வாடிக்கையாளர் சேவை பிரிவில் அந்தப் பெண் உற்சாகமாக கையசைத்தாள். பார்பி பொம்மை போல் ஒரு தோற்றம். 'ப்ளீஸ்... உங்களூக்கு எப்படி உதவி செய்வது?' என்றாள். 'ஹி..ஹி... பாருங்கள்... இதை வாங்கி ஒரு வாரம் ஆகின்றது. ஆனால் காதில் செருகினால் வலி ஏற்படுகிறது. வேறு ஏதாவது மாற்றிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்' 'ஓ... ' என்றவள் நான் கொடுத்த ப்ளூடூத் காதணியை பார்த்தாள். செல்போனை காதில் வைத்து பேசுவதின் அபாயத்தைக் குறைக்க பயன்படும் கம்பியில்லா சாதனம். காதோடு மாட்டிக்கொண்டு காற்றோடு பேசுவது போல் பேசலாம். பொதுவாக இது மாதிரி வாங்கிய பொருளை மாற்றவோ / திரும்பி கொடுக்கவோ சென்றால் இந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் அதிகம் கேள்வி கேட்க மாட்டார்கள். 'ஹ்ம்ம்.... கொஞ்சம் உங்கள் வலது காதை காட்டுங்கள்' 'ஆங்... என்னது? எதற்கு?' 'இந்த சாதனத்தில் ஏதும் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. உங்கள் காதையும் பார்த்துவிடுவோம். அதில் பிரச்சினை இருப்பின் நீங்கள் எந்த தயாரிப்பை வாங்கினாலும் உங்கள் காதுக்கு பொருந்தாது' என்று சிரித்தாள். அந்தக் கன்னத்தின் அழகான குழிகளும் சிரித்தன. 'எனக்கு காதை காண்பிக்க வேண்டுமென்றால் நான் மருத்துவரிடம் செல்வேன் மிஸ்.. மிஸ்... ' அவள் பெயர்ப் பலகையை கொஞ்சம் மெதுவாகப் படித்தேன். 'மிஸ். லிஸி. நீங்கள் இந்தப் பொருளை திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள்.' கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னேன். அவள் சுவாதீனமாக தன் குளிர்விரல்களால் என் மோவாயை திருப்பி நான் எதிர்பார்க்காத பொழுது ஒரு குறடு மாதிரியான சாதனத்தை காதில் விட்டு ஒரு திருப்பு திருப்பிவிட்டாள். 'ஆ.... ஓவ்! நீ என்ன டாக்டரா...? நீ பாட்டுக்கு காதுல விட்டு குடையுற' என்று நான் குரலை உயர்த்தி கத்தியதை பொருட்படுத்தாமல் அவள் வசீகரமாக முறுவலித்துக் கொண்டே 'இப்பொழுது போட்டுப் பாருங்கள். எல்லாம் சரியாக இருக்கும்.' என்றாள். உண்மைதான். ஏதோ ஒரு மாற்றம் இருக்கத்தான் செய்கிறது. பச்சக் என்று ஒட்டிக் கொண்டது. ஆச்சர்யம் என்னவென்றால், இவ்வளவு கத்து கத்துகிறேன், பக்கத்து கவுண்டரில் இருக்கிறவர்கள் அசைந்தபாடில்லை. பின்னால் க்யூவில் இருந்த மனிதர்களும் 'தேமே'வென்று நின்று கொண்டிருக்கிறார்கள். 'சந்தோஷம்தானே? பயப்படாதீர்கள். இந்த மாதிரி சேவைகள் வெகுசிலருக்கு மட்டுமே செய்வோம்.' 'எந்த மாதிரி சேவைகள்? யார் யாருக்கு செய்வீர்கள்? ' புரியாத மாதிரி கேட்டேன். 'இது பூமி 2.0 சேவைகள். தற்போது உங்களைப் போன்ற வெகு சிலரே இந்த மேம்படுத்தப் பட்ட சேவைகள் பெறுகிறீர்கள்.' என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டிக் கொண்டே, 'உங்களுக்குத்தான் இதில் எல்லாம் ஆர்வம் அதிகம் உண்டே. நிறைய கோக்குமாக்கான கதைகள் எழுதுகிறீர்களே' |
