August 11, 2008

ரைஃபிளால் நான் சுட்டபொழுது...

'யே ஹை ஃபையரிங் பின். அபி காலி ஹை. க்யோங் கி யே ப்ராக்டிஸ் கர்னேகா ரைஃபிள் ஹை' நாயக் (இரண்டுப் பட்டி) உண்ணி கிருஷ்ணன் NCC Cadets-களுக்கு .303 ரைஃபிளை பிரித்துப் போட்டு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

மதுரை B4 போலீஸ் ஸ்டேஷன் போய் 11 ரைஃபிள் எடுத்துக் கொண்டு சேதுபதி ஸ்கூல் மைதானத்தில் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பத்தாம் வகுப்பு. அடுத்த மாதம் பரீட்சை. அதை B சர்டிபிகேட் பரீட்சை என்பார்கள். கல்லூரியில் C சர்டிபிகேட். பத்து விநாடிகளில் மேகஸினை லோட் பண்ணி சேஃப்டி லாக் போட்டு கீழே வைக்க வேண்டும். அடுத்த செட் அதே பத்து விநாடிகளில் மேகஸினை அன்லோட் செய்து கீழே வைக்க வேண்டும். 'பரேட்! ஜெனெரல் சல்யூட் சலாமே ஷஸ்த்ர' என்று சொன்னவுடன் வலது கையில் இருந்து ரைஃபிளை செங்குத்தாக தூக்கி இடது கையால் பேரலில் ஒரு அடி அடித்து பிடித்து, வலது காலை தூக்கி இடது காலுக்கு பின்னால் ஒரு 45 டிகிரியில் வைத்து வலது கையை ரைஃபிளின் கீழே 'பட்' பகுதியில் சல்யூட் அடிக்கும் நிலையில் வைக்க வேண்டும். நான்கு விரல்களும் ஒன்றாக விரித்து ஒரு பக்கமும், கட்டை விரலை இன்னொரு பக்கமும் பிடித்துக் கொண்டு விறைப்பாக நிற்க வேண்டும்.

இப்பொழுதும் ரைஃபிளை பார்க்கும்போது எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ராணுவ வீரர்கள் அந்த ரைஃபிள் என்பது ரானுவ ஜவான்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்லித் தந்தது நன்றாக நினைவிலிருக்கிறது. திரைப்படங்களில் ராணுவ வீரர்கள் தொப்பியை எப்படி அணிவார்கள் என்று கூட தெரியாமல் காட்சிகள் வைக்கும் போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பக்கத்தில் ஃபயரிங் ரேஞ்ச் இருக்கிறது. வடக்கே ரிஸர்வ் லைன் பக்கமும் உண்டு. அந்த ராணுவ ட்ரக்கில் ஏற்றிக் கூட்டிக் கொண்டு போவார்கள். ஆறு ஆறு கேடட்களாக வரிசையாக உட்கார்த்தி வைத்து... முன்னால் மணல் மூட்டையில் ரைஃபிள் படுக்க வைக்கப்பட்டு இருக்கும். 'நெக்ஸ்ட் லைன்' என்று சொன்னவுடன் எழுந்து சாவ்தானில் நிற்க வேண்டும். மொத்தம் மூன்று நிலைகளில் ஒரு ரைஃபிளை இயக்கலாம். படுத்துக் கொண்டு, முழங்காலிட்டு அல்லது நின்று கொண்டு. NCC மாணவர்களுக்கு எப்பொழுதும் படுத்துக் கொண்டுதான் ரைஃபிளை சுட பயிற்சி கொடுத்தார்கள். 'பொசிஷன்' என்றவுடன் தடாலென்று கீழே படுத்து இடது முழங்கையை ஊன்றி ரைஃபிளின் அடி பேரலை பிடித்துக் கொள்ள வேண்டும். பேரலின் முன் பகுதி மணல் மூட்டையின் மேல். பட் (butt) வலது தோளில் நன்றாக பொதிந்து கொள்ள, வலது உள்ளங்கை ஸ்மால் ஆஃப் த பட்-ல் வைத்து வலது ஆட்காட்டி விரலை டிரிக்கர் காஜில் வைத்துக் கொண்டு, அந்த போல்டின் மேல் இருக்கும் சிறிய 'U' வடிவ இடைவெளி வழியாக, பேரலின் முன்பகுதியில் மேல் நோக்கிக் கொண்டிருக்கும் சின்ன 'I' வடிவத்தை நடுவில் நிறுத்தி, அப்படியே அம்பது அடி தொலைவில் வைக்கப் பட்டிருக்கும் டார்கெட் பேப்பரின் நடு கருப்புப் புள்ளியில் பொருத்தினால் 'Bulls Eye'. ஐந்து ரவுண்ட் தருவார்கள். பள்ளியில் படிக்கும் பொழுது நடந்த பயிற்சியில் 2-3 குண்டுகள் டார்கெட் பேப்பரில் பட்டிருக்கும். அவ்வளவுதான்.

