இல்லாத கதையைப் பற்றிய ஒரு விவாதம் நடந்தால் எப்படி இருக்கும் என்றுதான் இந்த கதையை எழுதத் துவங்கினேன். ரஸவாதம் என்பது எப்பொழுதும் ஒரு மிஸ்டீக்கலான கரு என்பதனால் அதையே மையப் பொருளாக வைத்து எழுத முயற்சித்தேன். நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் எல்லா புனைவு முயற்சிகளுக்கும் மிகுந்த ஊக்கம் அளித்தது போல இதையும் பாராட்டியிருந்தார். நிறைய நண்பர்கள் பாராட்டி எழுதினாலும் கொஞ்சம் சுவாரசியம் கம்மி என்று அபிப்ராயபட்டிருந்தார்கள். எல்லாருடைய வாசிப்பிற்கும், கருத்து பரிமாற்றதிற்கும் மிக்க நன்றி.
-o0O0o-o0O0o-o0O0o--o0O0o-o0O0o-
இணையப் பதிவுகளில் அனுபவங்களையும், விவாதங்களையும், கருத்துகளையும் கடை பரப்புவதைத் தாண்டி செய்தி விமர்சனத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அமெரிக்க தேர்தலைப் பற்றி பாஸ்டன் பாலா ரிப்போர்டிங் செய்யும் விதம் மிகவும் அருமை. வெகுஜன பத்திரிகைகளை விட மிகத் திறமையாக செய்திகளை தொகுத்து பல்வேறு கருத்து பரிமாற்றங்களும் செய்து வருகிறார். அமெரிக்க தேர்தல் பற்றிய நல்ல கருத்து களஞ்சியமாக உருவெடுத்து வருகிறது இந்தத் தளம். வாழ்த்துகள் பாபா.
இதே முறையில் கடந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலின் போது இட்லிவடை தளம் வெகு விரைவாக முடிவுகளை வெளியிட்டு பதிவுகளின் இன்னொரு பரிமானத்தை புரிய வைத்தது. இட்லிவடை தொடங்கி ஐந்து வருடங்கள் ஆகின்றதாம். வாழ்த்துகள் இட்லிவடை.
என்னடா பாபாவிற்கும், இட்லிவடைக்கும் தனித்தனியே வாழ்த்துகள் சொல்கிறானே என்று சிரிக்காதீர்கள். I am an asinner (அப்பாவி).
-o0O0o-o0O0o-o0O0o--o0O0o-o0O0o-
இணையப் பதிவுகளினால் பணம் சம்பாதிக்க முயல்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது ஹிட் கௌண்டர்களை நம்பாமல் வேறு வகையில் தளத்திற்கான ட்ராஃபிக்கை அளவிடுவது. இந்த ஹிட் கௌண்டர்கள் என்பது பெரும்பாலும் யாராவது மூன்றாமவர் எழுதி இணைக்கப்பட்ட இலவச செயலியாகத்தான் இருக்கும். உலாவியை ஒரு முறை ரிப்ரெஷ் செய்ய ஜிவ்வென்று விநாடிக்கு இரண்டு, மூன்று ஹிட் என்று சென்னை ஆட்டோ கணக்கில் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகும். இந்த மாதிரியான இலவச செயலிகளின் நம்பகத்தன்மைக்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. விளம்பரங்கள் தருகிறவர்கள் முதலில் பார்ப்பது உங்கள் தளங்கள் தேடுபொறியில் எந்த ரேங்கில் வருகிறது என்றுதான். 'சினிமா' என்று தேடுபொறியில் தேடினால் முதலில் சிக்கும் பத்து பதினைந்து தளங்களில்தான் சினிமா பற்றிய விளம்பரங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். Meta tag, Keywords, பக்க தலைப்பு போன்றவற்றை சரியான முறையில் பயன்படுத்தி தேடு பொறியில் முன்னனியில் கொண்டு வருவது முக்கியம். யூனிக்கோடு தமிழ் இன்னமும் பக்க தலைப்புகளில் சதுரமாகத்தான் தெரிகிறது. எல்லாவற்றிலும் முக்கியமானது அழகியல் என்று சொல்லப்படும் aesthetic sense. இணைய தளத்தை பார்த்தவுடன் பிடித்துப் போக வேண்டும் என்பது மிக முக்கியம்.