July 30, 2008
ஆண்டிரமீடா ஆதி மனிதர்கள்
July 28, 2008
சுப்ரமணியபுரம் சொல்லும் கதைகள்
நமது பிராந்திய மொழிகளில் எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் பொதுவான ஒரு அம்சமாக எனக்குத் தெரிவது இவை எந்த மொழிக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு இருக்கும். இப்படி எடுப்பது ஒரு பாணி. அந்தந்த மொழிக்கு தேவையான 'skin'ஐ மட்டும் மாற்றிவிட்டால் அது தெலுங்குப் படமா, தமிழ்ப் படமா என்று வித்தியாசம் தெரியாது. தமிழ் சினிமாவின் நிகழ்கால சுனாமியான ஜே.கே.ரித்தீஷ் கூட தமிழ் தெலுங்கு என்று இருமொழிகளிலும் தயாராகும் ஒரு படத்தில் நடிப்பதாக கேள்வி. அன்னாரின் கலைத்தாகம் விரைவில் சாந்தி அடைவதாக :-).
இப்படியாக இல்லாமல் ஆழமாக சூழலை பிரதிபலிக்கும் படங்களில் ஒன்று சுப்ரமணியபுரம். நான் படித்த கல்லூரி சுப்ரமணியபுரத்தில் இருக்கும் மதுரைக் கல்லூரிதான்.
1980களில் நடக்கும் ஒரு கதை. இம்மாதிரி பீரியட் படங்களின் பெரிய சவால் அந்த சூழலை நீங்கள் எப்படி திரையில் கொண்டு வருகிறீர்கள் என்பது. அதிக செலவில்லாமல் அதை நுணுக்கமாகவே கொண்டு வந்திருக்கிறார்கள்.
சுப்ரமணியபுரம் சொல்லும் கதைகள் சில:
இப்படியாக இல்லாமல் ஆழமாக சூழலை பிரதிபலிக்கும் படங்களில் ஒன்று சுப்ரமணியபுரம். நான் படித்த கல்லூரி சுப்ரமணியபுரத்தில் இருக்கும் மதுரைக் கல்லூரிதான்.
1980களில் நடக்கும் ஒரு கதை. இம்மாதிரி பீரியட் படங்களின் பெரிய சவால் அந்த சூழலை நீங்கள் எப்படி திரையில் கொண்டு வருகிறீர்கள் என்பது. அதிக செலவில்லாமல் அதை நுணுக்கமாகவே கொண்டு வந்திருக்கிறார்கள்.
சுப்ரமணியபுரம் சொல்லும் கதைகள் சில:
July 24, 2008
அபர்ணா சென் - 15 Park Avenue
அபர்ணா சென் எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்பட இயக்குநர். எனக்கு எளிமையான திரைப்படங்களில் ஈடுபாடு நிறையவே உண்டு. இந்தப் படங்கள் ஒரு புத்தகம் படிக்கும் உணர்வை தருகின்றன என்பது எனது எண்ணம்.
திரைப்படம் என்பது ஒரு புனைவுலகம் என்றாலும் அதில் நம்மை அடையாளப் படுத்திக் கொள்வதில்தான் அந்த திரைப்படத்தின் வெற்றி இருக்கிறது. 3 வருடங்களுக்கு முன்னர் வந்த படம் தான் 15, Park Avenue. கதையை விரிவாக விக்கிபீடியாவில் பார்த்துக் கொள்ளலாம்.