.22 ரைஃபிள் சுட்டால் 'ஷ்விங்ங்' என்று சத்தம் மட்டும் கேட்கும். .303-ல் சுட்டால் ஐசக் ந்யூட்டன் எல்லாம் நினைவிற்கு வருவார். rifle recoil சில சமயம் தோள்பட்டையில் சிவப்பு தடத்தை பதிக்க 'டுமீங்ங்' என்று சத்தத்துடன் வெடிக்கும். அந்த அதிர்விலே அடுத்த டார்கெட்டில் போய் வெடித்த எய்ம்களும் உண்டு.

கல்லூரிக் காலத்தில் RDC கேம்ப் என்ற ஒரு மாயமானை துரத்திக் கொண்டிருந்தேன். குடியரசு தின அணிவகுப்புக்கு NCC-ல் இருந்து ஒரு contingent அனுப்புவார்கள். அதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக பல கேம்புகளில் ஆட்களை திரட்டுவார்கள். அதில் ஒரு பகுதி best cadets என்று சொல்லப்படும் ஆல்-இன்-ஆல் அழகுராஜா போட்டி. முதல் கேம்பில் வந்த ஒரு lt. Colonel "நீ நல்ல உயரமாக இருக்கிறாய் அதனால் பெஸ்ட் கேடட் தேர்விற்கு வா " என்று சொல்லிவிட அதற்கென்று ஸ்பெஷல் பயிற்சிகள் தொடங்கின. கம்பாஸ் வைத்து மேப்பில் இடம் கண்டு பிடிக்க வேண்டும். ஆர்மியின் ஆப்பரேஷன்கள் பற்றி உரைகள் நிகழ்த்த வேண்டும் (ஜெனெரல் குல்தீப் சிங்கின் ஆப்பரேஷன் ப்ளூஸ்டார் என்ன தவறுகள் செய்தார்?). 6 கிலோமீட்டர் கிராஸ் கண்ட்ரி ஓட்டம் ஓடி அதிலும் நல்ல ரேங்கில் வர வேண்டும். பல்வேறு தடைகளுக்கு இடையே 500 மீட்டர் ஓடி ஒரு 6 அடி சுவற்றை எகிறி குதித்து தாண்ட வேண்டும். ஓடினேன். ஓடினேன்... எல்லா அப்ஸ்டக்கில்ஸ்-ஐயும் கடந்து ஓடினேன். சுவற்றை தாண்டலாம் என்றால் ஒரு கையில் ரைஃபிள், பல பைகளில் கற்கள், காலில் கனமான ஆர்மி ஷூ என்று எக்குதப்பாக எக்யூப்மெண்ட் மாட்டிக் கொண்டு... மூச்சுவாங்கியது. மேப் ரீடிங்க் எல்லாம் போட்டுத் தாக்கியாகிவிட்டது.

