60-களில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் (University of South California) நாடகத் துறைக்கு இவர் விண்ணப்பித்தபோது நிராகரிக்கப் பட்டார். 96-ல் அதே பல்கலைகழகத்திற்கு இவர் ஒரு காப்பாளர். (trustee).
இவருடைய படங்கள் இரண்டு சமீபத்தில் பார்த்தேன். ஒன்று அவருடைய 25 வயதில் இயக்கிய படம். இன்னொன்று 55 வயதில். நேர்த்தியான கதை சொல்லும் முறைக்கு இவரைவிட்டால் வேறு ஆளில்லை என்பதை இந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார். இன்னமும் பல படைப்புகள் வர இருக்கின்றன.
Duel -
இந்தப் படத்தைப் பற்றி பள்ளிக் காலங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்கும் ஆர்வம் இருந்ததில்லை. சமீபத்தில் Netflix-ல் உறுப்பினர் ஆனவுடன் இந்தப் படத்தைப் பற்றி விரிவாக படிக்க நேர்ந்தது. ஸ்பீல்பெர்க் என்ற பெயரும், திரைக்கதையும் ஆர்வத்தைக் கிளறி விட்டதால் முதல் படமாக எடுத்துக் கொண்டேன்.
ஒரு சாதாரண தினத்தில் டேவிட் மான் தனது பயனத்தை தன்னுடைய ப்ளிமௌத் காரில் துவக்குகிறான். அது ஒரு டூ-லேன் ஹைவே. முன்னால் செல்லும் ஒரு பெரிய ராட்சச ட்ரக் அவனுடைய வேகத்தை தடைபடுத்துகிறது. ஓரிடத்தில் அந்த ட்ரக்கை இவன் தாண்டி செல்ல முற்பட, பிடித்தது சனி. அந்த ட்ரக் இவனைத் துரத்தி வருகிறது. Bulleying என்று சொல்வார்களே அந்த மாதிரியான சீண்டல்கள். ஒரு இடத்தில் ரயில்வே கேட்டில், ரயில் கடப்பதற்காக டேவிட் காத்திருக்க அந்த ட்ரக் இவனுடைய காரைப் பின்னாலிலிருந்து நெட்டித் தள்ளிக் கொண்டே இருக்கும். அந்த ட்ரெயின் கடக்கும் வரை டேவிட் உயிரை கையிலும், பிரேக்கை காலிலும் பிடித்துக் கொண்டே இருக்க, நாமும் அந்த அவஸ்தையை அனுபவிக்கிறோம்.
மூன்று பகுதிகளாக இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கும். முதலில் அந்த ராட்சச டிரக் டேவிட்டின் காரை சீண்டிக்கொண்டே வருகிறது. இவன் முன்னே சென்றால் பின்னால் வந்து முட்டுவது. இவன் பின்னே சென்றால் மெதுவாக ஓட்டுவது என்று மாறி மாறி சீண்டல்கள். ஒரு கட்டத்தில் டேவிட் ஒரு சின்ன மாற்றுப் பாதை மூலமாக அந்த ட்ரக்கை தாண்டி வேகமாக செல்ல, சூடு பிடிக்கிறது ஆட்டம். இவன் ஓடுகிறான், ஓடுகிறான்... ஒரு தெருவோர உணவகக்திற்கு வந்து சேர்கிறான். அந்த ஹைவேயில் பயனிப்பவர்கள் பலரும் அந்த உணவகத்திற்கு வந்து போகிறார்கள். உணவகத்தில் நுழைந்து, முகம் கழுவிவிட்டு சாப்பிடும் இடத்திற்கு வந்து பார்த்தால் அதே உணவகத்தின் வாசலில் அந்த ட்ரக்கும் நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது