July 12, 2008

GodFather: இது ஒரு **ப் படம்

சமீபமாக Netflix-ன் தயவில் வாரம் 2-3 படங்கள் பார்க்கும் வாய்ப்பு. இதையே சாக்காக வைத்து 'வாரம் ஒரு திரைப்படம்' அப்படின்னு ஏதாவது மொக்கை போடலாம்னு நினைச்சப்போ (ஆசை யாரை விட்டது!) முதலில் தோன்றியது Godfather படம்தான். மூன்று பகுதிகளையும் தொடர்ச்சியாக பார்த்து முடித்தேன். முன்னமே பார்த்திருந்தாலும் இப்படி ஒன்றாக சேர்த்து பார்ப்பது இதுவே முதன் முறை. அது ஒரு சிறந்த அனுபவம். இந்தப் படத்தின் பாதிப்பு இருக்கும் என்று நான் நினைக்கும் படங்களின் பட்டியலை வைத்து ஒரு முனைவர் பட்டமே ஆய்வு செய்யலாம். அத்தனைப் படங்கள் நினைவுக்கு வந்து போகின்றன. நாயகன், தேவர் மகன், குரு என்று ஆரம்பித்து சமீபத்தில் வந்த பட்டியல், புதுப் பேட்டை வரை - அது என்ன சொல்வார்கள் - இண்ஸ்பிரேஷன் - ஹாங்... அதேதான்.

தலைப்பை பார்த்து யாரும் 'ஆய்' 'ஊய்'ன்னு குதிக்க வேணாமேன்னுதான் கொஞ்சம் மைதா மாவு (மாஸ்க்) வேலை. இந்த முறை பெரும்பாலும் நேராகப் பார்க்காமல், கொஞ்சம் ஒருக்களித்து கோணலாகப் பார்த்ததினால் சில புதிய கோணங்கள் கிடைத்தது. தொடர்ந்து வாசித்த பல்வேறு நுண்ணரசியல் திரை விமர்சங்களின் தூண்டுதலினால் இப்படி ஒரு விமர்சன பார்வையை முன் வைக்கும் விபரீத ஆசை. இதைத் தொடர்ந்து வாசிக்கும் முன்னர் நீங்கள் ஒரு ரவுண்ட் தமிழ்ப் பதிவுகளில் எப்படி திரைப்படங்களை விமர்சனம் செய்கிறார்கள் என்று பார்த்து விடவும். பதிவைப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

ப்ராண்ஸிஸ் ஃபோர்ட் கப்போலா அவர்களே! இந்தப் படங்களைப் பார்க்க நான் $8 டாலரும், சொற்ப நேரமும் செலவு செய்திருக்கிறேன் என்று இப்பொழுதே சொல்லிக் கொள்கிறேன். உனக்கு விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி கேட்டுவிடப் போகிறீர்கள்.

'முதல்'கையாக ஒரு விமர்சனம் போட வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் உட்கார்ந்தேன். பாருங்கள், இது நான் பிறக்கும் முன்னரே வந்துவிட்ட படமாம். சரி விடுங்கள் ஏதோ ஒரு 'கை' பார்த்துவிடுவோம்.

எச்சரிக்கையை மீறி தொடர்ந்து படிப்பேன் என்று நினைத்தால்... நான் என்ன சொல்ல. அனுபவியுங்க. :-)

- அல் பசினோ மூன்ற பாகங்களிலும் மைக்கேல் கார்லியோனாக வருகிறோர். அவரே மூன்று பாகங்களிலும் நடிக்க வேண்டுமா என்று கேள்வி எழுகிறது. ஒரு 40-50 வயது பாத்திரம் என்றாலும் சரி. 70 வயது வேடமெல்லாம் எதற்கு ஏற்க வேண்டும்? கதைக்கு இது தேவையா? சூடான், அல்ஜுமாய்ன், எக்ஸிமோ படங்களில் எல்லாம் இப்படியா எடுக்கிறார்கள்? இது பார்த்தே ஆக வேண்டிய படம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். பாவம் அவர் உழைப்புக்காக ஒரு 50 வெள்ளிகள் மணியார்டர் செய்து விடுங்கள். விலாசம் தெரியவில்லையென்றால் தனியாக மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

