மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6
நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது இருவாரம் முன்னர் 3000 மைல்கள் ஒரே மூச்சாக 3.5 நாட்களில் பயணம் செய்ததை சொன்னேன். அவருடைய உடனடி பதில் ‘இல்லை. நீ பொய் சொல்கிறாய்’. நானே ஓரிரெண்டு நாட்கள் கழித்துதான் அந்த அனுபவத்தை முழுவதுமாக உணர முடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அதே நண்பர்தான் பல வருடங்கள் முன்னர் இம்மாதிரியான ஒரு பயணத்தைப் பற்றிய கற்பனையை என்னுள் விதைத்தது. நன்றி அவருக்கு!
நான் காரோட்ட பழகியதே இரண்டு வருடங்கள் முன்னால்தான். இந்தியாவில் சில நெடுந்தொலைவு பயனங்கள் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் அமெரிக்காவின் நெடுஞ்சாலை அமைப்புகள் கொஞ்சம் சிக்கலானவை. ஹோம்வொர்க் செய்யாமல் புதிய பகுதிகளில் பயணம் செய்வது மிகவும் சிரமம். அதிலும் என்னைப் போன்ற அடிக்கடி வழி தவறும் ஆசாமிகளுக்கு மிகப்பெரும் சவால். அமெரிக்கா வந்திறங்கிய புதிதில் என்னுடை முதல் தரைவழிப் பயனத்தில் பத்து மைலில் சென்றடைய வேண்டிய இடத்திற்கு நான் அதிக நேரம் சென்றுக் கொண்டிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்தேன். மேற்கே செல்வதற்கு பதிலாக கிழக்கே சென்று சிகாகோ downtown வரை சென்று விட்டேன். கிட்டத்தட்ட 30 மைல் பிரயானம் அது. மீண்டும் 40 மைல் மேற்கே பயணம் செய்து முழுவதுமாக வீடு வந்து சேர்ந்தது பெரும் சாதனைதான் அன்று. பின்னர் Nexter நிறுவனத்தின் GPS ஒன்று வாங்கிவிட்டேன். போக வேண்டிய இடம்: வெள்ளை மாளிகை, வாஷிங்டன் என்று உள்ளீட்டினால், ஒபாமா போய்ச் சேருகிறாரோ இல்லையோ உங்களை சரியான பாதையில் கொண்டு சேர்த்து விடும் தானியங்கி வழி சொல்லி. ’இன்னமும் 200 அடியில் இடது பக்கம் திரும்பப் போகிறாயா இல்லையா’ என்று மண்டையில் மணியடித்து வழிப்படுத்தும் சாதனம். வழி தவறிப் போவதினால் உண்டாகும் சிக்கல்கள் இல்லாமல் போனது காரோட்டுவதின் மேல் மேலும் காதலைக் கூட்டியது.
கலிஃபோர்னியா மாநிலத்தில் இருந்து பென்சில்வேனியாவிற்கு இடம் மாற வேண்டிய வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மனதில் தோன்றியது ‘ஆஹா! Coast-to-Coast drive செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம்’. நண்பர்களிடம் சொன்னபோது பலருக்கு அதிலிருந்த எக்ஸைட்மெண்ட் புரியவில்லை. ‘தனியாக அவ்வளவு தொலைவா? எதற்கு அந்தக் கஷ்டம்?’ என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. பொதுவாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே நெடுந்தொலைவு காரோட்டி செல்வது என்பது ஒரு சிக்கன நடவடிக்கையாகவே அறியப் பெற்றிருந்தது. யுனிவர்சல் ஸ்டூடியோ, லாஸ் வேகாஸ், நயாகரா, டிஸ்னிலேண்ட், காஸினோஸ் போன்ற NRI பட்டியலில் இம்மாதிரியான நெடும் பயணம் இடம் பிடிப்பதில்லை. அம்மாதிரியான பயண அனுபவங்கள் சில்வற்றைப் படித்திருந்ததினால் எனக்கு அதில் இருந்த சவால்களும், சௌகரியங்களும் ஓரளவிற்கு தெரிந்திருந்தது.