அவன் நினைத்துப் பார்க்கிறான், ஒரு வேளை அந்த ட்ரக் டிரைவர் இந்த உணவகத்திற்கு வருவதற்காக வேகமாக வந்திருக்கக் கூடும். சாப்பாடு வேளையாயிற்றே. அவந்தான் அதை தவறாக நினைத்து தன்னைக் கொல்ல வருகிறானோ என்று நினைத்து விட்டோம் என்று தேற்றிக் கொள்கிறான். இத்தனைக்கும் அந்த டிரக் ட்ரைவரின் கால் மட்டும்தான் அவன் பார்த்திருக்கிறான். அங்கே உணவகத்தில் 3-4 டிரக் டிரைவர்கள் காலில் அதே போன்ற ப்ரௌன் நிற ஷூ அணிந்திருக்கிறார்கள். அதில் ஒருவனை அணுகி இந்தப் பிரச்சினையைப் பற்றி பேச முற்படுகிறான். அது கைகலப்பில் முடிகிறது. அந்த ஆள் வேறு ஒரு வண்டியில் ஏறிப் போய்விடுகிறான். உடன் சில நிமிடங்களில் அந்த ராட்சச டிரக் புறப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் அந்த ட்ரக் மிக வெளிப்படையாகவே டேவிட்டை கொல்ல வருகிறது. டேவிட் தப்பிக்க முயலும் எல்லா செயல்களையும் புத்திசாலித்தனமாக முறியடிக்கின்றது. இவன் உதவி கேட்க முயல அந்த டிரக்கின் கோபம் அதிகரிக்கிறது. ஸ்பீல்பெர்க் அவரே குறிப்பிடும்படியாக 'இன்னதென்று தெரியாத பயம்' படம் முழுவதும் பரவுகிறது. இது மாதிரி நமது வாழ்க்கையிலும் நாம் பலவற்றை சந்திக்கின்றோம். என்ன காரணம் என்றே தெரியாமல் சிலர் துரத்தப் படுகிறார்கள். இறுதியாக இந்தத் துரத்தல் உச்சமடைகிறது. டேவிட் தப்பித்தானா? எப்படி? படத்தை பார்த்து தெரிந்து கொள்ளாம்.
மொத்தப் படமும் 13 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார்கள். சிறப்பானதொரு படைப்பு. பின்னர் தியேட்டருக்கு எடுக்க 2 நாட்கள் அதிகப்படியாக படம் பிடித்தார்களாம்.
படம் முழுவதும் நாமும் டேவிட்டோடு ஓடிக்கொண்டே இருக்கிறோம். அந்த டிரக் டிரைவர் யாரென்று யாருக்கும் தெரியாது. அந்த டிரக்கே ஒரு முகமாக, ஒரு கொலை மிருகமாக (predator), ஒரு தந்திரசாலியாக தோற்றமளிக்கிறது. நேரம் கிடைத்தால் நீங்களும் டேவிட்டின் ஓட்டத்தில் பங்குபெற முடியுமா என்று பாருங்கள்.
Catch me if you can -
இதுவும் ஒரு எலி-பூனை கதை. ஆனால் இங்கே எலி ரொம்ப திறமைசாலி. பூனை கொஞ்சம் அசட்டுதனமாக இருக்கிறது. லினோர்டா டி காப்ரியோ (டைட்டானிக் புகழ் :) ஜாக்) மற்றும் டாம் ஹாங்க்ஸ் நடித்திருக்கும் இந்தப் படம் 2002ல் வெளிவந்தது. வெளிவந்த பொழுதே இதை ஒரு முறை பார்த்துவிட்டேன். ஸ்பீல்பெர்க் பேரைப் பார்த்து இது ஏதோ ஒரு Sci-fi என்ற எதிர்பார்ப்போடு பார்த்ததால் அப்பொழுது கொஞ்சம் ஏமாற்றம் இருந்தது. தற்போது பார்த்த பொழுது ஒரு அருமையான் த்ரில்லர் பார்த்த அனுபவம்.