இதன் நடுவே ரைஃபிளை வைத்து சுட வேண்டும். சும்மா இல்லை 5 ரவுண்ட்களும் பக்காவாக bulls eye-ல் பதிய வேண்டும். அங்கேதான் நாயக் சுபேதார் ராமன் நாயர் வந்தார். குமரித் தமிழில் அவர் பேசுவது அலாதியாக இருக்கும். நான்-கமிஷன்ட் ஆஃபிசராக சேர்ந்து நாயக் சுபேதார் வரை பிரமோஷன் வாங்கியவர், பின்னாளில் கமிஷன்ட் ஆபிசராக உயர்வு பெற்று கேப்டனாக ஓய்வுப் பெற்றார். ஒரே நாளில் அவர் சலாம் வைத்த நிறைய இளம் ஆஃபிசர்கள் அவருக்கு சலாம் வைக்கும் நிலைக்கு மாறியவர். அவர்தான் சொன்னார் 'மக்கா....நல்லா மூச்சை இழுத்துப் பிடிச்சிட்டு சுடு' என்று மூச்சின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்தவர். முதல் சுற்றில் 3-ரவுண்ட்கள் bulls eye. 2-ரவுண்ட்கள் பக்கத்தில் இருக்கும் உள்-வட்டத்தில். மொத்தம் 2 இன்ச்களுக்கு இடையே 5 ரவுண்ட்கள். Colonel அருகே வந்து சொன்னார். 'யு ஹாட் ஃபையர்ட் வித் 2 எய்ம்ஸ். நெக்ஸ்ட் டைம் ட்ரை வித் சிங்கிள் எய்ம்'. அந்த கேம்ப்பில் சக கல்லூரி நண்பர்கள் காதுகளில் புகை விட மதுரை அளவில் பெஸ்ட் கேடட்டாக தேர்வாகி விட்டேன். சந்தோஷம்தான். திடீர் என்று எப்படி இப்படி ரைஃபிள் ஷூட்டிங்கில் கலக்குகிறான் என்று நண்பர்களுக்கு ஆச்சர்யம்.

அடுத்த கட்டமாக 6 டீம்களுடன் போட்டி. சென்னை (இரண்டு டீம்கள்; சென்னை A மற்றும் சென்னை B), திருச்சி, கோவை, மற்றும் பாண்டிச்சேரியுடன் போட்டி. ஒவ்வொரு ஊரிலிருந்து நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தார்கள் பெஸ்ட் கேடட்டாக. அதிலும் சென்னைப் பசங்கள் எமகாதகர்களாக இருந்தார்க்ள். பெண்களுக்கு லைட் வெய்ட் ரைஃபிள். அவர்கள் பிரிவில் பெஸ்ட் கேடட் சுட்ட (தோசை இல்லீங்க்ணா) டார்கெட்டை பார்த்தால் ஒரே ஒரு குண்டுதான் பட்டிருந்தது போல் இருந்தது. பின்னர்தான் தெரிந்தது 5 ரவுண்ட்களும் ஒரே இடத்தில் நெருக்கமாக சுட்டிருந்தார். "இப்படியெல்லாம் சுட எப்படி ப்ராக்டிஸ் பண்ணீங்கன்னு" கேட்டு விடலாம் என்று பார்த்தால் அவர் ரைஃபிளை எப்பொழுதும் தோளோடு சேர்த்தே வைத்திருந்தார். எதற்கு வம்பு என்று வந்துவிட்டேன். இந்த முறை போட்டி நடந்ததோ மதுரை பசுமலையில். மதுரையின் விருந்தோம்பலுக்கு இலக்கணமாய் சென்னை-பி அணியின் பாலா என்ற கேடட் தமிழக அளவிற்கு பெஸ்ட் கேடட்டாக தேர்வாகி அடுத்த கட்டம் சென்று விட்டார். சென்னை பீச்சில் சிலமுறை பலூன் சுட்டது போக நமக்கும் ரைஃபிளுக்கும் உண்டான தொடர்பு அத்தோடு முடிந்து போனது.