- மர்லன் பிராண்டோ ஏதோ பஞ்சு உருண்டைகளை வாய்க்குள் வைத்து புதிதாக மேக்கப் போட்டிருக்கிறார். சரியான திராபை. நம்ம ஜெய்சங்கர் மையினால் மீசை வரைந்து கொண்டு எவ்வளவு இயல்பாக சிஐடி சங்கராக துப்பறிகிறார்?

- வீடோ கார்லியோன் இத்தாலியிலிருந்து கப்பலில் 1900-ம் வருடம் ந்யூயார்க் வந்து சேர்கிறார். அந்தக் காலத்தில் இத்தாலியர்கள் எப்படி சிகையலங்காரம் வைத்திருந்தார்கள் என்பது விவாததுக்குரியது. அது இடது வகிடா, வலது வகிடா என்று இன்னமும் சந்தேகங்கள் இருக்கின்றன. கதை 'மரியோ பூசோ' என்று டைட்டிலில் போடுகிறார்கள். அவர் ஒருவர் மட்டும் உட்கார்ந்து எழுதினாரா, இல்லை அவர் சொல்லச் சொல்ல இன்னொருவர் எழுதினாரா, இல்லை ஒரு குழுவாக உட்கார்ந்து கொண்டு ஆளுக்கு பத்து பக்கம் கதை எழுதினார்களா என்று தெரியவில்லை. இப்படி கிரடிட் போட்டுக் கொள்வதுதான் அப்போதைய ட்ரெண்ட் போல. தொடர்ந்து பார்த்ததில் தலைவலிதான் மிச்சம். மூன்று முறை பார்த்த பின்னரும் தலைவலி விட்டபாடில்லை.

- அல்பசினோ டயபடிக் அட்டாக்கினால் தள்ளாடி கீழே விழுகிறார் பாருங்கள். இப்படியா நடிப்பது? எஸ்பிரஸ்ஸோ காபி குடிக்கும் இத்தாலிய டான் -க்கு எப்படி சர்க்கரை நோய் வரும்? வந்தாலும் ஒரு கையை தூக்கிக் கொண்டு மல்லாக்க விழுந்திருந்தால் இயல்பாக இருந்திருக்கும். குலுங்கி குலுங்கி அழவும் இல்லை... நமக்கு 'இன்ஸ்டியுட்யூட்' நண்பர்கள் பலருடனும் பழக்கம் உண்டு. இதெல்லாம் ஒரு நடிப்பே இல்லை என்று அடித்து சொல்லமுடியும்.

- வீடோ கார்லியோன் ந்யூயார்க்கில் குடக்கூலி மேட்டருக்கெல்லாம் கட்டப் பஞ்சாயத்து செய்து வைக்கிறார். அமெரிக்க வாழ் இத்தாலியர்களுக்கு குடக்கூலியா பிரச்சினை? இது கூட தெரியவில்லை மரியோ பூசோவிற்க்கு.

- அன்னை மேரியை ஊர்வலமாக தூக்கிக் கொண்டு வருபவர்கள் ஜோயி ஜாஸாவின் மெய்காப்பாளனை சுடுகிறார்கள். கெட்டவர்களை தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்ல வருகிறார்களா? அப்படியே அங்கே ஒரு சர்ச்சை கட்டி திறப்பு விழாவிற்க்கு ஜெர்மன் சான்ஸ்லரை கூப்பிட்டிருக்கலாம்.

