December 31, 2008

உறுதியாகச் சொல்கிறேன்

நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கடந்த சில வருடங்களாகவே இணையத்தின் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து தேடி படித்துக் கொண்டிருந்தவன் ஆர்வத்தோடு எழுதவும் தொடங்கியது 2008-ல்தான். பின்னர் சில பல வேலை அழுத்தங்கள் காரணமாக வரைவில் இருக்கும் பதிவுகளை கூட வெளியிடாமல் ‘அப்புறமா பாத்துக்கலாம்’ என்று போட்டு வைத்தாகிவிட்டது. 2009-ல் நிலைமை மாறும் என்று நம்புகிறேன்.

இந்தப் பதிவை தொடங்கியதே புனைவுகள் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வத்தினால்தான். மொத்தம் ஒன்பது சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் என்பதில் ஒரு சின்ன திருப்தி. நிறைய சினிமா பற்றி எழுதியிருக்கிறேன் என்று தெரிகிறது. வரைவில் இருக்கும் ஒரு பத்து இடுகைகள் உட்பட எல்லா இடுகைகளுக்கும் Netflix-தான் ஆகப் பெரிய காரணம். புது வருடத்தில் இன்னமும் நிறைய படங்களை அறிமுகப்படுத்த ஆசை. முடியுமா?

தொழில் சார்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற விழைவு உண்டு. விக்கி பசங்களுக்கு வாக்குறுதி கொடுத்த HTML பற்றிய தமிழ் இடுகைத் தொடர் 2009-ல் சாத்தியமாகுமா? அதற்குள் வேறு யாராவது எழுதிவிடுவார்களோ?

யார் என்ன கிண்டல் அடித்தாலும் விடாமல் தமிழில் கவிதை வடிவத்தை கையகப்படுத்தி ஒரு சில படைப்புகளை வெளியிடும் தனியாத கொலை வெறி இருக்கிறது.

மக்களுக்கு பயனுறும் வகையில் சில இணைய தளங்களை அமைக்கும் ஆர்வம் இருக்கிறது. தற்போது உடல்நலத் துறையில் கண் பதித்திருப்பதால் கூடிய சீக்கிரம் ஒரு சேவை தளத்தை உருவாக்கி காட்ட வேண்டும்.

எப்படி இருந்த நான் இப்படி ‘மிக’ நல்லவனாகி கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் முழுமையான TeeTotellar-ஆக மாறிவிடும் உத்தேசம் இருக்கிறது.

இன்னமும் ட்விட்டரில் விரிவாக தொடர்பு கொள்வது, தொழில்நுட்ப வலைத்தளங்கள் தொடங்குவது, எழுத நினைத்திருக்கும் பரீட்சைகள், தொடர்ந்து செய்ய வேண்டிய உடற்பயிற்சி என்று ஒரு பெரும் பட்டியல் ஓடுகிறது.

New Year's is a harmless annual institution, of no particular use to anybody save as a scapegoat for promiscuous drunks, and friendly calls and humbug resolutions.

- Mark Twain

31 மறுமொழிகள்:

SurveySan said...

///முழுமையான TeeTotellar-ஆக மாறிவிடும் உத்தேசம் இருக்கிறது.
///

yeah right! :)

இராம்/Raam said...

//முழுமையான TeeTotellar-ஆக மாறிவிடும் உத்தேசம் இருக்கிறது.
//

I objected.. :))

Sridhar Narayanan said...

சர்வேசன், இராம்,

ஹிஹி... அதான் மார்க் ட்வைனே சொல்லிட்டாரே உறுதிமொழி எல்லாம் ஹம்பக்-ன்னுட்டு... ஃப்ரீயா விடுங்க. ப்ரீயா விடுங்க :-))

மதுரையம்பதி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.... :)

Sridhar Narayanan said...

வாங்க மௌலி :-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

திகழ்மிளிர் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Sridhar Narayanan said...

வணக்கம் திகழ்மிளிர்!

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :)

அ.மு.செய்யது said...

//
மக்களுக்கு பயனுறும் வகையில் சில இணைய தளங்களை அமைக்கும் ஆர்வம் இருக்கிறது. தற்போது உடல்நலத் துறையில் கண் பதித்திருப்பதால் கூடிய சீக்கிரம் ஒரு சேவை தளத்தை உருவாக்கி காட்ட வேண்டும்.
//

நல்ல முயற்சி !!!!!! ஆரம்பிங்க !!!!!! வாழ்த்துக்கள் !!!!!

Sridhar Narayanan said...

வாங்க செய்யது,

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

thevanmayam said...

உறுதியாத்தான் சொல்றீங்களா????

Sridhar Narayanan said...

