ஓரளவுக்கு பிரபலமான முறை அலெக்ஸா வரிசைபடுத்துதல் . உங்களில் பலர் இதனைப் பற்றி அறிந்திருக்கலாம். எந்த தள முகவரியைக் கொடுத்தாலும் உடனே கடந்த வாரம், கடந்த மூன்று மாதததிற்கான ஹிட் ரேட் என்று படமாகவே காட்டுகிறார்கள். வலைத்தளத்திற்கு கிடைக்கும் ஹிட்களை வைத்து தரவரிசைப் படுத்தி கிராஃப் போடுகிறார்கள். அட, எப்படி இவர்களால் எல்லா தளத்தின் பிரபலத்தையும் கண்டறிய முடிகிறது என்று கொஞ்சம் துருவிப் பார்த்தால், அலெக்ஸா டூல்பார் என்று ஒரு உபகரணப் பட்டி (தமிழுங்கோ) வைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் தரவிறக்கி உங்கள் உலாவியில் இணைத்து விட வேண்டும். இந்த பட்டி நீங்கள் உலாவும் தளங்களைப் பற்றிய விவரங்களை அலெக்ஸாவின் டேட்டாபேஸில் கொண்டு சேர்க்கிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இதன் வரிசைப்படுத்துதல் நிகழ்கிறது. அலெக்ஸாவின் உபகரண பட்டி இல்லாதோரின் உலாவல் வரலாறு இதில் கணக்கெடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதாவது இந்த தரவரிசை சார்புடையவையாகத் (biased) இருக்கிறது. ஆகையால் அலெக்ஸாவைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் கொள்வது தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.
நமது தளத்தைப் பற்றிய தரவரிசையைப் பார்க்கலாம் என்று அலெக்ஸாவில் துழாவினால், ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. 'தம்பீபீ! நீ போக வேண்டிய தூரம் நிறைய இருக்குப்பா' என்று கொஞ்சம் ஈனோ சாப்பிட்டு என்னை நானே ஆற்றுப்படுத்திக் கொண்டேன். முழுத் தகவலையும் பார்த்தால், இந்தப் தளத்தின் பார்வையாளர்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து மட்டும்தான் வந்திருக்கிறார்கள். அப்போ அமீரக, புதரக மக்கள் யாருமே இந்த வலைத்தளத்தை சீந்துவதே இல்லையா? வலைத்தளத்திற்கே வராமல் பின்னூட்டம் மட்டும் போட்டுவிடுகிறார்கள்ப் போல.
அலெக்ஸாவில் உங்கள் தரவரிசையை முன்னேக் கொண்டு வர இதோ 20 டிப்ஸ்கள். மிக எளிய வழிமுறை. அலெக்ஸா டூல்பாரை நீங்கள் உபயோகிக்கும் எல்லாக் கணிணிகளையும் நிறுவிக் கொண்டு வலைப்பக்கத்தை உலாவி முகப்பு பக்கமாக வைத்துக் கொண்டு அதன் வழியாகவே மற்ற தளங்களுக்கு சென்று உங்கள் வலைத்தளத்தின் ஹிட் ரேட்டை கன்னா பின்னாவென்று ஏற்றிவிடுங்கள். உங்கள் நண்பர்களும் அலெக்ஸா டூல்பார் வைத்துக் கொண்டு உங்கள் தளத்தை மேய்ந்தால் ரேங்கிங் எக்குதப்பாக உயர வாய்ப்புண்டு. வாழ்க வளமுடன்!
Da Vinci Code புகழ் டான் ப்ரௌன் எழுதிய புனைவு Angels and Demons. இது இப்பொழுது டாம் ஹாங்க்ஸ் நடிக்க திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அறிகிறேன். ஒரு கால் கிராம் அ-பருப்பொருள் (anti matter) பற்றிய கதை. மிகவும் அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர். இதில் வரும் கார்லோ வெண்டிரஸ்கா (Carlo Ventresca) வாடிகனின் புனித ரோமானிய சர்ச்சின் அலுவலர் (Camerlengo). இவர் பெரும் பேச்சாற்றலுடையவர். சிறு வயதானவர். கதையில் பின்னர் அறியப்படுகின்ற கார்லோவின் பிறப்பைப் பற்றிய இரகசியம் மிகவும் வியப்பிலாழ்த்தும் கற்பனை. ஆண்டி மேட்டரும், மேட்டரும் மோதினால் பேரழிவு ஏற்படும். இல்லுமினாட்டி (Illuminati) என்னும் அடிப்படைவாத குழுவால் இந்த ஆண்டிமேட்டர் வாடிகன் சர்ச்சில் மறைத்து வைக்கப்படுகிறது. 24 மணிநேரம் அந்த அ-பருப்பொருள் வேக்வூம்-ல் (vaccum) மிதந்து கொண்டிருக்கும். அப்புறம் தரையிறங்கி பருப்பொருளோடு மோதினால் பேரழிவுதான். அந்த அபாயத்திலிருந்து உலகை காப்பாற்ற கதாநாயகன் ராபர்ட் லாங்க்டனோடு முயல்கிறார். இறுதியில் என்னவாயிற்று என்று புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தற்போது CERN நடத்தும் Particle accelerator சோதனைக்கு முன்னோடி போல் இந்தக் கதை அமைந்திருந்தது. இதற்கு அப்புறம்தான் பிரசித்திப் பெற்ற Da Vinci Code புனைவு எழுதப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி CERN-ன் LHC (Large Collidor of Hadrons) சோதனை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த சோதனையினால் புதிய சக்தியை உண்டாக்க முடியும் என்று நம்புகிறார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பாளர்கள் முன் வைக்கும் வாதங்கள் சில இதன் அடிப்படையையே கேள்வி கேட்கின்றன. இந்த சோதனையின் விளைவு இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலைதான் இப்பொழுதும். ஆனால் ஒன்று நிச்சயம். இது வெற்றிபெற்றாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி இது ஒரு disruptive சோதனைதான். எனக்கு தோன்றிய இரு முக்கிய கேள்விகள்.
