கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்தில், கட்டுடலுடன் சின்னதாக அரைக்கை சட்டை போட்டுக் கொண்டு நரைத்த மீசையுடன் மாடர்ன் அல்ஜீப்ரா எடுத்த மேஜர் இராகவன் ஒரு சிக்கலான தேற்றத்தை விளக்க சுப்பையாவைத்தான் முதலில் கூப்பிட்டார். இராகவன் என்.சி.சி ஆபிஸர் என்பதால் நாங்களாக அவரை மேஜர் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தோம். ‘இஃப் யு ஆர் நாட் பிஹேவிங் பிராப்பர்லி, ஐ வில் த்ரோ யு பிஸிக்கலி அவுட் ஆஃப் த கிளாஸ். ஐ ஹேவ் த எபிலிட்டி... யு பி கேர்ஃபுல்’ என்று எங்களைப் போன்ற இளைஞர் கூட்டத்தின் முன் தனது ஐம்பத்தைந்து வயதிலும் உதார் விடும் தைரியம் அவருக்குதான் உண்டு. தொடர்ச்சியாக பிடித்த சிகரெட்டினால் அவருக்கு பின்னர் இதய நோய் வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த போது கடைசியாகப் பார்த்தேன். ஒடுங்கிப் போய் படுக்கையில் படுத்து இருந்தாலும் திடீரென்று உத்வேகத்தோடு எழுந்து சாக்பீஸை விட்டெறிந்து ஏதாவது தேற்றம் விளக்கி சொல்லச் சொல்வாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருந்தது.
சுப்பையா வெகுளியான தெற்கத்திப் பையன். ஒரு அசட்டு சிரிப்போடுதான் எதையுமே பேசத் தொடங்குவான். அவன் உளறி, கிளறி தேற்றத்தை ஒப்பேற்ற... அடித்தொண்டையில் இராகவன் ‘எந்த ஸ்கூலு நீ?’ என்றார். நாங்கள் படித்த ஸ்கூலை சுப்பையா சொன்னவுடன் ‘நெனச்சேன். போய் ஒக்காரு. உருப்படற கேஸா தெரியல’ என்று விரட்டிவிட்டார்.
ராஜாவிற்கு ஒருவனை பார்த்தவுடன் எடை போடுகிற திறமை இருந்தது. அல்லது அப்படி இருப்பதாக சொல்லிக் கொள்வான். பழுப்பு நிற பல்லோடு, அழுத்தி பின்னோக்கி சீவிய தலையோடு, கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு மாதிரி ஸ்டைலாகத்தான் வருவான். பேச்சில் பத்து சதவீதம் கூட உண்மை இருக்காது. ஆனால் தன்னம்பிக்கையோடு எல்லாரையும் வளைத்து விடுவான். சுப்பையாவின் அப்பா மாட்டுத் தரகு கமிஷன் மண்டி வைத்திருந்தபடியால் ராஜா அப்படித்தான் அவனை விளிப்பான். கல்லூரி முழுவதும் சுப்பையா ‘கமிஷன் மண்டி’ சுப்பையாதான். எனக்கும் ராஜாவிற்கும் வெகு சீக்கிரம் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகி கல்லூரியில் பிரபலம் ஆகிவிட்டோம். எங்களையறியாமல் சுப்பையாவும் எங்கள் செட்டில் ஐக்கியமாகியிருந்தான். ராஜா காலால் சொல்வதை தலையால் செய்யும் ஆதர்ச அல்லக்கை ஆகிவிட்டிருந்தான்.