ஃப்ராங்க் அபக்னேல் ஜூனியர் (டி காப்ரியோ) ஒரு பெரிய ஏமாற்றுக்காரன். எப்படிப்பட்ட திருடன் என்றால், ஒரு புகழ்பெற்ற மாடல் பெண்ணிடம் ஒரு இரவுக்கு ஆயிரம் டாலர் தருவதாக வாக்களித்துவிட்டு, அவளிடமே 1400 டாலருக்கான போலி செக்கை கொடுத்து, பாக்கி பணத்தையும் அவளுடைய இரவையும் திருடிச்செல்லும் பலே திருடன். 19 வயதுக்குள் கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர்கள் ஏமாற்றி விடுகிறான். பான் அம் (Pan-Am) பைலட்டாக வேடமிட்டு பைலட் காக்பிட்டிலேயே கூட ஓசியில் பயனம் செய்கிறான். ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு டாக்டராக வேடமிட்டு வாழ்க்கை நடத்துகிறான். லூசியான மாநிலத்தில் ஒரு வக்கீல் போல வேடமிடுகிறான். இறுதியில் தன் காதலியின் தந்தையிடம் உண்மையை சொல்லும்பொழுது அவர் அதை ஒரு நகைச்சுவவயாக ஒதுக்கிவிட்டு அவனுடைய காதலை மெச்சுகிறார். எஎல்லாம் மிக நுணுக்கமாக நடத்தப்படும் ஏமாற்று வேலைகள்.
கார்ல் (டாம் ஹாங்க்ஸ்) FBI-ல் பணிபுரியும் செக் மோசடிகளை கண்டுபிடிக்கும் துப்பறிவாளன். ஃப்ராங்க்-ன் செக் மோசடிகளைப் பற்றி துப்பறியும் போது அவனை நேரில் சந்திக்கின்றான். வெகு சுலபமாக ஏமாற்றப் படுகிறான். FBI மேலிடம் ஒரு கட்டத்தில் கார்ல்-ஐ கை கழுவுகிறது. ஃப்ராங்க் கார்ல்-ஐ ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் தொடர்பு கொள்கிறான். கார்ல் ஃப்ராங்கின் தாய், தந்தையரின் மூலம் துப்பு துலக்கி ஃப்ரான்ஸில் வைத்து அவனைக் கைது செய்கிறான். தொடர்ந்து ஒரு கிளைமேக்ஸ், ஆண்ட்டி-கிளைமேக்ஸ் என்று படம் விறுவிறுப்பாக செல்கிறது.
ஃப்ராங்கின் மோசடிக்களுக்கு பின்புலமாக சொல்லப் படும் கதை ஒரு கவிதை. அவனுடைய பெற்றோரின் காதல் வாழ்க்கையும், அவர்களின் பிரிவு அவன் மேல் ஏற்படுத்தும் பாதிப்பும், அதனைத் தொடர்ந்து அவன் தொடங்கும் ஓட்டமும் சஜஸ்டிவாக சொல்லப்படுகின்றன. அவன் தந்தையின் பல்வேறு நிறைவேறாத ஆசைகள் ஃப்ராங்கின் மூலம் நிஜமாகிறது. இறுதியில் ஃப்ராங்க் 'என்னை நீங்கள் ஏன் தடுத்து நிறுத்த மாட்டேன் என்கிறீர்கள்' என்று தந்தையைக் கேட்கிறான். அவன் தந்தைதான் அவனுடைய எல்லா ஆசைகளுக்கும் ஆதாரம். தந்தை இறந்தவுடன் தாயைத் தேடிப் போகிறான். இறுதியில் தன்னை துரத்தும் கார்ல்-யே சரணடைகிறான். கார்ல்-க்கு ஃப்ராங்கின் மேல் ஏற்படும் ஈர்ப்பையும், அவனால் அவருக்கு ஏற்படும் சங்கடங்களையும் டாம் ஹாங்க்ஸ் அருமையாக வெளிக் காட்டியிருக்கிறார். கார்ல் தன் நண்பர்களிடம் சொல்லும் 'knock knock' ஜோக் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் சிறிது காலம் பிரபலமாக இருந்தது. ஆனால் நீங்கள் அந்த ஜோக்கை ஒருவரிடம் ஒரு முறைதான் பயன்படுத்த முடியும் :)).
இறுதியாக ஃப்ராங்கின் திறமையை நல்லவழியில் பயன்படுத்தி மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதாக முடிக்கிறார்கள். அருமையான ஒரு துப்பறியும் கதை படித்த திருப்தி ஏறபடுகிறது நமக்கு.
25 மறுமொழிகள்:
வித்தியாசமாக் கதை சொல்கிறீர்கள். விறுவிறுப்பான நடையும்கூட.
லகுவான வாசிப்பிற்கென மட்டுமில்லாது கொஞ்சம் சீரியஸ் கதைகளும் முயற்சித்துப் பாருங்களேன்...
