மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6
ஏறக்குறைய இரண்டு வருடமாக அமெரிக்க மேற்கு கடற்கரை ஓரமாக Bay Area என்று சொல்லப்படும் சிலிக்கன் பள்ளதாக்கில் குப்பை கொட்டிவிட்டு இப்பொழுது கிழக்கு கடற்கரைக்கு வேலை நிமித்தமாக பயணமாகிறேன். இக்கரையிலிருந்து அக்கரைக்கும் கிட்டத்தட்ட 3000 தூரம் இருக்கும். Coast-to-Coast கார் பயணம் செய்ய வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஒரு ஆசை உண்டு. இந்த இடமாற்றத்தை சாக்கிட்டு அந்தப் பயணத்தை செய்து விட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.
சாண்டா கிளாரா, கலிஃபோர்னியா மாநிலத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை (July 25, 2009)கிளம்பி, I-80 என்னும் இண்டர்ஸ்டேட் பாதை வழியாக, நெவடா மாநிலத்தை குறுக்கே கடந்து, யுட்டா (Utah) மாநிலத்தின் மத்தியில் சால்ட் லேக் சிட்டி என்னும் நகரத்தை அடைந்து தங்கலாம் என்று திட்டம். இது ஒரு எண்ணூறு மைல் தூரம். ஒரே நாளில் இத்தனை தூரத்தை கடப்பது சற்றே கடினம்தான். அதுவும் தனியாக பயணம் செய்ய வேண்டியிருப்பதால் செம போரடிக்க வாய்ப்பிருக்கிறது. அங்கிருந்து அடுத்த நாள் பயணத்தில் நெப்ராஸ்கா மாநிலத்தை அடைய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். அந்த திட்டத்தை நாளைதான் தீர்மானம் செய்ய வேண்டும்.
நண்பர்கள் யாரேனும் இவ்வழியில் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப் படுத்துங்கள். கண்டிப்பாக தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன்.
நாளை அடுத்த பகுதியில் சந்திப்போம்.
மேற்கிலிருந்து கிழக்கே - 1
மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6
12 மறுமொழிகள்:
திரு ஸ்ரீதர் நாராயணன், எனக்கும் இந்த ஆசை அடிமனதில் உண்டு. ஒரு நாள் கண்டிப்பாகச் செய்வேன். நீங்க நான் இருக்கிற இடத்திலிருந்து போறீங்க!. அதனால பின்னூட்டத்தில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை.உங்கள் பயணம் உற்சாகமாக இருக்க வாழ்த்துகள்!
Coast to coast என்பது ஒரு அசாத்திய துணிச்சல், தேகபலம், மனவலிமை என்று எல்லாவற்றுடனும் செய்ய வேண்டிய சமாசாரம். எளிதில் நிறைய பேருக்கு அமையாது. Make the most of it.
தனியாக என்றால், ஒரே ஆளாக? இல்லை குடும்பத்துடன்? Either way, take care.
மும்பை அருகில் வரும்போது தெரியப் படுத்துங்கள். என்னது, இது USA வா? சரி விடுங்க :)
அனுஜன்யா
//அதுவும் தனியாக பயனம் செய்ய வேண்டியிருப்பதால் செம போரடிக்க வாய்ப்பிருக்கிறது.//
பதிவின் மையக் கருத்தை சொல்லி இருக்கும் பாங்கை நினைத்து வியக்கிறேன். :))
குட்டு கேள் பிரண்டு லிப்ஃட் பிராப்திஹஸ்து. :p
/பயனம்/ - பயணம்
எரிவாயு விற்கும் விலை மற்றும் கார் வாடகை தங்கு விடுதி செலவு அதற்கு மேல் பல மணி நேரம் சாலையை பார்க்க வேண்டிய நிலை என எல்லாம் உத்தேசித்து கோஸ்ட்-டூ-கோஸ்ட் , பணி மாற்றலின் பொழுது , நான் செய்யவில்லை. பயணம் நன்றே முடிய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Coast- to - coast ஆசைக்குன்னா சரி. பொருளாதாரப்படி, நேரப்படி, உடல்நிலைப்படி செம நஷ்டம். அதுவும் தனியாவா? கொடுமை. நல்லபடியா வந்து சேருங்க. வாழ்த்துக்கள்
Have a safe & pleasant drive:-). Good Luck for a travel partner (a blond, preferably!!!!)
Hey Sridhar, All The Very Best for your new job!
கிழக்கு உங்களை வரவேற்கிறது ;)
தல..அப்படியே இன்னொரு 3000 தூரம் இல்லைன்னா அதுக்கு மேல பயணம் செய்து துபாய்க்கு வந்துட்டு போங்களேன் ;)))
Hey sridhar,
This is really a great effort. Its not easy to travel 3000 kms at one shot..That alone..
Wishing you a safe and pleasent journey ...
PS: Just remembering the day we travelled some 450 kms from Madurai to Bangalore in ur car :) :)..Now you are planning for some six folds of that effort..Good luck
சவாலை சமாளிப்பதற்கு எல்லா வலிமையும் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்!!
நண்பர்கள் குழுவுடன், பயணசுவைக்காகவே கொலம்பஸிலிருந்து ப்ளோரிடாவுக்கு ஓட்டிச்சென்றுவந்தோம்.. 3000 மைல்கள், அங்கே பார்த்ததைவிட, பயணம்தான் சுவாரசியம்.. அதுபோலத்தானே இருந்திருக்கும்?!
//அங்கே பார்த்ததைவிட, பயணம்தான் சுவாரசியம்.. //
அதேதான் எனது திட்டமும். எனக்கு சுற்றுலா என்ற பெயரில் souvenir சேகரிப்பதைவிட பயணம் செய்வது சுவாரசியமானது :)
Post a Comment