1. Law of conservation of energy தவறா?
2. இந்த சோதனை மூலம் பிறக்கும் புதிய சக்திக்கு என்ன பெயர் வைப்பது?
பள்ளியில் படிக்கும்போது ஆமீர்கானின் முதல் படம் தமிழகத்தில் ஓடி பெருவாரியான வெற்றி பெற்றது. ஷாருக்கான் அப்பொழுது டிவி சீரியலில் உற்சாகம் பொங்க நடித்துக் கொண்டிருந்தார். ஆமீர்கானின் சில திராபை படங்களை விடுத்தால் பெரும்பாலும் நல்ல படங்களாகவே தந்திருக்கிறார். இவருடைய 'லகான்' மேல் தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், அதை மிகத் திறமையாக லாபி செய்து அகாடமி விருதின் இறுதிக் கட்டம்வரை கொண்டு சென்றது இந்திய சினிமா அளவில் சாதனைதான். இந்த வருடம் 'தாரே ஜமீன் பர்' இந்தியப் படங்கள் சார்பில் அகாடமி அவார்டுக்கு செல்கிறது. இந்தப் படம் மிகச் சீராக, இந்திய பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு கொஞ்சம் டிரமடைஸ் செய்து எடுக்கப்பட்ட படம். படத்தில் எனக்குப் பிடித்த காட்சி ஆசிரியரான ஆமீர்கான் தனது மாணவனின் பெற்றோரை சந்தித்து 'டிஸ்லெக்சியா' குறைபாட்டைப் பற்றிப் புரியவைக்கும் காட்சி. மேண்ட்ரீன் மொழியில் எழுதியதைப் படிக்க முடியாமல் திணறும் தந்தைக்கு தன் மகனின் பிரச்சினைப் நேரடியாகப் புரிகிறது. முற்பாதி இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம். பிற்பாதியில் அசட்டு ஆசிரியர்களின் நகைச்சுவையை தவிர்த்திருக்கலாம். அருமையான படத்திற்காக ஆமிர்கானுக்கு ஒரு பொக்கே. இவர் வலைத்தளத்தின் நுழைவு வாயிலில் இவர் கஜினி பட ஸ்டில்தான் இருக்கிறது. இன்னமும் இவர் மெமெண்டோ பார்க்கவில்லையா?
26 மறுமொழிகள்:
வர வர என்னென்னமோ கலந்து கட்டி அடிக்கறீரு. ஒண்ணும் புரியறது இல்லை!!
நல்லா இருந்தாச் சரி!
படிக்க சுவையாக எழுதுகிறீர்கள்
1.அலெக்ஸா வரிசைப்படுத்தலில் எனக்கும் 'தம்பீபீ! நீ போக வேண்டிய தூரம் நிறைய இருக்குப்பா' தான். எனவே, நானும் அதை மதிப்பதில்லை :-)
2. Angels & Demons ஒரு மெகா ஜல்லி. டா வின்ஸி கோட் கூட அதை ஒப்பிடுகையில் ஜல்லி குறைவே. நம் வில்லன்கள் அம்மாவையும் ஆருயிரையும் கிட்நாப் செய்து சந்தோஷப்படுவார்கள், ஆங்கிலப்பட வில்லன்களுக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கான சரக்கு வேண்டும் - பட்டனை அமுக்கினால் உலகமே நாசமாகும், வையல் வெடித்தால் சுனாமி தவிர வேறு யாரும் காப்பாற்ற முடியாது - அது போல இதில் ஆண்டி மேட்டர் - மற்றபடி நிஜமான ஆண்டி மேட்டருக்கும் இதற்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது. சூடோ அறிவியல். இதுக்கு இந்த ஆள் பேசாமல் சிம்பாலிஸமே பேசி இருக்கலாம் எனத் தோன்ற வைத்தது. சரத்குமார் பட க்ளைமாக்ஸ் போல ஒரு க்ளைமாக்ஸ்.
