September 30, 2008

அமெரிக்கா - சிதறிய குமிழியும், நொறுங்கிய நம்பிக்கையும்

நான் பொருளாதார மாணவனில்லை. ஆனால் பொருளாதாரம்தான் வாழ்வாதாரமாகிவிட்டபடியால் அதனை தொடர்ந்து அவதானித்து வந்து கொண்டிருக்கிறேன். பொதுவாக இம்மாதிரி விசயங்களில் நிறைய கேள்விகள் வைத்துக் கொண்டு அறிஞர்களைத் தேடிக் கொண்டிருப்பதுதான் வழக்கம். இம்முறை தேடலில் சிக்கிய சில விசயங்களை ஒரு பதிவாக தொகுத்தால் நல்லது என்று தோன்றியது. தொடர்ந்து நடக்கப் போகும் நிகழ்வுகளோடு எனது பார்வையும் ஒப்புநோக்க ஒரு வசதியாக இங்கே பதிகிறேன்.

ஒரு தனி மெயிலில் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் சுருக்கமாக பொருளாதார குமிழிகளை பற்றி விளக்கியிருந்தார். அதை சற்று சுருக்கி தமிழ்படுத்தி இங்கே தருகிறேன்.

_/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\_

ஒரு சின்னஞ்சிறு தீவில் மூன்றே மூன்று பேர்தான் இருக்கிறார்கள். ராமு, அம்மு மற்றும் சோமு. ராமு அந்த தீவின் நிலத்துக்கு பாத்யக்காரர். அம்முவிடமும் சோமுவிடமும் தலா 1 உரூபாய் இருக்கிறது. இப்பொழுது அம்முவிற்கு ஒரு ஆசை. உரூபாய்க்கு பதிலாக நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று. 1 உரூபாயைக் கொடுத்து ராமுவிடமிருந்து நிலத்தை வாங்கிவிடுகிறார்.

இப்பொழுது ராமுவிடமும், சோமுவிடமும் தலா 1 உரூபாய் இருக்கிறது. அம்முவிடமோ 1 உரூபாய் பெறுமானமுள்ள நிலம். ஆக அந்த நாட்டின் மொத்த சொத்து மதிப்பு 3 உரூபாய்கள். கணக்கு சரியாகத்தானே இருக்கிறது?

சோமுவிற்கு இப்பொழுது ஒரு சம்சயம். இந்த நாட்டில் இருப்பதோ ஒரே ஒரு நிலம்தான். வேறு நிலம் இனிமேல் உருவாகப் போவதில்லை. அதனால் நிலத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்று தன்னிடம் உள்ள 1 உரூபாயுடன் ராமுவிடம் உள்ள 1 உரூபாயையும் சேர்த்து 2 உரூபாய்களுக்கு அம்முவிடமிருந்து நிலத்தை வாங்கிவிடுகிறார்.

இப்பொழுது கணக்குப் போட்டு பாருங்கள்.

ராமுவின் சொத்து மதிப்பு 1 உரூபாய். சோமுவிற்கு கொடுத்திருக்கும் கடன்.
அம்முவின் சொத்து மதிப்பு 1 உரூபாய்.
சோமுவின் சொத்து மதிப்பு 2 உரூபாய்கள். 2 உரூபாய் பெறுமானமுள்ள நிலம் இருக்கிறதல்லவா?

அந்த நாட்டின் நிகர சொத்து மதிப்பு 4 உரூபாய்கள்.

இப்பொழுது ராமுவின் முறை. தான் ஒரு காலத்தில் வைத்திருந்த நிலத்திற்கு இப்பொழுது விலை கூடியிருப்பதால்... அதை மீண்டும் வாங்க முடிவெடுக்கிறான். தனது 1 உரூபாயையும், அம்முவிடம் உள்ள 2 உரூபாயயையும் கடன் வாங்கி 3 உரூபாய்களுக்கு நிலத்தை வாங்குகிறான். இப்பொழுது கணக்குப் போட்டுப் பாருங்கள். நாட்டின் மொத்த மதிப்பு 5 உரூபாயாக உயர்ந்து விட்டிருக்கும்.

இப்படியாக உயர்ந்து கொண்டுப் போகும் மதிப்பு ஒரு நீர்க்குமிழிப் போலததான். இப்பொழுது அங்கிருக்கும் மூவரில் ஒருவர் சந்தேகம் ஏற்பட்டு, 'இருப்பது என்னவோ 2 உரூபாய்களும் ஒரே ஒரு நிலத்துண்டும்தான். எப்படி நிலத்தின் விலை இவ்வளவு ஏற முடியும்' என்று கடன் கொடுப்பதை நிறுத்தியோ அல்லது கொடுத்த கடனைத் திருப்பியோ கேட்டால் இந்த குமிழி உடைந்துவிடும். நாட்டின் ஒட்டுமொத்த மதிப்பு அதனுடைய பழைய மதிப்பிற்கோ அல்லது வேறு குறைந்த மதிப்பிற்கோ போய்விடும்.

