முதல் 50 சிந்தனையாளர்கள்இவரைப் பற்றி சில குறிப்புகள்:
பிறந்தது கோயம்புத்தூரில். படித்தது சென்னையில். மேற்படிப்பு ஹார்வேர்டு பல்கலைகழகம். தற்போது மிக்சிகன் பல்கலைகழகத்தில் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையின் தலைவராக பணிபுரிகிறார்.
இவர் எழுதிய புத்தகங்கள்:
Multinational Mission: Balancing Local Demands and Global Vision (1987)
Competing for the Future (1994)
The Future of Competition: Co-Creating Unique Value with Customers (2004)
இந்தியாவின் எதிர்காலம் பற்றி இவர் சொல்கையில் 1929-ல் ஏற்பட்ட 'பூர்ண சுயராஜ்ஜியம்' பற்றியும் அது ஒவ்வொரு இந்தியனிலும் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவு கூர்கிறார்.
சமூக அடித்தட்டு மக்களின் (bottom of the pyramid) சந்தையை உருவாக்குவதின் மூலம் அவர்கள் தங்களுகுண்டான அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பது இவரது புதிய சித்தாந்தம்.
மைரோசாஃப்டின் பில் கேட்ஸோடு இவர் நடத்திய விவாதத்தை இங்கே சென்றுப் பார்க்கலாம்.
கிரியேடெடிவ் காபிடலஸித்தைப் பற்றி பில்கேட்ஸ் பேசுகையில் பிரகலாத்தின் தீர்வைப் பற்றி குறிப்பிடுகிறார்.
கென்யாவின் விவசாயிகளுக்கு செல்போன் சேவை குறைந்த செலவில் கிடைப்பதையும் அதனால் அடித்தட்டு மக்களுக்கு என்ன பிரயோசனம் என்பதையும் பிரகலாத் விளக்குகிறார்.
உலகமயமான நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் அடித்தட்டு மக்களை குறித்து தங்கள் சேவையை குவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
இவரது கருத்துக்கள் இன்றைய தடைகளற்ற வாணிப உலகில் மிகவும் முக்கியமானவை.
11 மறுமொழிகள்:
ஒரு சில பயனுள்ள குறிப்புகளை சேர்த்திருக்கிறேன்.
Bottom of the pyramid (i forgot the title) is an interesting book although analytic rigor is lacking.his examples include arvind eye hospital,jaipur foot
and are relevant.But the point is Hindustan Levers and ITCs will not solve the problems as they are part of the problems as well.
E-choupal is a good initiative
but ITC makes the most from tobacco business.
//Hindustan Levers and ITCs will not solve the problems as they are part of the problems as well.
//
இதேதான் எனது கருத்தும். ஆனால் இதில் சாதகமான ஒரு அம்சம் - இந்த அடித்தட்டு மக்களுக்கான சந்தையை உருவாக்குவது பற்றி அவர் முன்வைக்கும் யோசனை. இது மென்துறையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. திறந்த மூல சேவைகள் ஒருவகையில் இவ்வகையான சந்தைதான்.
இதில் ஒரு பிரச்சினை.... அடித்தட்டு மக்களும் இதில் பங்கேற்க வேண்டும். ஆனால் தொழிலாளர் சங்கத் தலைவர் முதலாளியிடம் நெருக்கமாக மாறுவது போன்ற சுழற்சிகளால் அது எவ்வகையில் சாத்தியம் என்பது கேள்விக்குறிதான்.
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
வேளராசி,
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.
வேளராசி-ன்னு ஒரு ராசி இருக்கா? :-)
லிஸ்ட்ல அல் கோர் பெயர் இருப்பதுதான் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்குகிறது!
யு எஸ் தமிழரே,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா :-)
அல் கோர் மேல அப்படி என்ன உங்களுக்கு கோவம்? நயாகரா போயிட்டு வந்து சொல்லுங்க :-)
ஓ தலைவர்தான் அந்த C.K.Prahalad-ஆ ? என் collegue ஒருத்தர் U-MI-ல E-MBA படிச்சவரு சொன்னாரு, தல அவருக்கு class எடுத்துருக்கிறதா.
நன்றி ஸ்ரீதர்.
அன்புடன்
முத்து
There is a typo in think50 website.
It is கிருஷ்ணாராவ்.
ITC is moving away from tobacco business.
முத்து,
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
வாங்க அனானி நண்பரே,
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
//ITC is moving away from tobacco business//
புகையிலை தொழிலின் மேல் இருக்கும் அதிகப்படி வரிச்சுமை அவர்களின் இந்த நிலைக்கு காரணம் என்று நினைக்கின்றேன். CK சொல்லும் அடித்தட்டு சந்தையை அந்த மக்களின் நன்மைக்காக உருவாக்குவது ITC போன்ற நிறுவனங்களுக்கு பெரிய சவால்தான்.
அதற்கு தேவை நிறுவனங்களின் தூண்டுதல் மட்டுமல்லாது, அதில் பணிபுரியும் மக்களின் நோக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும். இது ஒரு சிக்கல்தான்.
Post a Comment