உலக மகா எழுத்தாளர்களால் எரிச்சல்!

April 28, 2009

இணையத்தின் பல்வேறு சாதனைகளில் ஒன்று எழுத்தாளர்களை இணையத்திலும் எழுத வைத்து அவர்களையும் சாதாரணர்களாக ஆக்கியது. முன்பு இலக்கிய சச்சரவுகளை தேடித்தேடி படிக்க பத்திரிகைகளை நாடியிருக்கிறேன். ஆனால் சில ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களினால்’ ஏற்படும் எரிச்சலுக்கு படிப்பதையே நிறுத்திவிடலாமா என்று தோன்றுகிறது.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்திருக்கிறீர்களா? கணையாழியின் கடைசிப் பக்கங்கள்? ’21-ம் நூற்றாண்டின் விளிம்பில்’ மற்றும் ’கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத் தொடர்கள்? ஸ்ரீரங்கத்து அடையவளஞ்சான் சந்திலிருந்து, எமஐடி-யில் படித்ததும், ஏர்போர்ட்டில் கண்காணிப்பாளராக வேலை செய்ததும், பெங்களூர் ஜாலஹள்ளிக்கு குடி பெயர்ந்ததும், இந்திய தேர்தலை நவீனபடுத்திய ‘மின்னனு ஓட்டு இயந்திரம்’ அறிமுகப் படுத்தியதும், பாலகுமாரனுக்கு சிறுகதை எழுதுவது எப்படி என்று சொன்னதும், அவருடைய திரையுலக நண்பர்கள் பற்றிய செய்திகளும் இன்னபிற செய்திகளும் சாதாரண வாசகனாக மட்டும் இருக்கக் கூடிய, அவருடன் வேறெந்த பரிச்சயமும் இல்லாத என்னைப் போன்றவர்களுக்குக் கூட தெரிந்திருக்கும் வகையில் அவரே வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அவர் கடைசி காலத்தில் காசுக்கு கஷ்டப்பட்டார் என்றெல்லாம் எழுதுவது வாசகர்களை முட்டாளாக்கும் மோசடி வேலை.

உலகமகா எழுத்தாளர்களால் எள்ளல் செய்யப்படும் ‘மிடில் கிளாஸ் மோரன்’களுக்காகவே சுஜாதா ’மத்தியமர்’ என்னும் தொடர் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக எழுதியிருக்கிறார். சுஜாதாவை படிக்காமலேயே அவரை பெரிய எழுத்தாளராக மதிப்பதாக பம்மாத்து காட்டுவது எந்த பதிப்பாளரை திருப்திபடுத்த? எரிச்சல்!

ஐயா உலக மகா எழுத்தாளர்களே! நீங்கள் எழுத்தாளர்கள் என்னும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள ஏதாவது படிக்கும்படி எழுதுங்கள். இந்த கடித போக்குவரத்துகள், சுய சொறிதல்கள், தம்பட்டங்கள் எல்லாம் புளித்துப் போன பழைய கஞ்சி. கடிகாரம் போல் நிற்காமல் ஓடும் ஹிட் கௌண்டர்களை எல்லாம் நம்பாமல் உங்களின் தரத்தை நீங்களே உணர்ந்து கொள்ளூம் காலம் எப்பொழுது வரும்?

வரிக்கு வரி தொடுப்பு கொடுத்து விமர்சித்து எழுத ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் வியவஸ்தைகெட்ட தளங்களுக்கு வீண் விளம்பரம் வேண்டாம் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

8 மறுமொழிகள்:

Anonymous said...

anne oru saathaarana vaasaganaa onnumae puriyala...

Viji said...

I have read very few authors in Tamil...And Sujatha is the most i have read!Sujatha is undoubtedly an intellectual, original & creative writer....It's not fair to make personal comments on him, though one can have diff views on his writing..

EVM is his great contribution....Look how it works seemlessly!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுஜாதா காசுக்குக் கஷ்டப்பட்டார் என்றா சொன்னார்கள்... அவர் பணத்தேவைக்காகக் கடைசி வரை வேலை பார்க்கவேண்டிய சூழல் இருந்தது என்று படித்த ஞாபகம். அதாவது இங்கு ராயல்டியை மட்டுமே நம்பி வாழ முடியாது என்பதைச் சொல்வதற்காகச் சொன்னது எனப் புரிந்து கொண்டேன்.

பல வெ.ஜ. பத்திரிகைகளில் ஒரு சிறுகதைக்குக் கொடுப்பது ரூ 500க்கும் கீழேதான் :(

நான் கேள்விப்பட்டது : தமிழ் எழுத்தாளர்களில் அதிகப்படியான ராயல்டி வாங்கியது சுஜாதாதான் (அதுவும் அதிகபட்சம் ரூ 90,000 - ஒரு வருடத்திற்கு).

சாரு எழுதியதற்கான மறுப்பு என நினைத்து இதையெல்லாம் சொல்கிறேன் : வேறு யாருடைய பதிவாயிருந்தால், மன்னிக்கவும். பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்.

Suresh said...

ஹம் நல்ல பதிவு

Boston Bala said...

சினிமாவிற்கு மட்டுமே உரித்தான் வதந்தியை இலக்கியத்திற்கும் கொண்டு வர முயற்சிப்பதை பாராட்டி இருக்கலாம்.

புனைவு எது, கற்பனை எங்கே ஆரம்பிக்கிறது, பிச்சைபாத்திரம் எவ்வாறு புகுந்தது என்று தெரியாவண்னம் உருவான கட்டுரைப் படைப்பை மெச்சி இருக்கலாம்.

ஆனியன் போன்ற நிஜத் தோற்றமுள்ள சங்கதியை தமிழில் தந்ததற்காக சுட்டியாவது தரலாம்.

அதை விட்டுட்டு...

எழுபதிலும் வேலை பார்த்தால் பணத் தேவைக்காகவா? அல்ஜெய்மரில் இருந்து compulsory retirement disorder வரை வராமல் பாதுகாக்கவா என வழக்காடுமன்ற சிந்தையைக் கிளப்பும் பதிவின் உரல் எங்கோ?

இலவசக்கொத்தனார் said...

கண்டதையும் படிக்க வேண்டியது அப்புறம் இப்படி ஜுர வேகத்தில் எதாவது சொல்ல வேண்டியது!! நல்லா இரும்!

venkatramanan said...

//என வழக்காடுமன்ற சிந்தையைக் கிளப்பும் பதிவின் உரல் எங்கோ?//
http://www.charuonline.com/April09/modi.html

வெட்டிப்பயல் said...

சுந்தர்,
உங்க அளவுக்கு எனக்கு சிறுபத்திரிக்கை விஷயங்கள் தெரியாது. ஆனா சுஜாதா டாப் 10 தேவைகள்னு படிச்சதுல பணம் அந்த லிஸ்ட்ல இருந்து எப்பவோ போயிடுச்சினு சொல்லிருப்பாரு.

அவர் பணத்தேவைக்காக கடைசி வரை வேலை பார்த்தாரா இல்லை மனத்திருப்திக்காக வேலை பார்த்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.