_/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\_

அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? பாங்க் ஆஃப் அமெரிக்காவின் ஒரு சீனியர் ஊழியர் சொல்கிறார் 'அமெரிக்கா இன்னமும் அறிவிக்கவில்லை ஆனால், அதனுடைய பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிட்டது. இதிலிருந்து மீண்டு வர அதிக காலம் பிடிக்கும். பொதுமக்கள்தான் சிரமப்படுவர்'. சிதறும் குமிழிக்கு இது ஒரு உதாரணம்.

எதனால் இந்த வீழ்ச்சி? அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவ சுரண்டல்கள் போன்ற ஜல்லிகளை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு கொஞ்சம் அருகில் சென்று பார்த்தால்... இந்த பொருளாதார முன்னேற்றமும் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்தும் புரியும். பாதுகாப்பான வாகனங்கள், உறுதியான சாலைகள், வாகனங்கள் பயனிக்க நெறிமுறைகள், பயனம் செய்பவர்களுக்கு பயிற்சி, காப்பீடு என்று எல்லாவித வசதிகளும் இருந்தும் விபத்து நடக்கத்தானே செய்கின்றன? இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்து ஒரு சிறு தொடக்கம். இத்துடன் முடிந்துவிடுமா அல்லது இதனுடைய தொடர்விளைவுகள் மேலும் பல பாதிப்புகளை கொடுக்குமா?

இதனைப் பற்றிய விரிவான ஒரு இடுகை எழுதலாமா என்று ஆசை மேலிட்டாலும், வல்லுனர்கள் பலர் நிறைந்திருக்கும் இந்த சபையில் நாம் கொஞ்சம் அடக்கமாக இருப்பது அமரருள் உய்க்கும்தானே? இதுவரை வெடித்திருக்கும் பொருளாதார குமிழிகளைப் பற்றி சிறு வரலாறு தொகுப்பு இங்கே இருக்கிறது.

தற்போதைய அமெரிக்க சிக்கலைப் பற்றிய் விரிவான பதிவு இங்கே இருக்கிறது.

சொந்த வீடு வாங்குவது என்பது பலருக்கும் உள்ள கனவுதான். வாழ்நாளில் பெரும்பகுதி உழைத்து பணம் சேமித்து வீடு வாங்கும் கஷ்டங்களை குறைக்க ஏற்பட்டதுதான் வீட்டுவசதிக் கடன். இந்தக் கடனை பரவலாக்கி எல்லாரும் பயனுற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சில திட்டங்கள் போடப்பட்டு, இடையில் அவற்றின் இலாபத்தை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டத்தை புகுத்தி இரண்டும்கெட்டானான நிலையில்தான் பல நிதி நிறுவனங்களும் இருக்கின்றன இன்றைக்கு. பண சுழற்சி சீரான வேகத்தில் இருக்கும் வரை இதன் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். சுழற்சி தடைப்பட்டுப் போனால் ஒட்டுமொத்த அச்சும் முறிந்து போகும். இந்த வருடத்தின் மத்தியில் அமெரிக்காவின் பெரும் கடன் அளிக்கும் நிறுவனங்களான ஃபேன்னி மே மற்றும் ஃப்ரெட்டி மேக் முதலில் தடுமாறத் துவங்கின. நிதி மேலாண்மை கோளாறு, குறைபாடுகள் எல்லாம் தாண்டி இதன் தடுமாற்றத்தை தவிர்க்க வேண்டிய கட்டாய அவசியம் அமெரிக்காவிற்கு. இந்த நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்தால் பல வங்கிகள் திவாலாகும் நிலை. அதனால் அமெரிக்க ஃபெடரெலின் கட்டுபாட்டுக்குள் (Conservatorship) கொண்டு வந்தாகிவிட்டது. இது ஒருவகை திவால் நிலைமதான். முதலில் கணக்குகளை முடக்கிவிடுவார்கள். பிறகு எல்லாம் கண்ட்ரோல்ட் செயல்பாடுகள்தான். ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து லீமென் ப்ரதர்ஸ் காற்றோடு கரைந்து போனது. இந்த தொடர் வீழ்ச்சியில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த கடன் மதிப்பும் (Credit rating) ஆட்டம் கண்டுவிட்டது. பற்பல நாடுகள் அமெரிக்காவின் கடன் பத்திரம் மூலமாகத்தான் தங்கள் கையிருப்புகளை நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்படியே போனால் இந்த வீழ்ச்சி உலகெங்கும் உள்ள சாமானியனின் நிலையையும் அசைத்து பார்த்து விடும். இதன் வீச்சு பெரும் நிதி மாற்றத்தை உலகெங்கும் கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகம்.