ஆனால் ஒன்று - சினிமாவாக வெற்றி பெற வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
3. Laws of Conservation of Energy தவறா எனக்கேட்க என்ன அவசியம்? எனர்ஜி எங்கெல்லாம் இருக்கிறது என்பது மனிதனுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை, அதைத் தெரிந்துகொள்ள இன்னொரு முயற்சி - அவ்வளவே.
4. தாரே ஜமீன் பர் க்கு அடுத்து கஜினி; ஹே ராமுக்குப் பிறகு வசூல் ராஜா! பாவம் :-)
ஸ்ரீதர்,
உங்களது View Archiveன் கீழ் உள்ளதெல்லாம் கமெண்டுகளுகான feedகளாக இருக்கிறதே!?
வாங்க இ.கொ.
உங்களுக்கே புரியலையா? என்ன கொடுமை இது கொத்தனார் :-)
வாங்க முரளி கண்ணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பெனாத்தலார் சார்,
//Laws of Conservation of Energy தவறா எனக்கேட்க என்ன அவசியம்? எனர்ஜி எங்கெல்லாம் இருக்கிறது என்பது மனிதனுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை, அதைத் தெரிந்துகொள்ள இன்னொரு முயற்சி - அவ்வளவே//
பெருவெடிப்பு நிகழ்ந்து வெகுகாலமாகி விட்டதால் பூமி குளிந்து போய் சக்தி குறைந்து போய்விட்டது (அப்படித்தான் படித்தேன்). இந்த மாதிரியான சோதனைகள் புது சக்தி உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுதான் அந்த சந்தேகம் :-))
வாங்க மகேஷ் (யோசிப்பவர்)
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னன்னு தெரியல. அந்த காலெண்டர் அட்டவணை திடீர்னு வேலை செய்ய மாட்டேங்குது. இப்போதைக்கு தூக்கிட்டேன். பின்னாடி மீண்டும் சேர்த்து பார்க்கலாம் :-)).
//இந்த தரவரிசை சார்புடையவையாகத் (biased) இருக்கிறது. ஆகையால் அலெக்ஸாவைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் கொள்வது தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.
//
ஹிஹி. இப்ப தான் தெரிஞ்சதா?
அது சரி, எதுக்கு சுந்தரை வம்புக்கு இழுக்கறீங்க? :p
//அது சரி, எதுக்கு சுந்தரை வம்புக்கு இழுக்கறீங்க? :p//
வாங்க அம்பி சார்.
வம்பிழுக்கிறது நானா நீங்களாங்கங்க :-)
சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி
/இந்தப் தளத்தின் பார்வையாளர்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து மட்டும்தான் வந்திருக்கிறார்கள். அப்போ அமீரக, புதரக மக்கள் யாருமே இந்த வலைத்தளத்தை சீந்துவதே இல்லையா? வலைத்தளத்திற்கே வராமல் பின்னூட்டம் மட்டும் போட்டுவிடுகிறார்கள்ப் போல./
இல்லையே தல.
Sridharblogs.com users come from these countries:
India77.1%Singapore3.6%Other countries19.3%
இப்ப பார்த்தா இப்படித் தெரியுது :) அமீரக வாசகர்கள் இந்த other countriesல வருவாங்க.
விடுங்க, விடுங்க :)
எனக்கு ஒரு சந்தேகம்!!
ஸ்ரீதர் நாராயணன் சினிமா நியூஸ் இல்லாமல் பதிவு போடுவாரா ?? :))
///. தாரே ஜமீன் பர் க்கு அடுத்து கஜினி; ஹே ராமுக்குப் பிறகு வசூல் ராஜா! பாவம் :-)///
பெனாத்தல்
ஹேராம் மாதிரி இல்லாமல் "தாரே zaமீன் பர்" சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கும்.
வாங்க சுபாஷ்! உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
வாங்க சுந்தர்!