‘போன வருஷ சீனியர் சீத்தாராமன் தெரியும்ல? இந்த புக்க படிச்சிதான் ஐஐஎஸ்ஸி என்டிரென்ஸ்ல பாஸ் பண்ணினான்.’ என்றோ
‘இதான் மெய்யப்பன் யுனிவர்ஸிட்டி டீமில செலக்ட் ஆன டென்னிஸ் ராக்கெட்’ என்றோ
ஏதாவது படம் போட்டு சுப்பையாவிடம் பல பொருட்களை சகாய விலையில் விற்றுவிடுவான். கிடைத்த பணத்தில் நானும் அவனும் பத்து ரூபாய்க்கு விற்ற ராமராஜன் கலர் டி-சர்ட்களோடு கல்லூரியில் உலா வந்தோம். பிரதியுபகாரமாக சுப்பையாவிற்கு எச்சி தம்மடிப்பது, மலையாளப் படங்கள் பார்ப்பது போன்ற சில பிரத்யேக பயிற்சிகள் அளித்து அவனையும் வளர்த்து விட்டான்.
ராஜலஷ்மி எங்களைவிட மூன்று செட் மூத்தவள். ஆங்கிலத்தில் எம்.ஃபில் பண்ணிக் கொண்டிருக்கும் போதே தற்காலிக போஸ்டிங்கில் எங்களுக்கும் ஆங்கில பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் மாமாதான் ஆங்கிலத்துறை தலைவர் என்பது பின்னர் புரிந்து கொண்ட செய்தி. ராஜலஷ்மி ஆங்கிலப் பாடம் எடுக்கும் போது மட்டும் சுப்பையாவிற்கு அப்படி தூக்கம் தூக்கமாக வரும். கரும்பலகையை முறைத்துப் பார்த்துக் கொண்டே அவன் சொக்கி விழுவதைப் ராஜலஷ்மி பெரிதுபடுத்தாமல் தவிர்த்தே வந்திருந்தாள். ராஜலஷ்மியின் தாத்தா வீடு எங்கள் தெருதான். நாங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடும்போது அடிக்கடி அவர் வீட்டில்தான் பந்து போய் விழும். அந்த முசுட்டு தாத்தா பந்தையே கொடுக்க மாட்டார். ராஜலஷ்மி அவள் தாத்தா வீட்டிற்கு வரும்போது நட்பு பயனமாக எல்லை தாண்டி வீட்டிற்குள் சென்று பந்துகளை மீட்டுக்கொண்டு வருவேன். சிநேக புன்முறுவலோடு ஓரிரு வார்த்தைகள் பேசுவாள். ராஜாவிற்கு அவள் தூரத்து சொந்தம் என்பதால் அவன் இன்னமும் சகஜமாகவே கடலை வறுப்பான்.
ஒரு தீபாவளியின்போது ஜிலுஜிலுவென்று எண்ணெய்க் குளியல் முடிந்த கையோடு எங்கள் வீட்டுக்கு பலகாரங்கள் கொண்டு வந்து கொடுத்தாள். எனது புத்தாடைகளைப் பார்த்து ‘நைஸ் ஷர்ட்’ என்று பாராட்டிவிட்டுச் சென்றாள். பிறகு ராஜா வெறுங்கையில் ராக்கெட் விடுகிறேன் என்று ஒரு ராக்கெட்டை முசுட்டு தாத்தாவின் வீட்டிற்குள் விட்டுவிட பெரிய ரகளை ஆகிவிட்டது. மூக்குவிடைக்க தாத்தா ‘காள்’ ‘காள்’ என்று கத்த அவர் பின்னாலிருந்த ராஜல்ஷ்மி எங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்..
வழக்கம்போல் ராஜலஷ்மியின் வகுப்பில் அரைகுறைத்தூக்கத்தில் இருந்த சுப்பையாவின் இரு காதிலும் ராஜா கோல்ட் ஃபிளேக் சிகரெட்டை சொருகி வைத்துவிட அது தெரியாமல் அவன் தீவிரமாக சாமியாடிக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்து வகுப்பறையே வழித்துக் கொண்டு சிரிக்க இம்முறை ராஜலஷ்மி டிபார்ட்மெண்டில் போட்டுக் கொடுத்து விட்டாள். ஆங்கிலத் துறையின் ஒரே பசுங்கிளியாக அவள் இருந்தபடியால், மாமாக்கள், தாத்தாக்கள் ஆன எல்லா பேராசிரியர்களும் தீவிரமாக களத்தில் குதித்துவிட்டார்கள். சுப்பையாவை சஸ்பெண்ட் செய்யப் போகிறார்கள் என்ற நிலைமை ஆகிவிட்டது. சுப்பையா ராஜாவின் பெயரை வெள்யிடாவிட்டாலும், ஆசிரியர் குழுவிடம் ராஜலஷ்மி ராஜாவின் பெயரையும் ஹிண்ட் செய்துவிட்டிருந்தாள். ராஜாவிற்கும் தர்மசங்கடமான நிலைமை ஆகிவிட்டது. ஒருபக்கம் சொந்தக்கார பெண். இன்னொருபக்கம் அல்லக்கை நண்பன்.
