September 18, 2008

ஒருபக்கம்: இட்லிவடை, சீன திரைப்படம் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள்

பதிவு எழுதத் தொடங்கிய இந்தச் சிறு காலகட்டத்தில், சில பதிவர்களுடன் நேரிலும், சாட்டிலும் அளவளாவும் வாய்ப்புகள் அமைந்தது. எல்லா பதிவர்களுடனும் பேசியதில் பொதுவான ஒரு சப்ஜெக்டாக இருந்தது 'யார் இந்த இட்லிவடை?'. இந்த வாரம் ட்விட்டரிலும் சிலர் இதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாது. இட்லிவடையேக் கூட இந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டு 'இவரா', 'அவரா' என்று கும்மியடித்துக் கொண்டிருக்கலாம். கடைசியில் இட்லிவடை என்பது ஒரு குழு மற்றும் அதில் இருப்பது 'கோயிஞ்சாமி' கூட்டம்தான் என்று முடிவாகச் சொல்லிவிட்டார்கள். அட யாருப்பா அந்த 'கோயிஞ்சாமி'?

இம்மாதிரியாக மறைந்து உறைய இணையம் சுவாரசியமானதொரு இடம்தான். இட்லிவடை இன்னமும் எவ்வளவு காலம் தாக்குபிடிக்கப் போகிறார்? Stay tuned!

சில வாரங்களுக்கு முன்னர் பார்த்த சீன மொழிப் படம் - 'காமம், எச்சரிக்கை' (Lust, Caution). விக்கிபீடியா பல சுவாரசியமானத் தகவலை தருகிறது இந்தப் படத்தைப் பற்றி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான புரட்சியை பின்புலமாக கொண்டு பின்னப்பட்ட கதை. ஹாங்காங்க் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் Kuang Yu Min தலைமையில் புரட்சி நாடகம் நடத்துகிறார்கள். Wang Chia Chi என்னும் பெண் அவனால் ஈர்க்கப்பட்டு அந்த கூட்டத்தில் சேர்கிறாள். தொடர்ந்து ஒரு ரகசியப் புரட்சிப் படை அமைத்து சீன போம்மை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கொலை சதித் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களின் குறி சீனத் தேச துரோகி என்று நம்பப்படும் Yee. சியா சி-தான் அதில் முக்கியமானவள். அவள் யீ-யின் மனைவியுடன் நெருக்கமாகிறாள். தொடர்ந்து யீ-யை நெருங்கி, அவரை மயக்கி புரட்சியாளர்கள் பாசறைக்கு கொண்டு வர வேண்டும் என்பது திட்டம். முதல் திட்டம் படு தோல்வி. யீ ஷாங்காய் சென்று விடுகிறார். புரட்சியாளர்கள் குறிக்கோள் வெளியே தெரிந்துவிட ஒரு கொலை நிகழ்கிறது. புரட்சிப் படை சிதறுகிறது. மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஷாங்காயில் சியா சி-யும் குவாங்க்-ம் சந்திக்கிறார்கள். இப்பொழுது குவாங்கும் நண்பர்களும் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சி அமைப்பின் அங்கம். புரட்சி அமைப்பை நசுக்கும் போலிஸ் படைக்கு தலைமையேற்றுக் கொண்டிருக்கும் யீ அவர்களுக்கு பெரும் தலைவலி. மீண்டும் சியா சி-யை தூண்டிலாக உபயோகித்து யீ-யை அகற்றிவிட திட்டம் தீட்டுகிறார்கள்.