- வீட்டோ ஆண்டாலினோ அமெரிக்கா வந்திறங்கியவுடன், வீட்டொ கார்லியோனாக ஆகி விடுகிறார். ஆண்டாலினோ ஏன் கார்லியோனாக ஆக வேண்டும்? பெயரை மாற்றி மாற்றி சொல்லிப் பாருங்கள். கார்லியோன், ஆண்டாலினோ இணைந்து காண்டேலா-வாக வருகிறதா? கதை அமெரிக்காவிற்கு வந்தவுடன் காண்டேலா ரைஸ் வந்து விடுகிறார் பாருங்கள். (35 வருடத்திற்கு முன்னர் அவர் ஏதாவது பள்ளியில் படித்துக் கொண்டிருக்க மாட்டாரா என்ன?) அப்பட்டமான இத்தாலிய, அமெரிக்கீய கொழுப்புதானே இது.

- வீட்டோ, சோன்னி, மைக்கேல், கார்னி என்று கார்லியோன் குடும்பப் பெயர்களைப் இணைத்துப் பார்த்தால் கிறிஸ்துவீன் சீடர்கள் பெயர்களுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு தெரிகிறதா? (ஹி..ஹி.. இதப் பத்தி தனியாவே ஒரு பதிவு போட்டுடலாம்)

ராபர்ட் டி நீரோ இரண்டாம் பாகத்தில் வருகிறார். மூன்றாம் பாகம் முழுவதும் அல் பசினோதான். அவர்களின் ரசிகர்கள் அந்தப் படங்களின் வசூலைப் பற்றி எப்படி அடித்துக் கொண்டார்கள் என்ற விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். :-)

அடுத்த வாரம் ஒரு நல்லபடத்தின் அறிமுகத்தோடு சந்திக்கிறேன்.

27 மறுமொழிகள்:

ஸ்ரீதர் நாராயணன் said...

ஒரு Disclaimer விட்டுப் போயிடுச்சி. இந்தப் பதிவு யாரையும் குறிப்பிட்டு கேலி செய்யும் நோக்கில் எழுதவில்லை. ஒரு மாறுபட்ட(?!) விமர்ச்னப் பார்வையா நினைச்சு மன்னிச்சு விட்ருங்க :-)

SurveySan said...

ரசித்தேன் ;)

படத்தின் நுண்ணரசியலை விட்டது பெரிய ஏமாற்றம்.

கிருத்துவ தேவாலயத்தில் பச்சீனோ இருக்கும் போது, வெளியில் பல கொலைகளை ஏவிவிட்டது போன்ற காட்சியமைப்பு, கிருத்துவர்களை, பெரிய கொலைகாரர்களாக சித்தரிக்கும் திட்டமிட்ட செயல்.

ஸ்ரீதர் நாராயணன் said...

சர்வேசன்,

//படத்தின் நுண்ணரசியலை விட்டது பெரிய ஏமாற்றம்.//

நீங்களுமா? விட்டா ஒரு சர்வே போட்டுடிவீங்க போல.

ambi said...

படம் கிடக்குது கழுத, பதிவை படிச்சு பார்த்ததும் எனக்கு பல பதிவுகள் நினைவுக்கு வருதே!

என் மண்டையில ஏதாவது அணுச்சிதைவா இருக்குமோ ? :p

ஸ்ரீதர் நாராயணன் said...

//என் மண்டையில ஏதாவது அணுச்சிதைவா இருக்குமோ ? :p//

Ms.Congeniality said...

Mandaikulla at least athavathu irukke. :p

இப்படி ஒரு கமெண்ட் நிசமாவே காதில கேட்டதுப்பா. :-))

பினாத்தல் சுரேஷ் said...

என்னென்னவோ எழுதலாம்னு நினச்சேன்..

ஆனா பிற்பாடுதான் இந்த டிஸ்கியப் பாத்தேன்..

//யாரையும் குறிப்பிட்டு கேலி செய்யும் நோக்கில் எழுதவில்லை. //

சும்மாவா சொன்னாங்க..

கிண்டல் மட்டும் கண்டால் டிஸ்கி தெரியாது.. டிஸ்கி மட்டும் கண்டால் ரிஸ்கி கிடையாது..ன்னு!