திடீர் திருப்பமாக ஸ்டாஃப் டாய்லெட்டில் ராஜலஷ்மியையும் ஆங்கிலத்துறை எச் ஓ டி-ஆன அவள் மாமாவையும் சேர்த்து வைத்து கன்னா பின்னாவென்று கெட்டகெட்ட வார்த்தையில் கிறுக்கி வைத்துவிட அவள் கல்லூரியிலிருந்து நின்றுவிட வேண்டியதாகிவிட்டது. அவளே போனபிறகு ஆங்கிலத்துறையிலிருந்த மற்ற மாமாக்களுக்கு ’மோட்டிவேஷன்’ சுத்தமாக போய்விட, சுப்பையாவை விட்டுவிட்டார்கள். கழிப்பறையில் யார் எழுதியது என்று தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவியது என்னவோ உண்மைதான். ராஜா எழுதியிருக்க மாட்டான் என்று நம்பினாலும், அவன் அந்த விஷயத்தில் நிறையவே சலம்பினான். சஸ்பென்ஷனிலிருந்து தப்பியதும், ராஜாவின் அலப்பறையினாலும், சுப்பையாவிற்கு அவன் மேல் பன்மடங்கு மரியாதை வந்துவிட்டது. தன்னை பொதுவில் காட்டிக் கொடுக்காத கமிஷன் மண்டி மேல் ராஜாவிற்கும் பாசம் கூடிவிட்டது.
பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவரவர் பாதையில் பிரிந்து விட்டோம். சுப்பையா டிஎன்பிஎஸ்ஸி எழுதி வருவாய்த்துறையில் குமாஸ்தாவாக சேர்ந்தான். ராஜா கல்கத்தாவில் ஐஐஎஸ்-ல் புள்ளியியல் மேற்படிப்பு படிக்கச் சென்றான். நான் அங்கே இங்கே என்று சுற்றி வேலை கிடைக்காமல் கொஞ்ச நாட்கள் சென்னையில் பாண்டி பஜாரில் சாலையோரத்தில் பொம்மைகள் விற்றுக் கொண்டிருந்தேன். அப்பொழுத்தான் சுப்பையா கல்யாண பத்திரிகை கொடுத்ததாக ஞாபகம். திருமணம் ஆன சில வருடங்களிலே வீடு கட்ட ஆரம்பித்துவிட்டான். பின்னர் ஏற்பட்ட ஐடி துறை அலையில் ராஜா ஏறி ஏதேதோ சம்பந்தமில்லாத வேலைகள் செய்து லண்டன் சென்று செட்டிலாகிவிட்டான். நான் ரியல் எஸ்டேட், எல ஐ சி என்று பல்வேறு தரகு வேலைகள் செய்துவிட்டு இப்பொழுத்தான் இரண்டு வருடமாக டிபார்மெண்டல் ஸ்டோர் வைத்து ஒரு மாதிரி பொழப்பு ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
போன பொங்கலுக்கு ராஜா ஊருக்கு வந்தபோது சந்தித்தோம். வழுக்கை அதிகமானதால் முழு மொட்டை அடித்துக் கொண்டு குறுந்தாடியோடு அதே அதிரடி ராஜா. ’கமிஷன் மண்டியை மீட் பண்ணனுமே’ என்று ஆசைபட்டதால் சுப்பையாவை தேடிப் போனோம். கிட்டத்தட்ட பதினைந்து வருடம் கழித்து மூன்று பேரும் சேர்ந்து சந்தித்தோம் என்று நினைக்கிறேன். சுப்பையா கதர் வேட்டி கதர் சட்டையில் நன்றாக செழுமையாக இருந்தான். அரசியல் கட்சி பொறுப்புகள், ரோட்டரி கிளப் என்று சமூக அந்தஸ்தில் ஓரிரு படிகள் உயர்ந்திருந்தான். பேச்சுவாக்கில்,
’போன வருசம்னு நெனக்கிறேன்... மீனாட்சி திருக்கல்யாணத்து போது நம்ம பழய இங்க்லீசு டீச்சர் ராஜலஷ்மியை பாத்தேம்பா. ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். இங்ங்னதான் விளாச்ச்சேரில இருக்காங்களாம். ரெண்டு பொண்ணுங்கப்பா அதுக்கு’ என்றான்.