//உறுதியாத்தான் சொல்றீங்களா????//

ஹிஹி... எல்லாம் மொத தேதி அப்படித்தானே :-)

அனுஜன்யா said...

ஸ்ரீதர்,

வருடத்தின் முதல் பின்னூட்டம் உங்களுக்குத்தான். ஆமாம், நீங்கள் இன்னும் புது முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், கவிதை (!) உட்பட. யார் யாரோ எழுதுகிறார்கள்! உங்கள் துறை சார்ந்த விஷயங்களை, சுவாரஸ்யமாக சொல்லுங்கள். Smiling on Mark Twain's words. Reminds me of something similar. "Money is like New Year Resolutions - Easily made than kept."

இந்த வருடம் கலக்குங்கள் ஸ்ரீதர்.

அனுஜன்யா

பினாத்தல் சுரேஷ் said...

வாழ்த்துஸ்! 4 ஜனவரிதான் பொதுவான கெடு - உறுதிமொழிகள் மீறப்பட! நீங்க டீய வேணா டோடல் பண்ணுங்க, காபிய வேணா பண்ணுங்க! எழுத நினைக்கறதெல்லாம் எழுதிப்புடுங்க!

பத்மா அர்விந்த் said...

Happy new year to you. Let me know when you start a website in health, possible can be a resource:))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லது ஸ்ரீதர், நல்லாவே கதை எழுதறீங்க; தொடர்ந்து செய்யுங்க. அட, சினிமா பத்திகூட எழுதிக்குங்க. ஏன், டீ டோட்டலராகூட மாறிடுங்க, பிரச்சனையில்ல.

/தமிழில் கவிதை வடிவத்தை கையகப்படுத்தி ஒரு சில படைப்புகளை வெளியிடும் /

புது வருசம் அதுவுமா இப்படி பயமுறுத்தலாமா? :)

Sridhar Narayanan said...

அனுஜன்யா,

வருடத்தின் முதல் பதில் உங்களுக்குதான் :-) மிக்க நன்றி.

துறை சார்ந்த விஷயம் எழுதறதுல பிரச்சினையில்லை. ஆனால் மத்த விஷயங்கள் பத்தி எழுதும்போது சறுக்கினா ‘நான் வித்தகன் (expert) இல்லை’ன்னு சமாளிச்சிடலாம். அதான் தயக்கம் :-))

வாங்க தல,

அது என்ன 4-ம் தேதி கணக்கு? நாங்க நினச்சா 1-ம் தேதியே மீறுவோமே :-)

வாங்க பத்மா,

கண்டிப்பாக. இப்பொழுதுதான் HIMSS பற்றி படிக்க துவங்கியிருக்கின்றேன். கொஞ்சம் வேலை அழுத்தம் குறைந்தவுடன் முயற்சியை முழுவதுமாக துவங்க வேண்டியதுதான். கண்டிப்பாக உங்களை தொடர்பு கொள்கிறேன்.

வாங்க ஜ்யோவ்ராம்,

//புது வருசம் அதுவுமா இப்படி பயமுறுத்தலாமா? :)//

விடறதாயில்லை. கவிதை, அ-கவிதை, எ-கவிதை, எமோ-கவிதை எல்லாம் எழுதிப் பாத்துட வேண்டியதுதான். :-)

venkatramanan said...

ஸ்ரீதர்!
ஒரு விண்ணப்பம், ஒரு தகவல்!
உங்கள் கதைகளை அச்சிட்டு நான் உறுப்பினராயிருக்கும் நூலகத்தில் புத்தகமாகத் தரலாமா(லாபம் அவர்களுக்கு மட்டுமே! எனக்கு நற்பெயர் கிடைக்கும்! அதில் வேண்டுமானால் உங்களுக்கும் பங்கு கொடுத்துடறேன்! ஆனா உங்க இலக்கியம் கவனிக்கப்படும் :-))? சம்மதமா?

& க்ருபா ஷங்கர் கிழக்கிற்காக html குறித்து எழுதிக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

Sridhar Narayanan said...

//உங்கள் கதைகளை அச்சிட்டு //

:-) கட்டற்ற மட்டற்ற இணையத்தில் இதெல்லாம் என்ன அனுமதி கேட்டுகிட்டு... உங்களுக்கு பிடித்திருந்தால் தாராளமாக செய்யுங்கள்.

உங்கள் தொடர் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

HTML பற்றி புத்தகம் தயாராவது தெரியும். அதைச் சொல்லியாவது கொத்தனாரிடமிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறேன். ஹிஹி... இருந்தாலும் நாமும் ஏதாவது எழுதிப்பிட மாட்டோமா என்று ஒரு நப்பாசை ஓரத்தில் ஒட்டியிருக்கிறது. நடக்கும் என்று நம்புகிறேன்.

