மேலும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போலிசார், ராணுவம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் எல்லாரும் வெற்றி பெற்று மும்பை மாநகரம் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்தனைகள்.
November 27, 2008
மரத்துப் போய்விட்ட மனது
மும்பையில் தொடரும் தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி.
மேலும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போலிசார், ராணுவம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் எல்லாரும் வெற்றி பெற்று மும்பை மாநகரம் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்தனைகள்.
மேலும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போலிசார், ராணுவம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் எல்லாரும் வெற்றி பெற்று மும்பை மாநகரம் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்தனைகள்.
வகைகள்:
இந்தியா,
இறையாண்மை,
செப்டம்பர் 9/11,
தீவிரவாதம்,
மும்பை
November 26, 2008
7 திரைப்படங்கள்
அவ்வப்போது ஏதாவது ஒரு திரைப்படத்தை பின்னிரவில் பார்ப்பது சமீபத்திய வழக்கமாகி விட்டது. இந்த genre என்று இல்லாமல் ஏற்கெனவே பார்த்தவர்களின் சிபாரிசை மட்டும் வைத்துக் கொண்டு படங்களை தேடிப் பிடித்து பார்த்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில் பார்த்த ஏழு படங்களைப் பற்றி குட்டி விமர்சனங்கள். மற்ற தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.
வகைகள்:
aamir,
Indiana Jones,
Mira Nair,
The Lives of Others,
சினிமா,
பட்டியல்,
பார்த்ததில் பிடித்தது
November 9, 2008
முட்டாள் பெட்டி
'நீங்கள் ரெகுலராக டிவி பார்ப்பவரா?'
'ஆமாம்'.
'டிவியில் உங்களுக்கு பிடித்தது என்ன?'
'டிவியை அணைக்கும் சுவிட்ச்தான்'
மிகப் பழைய ஜோக். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வருகிறேன். அதற்கு முன்னால் வாராந்திர விடுமுறையானாலும், இல்லை விநாயகர் பிறந்த விடுமுறை தினமானாலும், டிவியின் முன்னால் அசையாத உருளைகிழங்கு போல் இருந்தவன்தான். வாஸ்து பிரகாரம் டிவியை தென்மேற்கு மூலையில் வைக்காதீர்கள், அப்புறம் சொர்க்கம் தொடர் சீக்கிரம் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு டிவியின் ஆதிக்கம் பெருக ஒருவித ஒவ்வாமை வந்துவிட்டது. கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தவுடன் ஏதோ நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு டிவியே வாங்காமல் தவிர்த்து வருகிறேன். அதனால் நேரம் மிச்சம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் அதிக நேரம் வலை மேய்வதற்கும், நினைத்த திரைப்படங்களை பார்ப்பதற்கும் மிகவும் வசதியாக இருக்கிறது.

different strokes,
who is the boss,
டிவி,
முட்டாள் பெட்டி
கதைகளுக்கான கதை
புதிதாக தலைமை பொறுபேற்றுக் கொண்ட அதிகாரி பெரும் உத்வேகத்தோடு தனது அலுவலகம் வருகிறார். அங்கே எல்லாரும் சுறுசுறுப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்க சுவரோரமாக ஒருவன் மட்டும் விச்ராந்தியாக நின்று கொண்டிருக்கிறான். வேலை எதுவும் செய்யாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் அவனைப் பார்த்தவுடன் தலைமை அதிகாரியின் இரத்த அழுத்தம் எகிறுகிறது. நேராக அவனிடம் போய் அடிக்குரலில் 'உனது மாதச் சம்பளம் எவ்வளவு? என்கிறார். 'ஐந்தாயிரம் ரூபாய்' என்கிறான். உடனே தனது காரியதரிசியைப் பார்த்து 'இவனுக்கு இரண்டு மாத சம்பளத்தைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள்' என்று சொல்லிவிட்டு எல்லாரையும் அர்த்தபுஷ்டியோடு பார்த்துவிட்டு சென்று விடுகிறார். காரியதரிசி அவன் கையில் பத்தாயிரம் ரூபாயை கொடுத்து விட்டு அனுதாபமாக 'இனிமேல் என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்கிறார். 'ஆபிசிற்கு திரும்ப வேண்டியதுதான். நான் கூரியர் டெலிவரி செய்ய வந்தவன்' என்கிறான் அவன்.
இந்த மாதிரிதான் நான் ஒன்றை நினைத்து எழுத வேறு ஒன்று வாசகர்களை சென்றடைந்து விடுகிறது. இதுவரை இந்த தளத்தில் நான் எழுதிய சில சிறுகதைகளைப் பற்றின சில குறிப்புகள் எழுதி வைக்கிறேன் இங்கே.
இந்த மாதிரிதான் நான் ஒன்றை நினைத்து எழுத வேறு ஒன்று வாசகர்களை சென்றடைந்து விடுகிறது. இதுவரை இந்த தளத்தில் நான் எழுதிய சில சிறுகதைகளைப் பற்றின சில குறிப்புகள் எழுதி வைக்கிறேன் இங்கே.
வகைகள்:
கதை,
குறிப்புகள்,
வாசிப்பு அனுபவம்
Subscribe to:
Posts (Atom)