உடனே ராஜா ‘ரெண்டுமே பொண்ணாமா? மொத பொண்ணு பொறந்தபோது ஈமெயில் அனுப்பினான்னு நெனக்கிறேன்’ என்றான்
‘உன்ன பத்தி, சிர்தரை பத்தியெல்லாம் கேட்டுச்சுப்பா. ப்ச்ச்... அந்த டாய்லெட் மேட்டர்தான் நெனக்க ரொம்ப கஷ்டமாப் போச்சி. ஆனா இப்ப நெனக்கையில் சிரிச்சிகிட்டோம் ரெண்டு பேரும்’ என்றவாறே ராஜாவைப் பாத்தான் சுப்பையா.
‘ஏய்... அது இன்னமுமா நியாபகம் வச்சிட்டு இருக்காளாமா?’ என்றவாறே பெரிதாக சிரித்தான் ராஜா.
‘டு பி ஹானெஸ்ட்.. எனக்கு அங்க என்னா எழுதியிருந்ததுன்னு கூட தெரியாது. எவனோ ஒரு கபோதிப் பய எழுதிபிட்டான். ஆனா, கமிஷன் மண்டி, எப்படியோ உன் மேட்டர் சால்வ் ஆயிடுச்சுல்ல. சஸ்பென்ஷன்னாலும் ஒண்ணும் புடுங்கியிருக்க முடியாது. ஆர்ட்ஸ் பசங்கிட்ட ஸ்ட்ரைக் வரைக்கும் பேசி வச்சிருந்தேன். கள்ளந்திரியிலிருந்து பசங்க செட் கொணாந்து பெரிய ரகளையெல்லாம் பிளான் பண்ணியிருந்தோம்’ வழக்கமான ராஜா சலம்பல். எங்களிருவரையும் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு...
‘நிஜம்மாவே எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா’ என்றான்
‘தெரியும்’ என்றான் சுப்பையா. பிறகு என்னைப் பார்த்தவாறே ‘ராஜலஷ்மி எல்லாம் சொல்லிச்சு. அன்னிக்கு நீ வெளில வரசொல்ல பாத்திச்சாம்.’ என்றான்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களும் அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை.
இந்த சிறுகதை சங்கமம் குழு நடத்தும் கல்லூரி சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
31 மறுமொழிகள்:
செம எழுத்து நடை.. :)
வாங்க இளா!
உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி :)
இந்த Week end என்ன, வயசான தாத்தாக்கள் வாழ்க்கையை rewind பண்ணுற வாரமா ? அங்க பினாத்தல் இங்க நீங்க, அப்புறம் என்ன இ.கொத்தனாரா ?
வாங்க அனானி ஐயா,
<>சங்கமம் நடத்தும் போட்டிக்கான<> புனைவு இது :-) சும்மாவே கொசுவர்த்தி சுத்திட்டு இருக்கேன். போட்டின்னு வேற வாய்ப்பு கொடுத்தா.. அதான் :-))
அனானி சார்,
சங்கமம் போட்டிக்கான விபரங்களை இங்கே சென்று பார்க்கலாம்.
//. ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். இங்ங்னதான் விளாச்ச்சேரில இருக்காங்களாம். ரெண்டு பொண்ணுங்கப்பா அதுக்கு’//
ரைட்....