ச.சங்கர் said...

உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் புத்தாண்டு இனிதே அமைய வாழ்த்துக்கள்

அன்புடன்...ச.சங்கர்

venkatramanan said...
This comment has been removed by a blog administrator.
Sridhar Narayanan said...

venkatramanan said...
ஸ்ரீதர்
மிக்க நன்றி!
சென்னை வந்தால் தொலைபேசுங்கள்(**********)! அப்படியே அந்த நூலகத்திற்கும் கூட்டிப் போகிறேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Sridhar Narayanan said...

சங்கர்ஜி,

புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. :-)

வெங்கிடரமணன்,

கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன். :-)

கோபிநாத் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ;))

கயல்விழி said...

Good luck on your new year resolutions, Happy 2009!

Paper N Pencil said...

Hi Sridhar,

Wish You A Very Happy New Year:-).

"New Year's is a harmless annual institution, of no particular use to anybody save as a scapegoat for promiscuous drunks, and friendly calls and humbug resolutions" ....... How true????? !!!!

But i have seen resolutions do work, sometime....So, as an incorrigle optimist i havent yet given up!!

Interesting to know that you have published short stories!! How do i get hold???

Good write up!

Cheers...Viji

ambi said...

//யார் என்ன கிண்டல் அடித்தாலும் விடாமல் தமிழில் கவிதை வடிவத்தை கையகப்படுத்தி //

கிண்டல் செய்யும் கொத்தனாரை வன்மையாக கண்டிக்கிறேன். :))

இப்படிக்கு
இன்னொரு (ஹைக்கூ)கவிஜன்

டீ டோட்டலரா மாறுவது இருக்கட்டும், இப்ப என்ன சேட்டைகள் எல்லாம் பண்றீங்க?னு ஒரு பதிவு போடுங்க பாப்போம். :p

Sridhar Narayanan said...

கோபிநாத் அண்ணா,

வணக்கம். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

கயல்விழிக்கா,

உங்கள் ஊக்கபடுத்தலுக்கு மிக்க நன்றிக்காவ்.

வாங்க விஜி,

புது வருட வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

புது வருடத்தில் தீர்மானங்கள் இயற்றுவதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது என்றாலும், ஏதோ ஒரு நாளில் சில முடிவுகளை எடுத்து எழுதி வைத்துக் கொள்வது பின்னர் அதுபடி நடத்தியிருக்கிறோமா என்று ஒப்பு நோக்க வசதியாக இருக்கும் இல்லையா? :-)

சில சமயம் சில தீர்மானங்கள் நன்றாகவே செயல்படுத்தியிருக்கிறேன். :-) Note the point 'சில சமயம்’ :-))

என்னோட சிறுகதைகளை இந்த வலைத்தளத்திலேயே பார்க்கலாமே. பதிவிலேயே தொடுப்பு கொடுத்திருக்கிறேனே. உங்களுக்காக இங்கே சொடுக்கிப் பாருங்கள் :-)

அம்பி ஹைக்கு கவுஜரே,

நீர்தான் உண்மையான கவிஞன். பின்னே நாமளே ‘ம்காகவி’, ‘கவிப்பேரரசு’ன்னு பட்டம் போட்டுக்கிட்டாத்தானே நாலு பேர் அதை வழிமொழிவாங்க. நல்லா இருங்க. :-)

சேட்டை? நானா? அய்யோடா.. இந்தப் புள்ளயப் பாரேன். என்னாமா கேள்வி கேக்குது :-)

ambi said...

//இந்தப் புள்ளயப் பாரேன். என்னாமா கேள்வி கேக்குது//

இந்த பொதிகை எதிரொலிக்கு பதில் சொல்ற ஆசாமி மாதிரி நழுவப்படாது. :p

பதில், பதில் சொல்லுங்க. :))

ambi said...

//இந்தப் புள்ளயப் பாரேன். என்னாமா கேள்வி கேக்குது//

இந்த 'பொதிகை' எதிரொலிக்கு பதில் சொல்ற ஆசாமி மாதிரி நழுவப்படாது.

பதில், பதில் சொல்லுங்க. :))

ஜாஃபர் said...

என்ன சார் 2009ல வருவேன்னு சொன்னீங்க.. இன்னமும் ஆளையே காணோம்.

என் மனமார்ந்த மற்றும் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

ambi said...

//என்ன சார் 2009ல வருவேன்னு சொன்னீங்க.. //

அவரு ரஜினி மாதிரி. :))

2009ல வருவேன்ன்னு தான் சொல்லி இருக்காரு.

2009 டிசம்பர்ல கூட அடுத்த பதிவு போடுவாரு. :))