இவன்தான் என்னுடைய பயணத்தின் இன்றியமையாத தோழன். 2009-ம் வருட டொயட்டோ கரோலா. புத்தம் புதிய வண்டி. நான்கிருக்கைகள், நான்கு கதவுகள் கொண்ட செடான் வகை மகிழுந்து. இந்தியாவில் இருந்தபொழுது 2004-ம் வருடத்து ஃபோர்ட் ஐகான் வைத்திருந்தேன். பெங்களுருவிலிருந்து, முருகனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர் என்று ஒரே வாரத்தில் ஒரு விரைவுப் பயணம் செய்திருக்கிறேன். பழனிக்கு மட்டும் பேருந்து பயணம். ஆனால் அம்முறை எனது பெற்றோர், மனைவி, குழந்தை என்று கார் முழுவதும் மனிதர்கள். இம்முறை கார் முழுவதும் பெட்டிகள், மூட்டைகள் மற்றும் புத்தகங்கள். எத்தனை பெட்டிகளடா அதை வைக்க எத்தனை இடங்களடா என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு கரோலா விஸ்வரூபம் எடுத்து தனக்குள்ளே எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டது.
பயணம் முடிவாவதற்கு முன்பே வீட்டை மொத்தமாக காலி செய்து நண்பர்களுடன் ஜாகை மாறிவிட்டபடியால் அந்த வாரம் முழுவதும் கல்லூரி காலத்து கோடை விடுமுறை போல் கேரம் போர்டு, சீட்டாட்டம் என்று பொழுது போய்க் கொண்டிருந்தது. அவ்வளவுதானா என்று கேட்பவர்களுக்கு, அவ்வளவுதானய்யா எழுத முடியும். Binge drinkging பற்றியெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான். I am back to the TeeToteller Status :) அப்படி இப்படி சிலிப்பு ஆறதுதான். கிரௌடை க்ளியர் பண்ணிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான். சனிக்கிழமை (1-Aug-2009) அதிகாலை புறப்பாடு, தொடர்ந்து மூன்று தினம் இடைவிடாத பயணம் என்று திட்டம் தயார்.
வெள்ளிக்கிழமை ட்ரையல் ரன் -ஆக அருகிலிருந்து பாலாஜி கோவிலுக்கு Fully Loaded வண்டியை கொண்டுச் சென்றேன். அடுக்கி வைக்கப்பட்ட பெட்டிகள் எதுவும் ஆடாமல் அசையாமல் இருந்தன. No screeching noises. பாலாஜி கொடியசைத்து துவக்கி வைக்க புறப்பட்டது யாத்திரை. ஜெய் ஹோ!
மேற்கிலிருந்து கிழக்கே - 1
மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6
24 மறுமொழிகள்:
என்னங்க இது...வண்டியில ஸ்டீயரிங்கே இல்ல!? இத வச்சிக்கிட்டு 3000 மைல் ஓட்டுனதா சொல்லுறது எல்லாம் டூப் தானே?
என்னடா ஆறு லிங்க் இருக்கோ? ரெண்டு தான் வேலை செய்யுதோ?னு டவுட்டு. அமுக்கி அமுக்கி பாத்தேன். :))
இத்தனை பக்கங்கள் எழுத போறோம்னு முன் கூட்டியே திட்டமிடும் அளவுக்கு பெரிய்ய எலக்கியவாதியாகி விட்ட அண்ணன் ஸ்ரீதர் வாள்க. :))
நிற்க,
1) பயனம், பயனம் என எழுதிய நீங்க கடைசி பாராவில் பயணம்னு எழுதியதின் காரணம் என்ன? அதாவது வண்டி இப்ப தான் சரியான டிராக்குக்கு வருகிறது என குறிக்கவா?
(பெரிய எளுத்தாளர்கள்னாலே இப்படி தான் லெவல் காட்டுவாங்க, அதான்)
2) சுவாமிம்லை எங்க இருக்கு? (இதுக்கும் ஏதேனும் காரணம் உண்டா?)