திரைப்படம் என்பது ஒரு புனைவுலகம் என்றாலும் அதில் நம்மை அடையாளப் படுத்திக் கொள்வதில்தான் அந்த திரைப்படத்தின் வெற்றி இருக்கிறது. 3 வருடங்களுக்கு முன்னர் வந்த படம் தான் 15, Park Avenue. கதையை விரிவாக விக்கிபீடியாவில் பார்த்துக் கொள்ளலாம்.
வகைகள்:
15 பார்க் அவென்யூ,
அபர்ணா சென்,
சினிமா,
தமிழ்
மீண்டும் ஒரு காதல் கதை!
| தானியங்கி கதைசொல்லி சேவை |
"கதை எழுதுவது எவ்வளவு சுலபம் பாருங்கள். மிகவும் இலகுவான வேலை. எங்கள் சேவை தளத்தில் பதிந்து கொள்ளுங்கள். நீங்கள் வெறும் குறிப்புகளை மட்டும் கொடுத்தால் போதும். முழுக் கதையையும் நிமிடங்களில் தயார். எழுத்தாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். " "இந்த தானியங்கி கதை சொல்லியின் மூலம் நீங்கள் எவ்வளவு பெரிய புதினம் கூட எழுதலாம். 'போரும் அமைதியும்' போன்ற படைப்பை வெகு எளிதாக, விரைவாக உருவாக்க முடியும். " இப்பொழுதுதான் சுரேஷ் அந்த கேள்வியை எழுப்பினான். "இந்த சேவை தளத்தின் முக்கிய அம்சமாக சொல்லப்படுவது, இந்தக் கதைகள் மனித வாழ்க்கையை உண்மையாக பிரதிபலிக்கிறது என்பதுதான். ஒரு தானியங்கி நிரலியால் எந்த அளவிற்கு உண்மையை கதைகளில் கொண்டு வர முடியும்? இது எப்படி சாத்தியமாகும்?"" அந்த கதைசொல்லி தள நிர்வாகிகள் அதற்கு பதில் சொல்கிறார்கள் 'நல்லதொரு கேள்வி. எங்கள் விரிவான ஆராய்ச்சியில் நாங்கள் நிறைய மனிதர்களைப் பற்றிய தகவல்களை தொகுத்து வைத்திருக்கோம். அவர்கள் வாழ்க்கையின் முழுப் பிரதியே எங்களிடம் இருக்கிறது. ஏகப்பட்ட தகவல்கள் கோர்க்கப்பட்டு பல்வேறு கோணங்களில் அலசப்பட்டு உங்கள் கதைகளுக்கு ஏற்ப தயாராக இருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கதைக் கருவை மட்டுமே உருவாக்க வேண்டியது. மற்ற எல்லாவற்றையும் இந்தக் கதைசொல்லிப் பார்த்துக் கொள்ளும்.' 'நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை கதைக்குள் கொண்டு வருவதில் உள்ள உளவியல் சிக்கல்களை நீங்கள் ஆராய்ந்தீர்களா? இதற்கு சம்பந்தப்பட்ட மனிதர்களின் ஒப்புதல் பெறப்பட்டதா?' சுரேஷ் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தான். |
வகைகள்:
அறிவியல் புனைவு,
சிறில் அலெக்ஸ் போட்டி,
சிறுகதை,
சிறுகதை போட்டி,
யமுனா
July 21, 2008
சாயா சந்திரனின் பதிவுகள் சில...
சாயா சந்திரனின் பதிவுகள் சில உங்கள் பார்வைக்கு:
வகைகள்:
அறிவியல் புனைவு,
சாயா,
சிறில் அலெக்ஸ் போட்டி,
சிறுகதை,
சிறுகதை போட்டி
July 18, 2008
கடவுளும் கந்தசாமியும்
கந்தசாமி முதன்முதலில் அந்த இடத்தைப் பார்க்கின்றார். எங்கும் ஒரு சுகந்த நறுமணம். பளிச்சென்று துடைத்து வைத்தார்ப் போல சுற்றுபுறம் தெளிவாக இருக்கிறது. நிறைய நடமாட்டங்களோடு, ஆனால் ஆரவாரம் இல்லாமல் இருக்கிறது. யாரும் பரபரப்போ, வேகமோ இல்லாமல் நேரத்தை நிறுத்தி வைத்த மாதிரி அமைதியாக இருக்கிறார்கள்.
