.
பதிவு ஆரம்பிச்சா ஒண்ணும் தப்பில்லை. ஆரம்பிக்காட்டினாலும் தப்பில்லை. :-))
எந்த வருஷம் படிச்சீங்க?
எல்லாம் விதிப்படி என்றால்...(நீங்க கதையில் சொல்லவில்லை..ஆனால்..பொதுவாக சொல்லப்படுவது..)
ஏன் மனிதனின் கணக்கை படிக்கனும்...
கடவுள் என்றாலே குழப்பமும் கூடவே வந்துவிடுகிறது...
ஃஃஃஃ
இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுகிறார்கள் என்றும் சொல்லுகிறதோ கதை...
TBCD,
வாங்க. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. விதியை நம்பி கணக்கை நம்பாதவங்களும் இருக்காங்க. கணக்கை நம்பி விதியை நம்பாதவங்களும் இருக்காங்க. உண்மை என்னன்னா - இரண்டு பேருமே நல்லாத்தான் இருக்காங்க. அவங்கவங்க வழியில.
//சொல்லுகிறதோ கதை//
இறப்புக்கும் பிறப்புக்கும் இடையே என்ன நடக்குதுன்னு ஒரு பக்கவாட்டு சிந்தனை. மத்தபடி எதையும் சொல்லனும்னு சொல்லலை.
எந்த வருஷம் படிச்சீங்க?///
இதுக்கு பதில் சொன்னால், அப்புறம் வ.உ.சி ஹாஸ்டல் வரைக்கும் ஒரு பயாலஜி பொண்ணு ஜாக்கிங் வருமே, அந்த பொண்ணோட பேட்ஜ்ஜான்னு கேட்பீங்களேண்ணே !
:))
கதை நல்லாயிருக்குது
Thinking Different!!!:-)
I've also tried long before similar to this thought(Not exactly same). Read this when you have time.
Post a Comment