இப்பலாம் உங்க பயண கட்டுரைகளில் கூட நாங்க கண்ணுல வெளக்கெண்ணய் விட்டு படிக்க வேண்டி இருக்கு. :))
சஸ்பென்ஸ் தாங்க முடியலை, அடுத்த நாலு பாகத்தையும் எப்ப வெளியிடுவீங்க?னு விரல் நகங்களை (என் கை விரல் நகம் தான்) கடிக்க வைத்து விட்டீர்கள். (நன்றி பாக்கெட் நாவல் வாசகர்கள்) :)))
பயணம் வெற்றிகரமா முடுஞ்சுருச்சா?? நன்று...நன்று
திருத்தணியில் லக்ஷ்மியை ஏன் தனியா விடுரீங்க ? :)
வாங்க மணிவண்ணன்,
//வண்டியில ஸ்டீயரிங்கே இல்ல//
பிரயாணத்தில் தவறான திருப்பம் வந்திடக்கூடாதில்ல... அதான் ஸ்டீரிங்கே இல்லை. :)
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அம்பி அண்ணா!
வாங்க. ‘ன’கர ‘ண’கர தகராறை கவனமாக தவிர்த்ததாகத்தானே நினைச்சிகிட்டு இருந்தேன். அப்படியும் தவறிடுச்சா? :)
//இத்தனை பக்கங்கள் எழுத போறோம்னு //
எழுதி வச்சிட்டோம்ல. கொஞ்சம் ஃபைனல் டச்சிங் கொடுத்திட்டு ரிலீஸ் பண்ணிட வேண்டியதுதான் :)
//சுவாமிம்லை எங்க இருக்கு//
’ஓம்’காரத்திற்கு விளக்கம் கேட்டவுடன் ’ம்’ என்று உடனேயே விளக்கம் கொடுத்த தகப்பன்சுவாமி இல்லையா? அதான் அப்படி ஆயிடுச்சுப் போல. நம்ம இணைய வாரியாரைக் கூப்பிட்டு தனியா விளக்கம் சொல்லச் சொல்லனும் போல :))
//விரல் நகங்களை (என் கை விரல் நகம் தான்) கடிக்க வைத்து விட்டீர்கள். //
வண்டியை கிளப்பியவுடன் ஃபோன் மணி அடித்தது ‘விவேக்! அபிராமபுரம் ஆறாவது கிராஸ்ல ஒரு மர்டர். உடனே இஙகே வர முடியுமா’ என்றார் கோகுல்நாத். மை காட்! அந்த மர்ம டெலிஃபோன் வந்ததும் அபிராமபுரம் ஏரியாதான். ஷூ ஹீல்ஸ் தேயத் தேய விவேக் வண்டியை யூ டர்ன் எடுத்து செல்லும்போதுதான் அந்த ‘டுஷ்யூங்’ சத்தம் கேட்டான்.
இப்படி முடிசசாத்தான் நகம் எல்லாம் பிய்க்கனும். :) நாம் எழுதறதெல்லாம் ஆறிப்போன அவல் உப்புமாதான். மொள்ள சாவகாசமா பால் விட்டு சாப்பிடுங்க.
//திருத்தணியில் லக்ஷ்மியை //
ஹிஹி... சேர்த்திட்டேன் இப்ப. :)
வாங்க உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
GPS-ம் சில சமயம் கழுத்தறுக்கும். பல வருஷங்கள் முன்னால் சுற்றுலா வந்த நண்பரின் நண்பர்கள் நயாகராவில் GPS-ன் கைங்கர்யத்தால் ஏதோ லோக்கல் சாலைகள் வழியே கனடாவுக்குள் போய் விட்டார்களாம். திரும்பி வருகையில் இமிக்ரேஷனில் மாட்டிக்கொண்டு தாவு தீர்ந்து விட்டதாம்.
அவ்வளவு ஏன்... போன மாதம் ஜெ.மோ-வுடன் டி. சி க்குள் M ஸ்ட்ரீட் தேடி என்னானது என்று பாபாவைக் கேளுங்கள்.
//வண்டியை கிளப்பியவுடன் ஃபோன் மணி அடித்தது //
அவர் கதையில் போன் மணி அடிக்காதுங்க. வீறிடும். :-)
குட்! அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். எனக்கும் நெடுந்தொலைவு நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்வது பிடிக்கும். லாஸ் ஏஞ்சலீஸ், லாஸ் வெகாஸ், சான் டியாகோ எல்லாம் ஒவ்வொரு முறையும் காரில் சென்றதுதான். கூடிய சீக்கிரம் நானும் இந்த மாதிரி ஒரு டிரிப் அடிக்க எல்லாம் வல்ல பதிவுலக மகர நெடுங்குழைகாதன் அருள் புரியணும்!