எதிர்பார்த்தபடி யீ வலையில் விழுகிறார். ஆனால் சியா சி-யும் வலையில் விழுகிறாள். யீ-யை காதலிக்கும் அவள் நடிப்பு அவளையறியாமலேயே அவளை விழுங்குகிறது. ஒரு கட்டத்தில் அவள் புரட்சி அமைப்பின் தலைவரிடம் புலம்புகிறாள் 'அவன் என் உடம்பை மட்டுமல்ல என் மனதையும் தனது பாம்பு கரங்களால் வளைத்து விழுங்குகிறான்'. இறுதியில் புரட்சிப் படை ஜெயித்ததா? யீ தப்பித்தாரா? சியா சி என்னவானாள்? என்று உச்சக்காட்சிகளில் சொல்லப்படுகிறது. மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். போர்ப் படத்திற்குண்டான துப்பாக்கி, டாங்கி, குண்டு பொழியும் விமானங்கள் போன்றவை இல்லாமலேயே அந்தப் போர்காலத்தை கண் முன்னே நிறுத்திவிடுகிறது. கல்லூரி மாணவர்கள் அமைக்கும் அமெச்சூர் புரட்சிப் படையின் நடைமுறை சிக்கல்கள் அழகாக சொல்லப் படுகின்றன. பெரிய சிக்கல் சியா சி-யின் கன்னித் தன்மை. அவள் Mrs. Mak என்றுதான் யீ-யின் குடும்பத்திற்கு அறிமுகமாகிறாள். யீ-யை மயக்கி அவருடன் உறவு கொள்ளும்போது உண்மை தெரிந்துவிடுமே. குவாங்க்-ம் சியா சி-யும் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விரும்பினாலும், சியா-வின் கன்னித்தன்மையை அகற்றும் பொறுப்பு இன்னொரு அனுபவம் வாய்ந்த நண்பனிடம் கொடுக்கப் படுகிறது. அடுத்து ஷாங்காயில் யீ-யை ரகசியமாக சியா சந்திக்கும் போது அவர் மிருகத்தனமாக அவளை அடைகிறார். தொடர்ந்து சந்திப்புகளில் யாரையும் நம்பாத யீ சியா சீ-ஐ பரிபூரணமக நம்புகிறார். காதல் காட்சிகள் சூடாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் பத்து நிமிடங்களுக்கு படம் முழுவதும் யீ-யும் சியா-வும் காதல் செய்கிறார்கள். அதைப் படமாக்க கிட்டத்தட்ட 100 மணி நேரம் செலவழித்தார்கள் என்று விக்கி சொல்கிறது. ஷாங்காயில் நகைக்கடை நடத்துபவராக நமது பாலிவுட் நடிகர் அனுபம் கேர் வருகிறார். அவருக்கு உதவியாக Vijay Raaz-ம் வருகிறார். சீன மொழியில் இந்த தலைப்பு சிலேடையாக இருக்கிறது. அதாவது மாண்ட்ரீனில் (Mandarin - சீன மொழி) காமத்திற்கும், நிறத்திற்கும் ஒரே எழுத்துதான். அதேபோல் எச்சரிக்கைக்கும் மோதிரதிற்கும் ஒரே வார்த்தை. இதன் தலைப்பு 'வண்ண மோதிரம்' என்றும் சொல்லலாம். யீ-யை கொல்ல சியா சீ குறிக்கும் நாளில் யீ அவளுக்கு ஒரு மோதிரம் பரிசளிக்கிறார்.

சோனி டிவியில் சில வருடங்கள் முன்னர் சூப்பர் சிங்கர் போல ஒரு புதிய குரல் தேடல் போட்டி நடத்தினார்கள். ஜாவேத் அக்தர், ஷங்கர் மகாதேவன் போன்ற பெரிய தலைகள் எல்லாம் பங்கேற்று பல வாரங்கள் ஓடிய நிகழ்ச்சி. அதுதான் நான் பார்த்த முதல் ரியாலிட்டி நிகழ்ச்சி. தற்போது தமிழ் சேனல்களிலே பற்ப்பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையான பார்வையாளர் பங்கேற்பு அதிகபடுத்துதல் நிகழ்வதில்லை. அதாவது பார்வையாளர்கள் பார்க்க மட்டும் செய்யக் கூடாது. நிகழ்ச்சியின் போக்கை தீர்மாணிக்கவும் வேண்டும். அதுவே ரியாலிட்டி ஷோக்களின் வெற்றி. Bruce Almighty படம் ஒரு சிறந்த உதாரணம்.

தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சுவாரசியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. 20 பங்கேற்பாளர்கள்தான் எஞ்சியிருக்கிறார்கள். சின்மயி மிகச் சிறந்த தொகுப்பாளராக பரிமளிக்கிறார். நான் ரசித்தது மால்குடி சுபாவின் உற்சாகமான ப்ரெசென்ஸ். Such a Bubbly Charcter she is.

16 மறுமொழிகள்:

இலவசக்கொத்தனார் said...

அடுத்தவங்க ட்விட்டரில் பேசியது

அடுத்தவங்க எடுத்த படம்

அடுத்தவங்க பாடுற பாட்டு / படுற பாடு

இப்படி எல்லாம் நியூஸ் எடுத்து அதைப் பதிவா போடறீங்க!! நீங்க ரொம்ப அப்சர்வெண்ட்தான் போங்க!!

(என்ன பின்னூட்டம் போடணும் அப்படின்னு ஐடியா வராததினால் இந்த மாதிரி எல்லாம் போட வேண்டியதா இருக்கு. இதுக்கு நீர் கதையே எழுதி இருக்கலாம்.)

Sridhar Narayanan said...

//அடுத்தவங்க எடுத்த படம்//

அப்ப நாமளே படம் எடுத்து பதிவாப் போடலாம்னு சொல்றீங்க. சூப்பர் ஐடியா. உடனே ஒரு காம்கார்டர் ஆர்டர் பண்ணிட வேண்டியதுதான்.:-))

SurveySan said...