அட அந்தப் பெரும் வலி என்னதான் ஆனது? இப்பொழுது என்னவோ எடைகுறைந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அருகே ஒரு குரல்.
அட அந்தப் பெரும் வலி என்னதான் ஆனது? இப்பொழுது என்னவோ எடைகுறைந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அருகே ஒரு குரல்.
July 12, 2008
GodFather: இது ஒரு **ப் படம்
சமீபமாக Netflix-ன் தயவில் வாரம் 2-3 படங்கள் பார்க்கும் வாய்ப்பு. இதையே சாக்காக வைத்து 'வாரம் ஒரு திரைப்படம்' அப்படின்னு ஏதாவது மொக்கை போடலாம்னு நினைச்சப்போ (ஆசை யாரை விட்டது!) முதலில் தோன்றியது Godfather படம்தான். மூன்று பகுதிகளையும் தொடர்ச்சியாக பார்த்து முடித்தேன். முன்னமே பார்த்திருந்தாலும் இப்படி ஒன்றாக சேர்த்து பார்ப்பது இதுவே முதன் முறை. அது ஒரு சிறந்த அனுபவம். இந்தப் படத்தின் பாதிப்பு இருக்கும் என்று நான் நினைக்கும் படங்களின் பட்டியலை வைத்து ஒரு முனைவர் பட்டமே ஆய்வு செய்யலாம். அத்தனைப் படங்கள் நினைவுக்கு வந்து போகின்றன. நாயகன், தேவர் மகன், குரு என்று ஆரம்பித்து சமீபத்தில் வந்த பட்டியல், புதுப் பேட்டை வரை - அது என்ன சொல்வார்கள் - இண்ஸ்பிரேஷன் - ஹாங்... அதேதான்.
July 11, 2008
வெடிப்பு
என்னாது? வெடிக்கப் போறாங்களா?
ஆமாம்! எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். புதுசா கேக்குற?
எங்க?
இப்படிக்கா போவனும். தொலைவுல... நான் அங்கிட்டுதான் போயிட்டிருக்கேன். வாரதுன்னா, சுருக்க வா.
ஆமாம்! எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். புதுசா கேக்குற?
எங்க?
இப்படிக்கா போவனும். தொலைவுல... நான் அங்கிட்டுதான் போயிட்டிருக்கேன். வாரதுன்னா, சுருக்க வா.
வகைகள்:
Big Bang,
சின்னஞ்சிறுகதை,
சிறுகதை
முதல் வணக்கம்
ஆமாம். எல்லாம் தயார் பண்ணி எழுதலாம்னு தொடங்கியாச்சு.
இந்த எழுத்து நமக்கு பிடித்த வேலைதான். ஆனா எழுதறதுக்கு ரொம்ப மெனக்கெடனும். ஆனா படிக்கிறது அப்படி இல்லை. நிறைய நிறைய படித்துக் கொண்டே இருக்கலாம். இதுல நாம என்ன புதுசா எழுதறது... அப்படிங்கிற தயக்கம் நிறையவே இருந்தது. இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த எழுத்து நமக்கு பிடித்த வேலைதான். ஆனா எழுதறதுக்கு ரொம்ப மெனக்கெடனும். ஆனா படிக்கிறது அப்படி இல்லை. நிறைய நிறைய படித்துக் கொண்டே இருக்கலாம். இதுல நாம என்ன புதுசா எழுதறது... அப்படிங்கிற தயக்கம் நிறையவே இருந்தது. இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.
Subscribe to:
Posts (Atom)