//GPS-ம் சில சமயம் கழுத்தறுக்கும். //
:) இந்த பயணத்திலும் ஒருமுறை சோளக்காட்டுக்குள் வண்டி ஓட்டிச்செல்லும் நிலைமை ஏற்பட்டது :) கிட்டத்தட்ட 65 மைல்கள்... சுற்றி ரோடே இல்லாத இடத்தில் எல்லாம் வண்டி ஓட்ட வேண்டிய நிலை வந்தது.
பெரும்பாலும் GPS நகரத்திற்குள் சொதப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம். நெடுஞ்சாலைகளில் அதிக நம்பிக்கைக்குரியவைதான் :)
//அவர் கதையில் போன் மணி அடிக்காதுங்க. வீறிடும். :-)//
ஆமாம். அதே மாதிரி அவரோட ஹீரோயின் பெயரை எங்கிருந்துதான் பிடிக்கிறாரோ... ரொம்பவே வித்தியாசமான பெயரா வச்சிருப்பார். :)
//லாஸ் ஏஞ்சலீஸ், லாஸ் வெகாஸ், சான் டியாகோ எல்லாம் ஒவ்வொரு முறையும் காரில் சென்றதுதான். கூடிய சீக்கிரம் நானும் இந்த மாதிரி ஒரு டிரிப் அடிக்க எல்லாம் வல்ல பதிவுலக மகர நெடுங்குழைகாதன் அருள் புரியணும்!//
நான் இருமுறை சாண்டா கிளாராவிலிருந்து சாண்டியாகோவிற்கு சென்றிருக்கிறேன். கிடத்தட்ட 470 மைல் தூரம். I-5 மிகவும் பிடித்த சாலை. நல்ல அனுபவமாக இருந்தது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திருமணம் ஆனபின், சான் ஹோசே யில் இருந்து என்னுடன் இருக்க நியுயார்க் வர அரவிந்துக்கு 3 நாள் ஆனது. சான் ஹோசோ வேலையை டாஜினாமா செய்து கிளம்பியதால், வழியில் என்னுடன் தொலைபேசியதைவிட வேலைக்காக பலரிடம் பேசியது அதிகம். அப்போதெல்லாம் எனக்கு இதன் கஷ்டம், கலைப்பு தெரியவில்லை, என்பதால் கவலையே இல்லாமல் வழக்கம் போல என் வேலைகளை செய்து கொண்டிருந்தேன். இப்போது காரோட்ட அனுமதிக்க மாட்டேன்.
//3 நாள் ஆனது.//
மூன்று நாட்களில் நியூயார்க் என்பது கடினமே. கிழக்கிலிருந்து மேற்கிற்கு பயணித்தால் கிடைக்கும் அதிகமான 3 மணிநேரத்தினால் ஒருவேளை சாத்தியமாகக் கூடும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பத்மா.
4 மணி நேர சாலையோர தூக்கம் மட்டும்தான். அந்த காலத்தில்(ஒரு 15 வருஷம் முன்னால்) இந்த செல்பேசி, இமெயில் வசதி கிடையாது. ஒரு நாளைக்கு ஒரு தடவை எங்கேயாவது ஒரு பொது தொலைப்பேசில் இருந்து ஆய்வகத்துக்கு போன் வரும்.
