ஆமாம்! எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். புதுசா கேக்குற?
எங்க?
இப்படிக்கா போவனும். தொலைவுல... நான் அங்கிட்டுதான் போயிட்டிருக்கேன். வாரதுன்னா, சுருக்க வா.
நான் வந்து என்னா பண்ணப் போறேன். நீங்க போங்க.
ஏன்! இங்கிட்டு கிடந்து லாத்திகிட்டு என்ன செய்யப் போற? எல்லாருக்கும் விடிவு காலம்டா.
என்னாத்த விடிவுகாலமோ. எனக்கு ஒண்ணும் பிரியல.
இது என்னா போக்கத்தப் பேச்சு. இதுமாதிரி ஒண்ணு இனிமேக்கா நடக்கப் போறதில்ல. தெரியும்ல.
இப்படித்தான் போற வாறவனை எல்லாம் உசுப்பேத்தி வச்சிருக்கீங்க. புஸ்னு ஆகப் போகுது பாருங்க.
ஏன்டா கோக்கு மாக்கா பேசிட்டு திரியறவனே. அல்லாத்தையும் புரட்டிப் போட்டுறும்டா. பாரு எத்தினி பேரு கூட்டமாப் போயிட்டிருக்காய்ங்க.
எல்லாரும் ஒண்ணா சேந்து போலாம்னீங்க.
அங்கிட்டு கிட்டப் போய் லாத்திகிட்டு இருப்பாங்க. ஒண்ணா சேந்தவுடனே நடந்துரும்.
பெருசாத்தான் வெடிக்கப் போறாய்ங்களோ. ரொம்பத்தான் பயமுறுத்திறீங்க.
அதுக்கு பயப்படறவனா நீயு! நமக்கு என்னா ஆவப்போகுது. ஆனா இந்த மடம். ஆகலேன்னா சந்தை மடம்.
சரி வாங்க. வெரசாப் போயிரலாம். நேரம் தவறிரப் போகுது.
இப்ப என்னாத்த நேரம்... அப்பாலதான் தொடங்கவேப் போறாங்க.
யம்மாடி... இம்மாம் கூட்டமா.
மக்கா! இப்பவே சொல்லிபிட்டேன். இப்படி விழுந்தடிச்சிட்டு ஓடி வர்றீங்க. ஒண்ணா மண்ணா இருந்திபிட்டோம். அப்புறமா ஓடிகிட்டே இருக்க வேண்டிதான். கெட்டியாப் பிடிசிக்கப்பூ. இதோ வந்திட்டோம்ம்ம்.
இப்படியாக சமிக்ஞைகள் பரிமாறிக்கொண்டே வந்த பருப்பொருள்கள், ஒன்றாக கூடியதும் அது நிகழ்ந்தது.
BIG BANG!
22 மறுமொழிகள்:
அருமை! நல்லா ஏமாத்தினீங்க :-)
அப்பால,
பதினெட்டாம் வட்டம் சார்பாக வலைப்பூவுக்கு வரவேற்பு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியும் ஆனந்தமும் குதூகலமும் அடைகிறேன் என்பதைச்சொன்னால் அது மிகையாகாது என்பதை தெள்ளத்தெளிவாக ஓங்கி உரத்தே சொல்லுவதில் எந்தவிதக் கிலேசமும் அடையவில்லை என்பதில் உளமாற, உள்ளபடியே மகிழ்ச்சி பெருகுவதையும் சொல்வதில் எந்த அச்சமும் இல்லை.
//பதினெட்டாம் வட்டம் சார்பாக...//
மத்த பதினேழு வட்டமும் இன்னும் வரக் காணோமே....எங்க போயிட்டாங்க?
//மிக்க மகிழ்ச்சியும் ஆனந்தமும் குதூகலமும் அடைகிறேன் என்பதைச்சொன்னால் அது மிகையாகாது என்பதை தெள்ளத்தெளிவாக ஓங்கி உரத்தே சொல்லுவதில் எந்தவிதக் கிலேசமும் அடையவில்லை என்பதில் உளமாற, உள்ளபடியே மகிழ்ச்சி பெருகுவதையும் சொல்வதில் எந்த அச்சமும் இல்லை.//
3 தடவை படிச்சுப் பார்த்துட்டேன். உண்மையாகவே மகிழ்ச்சி அடையற மாதிரிதான் தெரியுது. ரொம்ப நன்றி :-))
ஜூப்பரு!
நல்ல டிவிஸ்ட்டு!
அடுத்து கமல் Big Bang ட்ரை பண்ணப் போறாரு-ன்னு தெரிஞ்சு போச்சு டே! :-)))
//மிக்க மகிழ்ச்சியும் ஆனந்தமும் குதூகலமும் அடைகிறேன் என்பதைச்சொன்னால் அது மிகையாகாது என்பதை தெள்ளத்தெளிவாக ஓங்கி உரத்தே சொல்லுவதில் எந்தவிதக் கிலேசமும் அடையவில்லை என்பதில் உளமாற, உள்ளபடியே மகிழ்ச்சி பெருகுவதையும் சொல்வதில் எந்த அச்சமும் இல்லை//
பெனாத்தல்ஸ் அண்ணாச்சி
ஜோடா வேணுமா?