அடுத்தபடியாக உள்ளடக்கம். உங்கள் இணைய பக்கங்களை படிக்க வருபவர்களை இணைய வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் நோக்கோடு உள்ளடக்கம் இருக்க வேண்டும். உதாரணம் சமையல் குறிப்புகள். அந்த தளத்தில் ஹோட்டல்கள், சமையல் புத்தகங்கள், போன் மூலம் ஆர்டர் செய்யும் உணவகங்கள் என்று விளம்பரங்களை ஊக்குவிக்கலாம். புனைவுகளை மட்டும் நம்பியிருப்ப்போர் புத்தக வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். மொத்தத்தில் இணையத்திற்கான எழுத்து ஒரு திட்டத்தோடு இருந்தால் வருவாய் உறுதி. Just blogging is Just an ego trip.
-o0O0o-o0O0o-o0O0o--o0O0o-o0O0o-
ஒரு வழியாக குறித்து வைத்திருந்த படமான Children of Heaven பார்த்துவிட்டேன். 1997-ல் ஒரு கோடி ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில் படமாக்கப்பட்ட படம். தெளிந்த நீரோட்டமான கதை. நூல் பிடித்தாற்ப் போல செல்கிறது. இந்த படத்தை இயக்கிய மஜித் மஜிதிக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாதென்பது உபரி தகவல். இந்த திரைப்படத்தைப் பற்றி நிறைய பதிவுகள் ஏற்கெனவே எழுதப்பட்டு விட்டன. கதையை வேண்டுபவர்களுக்கு விக்கிபீடியாவில் கதையும் இருக்கிறது. திரைப்படத்தின் தொடக்கத்தில் அலி தனது தங்கை சாராவின் (Zahra) காலணிகளை தொலைத்து விடுகிறான். இறுதிவரை அவனால் அவளுக்கு காலணிகள் வாங்கித் தரமுடியவில்லை. அவன் தங்கை சாரா-விற்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல்கள் மூலமாக அவர்களின் உலகத்தைப் பற்றிய புரிதலை நமக்கு தருகிறார் இயக்குநர். தங்கையின் ஷூவை தாந்தான் தொலைத்தது என்று தெரிந்தால் அப்பா கோபப்படுவார் என்பதை விட தங்கைக்கு புது ஷூ வாங்க அப்பா கடன் வாங்குவாரே என்று கவலைப்படுகிறான். தந்தையின் கஷ்டமான நிலை புரிந்து அலியின் ஒரே காலணியை பகிர்ந்து கொள்கிறார்கள். காலை சாரா பள்ளிக்கு அலியின் சற்றே அளவிற்ப் பெரிதான காலணியை அணிந்து கொண்டு போகிறாள். மூன்றாம் வகுப்பு படிக்கும் அலியின் பள்ளி மதியம் துவங்குகிறது. வழியில் அவன் காத்திருக்க சாரா ஓடி வந்து அவனிடம் ஷூக்களை கொடுக்க அவன் பள்ளிக்கு ஓடிச் செல்கிறான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிக்கல். ஒரு நாள் சாரா சாக்கடையை தாண்டி குதிக்கும் போது அந்த அளவில் பெரிதான ஷூ கழன்று சாக்கடையில் விழுந்து விடுகிறது. கடைத்தெருவில் சிலரின் உதவியோடு அதை அவள் மீட்டெடுத்துக் கொண்டு வருகிறாள். காலணியை மாற்றிக் கொண்டு பள்ளி செல்லும் அலி தாமதமாக போய் பிரின்ஸிபாலிடம் மாட்டிக் கொள்கிறான். இப்படியாக ஒரே ஜோடி காலணியோடு இருவரும் பற்ப்பல பிரச்சினைகளை எதிர்கொண்டு மீள்கிறார்கள். சாராவிற்கு அலியின் காலணிகள் பிடிக்கவேயில்லை. சாராவின் தொலைந்து போன காலணியோ வேறு ஒரு கண்ணிழந்த சிகரெட் வியாபாரியின் குழந்தையிடம் போய்ச் சேருகிறது. அந்த பெண்ணும் சாராவின் பள்ளியிலேயே படிக்கிறாள். தனது ஷூக்கள் பறிபோன வேதனையும் கொந்தளிப்பும் கொண்டு அந்தப் குழந்தையை பார்க்கிறாள் சாரா. அலி வகுப்பில் முதலாவதாக வந்ததற்கு பரிசாக கிடைத்த பேனாவை சாராவிற்கு கொடுக்கிறான். பாசத்துடனே அவன் தருகிறான். சாரா அந்தப் பேனாவை தவற விடும்பொழுது அந்த கண்ணில்லாத வியாபாரியின் பெண் அதை கண்டெடுத்து சாராவிடமே சேர்ப்பிக்கின்றாள். இப்படியாக குழந்தைகளின் உலகத்தை மிகவும் யதார்த்தமாக சித்திரித்து கொண்டே போகிறார் மஜிதி.