இப்பொழுது ரைஃபிளில் சுடுவது எல்லாம் மிகவும் ஹை-டெக் சமாச்சாரம். ஏகப்பட்ட முன்னேற்றங்கள். சில வருடங்களாகவே இந்தியாவில் ரைஃபிள் ஷூட்டிங்க்க்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. பல சாதனைகள் நிகழ்த்தப் பட்டு இருக்கின்றன. இம்முறை அபிநவ் பிந்த்ரா ஒரு புதிய அத்தியாயம் எழுதியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள் பல.

14 மறுமொழிகள்:

Seemachu said...

ஸ்ரீதர்,
ந்ல்லா விவரிச்சு எழுதியிருக்கீங்க.. படிக்கும் போதே உங்க கூட வந்து பாத்த் அனுபவம் வருகிறது.. உங்க பதிவை அலுவலகத்திலேயே படிச்சுவிட்டேன்... அங்கிருந்து மறுமொழி போடுவதில்லையாதலால்... மறக்காமல் வீட்டுக்கு வந்து இந்த பதில்..

வாழ்த்துக்கள்

அன்புடன்
சீமாச்சு

ஸ்ரீதர் நாராயணன் said...

சீமாச்சு,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ப்ராக்ஸி வச்சு ப்ளாக்கர்ல போடலாமே. டிரை பண்ணீங்களா? :-)

Anonymous said...

என்ன பாஜூ நீங்க மதுரத்தான் போலயே, எனக்கு கூட படிச்சுட்டு காமண்டிங் ஆபிஸராகி, RDC parade போன ஒருத்தன எங்களுக்கு சலுயூட் பண்ணுடான்னு சொல்லி ஓட்டினதுவரைக்கு ஞாபகம் இருக்கு. நாங்களெள்ளாம் சேவை (இது டவுன்ஹால் ரோடு வசந்த பவன் எலுமிச்ச சேவ இல்ல, சமுகம் அப்படின்னு ஒரு மாதிரி பெரிய விஷயமாக்கும்)பண்ணுறதா சொல்லி NSS la சேர்ந்து மண்வெட்டி பிடிச்சமாக்கும், அதுல கூட அந்த Recoiling effect லாம் இல்ல, ஆனா dont cut this Calotrophicus plant சொன்னமாக்கும்,ம்ம்ம்ம்ம்ம் எதையோ கிளப்பிவிட்டுடீங்க

ஸ்ரீதர் நாராயணன் said...

அனானி சார்,

//வருகைக்கும் கொசுவர்த்தி சுத்தினதுக்கும் நன்றி ;-))
படிச்சுட்டு காமண்டிங் ஆபிஸராகி,//

அது அண்டர்-ஆபீசர்ங்க்ணா. நாங்களும் அந்த ஆப்ப்பீசராயி மெடல் எல்லாம் குத்தி போட்டோ எடுத்து வச்சிருக்கேங்ணா. அது ஒரு இனிமையான அனுபவம்தான். :-)

//dont cut this Calotrophicus plant சொன்னமாக்கும்//

இதுவும் பண்ணியிருக்கோம்ல. செடி வெட்டினது, சைக்கிள்ல மதுரை-பெரியகுளம் போனது இப்படி பலதும் பண்ணி தினமலர்ல போட்டோ எல்லாம் போட்டாங்கப்பா.

கும்பக்கரை நீர்வீழ்ச்சி பின்னாடி போற மலைப்பாதையில 19 கி.மீ நடந்து போனா கொடைக்கானல் காந்தி ஆசிரமம் குறுக்கு வழியில போய் ஒரு நாள் கொடைக்கானல் சுத்திப் பாத்திட்டு அப்படியே பஸ்ஸ பிடிச்ச கீழிறங்கி பெரியகுளம் வந்து அங்கேர்ந்து சைக்கிள்ல்ல மதுரை வந்து சேந்தாச்சு.