//அமீரக வாசகர்கள் இந்த other countriesல வருவாங்க.//
அப்பாடி. நெஞ்சில பாலை வார்த்தீங்க. இந்த யூஎஸ் மக்கள்ஸ் ஏதாவது இந்தியா ப்ராக்ஸி மூலமா வந்து கமெண்டிட்டுப் போறாங்களோ என்னவோ. :-))
//ஸ்ரீதர் நாராயணன் சினிமா நியூஸ் இல்லாமல் பதிவு போடுவாரா ?? :))//
வாங்க சங்கர். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இட்லிவடைக்கும் பாலிடிக்ஸ் மாதிரி நமக்கு சினிமா செய்திகள் ஆயிடிச்சிங்க. தவறான உதாரணம் சொல்லிட்டேனோ? :-))
தல,, Law of energy conservation தப்பாக வாய்ப்பில்லை, என் பங்குக்கு கொஞ்சம் ஜல்லி அடிக்கிறேன். அதுக்கு முன்னாடி - எலக்ட்ரானுக்கோ புரோட்டானுக்கோ இருக்கிற எடையை (இடை ன்னு வாசிக்கிறவுங்க இப்பவே விலகிடலாம்) டால்டன்ன்னு ஒரு அளவு வச்சு அளக்கமுடியும். ஆனால் அதுக்குண்டான நிறையை (mass) அளக்கிற அளவுக்கு இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவில்லை மனிதமூளை. அதுக்கு amu nnu ஒரு பரிமாணம் உண்டுன்னு சொல்லுவாங்க, அது என்னான்னு கேட்டா, ஒரு புரோட்டான் அல்லது எலக்ட்ரானோட நிறையின் ஒரு பகுதின்னு கலைஞர் மாதிரி பதில் சொல்லுவாங்க. மொத்ததில் எலக்ட்ரானுக்கு எடை உண்டு, நிறை ஒரு மாதிரி கற்பனை. 2. தூணிலும் துரும்பிலும் உள்ள இந்த எலக்ரான் எல்லாம் சும்மா சுத்திகிட்டே இருக்கும் போது (Rotaional energy, vibrational energy மொத்தத்தில் kinetic energy - கடவுள் ? ) கொஞ்சமா வெப்பம் வெளிப்படும் (thermal motion - energy) இதுதான் மொத்த பிரபஞ்சத்துக்கும் ஆதார சக்தி. ஆச்சா, இரண்டு எலக்ட்ரான்கள் எண்ணிக்கையில் வித்தியாசமான வேறு வேறு அணுக்கள் (அது தனிக்கதை)சேரும் போதும் இந்த எலக்ரான்கள் அணுவில் இருக்கிற இடமும் அதனோட இயக்க ஆற்றலும் மாறுபடும், இந்த மாறுபாடும் வெப்பமா வெளீயேறும். இந்த வெப்பம்தான் சக்தி. மொத்ததில் சக்தி கொடுக்கிற இந்த எலக்ரானை மட்டும் தனியா generate பண்ணி அணுவுக்குள்ள இருந்து பண்ணியதை வெளியே மோதச்செய்யும் போது எவ்வளவு சக்தி கிடைக்குதுன்னு பார்க்கப்போறாங்க. (but the real energy is potential difference between the two charged elections) அந்த எலக்ட்ரான்கள் மோதும் போது அதனுடைய எடையில் ஏதும் மாறுதல் இருக்கான்னு ஆராய்ச்சி, அப்போ நிறை என்னாஆகும். first law of thermodynamics படி, இந்த எலக்ரான்களை எல்லாம் உருவாக்க ஒரு ஏகப்பட்ட ஆற்றல் செலவழிக்கனும், விஞ்ஞானிகள் குடிக்கிற டீயிருந்து, கிடைக்கிற ஆற்றல் கூட அடுத்த வடிவமா மாற்றப்படுது அவ்வளவுதான். இந்த வடிவத்தை, உருவாக்க செலவழிக்கப்பட்ட ஆற்றல் இன்னொடு வடிவத்தில், இன்னோடு இடத்தில் எலக்ரான்கள் மூலமாக வெளிப்படபோகுது. ஒரு closed system த்தில் (collaider) நடக்கிற இந்த ஆற்றல் மாற்றம் வெளியே கண்டிப்பாக கடத்தப்படும் வேறோரு வடிவத்தில். ஆற்றல் அளவு இந்த பிரபஞ்சத்தில் வேறு வடிவமாக மாறுபாடு அடையும் அளவுதான் இருக்கும், சிறிதுசிறிதாக closed system la இருந்து Universe kku கடத்தப்படும். (so it obeys first law) என்னதான் சூடாக காபியை thermal flask la வைத்திருந்தாலும் ஒரு 12 மணிநேரம் கழித்து ஆறிடும், அதாவது ஆற்றல் பரிமாற்றம் negligible level ல நடந்துகொண்டுதான் இருக்கும். அதைத்தான் 2வது விதி விளக்குகிறது. இயற்கையில் சின்னதா நடக்கிற இந்த ஒழுங்கற்ற ஆற்றல் பரிமாற்றத்தினை வேகமா நிறையா ஒழுங்கான வேகத்தில் நடக்கச்செய்து எலக்ரானோட ஆற்றல் மாறுபாட்டினை காணமுயற்சிகிறார்கள், ஏதாவது புதியதாக ஆற்றலை உருவாக்க முடியுமான்னு சோதனை முயற்சி. இதுவரைக்கும் இந்த மோதல் வேகத்தினை கட்டுப்படுத்த இயலுமாவென பார்த்திருக்கிறார்காள். 31ம் தேதி, உண்மையான scheduled speed la மோத விடபோறாங்க.