இட்லி வடை யாருன்னு தெரியாதா?

என்ன கொடுமைங்க இது?

Sridhar Narayanan said...

சர்வேசன்,

வாங்க. ஒரு சர்வே போட உங்களுக்கு நல்ல வாய்ப்பு :-)

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//SurveySan said...
இட்லி வடை யாருன்னு தெரியாதா? என்ன கொடுமைங்க இது?//

//Sridhar Narayanan said...
சர்வேசன், வாங்க. ஒரு சர்வே போட உங்களுக்கு நல்ல வாய்ப்பு :-) உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.//

இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே நாராயணன்..

சர்வேசனுக்கா தெரியாது இட்லிவடை யாருன்னு..?

சரி.. மொதல்ல இந்த சர்வேசன் யாருன்னு தெரியுமா உங்களுக்கு..?

மொதல்ல அதைக் கண்டுபிடிங்க.. அப்புறம் இட்லி வடை யாருன்னு தன்னால வெளில வரும்..)))))))))))))

பை தி பை..

ஒரு சிறந்தத் திரைப்படத்தை முன் மொழிந்திருக்கிறீர்கள்.. நன்றிகள்..

ambi said...

படம் அஜால் குஜாலா இருக்கும் போலிருக்கே, :p

உம்ம பேச்சே கேட்டு நான் வீட்ல இந்த படத்தை பாத்து, எக்குதப்பா தங்கமணிகிட்ட மாட்டினா நான் இட்லி சட்னி ஆயிடுவேன்!னு உள்மனம் சொல்வதால் டிவிடி தேடும் முயற்சியை கை விடுகிறேன். :))


ஆமா, நீங்க தான் கொத்ஸின் போலி!னு சொல்றாங்களே நிஜமா? :p

Sridhar Narayanan said...

உ.த. அண்ணன்,

வாங்க. வாங்க. உங்களுக்காவது என் அப்பாவித்தனம் தெரியுதா?

சர்வேசன் இங்கதான் அருகில் எங்கோ உலாவறார்ன்னு பட்சி சொல்லுது. ஆனா எங்கேன்னு சொல்ல மாட்டாராம். இ.வ. தலைமையகம் சென்னைதான்னு கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்றாங்கண்ணே.

நம்ம லக்கி, ஜெயராதா மேடம், கொத்தனார், பெனாத்தலார், பொன்ஸ், டைனோ, அல்வாசிட்டி விஜய் பலரும் பல பேரை சொல்லிட்டிருக்காங்க. இந்த கோயிஞ்சாமி கோஷ்டிதான் யாருன்னு தெரிய மாட்டேங்குது. பாப்போம். :-)

அம்பி அப்பா,

//எக்குதப்பா தங்கமணிகிட்ட மாட்டினா நான் இட்லி சட்னி ஆயிடுவேன்!னு//

கோபிகா, நயந்தாரான்னு பதிவிலேயே படம் போட்டு தள்ளிட்டிருக்கீங்க. பாவம் தங்கமணி பேர்ல அபாண்டமா ஏன் பழி சொல்றீங்க.

//ஆமா, நீங்க தான் கொத்ஸின் போலி!னு சொல்றாங்களே நிஜமா? :p//

தப்பா சொல்றீங்க. போலிதான் இலவசமா வரும் :-)) நாங்க எல்லாம் சத்தியசந்தர்கள்.

அனுஜன்யா said...

எனக்கும் தெரியாது. யாரிந்த இட்லி வடை? ஒரு விதத்தில் தெரியாமல் இருந்தால்தான் சுவாரஸ்யம்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடுவர்கள் பற்றி மிகமோசமான விமர்சனங்கள் (பாப்பத்திகளின் ராஜ்ஜியம்?) வந்தது தெரியுமா/நினைவிருக்கிறதா? செந்தழல் ரவி எழுதியிருந்தார் என்று ஞாபகம்.

அனுஜன்யா

அஜினோமோட்டோ said...

கோயிஞ்சாமி குருப்புன்னா யாருன்னு தெரியாதா? இன்னபா நீ.கூகிளிச்சி பார்த்தா அள்ளிக் கொட்டுமே....இங்கே பாருங்க(எல்லாம் பெரியதலைங்க... சின்ன தலைகளும் உண்டு)

http://goinchami.blogspot.com/

ச.சங்கர் said...