//ம்ம்ம்ம்ம்ம் எதையோ கிளப்பிவிட்டுடீங்க//

அந்த 'எதையோ' அப்படியே எழுதிப் போடுங்க. நாங்களும் படிக்கிறோம் :-)

இலவசக்கொத்தனார் said...

எங்களுக்குத் தெரிஞ்சது எல்லாம் பீச்சில் பலூன் சுடறதுதான். அதையாவது எழுதலாமுன்னு நினைச்சா அதையும் எழுதிட்டீரு.

ஆப்பீஸர் வேற ஆகி இருக்கீரு!!

அட்டேன்ஷன்!! குட் மார்னிங்க் சார்!! (சல்யூட் அடிக்கறது தெரியுதா?)

இதுக்காக நம்மளை 320, போய் டீ வாங்கிட்டு வான்னு அனுப்பாம இருந்தா சரி!!

ஸ்ரீதர் நாராயணன் said...

வராதவங்க எல்லாம் வந்திருக்கீங்க. வாங்க தல :-)

இந்திய பயனம் நல்லபடியா முடிஞ்சிருச்சிப் போல. சுடச்சுட ஒரு பதிவை போட்டு தாக்குங்க.

//320, போய் டீ வாங்கிட்டு வான்னு அனுப்பாம இருந்தா சரி!!//

சேசே! உங்களப் போய் 320-ன்னுல்லாம் சொல்லிக் கூப்பிடறதா? தப்பு.. தப்பு!

420--னாவது சொல்லலாம். கொஞ்சம் பொருத்தமாவது இருக்கும் இல்லையா? :p

ச்சின்னப் பையன் said...

மொதல்லே தலைப்பை நான் தப்பா படிச்சிட்டேன்... (ரைஃபிளை நான் சுட்டபோது....).... ஹிஹி...

அப்புறம் பதிவை படிச்சா - அடேங்கப்பா. கலக்கியிருக்கீங்க....

நாங்கெல்லாம் NCC போனது - வாரத்துலே ரெண்டு நாள் ரெண்டு பீரியட் கட் அடிக்கத்தான்.......:-)))

ஸ்ரீதர் நாராயணன் said...

//ரைஃபிளை நான் சுட்டபோது....//

வாங்க சின்னப்பையன். இது சூப்பரா இருக்கே. உங்க தல நடிக்கிற படத்துல ஒரு காட்சியா வைக்கலாம் போல. :-)

வருகைக்கும் கருத்துக்கும் ந்ந்நன்றி! :-))

ச.சங்கர் said...

நல்லா சுட்டிருக்கீங்க :)

இலவசக் கொத்தனார் பின்னூட்டத்தைப் படித்ததும் "இந்தியன்" படத்தில் கவுண்டமணி செந்திலைப் பார்த்து "குட்மார்னிங் ஆபீசர் " என்று சொல்வது ஞாபகத்துக்கு வருகிறது.

Anonymous said...

சைக்கிள்ல மதுரை-பெரியகுளம் போனது ////
அட அட, நான் கொஞ்சம் தூரம் கம்மிதான், சமயநல்லூரிலிருந்து அணைப்பட்டி வரைக்கும், திரும்புபோது, நாரயணபுரம் அருவில !(அது ஒரு சோக கதை, உண்மையிலேயே அது குழாய்தண்ணி)குளிச்சுட்டு, மேலக்கால் வழியா ஜூட், ம்ம்ம்ம்ம்ம்ம் அது வசந்த காலத்தில் ஒரு நாள். NCC officer n அது என்னா கிரேடுன்னு கூடத் தெரிஞ்சுகிறதில்ல, கொத்தனார் மாதிரி உலகமே அவுகளை ஓட்டுது,,

ambi said...

