September 30, 2008
அமெரிக்கா - சிதறிய குமிழியும், நொறுங்கிய நம்பிக்கையும்
நான் பொருளாதார மாணவனில்லை. ஆனால் பொருளாதாரம்தான் வாழ்வாதாரமாகிவிட்டபடியால் அதனை தொடர்ந்து அவதானித்து வந்து கொண்டிருக்கிறேன். பொதுவாக இம்மாதிரி விசயங்களில் நிறைய கேள்விகள் வைத்துக் கொண்டு அறிஞர்களைத் தேடிக் கொண்டிருப்பதுதான் வழக்கம். இம்முறை தேடலில் சிக்கிய சில விசயங்களை ஒரு பதிவாக தொகுத்தால் நல்லது என்று தோன்றியது. தொடர்ந்து நடக்கப் போகும் நிகழ்வுகளோடு எனது பார்வையும் ஒப்புநோக்க ஒரு வசதியாக இங்கே பதிகிறேன்.
வகைகள்:
credit rating,
அமெரிக்கா,
குமிழி,
நிதி நிலைமை
September 28, 2008
நேரத்தின் வரலாறும், புதிர்பிரதேசமும், கவுண்டமணியும்
மனித இனத்தின் மகத்தான அறிவியலாளர்களாக சொல்லப்படுபவர்கள் மூன்று பேர். கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன். நமது காலகட்டத்தில் இவர்களுக்கு இணையான ஒரு அறிவியலாளராக சொல்லப்படுபவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். உடல் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஹாக்கிங் தற்போது வாழ்வதும் பேசுவதும் தொழில்நுட்ப சாதனங்களின் மூலமாகத்தான். இருபத்தியோரு வயதில் 'இன்னமும் 2-3 வருடங்களே வாழ்நாள் என்று கணிக்கப்பட்டவர் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியலுக்கு அரிய பங்காற்றி வருகிறார். ஹாக்கிங் எழுதிய புத்தகம்தான் 'நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு' (A brief history of Time)..
September 24, 2008
அலெக்ஸா வரிசைப்படுத்துதலும், பிரபஞ்ச சக்தியும், ஆமீர்கானும்
ஆரக்கிள் நிறுவனம் தன்னுடைய OpenWorld சந்திப்பை இந்த வருடம் சான் பிரான்ஸிஸ்கோவில் நடத்துகிறது. நீங்கள் ஒரு பிரபல பதிவரா, அப்படியென்றால் சகாயவிலையில் கான்பிரண்ஸ் பாஸ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார்கள். பல்வேறு தளங்களில் எல்லாரும் வளைத்து வளைத்து எழுதும் இத்தனை பதிவுகளை எப்படி வரிசைப்படுத்தி பிரபலமானதை கண்டுபிடிக்கிறார்கள் என்று ஆராய்ந்ததில் சில பல புதிய விசயங்கள் தெரிந்தன.
வகைகள்:
Alexa ranking,
Angels / Demons,
CERN,
LHC,
ஆமீர்கான்,
டான் பிரௌன்,
தாரே ஜமீன் பர்
September 22, 2008
ஒருபக்கம்: எல்லா எழுத்தும் எழுத்தல்ல
சமீபத்தில் ஒரு நண்பருடன் விவாதித்துக் கொண்டிருக்கையில் எழுத்தை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு கேள்வி எழுந்தது. 'எழுத்திற்கு ஒரு அறம் தேவை' என்று வாதிட்டார் நண்பர். அந்த அறம் என்ன என்று விவாதிக்க புகுந்த போது, 'நீங்கள் எழுத்தை ஒழுக்கம் சார்ந்து அணுகுகிறீர்கள்' என்றும் சொன்னார். அறமும், ஒழுக்கமும் எந்தப் புள்ளியில் பிரிகிறது என்ற ஒரு குழப்பம் எழுகிறது. என்னைப் பொறுத்தவரையில் நேர்மையான எழுத்திற்கு எனது ஓட்டு எப்பொழுதும் உண்டு.
