October 31, 2008

ஒரு முத்தத்தைத் தொடர்ந்து...

திடுமென்று அந்தக் காட்சி உறைத்தது. பக்கத்தில் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கைகளை மாலை போல் போட்டுக் கொண்டு அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். வெகு சுதந்திரமாக லஜ்ஜையில்லாமல் அவர்கள் இருவரும் மோன நிலையில் இருக்க, அறைக்குள் வந்து ராஜ்குமாருக்கும், கார்த்திக்கும் சமிக்ஞை செய்தேன். மூவருமாக மாறிமாறி அந்தக் காட்சியை பாத்ரூம் ஜன்னல் சதுரத்தில் வழியே எட்டிப் பார்க்க, ராஜ்குமார் அந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கிவிட்டான்...

October 22, 2008

குழந்தைக் கதைகள் - 1

நீங்கள் சிறு வயதில் கேட்ட, பகிர்ந்த, மகிழ்ந்த கதைகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எனது ஒன்றரை வயது மகனின் கதை கேட்கும் ஆசைக்காக நான் தேடியபோது எனது நினைவலைகளில் சிக்கி மீண்ட சில கதைகளை இங்கே பதிவு செய்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில கதைகள் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் முழுவதுமாக நினைவில் அப்படியே நிற்கின்றன.

October 20, 2008

Proof of the Pudding

புட்டிங்-ஐ (Pudding) சாப்பிடுவதுதான் அதனுடைய நிரூபனம் (வெற்றி) என்று சொல்வார்கள். சிறில் அலெக்ஸ் ஒரு அறிபுனை சிறுகதைப் போட்டி அறிவித்த போது பதிவுலகில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்க முன்வந்தனர். எழுத்தாளர் ஜெயமோகன் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்வார் என்றுசொன்னது ஒரு பெரிய உந்துதல்.

October 12, 2008

சினிமாவோடு சில நினைவுகள் - Meme

சினிமா அனுபவங்களைப் பற்றி நாகார்ஜுனன் பதிவு செய்ய இகாரஸ் பிரகாஷ் மீம்-ஆக தொடர பரத் என்னையும் தொடருங்கள் என்று அழைத்திருக்கிறார். இதோ...

October 11, 2008

மந்தையாட்டுக் கலாச்சாரம்

நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் மிகவும் தீவிரமாக இந்தியாவில் அமல்படுத்தப் பட்டிருக்கும் புகைத்தடை சட்டம் பற்றி தொடர் பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் :). அதில் ஒரு பதிவில் நண்பர் வளர்மதி மந்தையாட்டு கலாச்சார நோய்க்குறி பற்றி குறிப்பிட அது சில நினைவுகளை கிளறி விட்டது.

October 4, 2008

கடவுளின் பத்து கட்டளைகள்

இந்த வாரம் Netflix-ல் Ten Commandments அனிமேஷன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இது பைபிளின் (பழைய ஏற்பாடு) அடிப்படையாக கொண்ட கதை. உயர்தர அனிமேஷன். ஆபிரகாமிய மதங்களின் இறைதூதர்களில் மிகவும் அடக்கமானவர் மோசஸ் என்னும் மூசா.