இறுதியில் அலி ஒரு தீர்வு கண்டுபிடிக்கிறான். நான்கு கிலோமீட்டர்கள் ஓட்டப் பந்தயத்திற்கான அறிவிப்பு வருகிறது. மூன்றாவது பரிசாக ஒரு ஜோடி காலணிகள். இதைக் கண்டவுடன் சாராவிடம் தீர்மானமாக சொல்கிறான் தான் மூன்றாவது பரிசை அவளுக்காக வென்று வருவதாக. போட்டியில கலந்து கொண்டு தீவிரமாக ஓடுகிறான். கணக்காக மூன்றாவது பரிசை வெல்ல வேண்டுமென்று தனக்கு கிடைத்த முதல் நிலையை விட்டுக் கொடுத்து முன்னே இருவரை செல்ல விடுகிறான். ஆனால் அடுத்து வரும் சிறுவன் இவனைத் தள்ளிவிட கீழே விழுந்து எழுந்து உத்வேகத்துடன் ஓடுகிறான். இறுதிக் கோட்டை அடைந்தவுடன் கீழே வீழ்பவனை அவன் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியரும் தலைமையாசிரியரும் தூக்கி கொண்டாடுகிறார்கள். ஆனால் சோகம், அவன் மூன்றாவதாக வரவில்லை. முதல் பரிசை வென்றுவிட்டான். அவனால் தங்கைக்கு காலணிகளை வாங்கித் தரவே முடியவில்லை.
ஆனால் அதற்கு முன்னர் ஒரு வெள்ளிக்கிழமை (இரானின் விடுமுறை நாள்) அலியும் அவன் தந்தையும் நகரத்திற்கு சென்று தோட்ட வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார்கள். அலி ஒரு பணக்கார வீட்டின் சிறுவனோடு பேசி அந்த தோட்ட வேலையைப் பெற காரணியாக இருக்கிறான். அந்தப் பணத்தில் அவன் தந்தை இரு குழந்தைகளுக்கும் புதிய ஷூக்கள் வாங்கிக் கொண்டு வருகிறார். ஆம். அந்த குழந்தைகளுக்கு சொர்க்கம் மீண்டும் கிடைத்துவிடும். ஆனால் அவர்களின் புரிதலும், பகிர்தலுமே ஒரு சொர்க்கமாகத்தானே இருக்கிறது. பலரும் போற்றும் இந்தப் படத்தில் எல்லாம் நேரிடையான காட்சியமைப்புகளே. இறுதிக் காட்சியைத் தவிர எந்தவித சஜெஸ்டிவ் காட்சியமைப்பும் கிடையாது. ஓட்டபந்தயத்தில் ஜெயித்தாலும் தனது திட்டப்படி தோல்வியடைந்துவிட்டதாக மறுகும் அலி கொப்பளித்திருக்கும் தனது பாதங்களை தங்கமீன்கள் நிறைந்திருக்கும் குட்டையில் வைத்துக் கொள்கிறான். அத்தோடு முடித்து விடுகிறார்கள் படத்தை. நம் மனக்கண்ணில் தலைக்கு ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு ஓடும் சாக்ராவும், கண்களில் கண்ணீரோடு பிரின்ஸிபாலிடம் மன்றாடும் அலியும் அப்படியே தங்கிவிடுகிறார்கள். A Simple tale with heavenly children.