எனது சக ஊழியர் ஒருவர் மிகவும் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்தார். "அரசாங்கம் எப்படி தனியார் நிறுவனங்களின் நிர்வாக குளறுபடிகளுக்கு பொறுப்பேற்க முடியும்? எனது வரிப்பணத்தை இந்த பன்றித்தலையர்களுக்கு எடுத்துக் கொடுக்கவா நான் ஓட்டுப் போட்டேன்?" நியாயம்தான். ஆனால் இந்த நிதி நிறுவனங்களின் மேல் இருக்கும் இந்த பாரத்தை தவிர்க்காவிடில் இன்னமும் பல நம்பிக்கைகள் நொறுங்கிப் போகும் சாத்தியங்கள் இருக்கின்றன. விரைவான வளர்ச்சியினால் ஏற்படும் விபத்துகள் விரைவான வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லுமா? இல்லை பொறுப்பான அரசாங்கம் விரைந்து நிலையை சீர்படுத்துமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

_/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\__/'-o0O0o-'\_

இந்த வாரம் இரா முருகன் குங்குமத்தில் எழுதும் 'அற்ப விஷயம் பத்தி' பத்தியிலிருந்து ஒரு சிறு துணுக்கு.

"சென்னை நகரத்துக்கும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கும் தாயாதி பங்காளி உறவு. கூட்டம் அலைமோதும். ‘இதான் கிரானா கரானா சங்கீத பாணியா? வாஹ், ஆஹிர் பைரவி’. இப்படி கண்டக்டட் டூரில் தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ரா போகிற டூரிஸ்ட்கள் போல் எட்டி நின்று பார்த்துக் கேட்டு நாலு கிளாப்ஸ் உதிர்த்துவிட்டு அகாதமிக்கு வெளியே ஆட்டோ பிடிக்க நின்று அடுத்து கைதட்டுவார்கள். பண்டிட்டுக்கு பதிலாக ஓதுவார் தேவாரம் பாடினால்? காலி அரங்கமே மிஞ்சும்."

:))))))

29 மறுமொழிகள்:

goh cho tong said...

சிங்கப்பூரின் ஒரே எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ஜெயரட்ணம் தனது 82வது வயதில் மாரடைப்பினால் காலமானார்

SurveySan said...

ஹ்ம். இன்னும் என்னென்னா ஆகுமோ.

என்னென்னமோ கணக்கு போட்டு எப்படியெல்லாமோ சேத்து வச்ச்சா, இந்த மாதிரி அப்பப்ப குமிழி வெடிச்சு, அபேஸ் பண்ணிடுது எல்லாத்தியும். நம்ம பேராசையும் பெரிய காரணம்.

இலவசக்கொத்தனார் said...

என்னென்னமோ சொல்லறீங்க. நல்லா இருந்தா சரி!! :))

Sridhar Narayanan said...

ஜேபி ஜெயரட்ணம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்கள்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.

Sridhar Narayanan said...

வாங்க சர்வேசு,

//என்னென்னமோ கணக்கு போட்டு எப்படியெல்லாமோ சேத்து வச்ச்சா//

கூட்டி கழிச்சுப் பாருங்க கணக்கு சரியாத்தான் வரும் :-)

//என்னென்னமோ சொல்லறீங்க. நல்லா இருந்தா சரி!! :))//

வாங்க கொத்தனார். உங்க சப்ஜெக்ட்தானே... இப்படி ஒதுங்கிப் போனா.... கொஞ்சம் நீங்களும் வெளக்கிப் போடுங்களேன் :-))

Anonymous said...

opendemocracy.net
என்ற தளத்திலும் பல கட்டுரைகள் இருக்கின்றன.ஒரு பக்கத்தை நிரப்ப
உதவும் :).

ambi said...

இதுனால ப்ரயினுக்கு ஒன்னும் பாதிப்பு இல்லையே? :))

ambi said...

சாஸ்த்ரிய சங்கீததை லந்து பண்ணி நுண்ணரசியல் செய்யும் சீனியருக்கு என் கண்டனங்கள். :p

Sridhar Narayanan said...

அம்பி அப்பா,

வாங்க வாங்க :-)

//ப்ரயினுக்கு ? :))//

சம்பந்தமில்லாத விசயத்தை பத்தி நாம் ஏன் பேசனும்கிறேன்? :-))

//சாஸ்த்ரிய சங்கீததை லந்து பண்ணி நுண்ணரசியல் செய்யும் சீனியருக்கு என் கண்டனங்கள். :p//

நல்லாப் பாருமய்யா... எழுதியது நம்ம எல்லாரையும் விட சீனியர். அவர்தான்யா 'மர்மயோகி'.

ச.சங்கர் said...