ஜோடி..?
உங்களுக்கு இல்ல! எங்களுக்கு!
//அடுத்து கமல் Big Bang ட்ரை பண்ணப் போறாரு-ன்னு தெரிஞ்சு போச்சு டே! :-)))//
ஆஹா... இ.கொ. என்னை ரஜினி ரசிகரா முத்திரை குத்தினார். இப்ப உங்க முறைப் போல :-)
இரா. முருகன் சார்கிட்ட கேக்க வேண்டிய கேள்விகள் எல்லாம் என்கிட்ட கேக்குறீங்களே.
//பெனாத்தல்ஸ் அண்ணாச்சி
ஜோடா வேணுமா?
ஜோடி..?//
வர்ற வர்ற ரொம்பவே ஜோடிப் பத்தி பேசுறீங்க. ஏதோ நல்ல மேட்டர் சொல்லப் போறீங்கன்னு நினைக்கிறேன். :-))
ஜோதியில கலக்குறதுக்கு வாழ்த்துக்கள்
ooooooooooooooooo
17 வட்டமும் இருக்கான்னு எண்ணிப் பாத்துக்கங்க
ஸ்ரீதர் அவர்களே
நான் விஜயன், 15 வருடங்களுக்கு முன் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி கிராமத்தில், கணணி பயிலகம் நடத்தி, வைரஸ் ஸ்கேனர் புரோகிராமெல்லாம் தயாரித்து விற்பனை செய்து வந்திருந்தேன். என்னைப்பற்றி ஒரு வலைப்பதிவில் குறிபிட்டு இருந்தீர்கள் ஆச்சரியமாக மகிழ்ச்சியாக இருந்தது.
http://imsaiarasi.blogspot.com/2008/02/blog-post.html
நீங்கள் என்னை எப்படி அறிந்தீர்கள் என்று தெரிய ஆவல்.
vijayan_t@yahoo.com
சங்கர்,
எல்லா வட்டத்தையும் நீங்கள் வச்சிகிட்டு 'அதிகார மையம்'ம்மா இருக்கீங்களே. சீக்கிரம் பரவலாக்கவும் :-))
விஜயன்,
நான் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடைபெறும் கணிணி டிரேட் ஷோ-க்கு வந்திருந்ததுண்டு. உங்களையும் சந்தித்ததாக நினைவு. :-))
நீங்களே வைரஸ் எழுதி நீங்களே அதற்கு ஸ்கேனர் எழுதுகிறீர்கள் என்று நாங்கள் வேடிக்கையாக பேசிக் கொண்டிருப்போம். C ப்ரோக்கிராமிங் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஒரு வைரஸ் நிரலி எழுதிவிட வேண்டும் என்று கனவெல்லாம் இருந்தது உண்மை. அப்பொழுது இருந்த வாய்ப்புகளை (கூகுளுக்கு முன்) வைத்துக் கொண்டே நீங்கள் எட்டிய தூரம் மிகவும் அதிகம். நானும் சில நண்பர்களோடு மதுரையில் ஒரு சிலக் காலம் கணிணி பயிலகம் நடத்தி கொண்டிருந்தேன். உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள். தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
மிக்க மகிழ்ச்சி ஸ்ரீதர்.
உன்மைதான், 93களில் வின்டோஸ் பிரபல்யம் ஆகாத காலத்தில் சாதித்தோம். காலஓட்டத்தில் உசிலம்பட்டியில் தாக்குபிடிக்க முடியவில்லை பன்நாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடமுடியலை. சென்னைக்கு நகர்ந்து 5 வருடம் கேசவன் கம்ப்யூடிங் நிறுவனத்தில் பனியாற்றி, பிறகு ஜப்பான் நாட்டில் 3 வருடங்கள் பணியாற்றி தற்பொழுது கடந்த 1 வருடமாக அமெரிக்காவில், நியூஜெர்சி மாநிலத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறேன்.
வைரஸ்-நீக்கி போன்ற சிஸ்டம் புரோகிராம் மற்றும் அதுகுறித்த தமிழ் கட்டுரைகள் எழுதுவது விட்டு வெளிவந்து ரெம்ப காலம் ஆகிவிட்டது. மீன்டும் அதில் போக ஆசை ஆனால், ஏகப்பட்ட பணி மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கிடையே இதற்கென நேரம் சேமிக்க முயற்சி செய்துகொன்டுதான் இருக்கின்றேன்.
பசுமையான நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றி.