பார்க்கலாம் என்னதான் நடக்கும்ன்னு,ஒண்னு கண்டிப்பாக நடக்கும், இனிமே ஸ்ரீதர் பதிவுக்கு வாரதுக்கு முன்னாடி ஆற்றல் செல்வழிச்சு யோசிப்பாங்க, its ok, that's also obeys entrophy..
அனானி சார்,
நிறைய சொல்லியிருக்கீங்க. ஒரு தனி பதிவா போடற அளவுக்கு. நேரம் இருப்பின் செய்கிறேன். இப்ப உடனடி கேள்விகள்:
//ஏதாவது புதியதாக ஆற்றலை உருவாக்க முடியுமான்னு சோதனை முயற்சி. //
1. இங்கதான் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. நீங்க சொல்கிறபடி பார்த்தால் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் முயற்சின்னு சொல்லலாம்னு நினைக்கிறேன். conservation of energy ஒரு வகையில் 'எல்லாம் பிரும்மம்'ன்னு சொல்லுது போல. எல்லா கேள்விக்கும் சுலபத் தீர்வு :-)
// 31ம் தேதி, உண்மையான scheduled speed la மோத விடபோறாங்க.//
இல்லையாமே. 2009-க்கு ஒத்தி வைத்துவிட்டார்கள்ன்னு படிச்சேனே.
'எல்லாம் பிரும்மம்'ன்னு சொல்லுது போல. எல்லா கேள்விக்கும் சுலபத் தீர்வு :-)
/////// அப்படியில்ல ஸ்ரீதர், potential difference மூலமாக இப்போ வெப்பம்தான் உரூவாகும்ன்னு அவுங்க எல்லாருக்கும் தெரியும், அது கணக்கிட்ப்படக்கூடியாத இருக்குமேயானால இந்தளவு ஆற்றல் இந்த வேலையை செய்ய போகுமென்று ஒரு ஒப்பீட்டுபார்வை Bigbang kku போதுமான்ன்னு ஒரு கணக்குகள் கணக்குகள் கணக்குகள். அப்புறம் நியூட்ரான்களை மோதவிடுவதை விட (அணுகுண்டு) இது பாதுகாப்புன்னு கண்டுபிடித்தால் ஆயில வச்சுகிட்டு ஆட்டம் போடுற நாடுகளுக்கு எல்லாம் ஒரு ஆப்பு. அதாதது ஒரு பெரிய tube light மாதிரி இந்த collaider test, கண்டிப்பாக மாற்று ஆற்றல் தயாராகலாம்
//அப்புறம் நியூட்ரான்களை மோதவிடுவதை விட (அணுகுண்டு) இது பாதுகாப்புன்னு கண்டுபிடித்தால் ஆயில வச்சுகிட்டு ஆட்டம் போடுற நாடுகளுக்கு எல்லாம் ஒரு ஆப்பு. அதாதது ஒரு பெரிய tube light மாதிரி இந்த collaider test, கண்டிப்பாக மாற்று ஆற்றல் தயாராகலாம்//
இது கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு. விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
இல்லையாமே. 2009-க்கு ஒத்தி வைத்துவிட்டார்கள்ன்னு படிச்சேனே.
////// நான் படித்தது current issue Nature. தாங்கள் எங்கோ ?
உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
நிறைய சந்தேகங்களும் வித்தியாசப்படும் புள்ளிகள் இருப்பினும் :)
இந்த உங்களுடைய பதிவு பிடித்திருந்தது.
தொடர்பற்ற மூன்று புள்ளிகளை நீங்கள் தொடர்புபடுத்தி எழுதியிருந்த விதம் :)
குறிப்பாக,CERN-ன் LHC (Large Collidor of Hadrons) சோதனை குறித்த உங்களுடைய அக்கறை இப்பின்னுட்டத்தை இடவைத்தது.
ராஜன்குறையின் இப்பதிவை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்:
http://www.satiyakadatasi.com/2008/09/07/
அனானியாக பகிர்ந்து கொண்டவரின் பின்னூட்டமும் இப்பகிர்வைத் தூண்டிய ஒரு காரணம்.