வகைகள்:
elevator talk,
victor/victoria,
எழுத்தாளர்,
எழுத்து,
சினிமா,
சிறு உரையாடல்
September 18, 2008
ஒருபக்கம்: இட்லிவடை, சீன திரைப்படம் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள்
பதிவு எழுதத் தொடங்கிய இந்தச் சிறு காலகட்டத்தில், சில பதிவர்களுடன் நேரிலும், சாட்டிலும் அளவளாவும் வாய்ப்புகள் அமைந்தது. எல்லா பதிவர்களுடனும் பேசியதில் பொதுவான ஒரு சப்ஜெக்டாக இருந்தது 'யார் இந்த இட்லிவடை?'. இந்த வாரம் ட்விட்டரிலும் சிலர் இதைப் பேசிக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாது. இட்லிவடையேக் கூட இந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டு 'இவரா', 'அவரா' என்று கும்மியடித்துக் கொண்டிருக்கலாம்.
வகைகள்:
lust caution,
இட்லிவடை,
ஒருபக்கம்,
சினிமா,
சீன திரைப்படம்,
ரியாலிட்டி ஷோ
September 17, 2008
சவரம் செய்த முகம்
தாத்தாவிற்கு நல்ல கருகருவென முடியிருக்கும். அந்த வயதிற்கு நரைமுடியைத் தேடித்தான் பிடிக்க வேண்டும். பக்கவாட்டிலும், பின்னாலும் ஒட்ட வெட்டியிருக்க, மேல் மண்டையில் வகிடு எடுத்து இரண்டு பக்கமும் தள்ளிவிட்டாற்ப் போல சற்றே சரிந்து அழகாக சிகை அலங்காரம் செய்திருப்பார். அவர் பாப்பாவை தூக்கிக் கொண்டு தெருவில் நடந்து போகும்போது தலையில் தேங்காய் எண்ணெய் வாசத்தோடு கலந்து ஒரு நறுமனம் பாப்பாவின் நாசியில் சுற்ற, கைகளைக் கட்டிக்கொண்டு உதட்டை 'ப்'என மூடிக்கொண்டு போவாள்.
September 11, 2008
தொடர்ச்சியாக - ஞாநி, ஜெமோ மற்றும் பல
குமுதம் வெப் டீவிக்காக ஞாநி எடுக்கும் பேட்டிகள் சிலவற்றை தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். இதில் கவர்ந்த அம்சம் என்னவென்றால், பேட்டி கொடுக்கிறவர்களுக்கு பேட்டி எடுப்பது ஞாநி என்று உணர்வு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் ஞாநி ஏனோ மேலோட்டமாகவே பேட்டிகள் எடுத்தமாதிரி இருந்தது. அமீர், பாலகுமாரன் பேட்டிகள் விதிவிலக்கு. அமீருக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லை. 'வன்முறை அதிகம் இருக்குதுன்னா, அப்புறம் ஏன் ஜெர்மனியில அவார்ட் கொடுத்தாங்க' என்ற மனநிலையில் இருந்தார். பருத்திவீரன் நுணுக்கமாக எடுக்கப் பட்ட திரைப்படம் என்பதை மறுப்பதற்கேதுமில்லை. ஆனால் ஒரு படைப்பாளி விமர்சகரை எதிர்கொள்ளும் நிலைகள் அவருக்கு புரியவில்லை.
September 8, 2008
தொடர்ச்சியாக - சரோஜா முதல் சாருவரை
சரோஜா - வெங்கட் பிரபுவின் இரண்டாவது படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியான இயக்குநர்கள் பலர் இரண்டாவது படத்தில் சறுக்கியிருக்கிறார்கள். விதிவிலக்குகள் வெகு சிலர்தான். வெங்கட் பிரபு தப்பித்துவிட்டார். ஒரு புத்துணர்ச்சி படம் முழுவதும் விரவி இருக்கிறது. ஃபார்முலா கதை, க்ளிஷேக்கள் போன்றவற்றை கவனமாக தவிர்த்துவிட்டு படத்தை வெகு திறமையாக இயக்கியிருக்கிறார்.
வகைகள்:
குன்னக்குடி வைத்தியநாதன்,
சரோஜா,
சாரு,
தொடர்ச்சியாக,
பாலு மகேந்திரா
Subscribe to:
Posts (Atom)