புரியாத இடத்தில் போய் புகை விடுவதில் என்ன லாபம்? இரா.முருகனானாலும் இது பொருந்தும்.அடுத்தவன் ஏன் இதைப் பாடவில்லை அதை ஏன் பாடவில்லை என்பதை விட (இது சர்ச்சில் போய் மாரியம்மன் பாட்டு கேட்பது போல் இருக்கிறது, அங்கு மேரியம்மாவைப் பற்றித்தான் பாடுவார்கள்) இவருக்கு விருப்பமானது எங்கு பாடப்படுகிறதோ அங்கு போய் அமர்ந்து,கேட்டு ரசிப்பது படு உத்தமம். இவர் எழுதும் பாணி கூட நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.அதற்கென்ன செய்ய முடியும் ?அது அவரது மற்றும் அவரது விசிறி வட்டத்தின் உரிமை மற்றும் ரசனை சார்ந்த விஷயம்.

ச.சங்கர் said...

பதிவுக்கு நடுவுல பத்தி பிரிக்கிறேன் என்று///_/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\/// இப்படியெல்லாம் போட்டு பீதியைக் கிளப்பாதீங்க.


போன பதிவுல

///அப்படித்தான் கிரகங்களும், நட்சத்திரங்களும், கேலக்ஸிகளும் நகர்ந்து கொண்டே போய்க் கொண்டிருக்கின்றன. இதை எப்படி நிரூபிப்பது? என்னுடைய நண்பர் சுவேக் ஒரு அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார். அவருடைய அனுமதியோடு அதிலிருந்து ஒரு பகுதி கீழே:

_/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\_

/////

இப்படி இருந்ததைப் படிச்சுட்டு ஏதோ கேலக்ஸி படத்தைதான் போட்டு ஏதோ சொல்லியிருக்கீங்கன்னு
ரொம்ப நேரம் இந்தப் படத்தைப் பாத்துக்கிட்டிருந்து நான் மாமுவாகிட்டேன் சரி.இருந்தாலும் பதிவு போடுரேன் பத்தி பிரிக்கிறேன்னு நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதியை :) ஏற்கனவே எழுதுறதுல பாதிக்கு மேல தலைக்கு மேல போகுது.இதுல இது வேறையா :) நல்லா இருங்க சாமீ:0

ச.சங்கர் said...

நீங்கள் சொல்லியிருக்கும் சோமு ராமு அம்மு கணக்கு அவ்வளவு சுலபமானது இல்லை என்பது மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது அந்தக் கணக்கின் "ஒரு பக்கம்" மட்டுமே. :)

Thekkikattan|தெகா said...

தெளிவா இருக்கு படம். கண்ண திறந்து பார்க்கத்தான் பல பேருக்கு பயம்மா இருக்கு.

நல்ல விளக்கமான பதிவு!

//இப்படியே போனால் இந்த வீழ்ச்சி உலகெங்கும் உள்ள சாமானியனின் நிலையையும் அசைத்து பார்த்து விடும். இதன் வீச்சு பெரும் நிதி மாற்றத்தை உலகெங்கும் கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகம். //

நம்மூர்ல அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை பட்டாசு வெடித்துக் கொண்டாடத குறையா எழுதிக்கிட்டு இருக்கிற அரைகுறை பத்திரிக்கைகள் உண்மை இம்பாக்ட்டை மக்களுக்கு எடுத்துச் செல்லுமா?

Sridhar Narayanan said...

//அது அவரது மற்றும் அவரது விசிறி வட்டத்தின் உரிமை மற்றும் ரசனை சார்ந்த விஷயம்.//

வாங்க சங்கர்!

உண்மைதான். அந்த பத்தியின் நகைச்சுவைக்காகவே இங்கே சுட்டியிருந்தேன். 'கன்டெக்டட் டூரில் தாஜ்மகால் பார்ப்பது' மிகவும் அருமையான உவமை. :-))

//ஏற்கனவே எழுதுறதுல பாதிக்கு மேல தலைக்கு மேல போகுது.இதுல இது வேறையா :) நல்லா இருங்க சாமீ://

அண்ணா, புரியற மாதிரி எழுதத் தெரியலைன்னு 'அழகா' சொல்றீங்க :-)

இப்பத்தானே கத்துகிட்டிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் பண்ணிடறேண்ணா :-)

//இது அந்தக் கணக்கின் "ஒரு பக்கம்" மட்டுமே. :)//

விஜே சங்கர் ட்விட்டரில் கொடுத்த ஒரு பவர்பாயிண்ட் ப்ரசெண்டேஷன் இருக்குப் பாருங்க. http://www.slideshare.net/vijayashankar/subprime-presentation-628797/

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

Sridhar Narayanan said...

வாங்க தெகி,

//பட்டாசு வெடித்துக் கொண்டாடத குறையா எழுதிக்கிட்டு இருக்கிற அரைகுறை பத்திரிக்கைகள் உண்மை இம்பாக்ட்டை மக்களுக்கு எடுத்துச் செல்லுமா?//

அட உங்களுக்கு political correctness-னா அர்த்தம் தெரியாதா? 'அமெரிக்காவை திட்டு' அப்படின்னுதான் அர்த்தம் :-)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ச.சங்கர் said...