Entrophy குறித்த அவரது பார்வையில் உடன்பாடு இருப்பினும் அவரது இக்கருத்துக்கள் நெருடல் ஏற்படுத்துகின்றன:
1) //என்னதான் சூடாக காபியை thermal flask la வைத்திருந்தாலும் ஒரு 12 மணிநேரம் கழித்து ஆறிடும், அதாவது ஆற்றல் பரிமாற்றம் negligible level ல நடந்துகொண்டுதான் இருக்கும். அதைத்தான் 2வது விதி விளக்குகிறது.//
என்று சொல்லிவிட்டு, அதைத் தொடர்ந்து,
//ஏதாவது புதியதாக ஆற்றலை உருவாக்க முடியுமான்னு சோதனை முயற்சி.//
என்று சொல்லும்போது entrophy எப்படி Extropy - யைக் கிளர்த்தும் என்ற கேள்வி எழுகிறது.
அவர்தான் விளக்கவேண்டும்.
2) //அப்புறம் நியூட்ரான்களை மோதவிடுவதை விட (அணுகுண்டு) இது பாதுகாப்புன்னு கண்டுபிடித்தால் ஆயில வச்சுகிட்டு ஆட்டம் போடுற நாடுகளுக்கு எல்லாம் ஒரு ஆப்பு.//
“ஆயில வச்சுகிட்டு ஆட்டம் போடுகிற நாடுகள்” என்று எவற்றைச் சொல்கிறார்?
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளையா அல்லது மத்தியக் கிழக்கு நாடுகளையா?
இரண்டாம் தரப்பினரைக் குறிக்கவில்லை என்பது
//நியூட்ரான்களை மோதவிடுவதை விட (அணுகுண்டு) இது பாதுகாப்புன்னு கண்டுபிடித்தால்// என்ற கருத்தால் பிடிபடுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளே இப்பரிசோதனையால் பயன்பெறுபவை என்பதைக் கருத்தில் கொண்டால்.
மற்றது, தொடர்ந்து எழுதுங்கள்.
வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
வளர் ...
வாங்க சுவேக் (அனானி),
நான் படித்தது CERN-ன் பத்திரிகை செய்திகளிலிருந்து. இங்கே பார்க்கலாம்
வாங்க வளர்! உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//நிறைய சந்தேகங்களும் வித்தியாசப்படும் புள்ளிகள் இருப்பினும் :)//
:-))
//ராஜன்குறையின் இப்பதிவை வாசித்திருப்பீர்கள் //
இப்போதுதான் வாசித்தேன். சுட்டிக்கு நன்றி. கருந்துளை பற்றிய கேள்விகளை ஏற்கெனவே படித்திருக்கிறேன். இன்னமும் நிறைய தகவல்கள் தெரியவில்லை. ஆனால் இது ஒரு பெரும் disruptive ஆராய்ச்சியே.
//entrophy எப்படி Extropy - யைக் கிளர்த்தும் என்ற கேள்வி எழுகிறது.
அவர்தான் விளக்கவேண்டும்.
//
சுவேக்... சீக்கிரம் வாங்க. வளர் நிறைய கேள்விகளோடு காத்திட்டிருக்கார்.
//ஏதாவது புதியதாக ஆற்றலை உருவாக்க முடியுமான்னு சோதனை முயற்சி.//
என்று சொல்லும்போது entrophy எப்படி Extropy - யைக் கிளர்த்தும் என்ற கேள்வி எழுகிறது.என்று சொல்லும்போது entrophy எப்படி Extropy - யைக் கிளர்த்தும் என்ற கேள்வி எழுகிறது.////
என்னோட தவறு அது, புதிய ஆற்றலை உருவாக்குவதற்கான முயற்சி இல்லை, புதிய ஆற்றல் மாற்றத்தினை கண்டுபிடிப்பதற்கான (way to find a new energy transformation) முயற்சி. ப்ளாஷ்க் காபியின் வெப்பநிலையானது மெதுவாக ஒழுங்கற்றதன்மையில் (entrophy) சூழலின் வெப்பநிலையோடு சமநிலையினை அடையும் என்பது (energy transformation -1st law of thermodynamics) இயற்கை. ஆனால் இயற்கையில் ஒரு சிறுமாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் (creating an Isolated system Eg, Thermal flask) இந்த ஆற்றலை நாம் பயன்படுத்தமுடியும். Collaider energy calculation ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மாதிரி,,,,.. ஒரு வேளை இந்த ஆற்றல்மாற்றம் பாதுகாப்பானது என்று நிருபிக்கப்படும்போது கண்டிப்பாக பயன்படும்.
உங்க 2வது கேள்விக்கு பதில், 1951ல் CERN ஆரம்பிக்கும்போது நடந்த அரசியல் விளையாட்டுகளை, நேரில் கண்ட அப்போதைய இயக்குநர் தன்னுடைய கட்டுரையை இப்படி முடிச்சுருந்தார், its hard to find scientist among politicians, it's obvious many scientist act as a politicians,,அதுனால் அதுக்கு மேல் நான் அறிவியலில் அரசியலை கலக்கப்போவதில்லை.