:))))
வாங்க இ.கொ. அண்ணாச்சி,
பாராட்டுறீங்களா, இல்ல கிண்டலடிக்கிறீங்களான்னு புரியலியே :-?
//வித்தியாசமாக் கதை சொல்கிறீர்கள். //
ஸ்பீல்பெர்க்குக்கு சொல்லனும் இதை.
//கொஞ்சம் சீரியஸ் கதைகளும் முயற்சித்துப் பாருங்களேன்...//
ஆஹா... ஒரு குரூப்பாத்தான்யா கெளம்பியிருக்கீங்க :-))
இன்னும் DUEL பார்க்கவில்லை. ஆனால் CATCH ME IF YOU CAN பார்த்தாச்சு.
விறுவிறுப்பான படம். அழகாக எழுதியிருக்கிறீர்கள். இவரது மற்றைய படங்களை பற்றிய விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன். :)
சென்ஷி,
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
நான் இதுவரை பார்க்காத சில படங்கள் குறித்து வைத்திருக்கிறேன். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், சேவிங் ப்ரைவேட் ரியான் மற்றும் ம்யுனிச் அதில் முதன்மையானவை. பார்த்துவிட்டு கட்டாயம் பதிகிறேன் :-)
முனிச்,ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் இரண்டும் திரைப்பட விரும்பிகள் அனைவரின் ஹிட்லிஸ்ட்டிலும் இருப்பவை. பெரிதும் கவர்பவை.
Duel பற்றிய முதல் அறிமுகம் உங்கள் பதிவு மூலமாகத்தான். நன்றி.
ஸ்ரீதர்,
மேலதிக தகவலுக்காக இந்தப் பின்னூட்டம். இதை உங்கள் பர்சனல் பார்வைக்கு என்றும் வைத்துக் கொள்ளலாம்.
'டியூயல்' படத்தை ஸ்பீல்பெர்க் எடுத்தபோது அவருக்கு வயது 25. 'ப்ளேபாய்' இதழில் ரிச்சர்ட் மேத்ஸன் எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து ஸ்பீல்பெர்க் இந்தப்படத்தை உருவாக்கினார்.
உண்மையில் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட 70 நிமிட டெலிஃபிலிம் இது. அமெரிக்க சானலில் முதன்முதலில் இந்த குறும்படம் ஒளிபரப்பானதும் அமெரிக்கர்கள் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தார்கள். குடும்பப் பாங்கான கதைகளே டெலிஃபிலீமாக வந்த நேரத்தில் இந்தப் படம் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது. விளைவு? அந்த சானலுக்கு தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புகள், மறுமுறை ஒளிபரப்பச் சொல்லி. பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சானலும் இந்த டெலிஃபிலிமை மறு ஒளிபரப்பு செய்தது. அதுவும் கிட்டத்தட்ட 5 முறைக்கு மேல் என நினைக்கிறேன்.
இதுபோல் அதற்கு முன்பு வேறு டெலிஃபிலிமுக்கு நிகழ்ந்ததில்லை.
ஒவ்வொரு முறையும் டிஆர்பி ரேட்டிங் உயர்ந்ததே தவிர குறையவில்லை.
இந்த வரவேற்பை பார்த்துதான் 70 நிமிட டெலிஃபிலிமை 90 நிமிட படமாக்கி ஐரோப்பாவில் திரைப்படமாக வெளியிட்டார்கள்.
டெலிஃபிலிமாக அமெரிக்காவில் 'டியூயல்' வெளியான ஆண்டு 1971. அதாவது 'பனிப்போர்' உச்சத்தில் இருந்த காலகட்டம். 3ம் உலகப் போர் நிகழுமா, ரஷ்யாவுடன் யுத்தம் தொடருமா என்ற அச்சம் உள்ளூர இருந்த காலகட்டம்.
அந்தவகையில் இனம் புரியாத சக்திகளின் மேல் அமெரிக்கர்களுக்கு இருக்கும் உளவியல் ரீதியான பயத்தை முதன் முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த படம் இதுதான். டிரக் மோதி இறந்துவிடுவோமோ என்ற பயத்தை மூலதனமாக்கி எடுக்கப்பட்ட இந்த (டெலி)ஃபிலிமுக்கு பிறகே 'ஜாஸ்', 'ஸ்டார் வார்ஸ்' போன்ற மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்திகளுடன் மனிதன் போரிடும் படங்களின் வருகைகளும் நிகழ்ந்தன.