16 மறுமொழிகள்:
முன்னமே போட்டதுதான்!
எழுத்தாளர் ஸ்ரீதர் சமூகத்திற்கு, அடியேனின் நமஸ்காரங்கள். இப்பவும் தங்களுக்குப் பரிசு கிடைத்தது பற்றிய தகவல் அறிந்து மிகவும் சந்தோஷமுடையவனானேன். தங்களைப் போன்ற பெரும் எழுத்தாளர்களின் அறிமுகம் பெற தன்யனானேன். தாங்கள் மேலும் மேலும் பெயர் பெற்று விரைவில் பின்னூட்டப் பெட்டியை மூடி வைக்கவும், பதிவர்கள் என்ற ஜந்துக்களை வாய்க்கு வந்தபடி திட்டக்கூடிய அளவு உயரவும் அப்படிச் செய்தாலும் உங்களைக் கடவுள் போல பார்க்கக்கூடிய தொண்டரடிப்பொடிகளைப் பெறும் பாக்கியத்தை அடையவும் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
மீண்டும் நமஸ்காரங்கள்.
வேணும் வேங்கடவன் சகாயம்.
இப்படிக்கு
கொத்ஸ்
Majid Majidiயின் மத்த படங்களும் தேடிப் பிடிச்சு பாருங்க.
இரானியப் படங்கள், பொதுவாவே, நல்ல அமைதியான படங்களா இருக்கு.
கதைப் போட்டியில் வென்றதர்க்கு வாழ்த்த்துக்கள்.
//I am an asinner (அப்பாவி).
//
நீங்க அசின் ரசிகரா? :))
பெங்களூர் மடிவாலா மார்கட்டுல தக்காளி சீப்பா கிடைக்கும். தக்காளி வெச்சு தொக்கு போடலாம், மீந்தா ஜாம் அல்லது பச்சடி பண்ணி இட்லிக்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
ஹிஹி, பின்ன என்ன? இரானிய படம் பத்தி நான் என்னத்த கருத்து சொல்ல? எனக்கு தெரிஞ்சத தான் பின்னூட்ட முடியும்.
இப்படியே போனால் கீரை வகைகள், கத்ரிகாய்னு பின்னூட்டம் இடுவேன் என பகிரங்க மிரட்டல் விடுகிறேன். :))
@கொத்தண்ணா, நம்மூர்காரங்கனு காட்டிடீங்க போங்க. :p
கொத்ஸ் சார்,
எனக்குத் தெரிந்த பெரிய காபி + பேஸ்ட் பார்டி இட்லிவடைதான். நீங்க பின்னூட்டத்தை மாத்தி மாத்தி பேஸ்ட் பண்றதைப் பாத்தா... மைல்டா ஒரு டவுட் வரத்தான் செய்யுது :-)
வாங்க சர்வேசன்! கண்டிப்பா பார்க்கிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
அம்பி அண்ணா,
மாவாட்டுவதில் இருந்து முன்னேறி முன்னேறி பர்சேஸ் டிபார்ட்மெண்ட் வரைக்கும் பிரமோஷன் வாங்கியிருக்கீங்கப் போல.
//@கொத்தண்ணா, நம்மூர்காரங்கனு காட்டிடீங்க போங்க. :p//
அவர் என்ன எழுதினாலும் இதையேத்தான் கமெண்டாப் போடப் போறீங்க. ரெம்பிளேற் பின்னூட்டம் :-))
வாழ்த்துக்கள் ஸ்ரீதர் பரிசுக்கு. இட்லிவடை/பாபா ? நானும் asinner தான். பொதுவாக எந்த நேரங்களில் படம் பார்க்கிறீர்கள்? weekends?
அனுஜன்யா
//பொதுவாக எந்த நேரங்களில் படம் பார்க்கிறீர்கள்? weekends? //
வாங்க அனுஜன்யா,
உங்க வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
படங்கள் பார்ப்பது தற்சமயம் அலுப்பு தருவதே இல்லை. Netflix-ல் ஆன்லைனிலே நிறைய நல்ல படங்கள் தருகிறார்கள். வாரயிறுதி என்றெல்லாம் வைத்துக் கொள்வதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிறேன் :-)
---அமெரிக்க தேர்தல் பற்றிய நல்ல கருத்து களஞ்சியமாக உருவெடுத்து வருகிறது இந்தத் தளம்.---
உங்கள் ஊக்க வார்த்தைக்கு நன்றி ஸ்ரீதர்.