ஸ்ரீதர் நாராயணன் said...

பெனாத்தல் ஐயா,

கொத்தனார் ஏன் எப்பவும் 3 வரி பதிவு எழுதினா 4 டிஸ்கி போடறார்ன்னு இப்பத்தான் புரியுது. :-))

ச.சங்கர் said...

:)

இந்த விமர்சனத்துக்கு காட் ஃபாதர் மூணு பாகத்தையும் சேத்தாப்புல பாத்தேன் அப்படீன்னு எழுதணுமா?

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

ரசித்தேன் ;)

படத்தின் நுண்ணரசியலை விட்டது பெரிய ஏமாற்றம்.

கிருத்துவ தேவாலயத்தில் பச்சீனோ இருக்கும் போது, வெளியில் பல கொலைகளை ஏவிவிட்டது போன்ற காட்சியமைப்பு, கிருத்துவர்களை, பெரிய கொலைகாரர்களாக சித்தரிக்கும் திட்டமிட்ட செயல்.//

தல,
சர்வேசன் ஐடியிலே இந்த பின்னூட்டம் போட்டுட்டீங்க போல

சர்வேசன் எப்ப இப்படி நுண்ணரசியல் எல்லாம் பேச ஆரம்பிச்சார்னு தெரியல :-))))))))

ஸ்ரீதர் நாராயணன் said...

//அப்படீன்னு எழுதணுமா?//

சங்கர்,

:-) தொடர்ந்து பார்த்தேன். வாய்ப்பு கிடைச்சாப் பாருங்க. ஒரு நல்ல அனுப்வம்.

வெட்டி,

நீங்க வெட்டிப் பையல் மட்டுமில்லை. நாட்டிப்பையல் (naughty). 'தல' இருக்க சொல்ல வால் ஆடக்கூடாதாம். அதான் நான் சைலண்ட்டா இருக்கேன். :-))

வெட்டிப்பயல் said...

//வெட்டி,

நீங்க வெட்டிப் பையல் மட்டுமில்லை. நாட்டிப்பையல் (naughty). 'தல' இருக்க சொல்ல வால் ஆடக்கூடாதாம். அதான் நான் சைலண்ட்டா இருக்கேன். :-))//

அதெல்லாம் இருக்கட்டும்...

ப்ளாக் ஆரம்பிச்ச உடனே நம்ம பதிவு எல்லாம் படிக்கறதை நிறுத்திட்டீங்களா? :-)

வெட்டிப்பயல் said...

கொத்தனாரையும் ஊருக்கு அனுப்பிட்டீங்க :-)

ஸ்ரீதர் நாராயணன் said...

//கொத்தனாரையும் ஊருக்கு அனுப்பிட்டீங்க :-)//

எங்கேயாவது 'அளக்க' போயிருப்பார். ஊடு கட்டி அடிச்சப்புறம்... அதாவது... முடிச்சப்புறம் இங்கதானே வரனும். ஒரேயடியா அமுக்கிடலாம் :-))

பொன்ஸ்~~Poorna said...

ஸ்ரீதர்,
பதிவைப் படிச்சிட்டு 'என்னைப் பற்றி'யைப் பார்த்தேன்... கொஞ்சம் பயம்ம்மாத்தான் இருக்கு..;)

பிரபு ராஜதுரை said...

சேரியமான ஒரு பதிவினைப் படிக்கப் போகிறேன், என்று உட்கார்ந்த என்னை ஏமாற்றி விட்டீர்கள்...இந்தப் பதிவில் வேறு ஏதேனும் கிண்டல் உள்ளதா:-(

காட் பாதருக்கும், தேவர் மகனுக்கும் நான் கண்ட ஒற்றுமைகள்
http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_07.html

ஸ்ரீதர் நாராயணன் said...

பொன்ஸ்,

:-))

பிரபு,

:-)) இந்தப் பதிவு சமீபத்திய சில தமிழ்ப் பதிவுகளின் பாதிப்பால் எழுதியது. மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது? உங்கள் பதிவு உட்பட, ஏகப்பட்ட பதிவுகள் ஏற்கெனவே எழுதப்பட்டன.