அன்புடன் உசிலை விஜயன்
உசிலை விஜயன்,
வாங்க. உங்கள் வலைப்பதிவுகள் பதிவுகள் தொடங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சி. நானும் ஒரு தமிழ் கம்ப்யூட்டர் வாசகன்தான். Express Computer போல தமிழில் ஒரு நல்ல முயற்சி.
நியூஜெர்சியிலிருந்து நிறைய வலைப் பதிவர்கள் இருக்கிறார்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். நன்றி!
சூப்பர். 18வது வட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் - பெங்களூர் கிளை.
நீங்களும் **ராஜ் பல்கலைகழகமா? :p
பாண்டியன் ஹோட்டலுக்கு எதிரே உள்ள கல்லூரியில் தான் நானும் போயிட்டு வந்தேன்.
நீங்க எந்த வருஷம்?னு கேட்டு உங்க வயசை தெரிஞ்சுக்க மாட்டேன். :))
முடிஞ்சா தனி மெயிலில் சொல்லவும்.
கரெண்ட் ட்ரெண்ட்ல கமெண்ட் போடறதுக்கு நீங்கதாங்க :-))
நான் போனது நாகமலை புதுக்கோட்டை. பாண்டியன் ஹோட்டல் எதிர்ல இருந்த கல்லூரிக்கும் ஒரு 2 மாதம் போனேன் கணக்கு படிக்க (சரியாப் படிக்கவும். 'படிக்க'த்தான் போனேன்). அப்புறம் பல்கலைகழகத்துலேயே கணிணி படிக்க வாய்ப்பு வந்து ஓடிப் போயாச்சு.. :-))
நான் என்னிக்குமே வயசு விசயத்துல நமீதாவத்தான் பாலோ பண்றது. அட மறச்சது இல்லீங்க.
//கணக்கு படிக்க (சரியாப் படிக்கவும். 'படிக்க'த்தான் போனேன்). //
ஆமா! அப்படியே அங்க கணக்கு பண்ணிட்டாலும். ஒன்னும் தேரலைங்கோ! :))
பாருங்க, இப்பவும் நமீதா மாதிரி மழுப்பிட்டீங்க, எந்த வருசம்னு காட்டாம, சே சொல்லாம! :p
அம்பி அப்பா,
//அப்படியே அங்க கணக்கு பண்ணிட்டாலும்.//
பழைய பாக்கி ரொம்ப இருக்குப் போல :-) உங்க எஜமான் தமிழ் வலை எல்லாம் எட்டிப் பாக்க மாட்டார்ன்ற தைரியம் போல :-))
நான் படிச்சது 1994-97. அப்ப நீங்க?
//உங்க எஜமான் தமிழ் வலை எல்லாம் எட்டிப் பாக்க மாட்டார்ன்ற தைரியம் போல //
ஆமா அதே தைரியம் தான்.
வணக்கம் சீனியர்!
நான் எல்லாம் சமீபத்தில் 1999-2002ல் தான் முதுகலை பட்டம் வாங்கினேன்.
//நான் எல்லாம் சமீபத்தில் 1999-2002ல் தான்//
அடப்பாவி! ஜூனியரா இருந்துட்டே என்னைய ராகிங் பண்றியா நீ! :-))
ஸ்ரீதர்,
கதை அருமையாக இருக்கிறது. கிட்டத்தட்ட இதே தீமில் நான் ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் சரியான ஐடியா வராமல் இருந்தது. நீங்கள் பிய்த்து உதறி விட்டீர்கள்!!;-)
வாங்க யோசிப்பவர்,
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி :-)
//பினாத்தல் சுரேஷ் said...
அருமை! நல்லா ஏமாத்தினீங்க :-)
அப்பால,
பதினெட்டாம் வட்டம் சார்பாக வலைப்பூவுக்கு வரவேற்பு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியும் ஆனந்தமும் குதூகலமும் அடைகிறேன் என்பதைச்சொன்னால் அது மிகையாகாது என்பதை தெள்ளத்தெளிவாக ஓங்கி உரத்தே சொல்லுவதில் எந்தவிதக் கிலேசமும் அடையவில்லை என்பதில் உளமாற, உள்ளபடியே மகிழ்ச்சி பெருகுவதையும் சொல்வதில் எந்த அச்சமும் இல்லை.
//
:))
கதை சூப்பர். எதிர்பார்க்காத முடிவு.. நச்சுன்னு இருந்தது :)
//ஸ்ரீதர் நாராயணன் said...
சங்கர்,
எல்லா வட்டத்தையும் நீங்கள் வச்சிகிட்டு 'அதிகார மையம்'ம்மா இருக்கீங்களே. சீக்கிரம் பரவலாக்கவும் :-))
//
ஹா..ஹா.ஹா. இது செம்ம கலக்கல்.. :))
வாங்க சென்ஷி காதலரே,
வெடிப்பு நிகழ்ந்து இரு மாதங்கள் கழித்து வந்திருக்கீங்க. நன்றி. -))
Post a Comment