நீங்க வந்து ஐக்கியமாகததுதான் ஒரே குறை :)
வாங்க பாபா,
//நீங்க வந்து ஐக்கியமாகததுதான் ஒரே குறை :)//
நம்ம கேள்விகள்தான் வந்ததே பாபா.
இந்த பின்னூட்டத்தை இட்லிவடைக்கு சொன்ன வாழ்த்துக்கும் பதிலா சேர்த்து எடுத்துக்கலாமா? :-))
//இலவசக்கொத்தனார் said...
முன்னமே போட்டதுதான்!
எழுத்தாளர் ஸ்ரீதர் சமூகத்திற்கு, அடியேனின் நமஸ்காரங்கள். இப்பவும் தங்களுக்குப் பரிசு கிடைத்தது பற்றிய தகவல் அறிந்து மிகவும் சந்தோஷமுடையவனானேன். தங்களைப் போன்ற பெரும் எழுத்தாளர்களின் அறிமுகம் பெற தன்யனானேன். தாங்கள் மேலும் மேலும் பெயர் பெற்று விரைவில் பின்னூட்டப் பெட்டியை மூடி வைக்கவும், பதிவர்கள் என்ற ஜந்துக்களை வாய்க்கு வந்தபடி திட்டக்கூடிய அளவு உயரவும் அப்படிச் செய்தாலும் உங்களைக் கடவுள் போல பார்க்கக்கூடிய தொண்டரடிப்பொடிகளைப் பெறும் பாக்கியத்தை அடையவும் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
மீண்டும் நமஸ்காரங்கள்.
வேணும் வேங்கடவன் சகாயம்.
இப்படிக்கு
கொத்ஸ்//
ரிப்பீட்டே :)
அடியேன் கொத்தனார்தாசன் :)
மறுபடியும் ஒரு தடவை...
வாழ்த்துகள் ஸ்ரீதர்... நீங்க கதை எழுதறதுக்கு முன்னாடியே சேட்ல பேசும் போது பினாத்தலார் சொன்னாரு. உங்க கதை வெற்றி பெற ஸ்கோப் அதிகம்னு. அவர் சொன்ன மாதிரியே நடந்தது சந்தோஷம் :)
ஸ்ரீதர் நாராயணன்
அறிபுனைக் கதை போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ஒரே பத்தியில் சாதாரண "காலணி" களை ஒரு காலனி(colony)யாகவே மாற வைக்கும் திறமை உள்ளவர் நீங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை :)
Congratulations!!!
வாங்க பாலாஜி,
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
பெனாத்தலார்கிட்ட கதை சொல்றேன்னு ரொம்ப தொந்தரவு பண்ணி ஆனா அவர்கிட்ட சொன்ன கதையை பதிவிடவே இல்லை. அப்புறம் அப்படி இப்படி மாத்தி மாத்தி எழுதித்தான் போட்டேன். அவரோட ஊக்குவிப்பிற்கு இப்ப ஒரு ஸ்பெஷல் நன்றி.
இந்தியப் பயனத்தில மிகவும் பிஸியா இருப்பீங்க. உங்களோட அடுத்த பதிவுல சந்திக்கலாம் சீக்கிரமே :-)
வாங்க கயல்,
உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
ஒரு ack.. கிடையாது?? இருக்கட்டும்..இருக்கட்டும்.:)
வாங்க சங்கர்ஜி,
மன்னிக்கவும் :-) நீங்கள் குறிப்பிட்டவுடந்தான் உரைத்தது. ஏதோ ஓரிரெண்டு இடத்தில் என்று நினைத்தால் உத்தரவாதமாக எல்லா இடத்திலும் 'னி' போட்டிருக்கிறேன். உடனே திருத்திவிட்டேன். உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். எப்படியோ தவறி விட்டது.
உங்கள் வருகைக்கும், நினைவூட்டலுக்கும் மீண்டும் ஒரு நன்றி :-))
Post a Comment