ஸ்பீல்பெர்க்கை ஓயாமல் துரத்தும் விஷயமும் இந்த இனம் புரியாத பயம்தான். இதற்கு அவர் யூதராக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். முகம் தெரியாத டிரக் டிரைவரில் ஆரம்பித்த அவரது பயணம், சுறாமீன், டைனோசர்... என மனித சக்திக்கு அப்பாற்பட்ட பயத்தின் பயணமாக இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒருவகையில் இது அமெரிக்கர்களின் உளவியல். இன்னொரு வகையில் இது யூதர்களின் வாழ்க்கை.
ஆனால், அதே யூதர்களால், அதே அமெரிக்க நாட்டாமையால் அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையில் - 3ம் உலக மக்களின் வாழ்க்கையில் - இது மாதிரியான இனம் புரியாத பயங்கள் அடி மனதில் இல்லை. வாழ்க்கையின் மீதான அவர்களது நேசங்கள், போராட்டங்கள் முக்கியமானவை. ஈரானிய, கொரியப் படங்கள் உணர்த்தும் விஷயம் வேறானவை. இந்த அரசியல் முரண் உரையாடலுக்கானவை.
சாரி ஸ்ரீதர், எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ செல்கிறேன். 'டியூயல்' படத்தில் இந்த விவரங்களையும் சேர்த்திருக்கலாம் என்று தோன்றியதால் நட்பின் அடிப்படையில் இதை எழுதினேன். இதை பின்னூட்டமாக பிரசுரிப்பது உங்கள் விருப்பம்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
சிவராமன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நேரமும் வசதியும் இருந்தால் சீக்கிரம் இந்தப் படங்களைப் பார்க்க வேண்டும் :-)
பைத்தியக்காரன்,
உங்களுடைய பெரிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. ஸ்பீல்பெர்க்கின் வயது பற்றிய தவறை பதிவில் சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
அந்தப் படங்களின் விக்கிப்பீடியா சுட்டியை ஏற்கெனவே பதிவிலே இணைத்திருந்தேன்.
வெகு முக்கியமான ஒரு பார்வையை வைத்திருக்கிறீர்கள். இந்தக் கோணத்தில் நான் யோசித்தது இல்லை.
//இந்த அரசியல் முரண் உரையாடலுக்கானவை.//
கண்டிப்பாக. நான் இன்னமும் கொரிய, இரானிய படங்களை பார்த்ததில்லை. ஓரிரண்டு ப்ரெஞ்சுப் படங்களை (ஆங்கில சப்-டைட்டிலோடுதான்) பார்த்த அனுபவம் மட்டுமே. பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கோணத்தில் அணுகிப் பார்க்கிறேன் கண்டிப்பாக.
நான் சொன்னதை வழிமொழிந்த இலவசக் கொத்தனாரை வழிமொழிகிறேன் :)
வாங்க சுந்தர்!
//நான் சொன்னதை வழிமொழிந்த இலவசக் கொத்தனாரை வழிமொழிகிறேன் :)//
அவர் சொன்னதும் புரியல. நீங்க அதை வழிமொழியறதும் புரியல.
என்ன் வச்சு ஏதோ காமெடி பண்றீங்கன்னு மட்டும் புரியுது :-)
போகட்டும், ஏதோ இஙலீஸ் படம் போல. நான் இப்ப தான் விஜய் டிவி தமிழில் போடும் ஆங்கில படஙளை பாத்து வருகிறேன்.முக்யமான சீன் வரும் போது விளம்பர இடைவேளை போட்டுடறாங்க. :p
இதை எல்லாம் கண்டிச்சு தமிழ் மணத்துல யாரும் பதிவு போட காணும். :))
//என்ன் வச்சு ஏதோ காமெடி பண்றீங்கன்னு மட்டும் புரியுது//
இப்பவாவது புரிஞ்சதே! சந்தோசம். :))
//இதை எல்லாம் கண்டிச்சு தமிழ் மணத்துல யாரும் பதிவு போட காணும். :))//
:-)))) கண்டிப்பா போடனும். போடனும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.