உங்கள் பதிவில் நான் ஏற்கெனவே பின்னூட்டம் இட்டிருந்தேன்.

//ஆம்! ஒற்றுமைகள் நிறையவே. திரைக்கதை எழுதியது கமலஹாசனேதான். அதைப் பற்றி அவர் பாலசந்தருடன் பெருமையாக ஒரு கலந்துரையாடல் செய்தது (பொம்மை பத்திரிகைக்காக என்று நினைக்கின்றேன்) நினவிருக்கிறது.

என்ன Mrs. Doubtfire-ஐ அவ்வை சன்முகியாக மாற்றிய மாதிரி localization செய்திருக்கிறார்.//

அந்த கமெண்டில் ஒரு மாற்றம் செய்யலாம். அவ்வை சண்முகி Mrs. Doubtfire 40% + Tootsie 40% + localization சம்பவங்கள்.

ஸ்ரீதர் நாராயணன் said...

பிரபு,

இன்னொரு முக்கியமான விசயம் -

GodFather I - தேவர்மகன். Find and Replace போட்டு மாற்றிய கதை.
GodFather II - அதில் வரும் வீடோ கோர்லியோன் சம்பவங்கள் - நாயகன் முதல் பாதி. ஆனால் அதன் நீட்சி வேறுதிசையில் பயனிக்கும்.

கமல்ஹாசனைவிட, மணிரத்னத்தின் அடாப்டேஷனில் நிறைய முதிர்ச்சி இருந்தது என்பது எனது அவதானிப்பு.

இலவசக்கொத்தனார் said...

//சமீபமாக Netflix-ன் தயவில் வாரம் 2-3 படங்கள் பார்க்கும் வாய்ப்பு.//

அதாவது நீங்க காசு குடுத்துப் பார்ப்பீங்க. ஆனா அதை அந்த நிறுவனத்தின் தயவு அப்படின்னு சொல்ல வேண்டிய நிலமை. ஏன்னா காசு குடுத்துப் படம் பாக்குறது மட்டும் அம்மணிக்குத் தெரிஞ்சா நடக்கிறதே வேற. (அவங்க க்ரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்ட் எல்லாம் பாக்கறது இல்லையா?)

தன்னால் ஒரு சந்தோஷத்தை பெற செலவு செய்ய முடியும் என்றால் கூட அதனைச் செய்ய சுதந்திரம் இன்றி ஆதிக்க வருக்கத்தினரின் தயவில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் பாட்டாளி மக்கள் இருப்பதை சுட்டிக் காட்டும் ச்சீரீதர் அவர்கள் ஒரு அரசியல் விமர்சனம் அற்புதம்.

//இதையே சாக்காக வைத்து 'வாரம் ஒரு திரைப்படம்' அப்படின்னு ஏதாவது மொக்கை போடலாம்னு நினைச்சப்போ //

இன்றைய தமிழ் தொலைக்காட்சிகளில் திரைப்படத்துறையின் ஆதிக்கத்தை பற்றிய ஆதங்கம்தான் இப்படி அங்கதமாக எழுந்துள்ளது. சிரிப்பு செவ்வாய், புரியாத புதன், விளங்காத வியாழன் என்று எல்லாம் வேறு வேறு பெயர்களில் திரைப்படங்களை வைத்தே ஓட்டும் தொலைக்காட்சித் துறையின் அவலத்தை வெட்டவெளிச்சமாக்க முயலும் ச்சீரீதருக்கு நம் ஆதரவு என்றும் உண்டு.