///இப்பத்தானே கத்துகிட்டிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் பண்ணிடறேண்ணா :-)///

ஸ்மைலி போட்டுருக்குறதுனால நான் தப்பிச்சுட்டேன்னு நினைக்கிறேன் :)

//அந்த பத்தியின் நகைச்சுவைக்காகவே இங்கே சுட்டியிருந்தேன்//

கருத்துடன் உடன்படவில்லையே??:)

விஜே சங்கரின் slide show சிம்பிளாக பிரச்சனையை புரிய வைத்திருக்கிறது. நன்றி.கிட்டத்தட்ட வங்கிகளில் வராக்கடனை(bad depts) வரவில் காட்டிக் காட்டி ,அதற்கு வட்டியும் போட்டு கணக்கில் காட்டி ,அதையெல்லாம் லாபக் கணக்கில் கூட்டி வங்கி மிகவும் லாபகரமாக இயங்குவது போல் காட்டிக் கொண்டு வருவது போல. ஒரு சமயம் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்கப் போகும் போது physical ஆக பணம் இல்லாத நிலையில் இந்தக் குமிழி உடைந்து விடும்.சரிதானா உதாரணம் ?

Sridhar Narayanan said...

வாங்க சங்கர் :-)

//கருத்துடன் உடன்படவில்லையே??:)//

நமக்கு ஏதுங்க சொந்த கருத்து? :-))

//ஒரு சமயம் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்கப் போகும் போது physical ஆக பணம் இல்லாத நிலையில் இந்தக் குமிழி உடைந்து விடும்.சரிதானா உதாரணம் ?//

நீங்கள் சொன்னது பெரும்பாலும் சரியே என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ஆனால் வராக் கடன்களை எல்லாம் வரவில் காண்பிக்க முடியாது.

எதிர்காலத்தில் வசூலாகப் போகும் கடனைக் வைத்து முதலீட்டை பெருக்கியதால் வந்த வினை. Chronic Capitalism என்று சொல்வார்கள். எதையும் பணமாக்குவது. அதுதான் நான் பதிவில் சொல்லியிருந்த படி sub-prime கடன்களின் அடிப்படையே அதிகம் பேருக்கு வீடு கிடைக்க வேண்டும் என்பதுதான். அதனை வணிக நோக்கோடு பயன்படுத்த நினைத்ததால் அரைவேக்காடு திட்டமாக சொதப்பிவிட்டது.

Tanil said...

வித்தியாசமான பொருளாதார கணக்கு. இருக்கிறதை வச்சு பொழப்பு நடத்தினா நாட்டுக்கும் பொருளாதார இழப்பு வரத்து நம்மக்கும் பொருளாதார இழப்பு வரத்து.

இதே போல இன்னும் ஒரு எடுத்துக்காட்டு:

அக்ஷயக்ரிதி கு ஒரு குண்டுமணியாவது வாங்கனுமாம், அப்போது தான் வீட்டில் செல்வம் தாங்குமாம் (மூட நம்பிக்கை தான் ) அந்த ஒரு குண்டு மணி நகை வாங்க அஞ்சு பத்து கடன் வாங்கறோம், அப்புறம் அதை அட்டிக்க திண்டாடுறோம். கடன் கூடிகிட்டே போகுது. இதெல்லாம் பொழப்பா ?

K.R.அதியமான் said...

ஆங்கிலத்தில் ஒரு மடல் :

Dear Sir,
The current ciris is in finanacial markets and tooted in sub-prime
mortages, as we all know. First of all, the money market has severe
govt intervention for several decades when fiat money was invented and
gold
standard was abandoned.

Some centuries ago the currecy were issued by banks backed by their gold or other assets. Hence the original name : bank notes. Govts all
over the world 'nationalised' the currecy issuing system and established
Central Banks with sole monopoly over issue of legal tender. This is first
of all certainly not free market in the real sense.

Secondly, the chronic defict financing of all nations over decades
pumped in more money into the sytem than the sytem could absorve
thru growth in real GDP. This is true of most economies.

And US is in a unique position : its currency USD is the reserve
currency and most of world trade occurs in USD. And hence the
entire world funds the US deficts which is in trillions and trillions
over the decades. US govt prints and pumps in trillions and
trillions of USD into the world economy over the decades. The
cumulative effect of all this should be taken into account while
blaming 'free markets' alone for all this mess.

I vividly remember our discussion about value and money ; and
about the functions of money : as a medium of exchange, measure of
value, etc ; Especially the function : 'store of value' ; The accumulated
'surplus values' or capital or whatever the term flows all around the sytem
in search of investemtn avenues and good return on investemnts.
As the term value is tricky to define and contantly fluctuates in
currency and debt markets, the cumulative effect of too much money
chasing too few goods or avenues for investment seems the crux of
all issues.