ஸ்பீல்பெர்க் என்றதும் அவர் முன்பு ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஞாபகத்துக்கு வரும்...தான் எதையும் ஒரு குழந்தையின் பார்வையில் அணுகுவேன் என்பது போல கூறியிருப்பார். அதனால்தான் அவரது கோணங்கள் வித்தியாசமாக இருந்தது.
முதல் படம் 1947 என்ற இரண்டாம் உலக போரினைப் பற்றிய காமெடி அல்லவா...அது யாருக்கும் தெரியாமல் பின்னர் ஜாஸ், குளோஸ் என்கவுண்டர்ஸ் ஆப் தி தார்ட் கைண்ட், ஈடி, ரைடர்ஸ் ஆப் தி லாஸ்ட ஆர்க் என்று எங்களது கல்லூரி நாட்களை இனிமையாக்கியவர் அவர்
பின்னர் ஷிண்ட்லர்ஸ் லிஸ்டில் அவர் பயன்படுத்திய் கருப்பு வெள்ளை உத்தி...ஹூ பிரேம்ட் ரோஜர் ராபிட்லில் கார்டூன் பாத்திரங்களை நிஜ பாத்திரங்களோடு இணைத்த உத்தி இரண்டும் முதலில் அவர்தான் செய்தார் என நினைக்கிறேன்.
ஜுராஸிக் பார்க், மியூனிக்...சேவிங் த பிரைவேட் ரயான்...ஆனால் சறுக்கியது வார் ஆப் தி வோர்ட்ல்ஸ்.
ஆனால் அவரது படத்தில் முத்தமிடும் காட்சி கூட இருக்காது. ஜோன்ஸ் காதலி முத்தமிடும் பொழுதே தூங்கியவர். சரக்கு இருக்குமிடத்தில் பாலுணர்ச்சியை தூண்டித்தான் படத்தை ஓட்ட வேண்டியதில்லையே.
இன்னும் கூறிக்கொண்டே போகலாம்...
நம்ம மணிரத்னத்தை இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என்று முன்பு கூறுவார்கள்.
வணக்கம் ஸ்ரீதர். என்னை போல உலக சினிமாவை நேசிக்கும் ஒருவரின் இணையத்தை கண்டதற்கு மகிழ்ச்சி. ஸ்பீல்பெர்க் பல கமர்சியல் குப்பைகள் அளித்தாலும் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட், முனிச் போன்ற அற்புதமான திரைப்படங்களை அளித்து கொண்டிருக்கிறார் அவ்வப்போது. அவரது அமிஸ்டாட்(Amistaad) திரைப்படம் கிடைத்தால் அவசியம் பாருங்கள். கருப்பர்களை அடிமைகளாக வைத்திருந்த அமெரிக்கர்களை துகிலுரிக்கும் படம்.
ஸ்ரீதர்,
ஏனது பதிவுகளை பார்வையிட்டு, கருத்துக்களை சொல்லுங்கள்.
//எதையும் ஒரு குழந்தையின் பார்வையில் அணுகுவேன் என்பது போல கூறியிருப்பார்.//
மிக்கச் சரி. இண்டியானா ஜோன்ஸின் 4-வது படத்தை தொடங்கினபோது அதே குழந்தை உற்சாகத்துடன் தொடங்கினார். He is a thorough professional with High energy level.
விக்கிபீடியாவில் பாருங்கள். இவர் எடுத்தப் படங்களை தவிர இவர் executive producer-ஆக பல தொலைக்காட்சித் தொடர்கள், அனிமேஷன் படங்கள் என்று அசத்தியிருக்கிறார். Projects in pipeline பார்த்தால் இன்னமும் நிறைய இருக்கிறது.
மணி ரத்னம் இப்படிப்பட்ட பன்முக ஆளுமை கொண்டவர் இல்லை. அவர் படங்கள் ஒரு வித நேர்த்தியும், அழகியலையும் முன்வைக்கிறது. மற்றபடி ஸ்பீல்பெர்க்கின் ஒரிஜினாலிட்டிக்கிற்கு முன் மணிரத்னம் காணாமல் போய் விடுகிறார்.