ஆஹா நீங்களும் ஒரு ஆபிசரா? நான் ஸ்கூலில் ஏ சர்டிபிகேட், காலேஜில் பி, சி சர்டிபிகேட் வாங்கி இருக்கேன். காலேஜுல மட்டும் நேவி விங்க். :)

இந்த ஆர்மி பசங்க மாதிரி எதுகெடுத்தாலும் தட தடனு ஓட எல்லாம் வேணாம் நேவில. :p

ஷிப் மாடலிங்க், செமஃபோர்னு ஒபி அடிக்கலாம். :))


//ரைஃபிளை செங்குத்தாக தூக்கி இடது கையால் பேரலில் ஒரு அடி அடித்து பிடித்து,//

நாங்க அந்த பேரலை கொஞ்சம் லூசா மாட்டிக்குவோம். அப்ப தான் டப்புனு அடிக்கும் போது ஒரு எபக்ட் கிடைக்கும். கமாண்டரும் "பசங்க நல்லா பண்றாங்க"னு நம்பிடுவாரு.

கேம்ப் போனப்ப இந்த டெக்னிக்கை நாங்க யூஸ் பண்ண, சப்பாத்தி பசங்க எல்லாம் புகை விட்டாங்க. கடைசி வரைக்கும் நாங்க இந்த டகால்டியை சொல்லவேயில்லை. :))

ambi said...

கேம்புல பிகருக்கு நூல் விட்டது எல்லாம் அடுத்த பகுதில எழுதுவீங்களாண்ணா? :p

ambi said...

ஏன் இப்படி கமண்ட் மாட்ரேஷன் எல்லாம் பண்ணி, சின்னபுள்ளதனமா? :))

ஸ்ரீதர் நாராயணன் said...

சங்கர்,

வருகைக்கு நன்றி :-)

//இலவசக் கொத்தனார் பின்னூட்டத்தைப் படித்ததும் //

ஆமாங்க. அவர் குடல்ல கோல் போடத்தான் பாக்குறார். விட்ருவமா என்ன ;-)

வாங்க அனானி அண்ணா,

//நாரயணபுரம் அருவில //

நாங்க நண்பர்களாக போவது 'புல்லூத்துக்கு'. அங்கும் இப்படித்தான் அருவி என்றால் குழாய் மாதிரி வரும். அழகர் கோவில் பக்கத்தில் கல்லிடைநேந்தலில் ஆற்றுக்கால் போகும் இடம் பரவாயில்லை. இடுப்பு வரையாவது தண்ணீர் போகும். பியர்ஸ் ப்ராஸ்னன் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஸ்விம்மிங் பூலில் மிதக்கும் காட்சியை கற்பனைப் பண்ணிக் கொண்டு அங்கே ஆட்டம் போட்டுக் கொள்ள வேண்டிதான் :-)

நிறைய கொசுவர்த்தி வச்சிருக்கீங்கப் போல. நல்லா சுத்திவிடுங்கப்பூ :-)

அம்பி அப்பா,

வாங்க வாங்க. நீங்க் இந்த 'நோகாம நோம்பு' கும்பிடற குரூப்பா. ஒரு 'சாவ்தான்'க்கு கூட காலை தூக்கி அடிக்காம ஓரமா அப்படியே சேத்துக்குவீங்களே, அதுக்குப் பேரு ட்ரில்லாய்யா? :-))

//சப்பாத்தி பசங்க எல்லாம் புகை விட்டாங்க. கடைசி வரைக்கும் நாங்க இந்த டகால்டியை சொல்லவேயில்லை. :))//

:-))))

//கேம்புல பிகருக்கு நூல் விட்டது எல்லாம் அடுத்த பகுதில எழுதுவீங்களாண்ணா? :p//

எழுதலாமே. என்னை 'அவன், இவன்'னு போட்டு எழுதனும். எல்லாரும் படிக்கிறாங்க இல்ல? :-))

//சின்னபுள்ளதனமா?//

அட நீங்க வேற. தொறந்த வீட்டாத்தான் விட்டு வச்சிருந்தேன். அவசர ஆத்திரத்துக்கு இங்க வந்து 'கக்கா' போயிடறாங்கப்பா. அதான் இப்ப தாழ்ப்பாள் போட்டாச்சு. :-((