// பிறகு என்னைப் பார்த்தவாறே ‘ராஜலஷ்மி எல்லாம் சொல்லிச்சு. அன்னிக்கு நீ வெளில வரசொல்ல பாத்திச்சாம்.’ என்றான்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களும் அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை.//
சில நேரங்கள் இப்படித்தான்.. கிளைமாக்ஸ் பல வருஷம் கழித்துதான் நடக்கும்..,
ஊரறிந்த ரகசியங்கலை யாரும் பொதுவில் பேச விரும்புவதில்லை.
கதை சூப்பர்.
\\‘தெரியும்’ என்றான் சுப்பையா. பிறகு என்னைப் பார்த்தவாறே ‘ராஜலஷ்மி எல்லாம் சொல்லிச்சு. அன்னிக்கு நீ வெளில வரசொல்ல பாத்திச்சாம்.’ என்றான்.\\
இன்னாடா இது இன்னும் ஹூரோ வரவேல்லியேன்னு பார்த்தேன்...கடைசியில கலக்கிட்டிங்க தல ;))
ம்ம், மால்குடி டேஸ் பார்த்த/படிச்ச மாதிரி இருக்கு.
புனைவுன்னு எல்லாம் ஒன்னும் ஒத்துக்க முடியாது. :))
ப்ரெசன்ட் சார் :)
வாங்க சுரேஷ்,
//சில நேரங்கள் இப்படித்தான்.. கிளைமாக்ஸ் பல வருஷம் கழித்துதான் நடக்கும்..,//
இதுக்கப்புறமும் கூட சில விஷயங்கள் நடந்திருக்கலாம். கதாசிரியன் சொல்லாம விட்டுருக்கலாம் :-)
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
//இன்னாடா இது இன்னும் ஹூரோ வரவேல்லியேன்னு பார்த்தேன்... கடைசியில கலக்கிட்டிங்க தல ;))//
வாங்க கோபி! கடைசியில கலக்கிட்டிங்கன்னா முதல்ல கதை சரியா இல்ல போல. அதுவும் ஹீரோவே வராமல் கதை வெத்தா போயிட்டிருந்து கடைசியிலதான் வர்றாருன்னு வேற சொல்றீங்க. ஒரு வரி பின்னூட்டம் போட்டாலும் அதுல இவ்ளோ நுண்ணரசியல் ஆகாதுங்க. ஆமாம் சொல்லிட்டேன் :))
//ம்ம், மால்குடி டேஸ் பார்த்த/படிச்ச மாதிரி இருக்கு//
//புனைவுன்னு எல்லாம் ஒன்னும் ஒத்துக்க முடியாது. :))//
இங்க பார்றா...வேற எதையோ பார்த்து / படிச்சு எழுதின மாதிரி இருக்குன்னு சொல்றீங்க. அதே சமயம் ‘இது புனைவு’ இல்லைன்னு வேற சொல்றீங்க. மக்கள் எதை நம்புவாங்க? ஒரே கன்ஃப்யூஷன்...
மக்கள்ஸ்! அம்பி அண்ணா சொல்றதைக் கேக்காதீங்கோ. இது நானே சொந்தமா யோசிச்சு கதை எழுதினதுதான். எழுதினதுதான். எழுதினதுதான். :)
//ச.சங்கர் said...
ப்ரெசன்ட் சார் :)//
ஹோம் வொர்க் செய்யாம வெறுமன ப்ரெசெண்ட் மட்டும் சொல்றதுக்கு மட்டும் ஒண்ணும் குறைச்சலில்லை.