The old deficniton for inflation : "Too much money chasing too few
goods" : This seems to aptly apply for this financial market mess.
Combined with the govt gurantess of the twin giants for many trillions
(Freddie and Fannie), etc.

The word cheap money, easy credit, easy money, etc are all result of
this too much fiat money ? And as the govt is the both the issuer of
money and lender of last resot, it also controls the effective interest
rates by tinkering with Fed rates. All these are certainly govt intervention
and not free markets. Last year i read in major papers that the world
boom in equity and real estate is a function of global liquidity. Means ?

Excess liquidity ? And cyclic asset bubbles are always regular
happenings. What about the net amount of M4 or legal tender that
exists in the world economy at any given moment ?

The crisis is not in manufacturing or other services. Hence to term
all this as the failure of free enterprise capitalism is pre mature.

Anyway, I guess no one wants to get back to socialism. In US no one
seems to re-establism the, say : ICC (Interstate Commerce Commission)
which throttled many sectors like trucking (like our license raaj in India
as on date).

More later..

Anbudan
Athiyaman

also Pls see :


http://athiyaman.blogspot.com/2008/10/open-letter-to-my-friends-on-left.html

http://athiyaman.blogspot.com/2008/10/pains-of-slowing-miracle-economy.html

Sridhar Narayanan said...

நண்பர் வளர்மதியின் ஒரு பின்னூட்டம் -

--------------------------

இப்போ பாருங்க மக்கா ... நம்ப அதியமானுக்கு பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு கூட கிடையாது ...

ஆனா அவரு முதலீட்டிய (அதாவது ராஜன்குறையோட பதப்பிரயொகம் சரியென்று ஒப்புக்கொள்கிறேன்) பொருளாதாரத்தைப் பற்றி எங்கு கேள்வி எழுப்பப்பட்டாலும் அங்க வந்து ஆஜராயிடுவாரு ...

தன்னோட பதிவுல எல்லாத்துக்கும் பதில் சொல்லப்பட்டிருக்குன்னு லிங்க் கொடுத்துடுவாரு ...

இல்லைன்னா இந்த இந்த முதலீட்டியப் பொருளாதாரவாதிகள் எல்லாத்திக்கும் பதில் சொல்லிட்டாங்க அப்படீன்னு சொல்லுவாரு ....

நான் என்ன கேக்குறேன்னா இவருக்கு பொருளாதாரத்தோட அடிப்படைகள் ஏதாவது ஒன்னு தெரியுமா ...

கொஞ்சம் அடிப்படையில ஆடம் ஸ்மித்தின் பொருளாதாரக் கொள்கைகளைப் பத்தியும் அதுக்கப்புறம் ரிக்கார்டொ ... அப்பாலிக்கி காரல் மார்க்ஸ் அதுக்கும் அப்பாலிக்கான பொருளாதார அறிஞர்களோட கருத்துக்களைப் பத்தி சேத்துவச்சி இன்னையோட நிலைமையப் பத்தி இந்த cheap little bourgeois entrepreneur - ஆல பேச முடியுமா?

இது ஒன்னும் தேவையில்ல சாமி ... இன்னைக்கான பணச் சுழற்சிக்கான விதிகள்/நடைமுறைகள் என்னவாக நிகழ்ந்துக்கிட்டிருக்குது அப்படீங்கறதப்பத்தி கூகிள ரிஃபர் பண்ணாம (பண்ணா கண்டுபிடிச்சு சொல்லா யாரலயும் முடியும்) ஏதாவது உருப்படியா நமக்கு - நம்ம நாட்டு - இந்த மட இந்திய துணைக்கண்டமாவே இருக்கட்டுமே - எனக்கு தேசம் என்பதிலேயே நம்பிக்கை இல்லை - அது இந்தியத் தேசியமாகட்டும் தமிழ்த் தேசியமாகட்டும் - சர்வதேசியத்தையும் முன்மொழியலை - ஒரு மண்ணையாவது - முதலீட்டியம் தவிர்த்து சொல்ல முடியுமா?

அப்பட்டமான ... அடிவருடியான ... ஒரு முதலாளி என்றுகூட சொல்ல முடியாது அதியமானை ... மிகக் கேவலமான ஒரு குட்டி முதலாளி ... not even to international or national standards ... but even according to Chennai standards he wont even stand to the standards of a filthy petty bourgeois ... why the hell people still entertaining him in the name of democracy ... ?

damn satanic

valar

------------------------------

Sridhar Narayanan said...

வாங்க tanil,

//அக்ஷயக்ரிதி கு ஒரு குண்டுமணியாவது வாங்கனுமாம்//

பத்து வருடங்களாகத்தான் இந்த மூட நம்பிக்கை வெகு அதிகமான புழக்கத்தில் இருக்கிறது. இதைப் பற்றி ஒரு பெரும் ஆய்வே நடத்தலாம் போல.