//முதலில் தோன்றியது Godfather படம்தான். //

நமக்கு எல்லாம் அப்பா போன்ற பரிவு கொண்டவரின் (அவரை அப்பாவாக கொண்டவர்களுக்கு கடவுள் போன்ற வரங்களைத் தருவதை இப்பொழுது விட்டு விடலாம்) அன்று வந்த பராசக்தியா அல்லது அற்புதமான பொன்னர் சங்கரா, பாசக்கிளிகளா அல்லது உளியின் ஓசையா எனப் பரபரத்துப் படிக்கும் பொழுது அது எதோ ஆங்கிலப் படம் எனத் தெரிகையில் தமிழை விடுத்து ஆங்கிலப் படங்களை பார்க்கும் ச்சீரிதரின் பரம்பரை பற்றிப் பேச வேண்டும் என்பதுதான் மரபென்றாலும் பொதுவில் பேசுவதற்கு எல்லாம் உள்ளே போக வேண்டி வரும் காலம் இது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

//மூன்று பகுதிகளையும் தொடர்ச்சியாக பார்த்து முடித்தேன். //

ஒரு படம் எனச் சொல்லி மூன்று படங்களைப் பார்த்ததாகச் சொல்வதின் மூலம் ஒரே கதையை பலத் திரைப்படங்களாக எடுப்பதை சாடுகிறாரா அல்லது பல திரைப்படங்களை எல்லாம் பார்த்து அதில் இருந்து காட்சிகளை திருடி ஒரே படமாக மாற்றுவதை வெளிக் கொணர்கிறாரா அல்லது தலைப்பைப் பார்க்காமல் விட்டுவிட்டால் என்ன திரைப்படம் எனத் தெரியாமல் போகும் தளபதியை நோக்கிய விமர்சனமா அல்லது தந்தை, இளைய மகன், மூத்த மகன் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட அரசியல் நாடகம் பற்றிய விமர்சனமா என பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது ச்சீரிதரின் எழுத்துக்கள்.
_____________________________________________________

ஏம்பா வெட்டி, இப்படி ஸ்ரீதரின் பல அடுக்குகளில் செய்யும் நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கும் நான் இன்னும் முதல் பாராவையே தாண்டவில்லை. அதனால் பின்னூட்டம் போடுவதில் தாமதம். அதற்குள்ளாக நுண்ணரசியல் என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுத்திய சர்வேசன் நாந்தானோ என நீர் செய்யும் திரிசமன் ஏன்?

நுண்ணரசியலைப் பற்றிப் பேசிய அவர் பிரமித்து நிற்பதாகச் சொன்னாரா? நுண்ணரசியலைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் பிரமித்து நிற்பது நீர் அறியாததா?

நுண்ணரசியல் என்று எழுத நான் என்ன கோப்பிரைற் வைத்து இருக்கிறேனா?

முதல் பாராவில் இருக்கும் இவ்வளவு நுண்ணரசியல்களைப் பற்றி எழுதாமல் கிறுத்துவர்களை பற்றி எழுதி இருக்கும் வரிகளில் இல்லாத நுண்ணரசியலை இருப்பதாக எழுதி இருக்கும் சர்வேசனோடு என்னைத் தொடர்பு படுத்திப் பேசுவதன் மூலம் என் மீது சாதி அரசியல் செய்பவன் என்ற பட்டத்தை கட்டி அதனால் யாரிடம் நீர் என்ன ஆதாயம் பெற முயல்கிறீர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என் மீது அது போன்ற முத்திரை குத்த முயலும் சதி எப்பொழுது இருந்தோ நடந்து வருகிறது என்பதையும் அதனை நான் எவ்வாறு முறியடிக்கிறேன் என்பதையும் இவ்வலையுலகு அறிந்தே உள்ளது. அந்தக் கயவர்களின் சதிக்கு நீரும் ஆளாகிவிட்டீரே என நினைக்கியில் என் மனம் வெம்புகிறது.

ஸ்ரீதர் அண்ணாச்சி, வெட்டியின் விவகாரமான குற்றச்சாட்டை வெளியிட்ட நீர் சம்பந்தப்பட்ட பின்னூட்டத்தின் ஆய்ப்பீ பற்றிய தகவல்களை பொதுவில் வெளியிட முடியுமா?