இப்பத்தான ஆரம்பித்திருக்கிறேன் அப்படீன்னு ஆரம்பிச்சு அப்புறம் "A typical Techno Geek interested in Books and Movies mostly " அப்படீன்னு சொல்லி இப்ப "இட்லி வடை " தலைப்பு வைத்து பதிவெழுதுவது வரை வந்தாச்சுல்ல.
" you have already graduated in the Tamil Blog world " :)

///அடுத்தவங்க ட்விட்டரில் பேசியது

அடுத்தவங்க எடுத்த படம்

அடுத்தவங்க பாடுற பாட்டு / படுற பாடு

இப்படி எல்லாம் நியூஸ் எடுத்து அதைப் பதிவா போடறீங்க!!///

இதை புதசெவி போடும் இகொ சொல்றார்.கொத்தனாரே ...நடாத்துங்க ...நடாத்துங்க

Anonymous said...

உங்களுக்கு முகமுடி - யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க, ஒரு வேளை, கலிபோர்னியாவிலிருந்து காடுபட்டிக்கு ப்ராஜெக்ட் விசயமா வந்துடாரன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்களேன். புரியல்லன்னா தயவுசெய்து விளக்க முடியாது !

Anonymous said...

இங்க எல்லோருமே கொஞ்சநாள் இட்லிவடையா இருந்திருக்காங்க, அடுத்தவுங்களோட சந்தேகப்பார்வையில். அதனால், இப்படி எல்லாம் பதிவு போட்டால், நீங்கதான் இட்லிவடைன்றது தெரியாமல் போகும் என்பது உண்மையென்று ஊகிப்பீர்களேயானால் அது மழுங்கடிக்கப்பட்ட ஒரு குழுமக்களை மேலும் மேலும் மழுங்கடிக்கச் செய்வதாக செய்யய்படும் ஒங்கிவளர்ந்த அதிகார புத்தி என்னது தெள்ளத்தெளிவாகி, பால் வெள்ளை என்பது போல தக்க நிருபிக்கப்பட்டுள்ளது (அறிஞர் பாளேமோ 1816-1890)

Sridhar Narayanan said...

வாங்க அனுஜன்யா,

//ஒரு விதத்தில் தெரியாமல் இருந்தால்தான் சுவாரஸ்யம்.//

தெரிந்தாலும் சுவாரஸ்யம்தானே :-)

//விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடுவர்கள் பற்றி மிகமோசமான விமர்சனங்கள் //

ஒன்று - விமர்சனம் இல்லாமல் வெற்றிகரமான நிகழ்ச்சிகள் தயாரிக்க முடியாதில்லையா :-).

இரண்டு - ஒரே பரிமானத்தில் எல்லாவற்றையும் சுருக்கிவிடுவது என்பது ஆரோக்கியமானதல்ல.

//http://goinchami.blogspot.com///

கண்டேன் கோயிஞ்சாமியை:-)).

தமிழ் இணையதளத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பாபாவைக் காணலையே இங்கே.

ஆனா இ.வ.க்கும் இந்த குரூப்புக்கும் என்னமாதிரியான உறவுமுறை? அதுதான் விளங்கமாட்டேங்குது :-))

//" you have already graduated in the Tamil Blog world " :)//

சங்கர் அண்ணா! நன்றிங்ணா. போஸ்ட் க்ராஜுவேஷன் வாய்ப்புகள் பத்திக் கொஞ்சம் வழிநடத்துங்களேன் :-)

//புதசெவி போடும் இகொ சொல்றார்.//

ஒரிஜினலா ஏதாவது எழுதுன்னு அறைகூவறார்ப் போல. இருக்கட்டும். ரொம்ப பிரச்சினை பண்ணினா 'மெய்ப்புல அறைகூவலர்' ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டுர்ற வேண்டியதுதான். :-))

Sridhar Narayanan said...

//உங்களுக்கு முகமுடி - யாருன்னு தெரிஞ்சா சொல்லுங்க, ஒரு வேளை, கலிபோர்னியாவிலிருந்து காடுபட்டிக்கு ப்ராஜெக்ட் விசயமா வந்துடாரன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்.//

அனானி-1 சார்,

நமக்கு தெரிஞ்ச ஒரே முகமூடி - காமிக்ஸில் வரும் வேதாளர்தான். அவர் அப்பப்ப நகரத்துக்கும் வருவாராம் வேறு பேரில :-))

//(அறிஞர் பாளேமோ 1816-1890)//

அனானி-2 சார்,

யாரந்த பாளேமோ? பக்கதில இருக்கறது அவர் போன் நம்பர்ங்களா? :-))

Anonymous said...

அறிஞர் பாளேமோ 1816-1890)//

இது அறிஞர் பாளேமோ, பார்ல உட்கார்ந்தோ, நின்னோ ஊத்திகினூ இருந்த ஒரு பொற்காலம் தல

SurveySan said...

இதோ, இன்னும் கொஞ்ச நேரத்ல கண்டுபிடிச்சுருவோம்ல :)

http://surveysan.blogspot.com/2008/09/blog-post_21.html