வாங்க அதியமான்,

நீண்ட பின்னூட்டத்திற்கும், Fiat currency பற்றி எழுதியதற்கும் நன்றி. நான் முதலில் சொல்லியது போல எனக்கு பொருளாதாரத்தில் ஆழ்ந்த அனுபவம் கிடையாது. ஆனால் அதிரடியாக எழுதப்படும் சில பதிவுகள் கொஞ்சம் அலர்ஜியாகவே இருந்தது. இன்னமும் தீவிரமாக வாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

வாங்க வளர்,

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. நண்பர் அதியமானுடன் நீங்கள் நடத்தும் விவாதம் பார்வையாளர்களான் எங்களுக்கு பயனுள்ள தகவல்கள் பல கிடைக்க உதவியாக இருக்கும்.

வளர்மதி said...

Enlightening readers through a debate with Adhiyaman!!!

No way Sridhar :)))

Reading Adhiyaman's venomous anti - communist tirade, just brought back to my mind a famous "anti - slogan" of some afro - american graffitti artist, who used to date Madonna when she was not yet a star: "SUMO".

When asked to explain it he grinned and said: "Same old Shit".

:)))))

Sridhar Narayanan said...

நண்பர் அதியமானின் ஒரு பின்னூட்டம் இங்கே:

----------------

வளார்மதி,

first of all mind you language and manners. ok. i too can dirty and call even more absuive terms about you and your intellectual and real capacities, etc. I hope to remain freinds with you. but the ball is in your court.

Sure, i am not a professional economist. i studied EEE in collage and picked up a bit here and there.க‌ற்ற‌து கைம‌ண் அளவு என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் பெருந்தும்.

first of all try to refute any one of arguments or data factually and logically without absuive and vague generalisations.

By the way : i remind you of our talks when we met some months back : about you stating that communism has been disproved and is not scientific ; and about your reference to memetics and inherent hierarchy in nature. ok

So what alternate path or method or system or solution do you offer instead of communism or capitalism ? thirusangu sorgam ? or some intellectual shit which means nothing in practical life ?

And yes : US form of free markets is really not free market or correct kind. there are many many variations and distortions in the real meaning of capitalism.

There is still a full blown debate between Keynesians and Moneterists (i am one) and anyway both do not advoate socialism or communsim at all. only the effect and extent of govt intervention and spending. and about full employemnt, aggregate demand and situmaliting the ailing economy, taxation levels, etc. Purely techinical and economical arguments.

more later after hearing a civil and well mannerd reply from you..

and finally, I declare that i am proud to call myself a entrepreuner who tries to create wealth and emplyment and taxes ; and i am happy that i am not a useless parasite who sucks on the wealth created by the society and without any gratitude or common sense blames the very society for all their personal misery, etc.

Sorry friend, i can go on and on ; but this is not the place or time...

Sridhar Narayanan said...

அன்பு தோழர்களே,

இதைப் பற்றிய மேல் விவாதம் செய்ய தடையேதும் இல்லை. ஆனால் தனி மனித தாக்குதல்கள் வேண்டாமே.

மற்றபடி கருத்து பரிமாற்றங்கள் வரவேற்கதக்கவையே.

K.R.அதியமான் said...

Who murdered the financial system?

by Swaminathan S. Anklesaria Aiyar

http://www.swaminomics.org/articles/20081022.htm

Dated: October 22, 2008

Leftists claim that the global financial crisis was caused by reckless
deregulation and greed. Rightists blame half-baked financial
regulations and perverse incentives. Actually, the financial sector is
deeply regulated, with major roles for both the state and markets. It
was not one or the other that failed but the combination.

The best metaphor for the mess comes from Jack and Suzy Welch, who
recall Agatha Christie's "Murder on the Orient Express." In this
novel, 12 people are suspects in a murder. And 12 turn out to be
guilty. What starts as a whodunit concludes as an everybody-dun-it.

In the same spirit, allow me to present the 12 murderers of the US
financial system.

1. The Federal Reserve Board. Alan Greenspan, Fed Governor in
1987-2006, was once hailed as a genius for keeping the US booming, but is now called a serial bubble-maker. He presided over bubbles in
housing, credit, and stock markets. He said it was difficult to identify asset bubbles in advance, so anti-bubble policies might be
anti-growth. It was better to let bubbles build, and sweep up after
they burst. Bernanke, like Greenspan, ignored the US housing bubble
till it burst.

2.US politicians. Envisioning a home for every American, regardless of
income, they provided excess implicit and explicit housing subsidies.
One law forced banks to lend to sub-prime poor borrowers. Legislators
created Fannie Mae and Freddie Mac, government-sponsored entities that
bought or underwrote 80% of all US mortgages, and enjoyed exemption
from normal regulations. Politicians ignored Greenspan's warning that
such a dominant role for two under-regulated giants posed a huge
financial risk.