இலவசக்கொத்தனார் said...

//கொத்தனார் ஏன் எப்பவும் 3 வரி பதிவு எழுதினா 4 டிஸ்கி போடறார்ன்னு இப்பத்தான் புரியுது. :-))//

தெரிஞ்சா சரி.

இலவசக்கொத்தனார் said...

மட்டுறுத்தல் இல்லையா????

அது என் பதிவில் ஏன் போட்டு இருக்கேன்னு தெரியுது என்று நீர் பின்னூட்டம் போட வரும் காலம் வர வேண்டாம் என ஆண்டவனைப் பிரார்தனை செய்கிறேன்.

ஸ்ரீதர் நாராயணன் said...

கொத்தனார் ஐயா,

பெருசா பின்னூட்டம் போட்டிருக்கீங்க. வெட்டி வருகிறவரை வெயிட்டீங்.

நடுவுல இதைப் பார்த்தவுடன -
//அவரை அப்பாவாக கொண்டவர்களுக்கு கடவுள் போன்ற வரங்களைத் தருவதை //

ஏதோ வாரிசு அரசியல் பத்தி பேசுறீங்கப் போல. அப்ப இந்த வாரிசு அரசியல் பத்தி என்னா நினைக்கிறீங்க?

http://penathal.blogspot.com/2008/07/blog-post.html
-----------
அகரம்.அமுதா said...
எழுத்தாளர் சுஜாதாவின் இடத்தை நிறம்பும் ஆற்றல் தங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்.
-------------

உங்கள் உடனடிப் பதில் தேவை. :-))))

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார் ஒரு வரியை வைத்து மூணு பக்கம் நுண்ணரசியல் கண்டுபிடிப்பது - அதைக்கண்டு பிரமிப்பது (இதுக்குதான் கோப்பிறைற் ஆம்) எல்லாம் புதுசில்லைன்னாலும் (அவர் அடுத்த முறை ஒரு கமாவிலே, முற்றுப்புள்ளியிலே நுண்ணரசியல் கண்டு பிரம்மித்து நின்றால்தான் பரிணாம வளர்ச்சி).. தூங்கப்போன 5 மணி நேரத்தில என்னைய் வச்சு பொங்கல் போடப்பாக்கறீங்களே ஸ்ரீதர் - இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ!

அங்கே போட்ட பதில் கமெண்ட் - "என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலியே?" அவங்க பண்ணாத குறைய நீங்க தீத்துக்கிட்டீங்க போல! நடாத்தும்!

ஸ்ரீதர் நாராயணன் said...

//அவர் அடுத்த முறை ஒரு கமாவிலே, முற்றுப்புள்ளியிலே நுண்ணரசியல் கண்டு பிரம்மித்து நின்றால்தான் பரிணாம வளர்ச்சி//

அது வெறும் வளர்ச்சிதான். அவரோட பரிணாம வளர்ச்சிக்கு நீங்க தனியா ஒரு 'அறிபுனை'தான் எழுதனும் :-))

பிரபு ராஜதுரை said...

"இந்தப் பதிவு சமீபத்திய சில தமிழ்ப் பதிவுகளின் பாதிப்பால் எழுதியது"

எனக்கு ரொம்ப வயதாகி விட்டது போல...வழக்கத்தை மீறி இங்கு நடப்பது எதுவும் புரிவதில்லை:-)

ஸ்ரீதர் நாராயணன் said...

பிரபு,

//எனக்கு ரொம்ப வயதாகி விட்டது போல...//

வயதானால் சந்தோஷம்தானே. :-)ஒயின் மாதிரி மதிப்பு கூடத்தானே செய்யும்.

TBCD said...

அடடே..உண்மையான விமர்சனம் போலவே இருக்கே என்றுப் பார்த்தேன்..

பாதிப்பா.... :P

ஸ்ரீதர் நாராயணன் said...

TBCD,

//பாதிப்பா.... //

:-))