//4 மணி நேர சாலையோர தூக்கம் மட்டும்தான்//
அது மிகவும் அபாயமானதில்லையோ :)
நான் கணிசமான நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வதை கட்டாயமாக வைத்திருந்தேன். அதுவும் நல்ல விடுதியில் முதல் நாளே முன்பதிவு செய்து ஓய்வெடுத்தேன் :)
அரவிந்த் மிகவும் துணிச்சலாகத்தான் இருந்திருக்கிறார் :)
தனிமையான நீண்ட தூர பயணங்கள் என்றுமே சுவாரசியமானவைதான். அதுவும் gps இல்லாவிட்டால் சுவாரசியத்திற்கு குறைச்சலேயில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்பு, கொலம்பஸிலிருந்து நயாகராவுக்கு 13மணிநேர தனிமையான பயணம், கையில் ஒரு பிரிண்டட் மேப் மட்டுமே, இடையில் சாலைவிபத்தில் நெடுஞ்சாலையை மூடிவிட, ஊருக்குள் புகுந்து கடை-கன்னியில் விசாரிச்சு பலமணிநேர போராட்டத்திற்கு பின்னால் மறுபடியும் வழியில் வந்து சேர்ந்திருந்தேன்.. கொசுவத்தி சுருளை கெளப்பிவிட்டுட்டீங்க.. :-)
//ஊருக்குள் புகுந்து கடை-கன்னியில் விசாரிச்சு பலமணிநேர போராட்டத்திற்கு பின்னால் மறுபடியும் வழியில் வந்து சேர்ந்திருந்தேன்.. //
கரெக்டாக கன்னிகிட்ட போய் விசாரிச்சிருக்கீங்கப் பாருங்க... உங்க நேர்மையை நான் பாராட்டறேன் :))
எனக்கும் அந்த மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டது. சோளக்காட்டுக்குள்ளே வண்டி ஓட்டிட்டு போகவேண்டிய நிலைமை. :)
இந்தப் பதிவோட போஸ்ட் டேட் 25 ஜூலைன்னு காமிக்குது. ஆனா இன்றுதான் ரீடரில் வந்தது..
நல்லா எழுதியிருக்கீங்க ஸ்ரீதர். ஆனா மொத நாளே ரூம் புக் பண்றது எல்லாம் டூ மச்!
//டேட் 25 ஜூலைன்னு காமிக்குது.//
அதே அதே. அப்பவே எழுதினது. ஆனா இப்பத்தான் பப்ளிஷ் பண்ண முடிஞ்சது.
//ஆனா மொத நாளே ரூம் புக் பண்றது எல்லாம் டூ மச்!//
:)) முன் ஜாக்கிரதை முத்தண்ணால்ல நாங்க.
எல்லாம் என்னை பத்தி நல்லா தெரியாத காலம் இல்லையா? ஒரு ஆவல்தான் மனைவியை பார்க்க:)) he did not know what he was getting into! துணிச்சல்காரர்தான், 15 வருடம் சேர்ந்து இருந்தாச்சே:)still going.
//ஒரு ஆவல்தான் மனைவியை பார்க்க:)) //
ஒரு நாயன்மார் கதை நினைவுக்கு வருது. கொட்டும் மழையில் கரைபுரண்டு ஓடும் ஆற்றில் பிணத்தைப் பிடித்துக் கொண்டு நீந்தி மலைப்பாம்பை பற்றி கரையேறி வருவாராம் மனைவியைப் பார்க்க :)) நாயன்மாரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. பிறகு ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
கன்னியின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஓர் மடுவாம் - பாரதிதாசன் பாட்டு கேட்டிருப்பீர்களே. எல்லாம் சேம் பிளட்டுதான் :))
//he did not know what he was getting into! துணிச்சல்காரர்தான், 15 வருடம் சேர்ந்து இருந்தாச்சே:)//
அது சரி :)) He might have burnt the bridges behind.
அடக் கடவுளே, நீங்களுமா இப்படி? டிரைவிங் க்ரேஸ் ரொம்பவே அதிகம் போல....:)
தொடரின் மற்ற பாகங்களையும் படிச்சுட்டு வரேன்.
///ஓடும் ஆற்றில் பிணத்தைப் பிடித்துக் கொண்டு நீந்தி மலைப்பாம்பை பற்றி கரையேறி வருவாராம் மனைவியைப் பார்க்க :)) ///
யாருடைய மனைவியைப் பார்க்க ??:)
இப்படிக்கு
ஒரு அப்பாவி
வாங்க மௌலி!
//அடக் கடவுளே, நீங்களுமா இப்படி//
ஆசைதான் அதிகம். ஆனால் அடிக்கடி பயணம் செய்வது இல்லை. வீட்டுப் பறவைதான் நான் :)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//யாருடைய மனைவியைப் பார்க்க//
ஒரு மூத்தப் பதிவர் மாதிரி பொறுப்பாக நடந்துக்கறீங்களா? என்ன கதைன்னு கண்டுபிடிச்சு சொல்லாம குதர்க்க கேள்வி கேட்டுகிட்டு :)
Post a Comment