மதிப்பிற்குரிய அனானி அவர்களுக்கு,
(சுவேக் என்று பெயரிட்டு திரு. ஸ்ரீதர் அழைத்திருப்பினும் தங்களை யாரென்று அறியேன். அது முக்கியமல்ல. கருத்துப் பகிர்வே முக்கியம்.)
“இயற்கை” என்று நீங்கள் சொல்வதை இந்த இடத்தில் physics - physical laws என்று புரிந்து கொள்கிறேன். (தவறெனின் சுட்டுங்கள்.)
இதை ஒப்புக்கொள்வீர்களெனின், the laboratarial experiments of physics are conducted on the premisis of emulating/simulating - in other words, the repetititive simulation of 'natural' 'laws' in the lab என்பதையும் அங்கீகரீப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
Repetition of 'natural' 'laws' in the lab - ற்கும், Repetition of certain phenomena in 'nature' - க்கும் ”வித்தியாசம்” உண்டு.
இயற்கையில் ஒரு நிகழ்வு திரும்ப நிகழும் போது எப்போதும் ஏதோவொரு “வித்தியாசத்துடனே” நிகழ்கிறது. (It's alwaysa Repetition with Difference.)
Lab - ல் நிகழ்த்தப்படும் விஞ்ஞானப் பரிசோதனைகளின் அடிப்படை முற்கோள் ‘இயற்கையின் விதிகளை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நிகழ்த்திப் பார்ப்பது' என்பதாக இருக்கிறது. (சரிதானா?)
இது அடிப்படையிலேயே ‘இயற்கையின்' நிகழ்வுப் போக்கிலிருந்து மாறுபட்டது. (சரிதானா?)
இயற்கைக்கு ஏதேனும் 'law' இருக்கிறதா?
‘Law" என்பது ஒரு human, moralistic, concept and practice of power - தானே?
இதை 'இயற்கையின்' மீது ஏற்றிக் கருத்தாடல் செய்வதன் தன்மை என்ன?
பரிசலனைக்கு வைக்கிறேன்.
மற்றது,
//உங்க 2வது கேள்விக்கு பதில், 1951ல் CERN ஆரம்பிக்கும்போது நடந்த அரசியல் விளையாட்டுகளை, நேரில் கண்ட அப்போதைய இயக்குநர் தன்னுடைய கட்டுரையை இப்படி முடிச்சுருந்தார், its hard to find scientist among politicians, it's obvious many scientist act as a politicians,,அதுனால் அதுக்கு மேல் நான் அறிவியலில் அரசியலை கலக்கப்போவதில்லை//
உங்களுடைய “ஆயில வச்சுகிட்டு ஆட்டம் போடுகிற நாடுகள்” என்ற கருத்து அரசியலா அல்லது அறிவியலா, அல்லது கடைசியாக சொல்லியிருப்பது போன்று ”many scientist act as a politicians” என்பதற்கான சான்றா?
இனியும் கருத்துப் பகிர்வை நீட்டித்தால், அது வேறு திசையில் நகர்ந்து விடும் என்ற அச்சத்திலும் அயர்ச்சியிலும் முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நட்புடன்
வளர் ...
//புதிய ஆற்றலை உருவாக்குவதற்கான முயற்சி இல்லை, புதிய ஆற்றல் மாற்றத்தினை கண்டுபிடிப்பதற்கான //
இப்பொழுது புரிகிறது.
//ஒரு வேளை இந்த ஆற்றல்மாற்றம் பாதுகாப்பானது//
இந்த 'ஒரு வேளை' தான் கொஞ்சம் பயப்படுத்துகிறது. வேறு வேளையாகிவிட்டா என்னாகும்?
//அறிவியலில் அரசியலை கலக்கப்போவதில்லை//
அரசியல் இல்லாத இடம் உண்டா என்ன? அரசியல் கலந்தாலும் அதை ஒத்துக் கொள்ளும் நேர்மை இருந்தால் தவறில்லை.
நான் உள்ளேன் அய்யா போட்டுட்டு போய்க்கறேன் :)
அரசியல் இல்லாத இடம் உண்டா என்ன? அரசியல் கலந்தாலும் அதை ஒத்துக் கொள்ளும் நேர்மை இருந்தால் தவறில்லை./////
ஸ்ரீதர் இந்த அளவுக்கு நாம் நம்மளை திருப்திபடுத்திக்க ஆரம்பிச்சுட்டோம்,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் நான் ஒத்துக் மாட்டேன், ஒத்துக்கொண்டாலும் தப்பு தப்புதான், மன்னிக்கனும், இதுக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் போனதற்கு.