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
//ஆனால் அவரது படத்தில் முத்தமிடும் காட்சி கூட இருக்காது. ஜோன்ஸ் காதலி முத்தமிடும் பொழுதே தூங்கியவர். //
லாஸ்ட் க்ருஸேட்-டில் ஹாரிஸன் ஃபோர்டுக்கு, ஒரு கிஸ் அடிப்பார் பாருங்கள் அலிஸன் டூடி (அவர்தானே?) சூப்பர் கிஸ் கொடுப்பாரே. :-)
முகிலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. Amistaad கண்டிப்பாக பார்க்கிறேன்.
விஜயன்,
வருகைக்கு நன்றி. நானும் அங்கே வருகிறேன். கண்டிப்பாக.
உங்க விமர்சனம் சூப்பர்...
Duel இன்னும் பார்க்கல...
வாங்க வெட்டிப் பையல்,
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
கட்டாயம் பாருங்க நல்ல படம். :-))
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஸ்பீல்பெர்க் படம் எதையும் பார்க்காமல் விட்டதில்லை. ஐந்து வருடங்களுக்கு முன் லைப்ரரி ஒன்றிலிருந்து எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி இந்தப் படத்தை எடுத்துப் பார்த்தேன். அந்த வியப்பு இன்னும் கூட அகலவில்லை. ! வெகு அற்புதம்.
விறுவிறுப்பும், வியப்பும் இயக்குனரைப் பொறுத்தது தானே தவிர பேனரையும், பட்ஜெட்டையும் பொறுத்ததல்ல என்பதை நமது ஆட்களும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் :)
வாங்க சேவியர்.
உண்மை. இயக்குவதில் இருக்கிறது சூட்சுமம். மோசமான இயக்கத்தினால் (presentation / treatment) நல்ல கதைகூட காணாமல் போய்விட்டிருக்கிறது.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
அருமையான அறிமுகங்கள். Duel படத்தைப் பார்த்ததில்லை. ஆனால் பார்க்கும் ஆவலை உண்டாக்கி விட்டீர்கள். அடுத்த படத்தைப் பத்திச் சொல்லனுமா.....லியோ வேற டாம் வேற....படம் வந்தப்பயே பெங்களூர்ல பாத்தாச்சு. நீங்களும் பெங்களூர்ல பாத்திருந்தா...எந்தத் தேட்டர்னு சொல்லுங்க பாப்போம். ;)
அனானி அன்பருக்கு,
கமெண்ட் மாடரேஷன் தேவையாகாத்தான் இருக்கு நண்பரே. :-(
வாங்க ஜிரா அண்ணாச்சி,
பெங்களூர்ல்தான் பாத்தேன். ஆனா தியேட்டர்ல பாக்கல. இப்ப மீண்டும் Netflix-ல DVD வாடகைக்கு எடுத்துப் பார்த்தேன். :-)
//லியோ வேற டாம் வேற....//
டாம் ஹேங்க்ஸ் - is great as epected. ஆனா லியோ எதிர்பார்க்காத பெர்பார்மண்ஸ். ஸ்கூல்ல ப்ரொபசர் மாதிரி நடிப்பதிலிருந்து, டாம்மை தொடர்ந்து சத்தாய்ப்பதுவரை மனிதர் கன கச்சிதம்.
//ஸ்பீல்பெர்க்கின் ஒரிஜினாலிட்டிக்கிற்கு//
Satyajit Ray accused Spielberg of
stealing his idea, when Spielberg
made E.T. Ray's script about a
village boy meeting an extraterrestrial in a farm field,
was circulating in hollywood studio
circles in the late sixties. This is in Ray's biography. Ray was given an Honorary Oscar award towards the end of his life, for his contribution to world cinema, and one of the presenters was Steven Spielberg! To me Ray's script may
have been an influence in making of E.T and maybe Steven finally
acknowledged it by presenting him
the Oscar. Ray's sketch of E.T
looks eerily similar to Spielberg's E.T. This is in his biography!