ரொம்ப நல்லா க்ரிஸ்பா வந்திருக்கு:)எழுத்து நடை மெருகு ஏறிகிட்டே போகுது.பிடிச்சிருந்துது:)
வாங்க ராதா ஸ்ரீராம்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. :-)
///ஹோம் வொர்க் செய்யாம வெறுமன ப்ரெசெண்ட் மட்டும் சொல்றதுக்கு மட்டும் ஒண்ணும் குறைச்சலில்லை///
இல்லை..நான் வாசிக்கிற செட்டுல ( பெனாத்தல், ...) எல்லாம் ஒரே பென்ச்சுல ஒக்காந்து ஒண்ணா காப்பியடிச்ச மாதிரி..ஃப்ளாஷ் பாக்..அதில் ஒரு சஸ்பென்ஸ்..அதுக்கு ஒரு எதிர் பார்க்காத முடிவு அப்படீங்குற பாணியிலேயே கதை எழுதியிருக்கீங்களா அதான்" ப்ரெசன் ட் சார்" மட்டும் சொல்லி எஸ் ஆயிட்டேன். உங்க கிட்டையுருந்து இன்னும் டிபரெண்டா எதிர் பார்த்தேன்.
கோச்சுக்கிடாதீங்க. இந்த பின்னூட்டம் போட்டியில் கதையின் சான்ஸை கெடுக்கும் அப்படீன்னு ஃபீல் பண்ணுனா முடிவுக்கு அப்புறமா வெளியிடுங்க :)
அப்ப மால்குடி தான் இன்ஸ்பிரேஷனா? தீர்ந்தது சந்தேகம். புரியாம இருந்தா தான் புனைவு, புரிஞ்சா அது எப்படி புனைவு? அத தான் சொன்னேன். :))
//எல்லாம் ஒரே பென்ச்சுல ஒக்காந்து ஒண்ணா காப்பியடிச்ச மாதிரி..ஃப்ளாஷ் பாக்..அதில் ஒரு சஸ்பென்ஸ்//
ஸ்ரீதர்,
சங்கர் வாயை கிளறாதீங்கன்னு சொன்னா கேட்டா தானே? டர்ர்ர்ன்னு கிழிச்சிட்டு போயிட்டார் பாருங்க. :))
//ஃப்ளாஷ் பாக்..அதில் ஒரு சஸ்பென்ஸ்..அதுக்கு ஒரு எதிர் பார்க்காத முடிவு அப்படீங்குற பாணியிலேயே கதை எழுதியிருக்கீங்களா//
சங்கர் சார்!
போட்டியே ‘கல்லூரி நினைவுகள்’தானே. பிளாஷ்பேக் இல்லாம எப்படி? எதிர்பார்த்த முடிவா இருந்தா கதை எப்படி நல்லா இருக்கும்?
சரி சரி ப்ரியா விடுங்க :))))
//
புரியாம இருந்தா தான் புனைவு, புரிஞ்சா அது எப்படி புனைவு?
அத தான் சொன்னேன்.
:))
//
அம்பி! பாரு.... ஒண்ணுங்கீழ ஒண்ணு போட்டு ஹைக்கூன்னு சொல்லியிருக்கலாம் இல்ல... சான்ஸ விட்டுட்டியே...
முடிவு எதிர்பார்த்தது தான். ஆனா, நல்ல flow. கழிப்பறையில் கவிதை எழுதும் ஆளா நீங்க? ஜாக்கிரதையா தான் இருக்கணும் :)
ஆல் த பெஸ்ட்.
அனுஜன்யா
//கவிதை எழுதும் ஆளா நீங்க? //
அண்ணாச்சி... இரண்டு விளக்கங்கள்
1. இது புனைவுதான், புனைவுதான். புனைவேதான் :-)
2. அது கவிதை இல்லீங்ணா. கழிப்பறை காவியம்ங்ணா. :-)
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல :))
மிகச் சாதாரணமான கதை... நடைதான் கொஞ்சம் ஸ்பெஷாலிட்டி :)
அது என்ன... பின்னர் புரிந்து கொண்ட செய்தி? பின்னர் தெரிய வந்த செய்தி அல்லது புரிந்து கொண்ட விஷயம் என்றுதானே வரணும்... ரீ-ரைட் செய்யாமல் பதிவிட்டு விட்டீர்கள் என எனக்குத் தோன்ற இந்த வரியும் ஒரு காரணம் :)
//அது என்ன... பின்னர் புரிந்து கொண்ட செய்தி? பின்னர் தெரிய வந்த செய்தி அல்லது புரிந்து கொண்ட விஷயம் என்றுதானே வரணும்...//
இத்தனூண்டு வரிக்குள்ள இம்புட்டு மேட்டர் இருக்கா? நீங்க சொன்னப்புறம்தான் புரியுது வாத்யார். :-)
அடுத்த முறை இன்னமும் கவனமாக இருக்கிறேன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சுந்தர்.