3.Fannie Mae and Freddie Mac. They resisted regulation, and spent over
$ 2 million lobbying legislators against any tightening of rules. As
mortgagers of last resort they should have been especially prudent.
But they bought stacks of toxic mortgage paper—collateralized debt
obligations (CDOs)—seeking short-term profits that ultimately led to
bankruptcy.

4.Financial innovators. Their ideas provided cheap, easy credit, and
helped stoke the global economic boom of 2003-08. Securitisation of
mortgages provided an avalanche of capital for banks and mortgage
companies to lend afresh. Unfortunately the new instruments were so
complex that not even bankers realized their full risks. CDOs smuggled
BBB mortgages into AAA securities, leaving investors with huge
quantities of down-rated paper when the housing bubble burst.
Financial innovators created Credit Default Swaps (CDSs), which
insured bonds against default. CDS issues swelled to a mind-boggling $
60 trillion. When markets fell and defaults widened, those holding
CDSs faced disaster.

5.Regulators. All major countries had regulators for banking,
insurance and financial/ stock markets. These were asleep at the
wheel. No insurance regulator sought to check the runaway growth of
the CDS market, or impose normal regulatory checks like capital
adequacy. No financial regulator saw or checked the inherent risks in
complex derivatives. Leftists today demand more regulations, but these
will not thwart the next crisis if regulators stay asleep.

6.Banks and mortgage lenders. Instead of keeping mortgages on their
own books, lenders packaged these into securities and sold them. So,
they no longer had incentives to thoroughly check the creditworthiness
of borrowers. Lending norms were constantly eased. Ultimately, banks
were giving loans to people with no verification of income, jobs or
assets. Some banks offered teaser loans—low starting interest rates,
which reset at much higher levels in later years—to lure unsuspecting
borrowers.

7.Investment banks. Once, these institutions provided financial
services such as underwriting, wealth management, and assistance with
IPOs and mergers and acquisition. But more recently they began using
borrowed money—with leverage of up to 30 times—to trade on their own
account. Deservedly, all five top investment banks have disappeared.
Lehman Brothers is bust, Bear Stearns and Merrill Lynch have acquired
by banks, and Morgan Stanley and Goldman Sachs have been converted
into regular banks.

8.Rating agencies. Moody's and Standard and Poor's were not tough or
alert enough to spot the rise in risk as leverage skyrocketed. They
allowed BBB mortgages to be laundered into AAA mortgages through CDOs.

9.The Basle rules for banks. These international negotiated norms
provided harmonized regulatory checks on financial excesses across
countries. The first set of norms, Basle-I, was widely criticized as
too rigid and blunt. So countries agreed on Basle-II, which allowed
banks to use credit ratings and models based on historical record to
lower the risk-ratings of many securities. This dilution of norms led
to excesses everywhere. Iceland's banks went bust holding
loans/securities totaling 10 times its GDP. The dilution of
risk-rating in Basle-II helped inflate the financial bubble.

10.US consumers. Their savings used to be 6% of disposable income some
time ago, but more recently has been zero or even negative. They have
gone on a huge borrowing spree to spend far more than they earn. This
excess is reflected in huge, unsustainable US trade deficits.

11.Asian and OPEC countries. They undervalued their currencies to
stimulate exports and create large trade surpluses with the US. They
accumulated trillions in forex reserves, and put these mostly into
dollar securities. This depressed US interest rates, and further
fuelled borrowing there.

12.Everybody. Consumers, corporations, banks, politicians, the
media--indeed everybody-- was happy when housing prices boomed, stock
markets boomed, and credit became cheap and easily available. Bubbles
in all these areas grew in full public view. They were highlighted by
analysts, but nobody wanted to stop the lovely party. Everybody liked
easy money and rising asset prices. This trumped prudence across
countries.

So, forget the left-versus-right or regulations-versus-markets debate
on the financial crisis. States, institutions, markets and everybody
else was guilty. These actors will for some years don sackcloth and
ashes, adopt stiffer regulations, and listen to lectures on the
virtues of prudence and restraint. But after seven to ten years of the
next business upswing, I predict that we will once again have a new
generation of bubbles, evading whatever new checks have been put in
place. When everybody loves bubbles, they are both irresistible and
inevitable.

http://www.swaminomics.org/

Anonymous said...

This is the greatest topic I read this week!

Anonymous said...

Great writing! Maybe you could do a follow up to this topic..

Margo

Anonymous said...

Good day!This was a really wonderful Topics!
I come from roma, I was luck to search your subject in bing
Also I get a lot in your website really thanks very much i will come every day

Anonymous said...

I just added your blog site to my blogroll, I pray you would give some thought to doing the same.