From IMDB web page --------
"In 1967 he wrote a script for a movie entitled "The Alien". Columbia Pictures was in talks to produce this movie. Peter Sellers and Marlon Brando were rumored to play the leading parts. However, Ray was surprised to find that the script he had co-written had already been copyrighted and the fee appropriated. Brando dropped out of the project and, though an attempt was made to bring James Coburn in his place, Ray was disillusioned, had enough of Hollywood machinations and returned to Calcutta. Columbia was interested in reviving the project in the 1970s and 1980s but nothing came of it. When _E.T. the Extra-Terrestrial (1982)_ was released in 1982, many saw striking similarities in the film to Ray's earlier script. Ray believed that Steven Spielbergs movie "would not have been possible without my script of 'The Alien' being available throughout America in mimeographed copies." Spielberg denied this by saying, "I was a kid in high school when this script was circulating in Hollywood".
வாங்க அனானி,
இந்த காண்டிரவர்சி பத்தி இப்பத்தான் தெரிஞ்சது.
- ஸ்பீல்பெர்க் ET மட்டுமா இயக்கியிருக்கிறார்? அவருடைய படங்கள், டிவி ஷோஸ், சீரிஸ் என்று பார்த்தால் வேறு எந்த இடத்திலும் இப்படி ஒரு காண்டிரவர்ஸி இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- ரே எழுதியது கொலம்பியா பிக்சர்ஸிற்காக. அப்போதைய காப்பிரைட் நடைமுறைப்படி அது கொலம்பியாவிற்கு சொந்தம் என்றும் படித்திருக்கிறேன். பின்னர் ஸ்பீல்பெர்க்கும் கொலம்பியாவிற்காக ஒரு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுக்கிறார். அதை கொலம்பியா அவருக்கே விற்று விடுகிறது. இதில் என்னென்ன undercurrents என்பது வெளி உலகுக்கு தெரியவில்லை.
- ஸ்பீல்பெர்க் இதற்கு முன்னரே Close Encounters Of The Third Kind என்று ஒரு அறிவியல் திரைப்படம் எடுத்திருக்கிறார்.
There is still a doubt. But the benefit of the doubt is at Steve's side.
I agree! but Steven was one of the three people
in hollywood influential in getting the honorary
oscar for Ray. I saw the telecast. Ray was in his
death bed when he received the honors. To
me it looked like Steven trying to set things right
before Ray's passing. Hollywood never cared about
Indian talent or Indian films before that! Ray
was a giant among his peers and didn't look like
the type who would accuse others of stealing his
ideas.
There is also something else to remember here.
Eddie Murphy's Coming to America was based columnist Art Buchwald's idea. He sued and
won. But the studio proved somehow in court that
they didn't make a penny as profit. That movie was a top grossing movie of the times. E.T was also
a record breaking movie in terms of worldwide
collections until Sixth Sense came along! Hindu
news paper used to carry Art Buchwald's column
every week! This movie was also remade in Tamil
with Prabhu in the lead!
அனானி நன்பரே,
நீங்கள் சொல்வது போல் ரே எழுதியிருக்கலாம். நான் படித்ததில்லை. ரே எந்த மாதிரி தொனியில் எழுதினார் என்று எனக்குத் தெரியவில்லை. இதில் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஹாலிவுட் பட நிறுவனங்களின் கண்ணாமூச்சி விளையாட்டு. இவற்றுக்கு பல எழுத்தாளர்கள் பலியாகத்தான் செய்திருக்கிறார்கள். நீங்கள் சொன்ன 'Coming to America' விஷயத்தில் கூட ஆர்ட் புச்வால்ட் பாரமவுண்டிற்கு காண்டிராக்ட் போட்டுத்தான் எழுதியிருக்கிறார். நிகர லாபத்தில் பங்கு தருகிறேன் என்று சொல்லிவிட்டு இறுதியில் ஒன்றுமே கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள். கதைக்குண்டான Credits-ம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
80-களில் ஸ்பீல்பெர்க் இவ்வளவு பெரிய பிம்பமாக உருவெடுக்கவில்லை. நெருப்பில்லாமல் புகையாதுதான். ஆனால் அதற்காக ஒரேயடியாக ஸ்பீல்பெர்கை plagarist-ஆக ஒதுக்கிவிட முடியாது. அவருடைய படங்களில் ஒரிஜினாலிட்டி கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது.
உங்கள் கருத்துகளுக்கும் விவாதத்திற்கும் மிக்க நன்றி.
Post a Comment