///சங்கர் வாயை கிளறாதீங்கன்னு சொன்னா கேட்டா தானே? டர்ர்ர்ன்னு கிழிச்சிட்டு போயிட்டார் பாருங்க. :))///
அம்பி,
:)))))) நன்றி :))))))))
//எதிர்பார்த்த முடிவா இருந்தா கதை எப்படி நல்லா இருக்கும்?//
எல்லாரும் பொதுவா கதைக்கு எதிர் பாராத முடிவுதான் அப்படீன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கும் போது, எதிர்பார்க்காம, எதிர் பார்க்கக் கூடிய முடிவை எழுதுனா அது படிக்கிறவங்களுக்கு எதிர்பாராத சஸ்பென்சா இருந்துருந்தா கதை நல்லா இருக்காதா என்ன :)
திட்டுனா சங்கர் சார் அப்படீன்னு மரியாதை ??? கூடுது..பாயின்ட்
நோட்டட் தல.:))
///போட்டியே ‘கல்லூரி நினைவுகள்’தானே. பிளாஷ்பேக் இல்லாம எப்படி?///
"நினைவுகள்" அப்படீன்னாலே மினிமம் ஒரு 10 வருஷமாவது பின்னோக்கி கொசுவத்தி சுத்தணும் அப்படீன்னு ரூல் ஏதாவது இருக்கா என்ன? போன வருஷக் கதையைச் சொன்னா அது நினைவுகள்ள சேராதா என்ன?
அண்ணே ..தமிழ் மசாலா படம் எடுக்குற போது மினிமம் காரண்டி கலெக்சனுக்காக 2 குத்துப் பாட்டு , 4 ஃபைட்டுன்னு ஃபார்முலா கதை பண்ற மாதிரி பண்ணாம ஸ்ரீதர் நாராயணனா வித்தியாசம் காட்டுங்க அப்படீன்னு சொல்ல வந்தேன் :))
//போன வருஷக் கதையைச் சொன்னா அது நினைவுகள்ள சேராதா என்ன?//
போன வருசம் நான் கல்லூரியில படிச்ச கதையைக் கூட சொல்லலாம்தான். அப்புறம் நம்ம ‘உண்மையான’ வயசு தெரிஞ்சுப் போயிருமேன்னுதான்.... ஹிஹி!
//ஸ்ரீதர் நாராயணனா வித்தியாசம் காட்டுங்க அப்படீன்னு சொல்ல வந்தேன் :))//
சரி.. சரி.. ஃப்ரீயா விடுங்க. வித்தியாசம்னுதான் நான் நெனச்சிகிட்டு எழுதினேன். இப்படி பேக்ஃபயர் ஆகும்னு எதிர்பார்க்கல. நெக்ஸ்ட் டைம் உஷாரா பிடிச்சுருவோம். ஓக்கேயா? :)
படிக்கும் போதே கண்ணுக்கு முன்னாடி நடக்கிற மாதிரி இருக்கு
வாங்க பிஸ்கோத்து!
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. :)
http://tamil.blogkut.com/contest0309.php
Conrats! Really nice story!
கதை சூப்பர் !!
வாங்க ரமேஷ்.
உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. :)
ஹா ஹ நல்ல எழுதிருக்கிங்க
I have become ur follower after reading this post,
Hope you too like my posts, if u like u can follow ;)
//Suresh said...
ஹா ஹ நல்ல எழுதிருக்கிங்க//
வாங்க சுரேஷ்,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
உங்க பதிவுகளும் படித்தேன். பதிவை திறமையாக கையாள்கிறீர்கள். மேலும் சிறக்க வாழ்த்துகள்.
Post a Comment