“இயற்கை” என்று நீங்கள் சொல்வதை இந்த இடத்தில் physics - physical laws என்று புரிந்து கொள்கிறேன். (தவறெனின் சுட்டுங்கள்.)
//////////
1. இயற்பியல் மனிதனால் சில விதிகளை (laws) அடிப்படையாக வைத்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவிதான் அது இயற்கை கிடையாது. விதகள் உருவாக காரணமான சில மாறாத ஒழுங்கான மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வுகள்தான் இயற்கை. தற்பொழுது உங்களின் இந்த புரிதல் சரியாத தெரியவில்லை (இயற்கையில் ஒரு நிகழ்வு திரும்ப நிகழும் போது எப்போதும் ஏதோவொரு “வித்தியாசத்துடனே” நிகழ்கிறது. (It's alwaysa Repetition with Difference.)/// ஒரு உ.ம். மண்ணில் இருக்கிற வைரம். நாள்பட்ட கார்பன் இந்தமாதிரி மாறுகிறது, அதிலுள்ள கார்பன் கட்டமைப்பு என்ன அது மட்டும் ஏன் மற்ற கடினமான பொருட்களை அறுக்க உதவிசெய்கிறது, அது மனிதனுக்கு எப்படி பயன்படும் என்று கருவிமூலம் கண்டுபிடிக்கிறோம், வைரம் உருவாகுவது எப்பொழுதும் மாறாது....
////Lab - ல் நிகழ்த்தப்படும் விஞ்ஞானப் பரிசோதனைகளின் அடிப்படை முற்கோள் ‘இயற்கையின் விதிகளை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நிகழ்த்திப் பார்ப்பது' என்பதாக இருக்கிறது. (சரிதானா?)
இது அடிப்படையிலேயே ‘இயற்கையின்' நிகழ்வுப் போக்கிலிருந்து மாறுபட்டது. (சரிதானா?)///
2. இயற்கையாக மெதுவாக நடக்கிற ஒரு ஆற்றல் பரிமாற்றத்தினை இன்னும் கொஞ்சம் மெதுவாக மாற்றினால் எங்கேயாவது பயன் ஆகுமாவென்று பார்ப்பது ஒன்னும் இயற்கையோடு விளையாடுவது ஆகாது, சொல்லப்போனால் மனிதன் இந்தமாதிரி பண்ணுவது கூட இயற்கையான விசயம்தான் ! எப்படின்னு பார்க்கலாம், யாரோ ஒருத்தர் வேற கிரகத்திலிருந்து உலகத்தை ஒரு மைக்ராஷ்கோப் வழியா பார்க்கிற மாதிரி நினைச்சுப் பாருங்க, அவனுக்கு/அவளுக்கு (எதுக்கு வம்பு பெண்ணுரிமை வாதிகளூக்கு பதில் சொல்லி வேண்டி வந்துரபோகுது) மனிதனுடைய செயல்களும் இயற்கையானதுதான், ஒன்றுகொன்று சக நிகழ்வுகள்(அய்யோ, இதமட்டும் புடிச்சுகாதீங்க தயவுசெய்து) திரும்பவும் நான் கடவுளை கூப்பிடுறேன்.
இயற்கைக்கு ஏதேனும் 'law' இருக்கிறதா?
‘Law" என்பது ஒரு human, moralistic, concept and practice of power - தானே?/////
3. கண்டிப்பாக இயற்கைக்கு விதி (law) இருக்கு. இங்கு விதி என்பதி திரும்ப திரும்ப மாறாது நிகழும் நிகழ்வுகள், அறிவியல் விதகள் ஏன் மாறாமல் நிகழுலனும்ன்னு விளக்குக்குகிறது,, அவ்வளவுதான்.
எப்பவும் விளையாடும் மைதானம். ரப்பர் பால். மூன்று சவுக்குக் குச்சிகள். ஒரேயொரு மட்டை சகிதம் விளையாட வந்தால், டெண்டுல்கர், டிராவிட், கங்குலி எல்லாம் அங்கு வந்து ஆடி, முடித்திருந்தால் எப்படி இருக்கும். எனக்கு அப்படி இருக்கிறது இப்போ. வளர், சுவேக்(!), நீங்கள் என்று அதகளம்.
Angels & Demaons - சுரேஷ் சொல்வதுபோல் ஒரு மெகா ஜல்லி எனினும், நாயகனும், கியும் கடவுள் எனும் தத்துவம் பற்றி பேசுவது சுவாரஸ்யமாக இருந்ததாக ஞாபகம்.
நானும் பின்னூட்டம் போட்டாச்சு. உங்கள் பதிவுகள் சுவாரஸ்யமாக உள்ளதை நிச்சயம் குறிப்பிட வேண்டும். வாழ்த்துக்கள் ஸ்ரீதர்.
அனுஜன்யா
Post a Comment