’குமார்னு...?’
காம்பௌண்ட் கேட்டுக்கு வெளியே உயரமாக, குளிர்கண்ணாடி அணிந்து கொண்டு, பிரகாசமான புன்னகையோடு, பொங்கி வழியும் கூந்தலை தோள் மீது படரவிட்டுக் கொண்டு நின்றவளைப் பார்த்தால் மதலைகுமாருக்கு அடையாளம் தெரியவில்லை. ஏதாவது விலாசம் விசாரிக்க வந்திருப்பாளோ? பின்னே, லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுக் கொண்டு யார் இந்த விளம்பரப் பலகை நிறுவனத்தைத் தேடி வரப்போகிறார்கள்.
‘போஸு! வாசல்ல யாருப் பாரு’ என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தவர் சட்டென்று ஆளரவம் இல்லாதிருப்பது உணந்தவராய் படியிறங்கி காம்பவுண்ட் கதவருகே போனார். பையன்கள் டீ குடிக்க பக்கத்தில் பாய் கடைக்குப் போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே ‘சொல்லுங்க மேடம்!’ என்றார்.
‘குமார்?’
‘நாந்தாங்க. என்ன வேணும்?’ இவ்வளவு அழகாக, ஆளுமையாக இருப்பதைப் பார்த்தால் சோப்பு, என்சைக்ளோபீடியா விற்க வந்தவள் போல் தெரியவில்லை. அவருடைய ஞாபகப் அடுக்குகளில் பொறி ஏதும் கிளம்பவில்லை.
‘மேடமா? இன்னமுமா தெரியல? இரு நங்கு, நங்குன்னு மண்டையிலேயே கொட்டறேன். ஸ்டுப்பிட்’ கண்களில் விரிந்த வியப்பும், உதட்டில் சிரிப்புமாய் கதவைத் திறந்து கொண்டு காம்பவுண்டுக்கு உள்ளே வந்தவள் ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு ‘அடையாளம் தெரிலியா என்ன? நாந்தான்-பா மதுமிதா... எதித்த வீட்டுல... பாக்கியம் பாட்டி வீட்டுல இருந்தேனே. டால்ஃபின்ல டெண்த் ஸ்டேண்டர்ட் படிச்சோமே. ஞாபகம் வர்ல்லியா?’ கையை ஆட்டிக்கொண்டே கேட்டாள்.
மதலைகுமார் சட்டென தாக்கப்பட்டவரைப் போல கையால் வாயைப் பொத்திக் கொண்டு ‘எதுத்த வீட்டு மதுவா? சில்வர்பிளஸ்ல... ஸ்கூலுக்கு வர்றது... 10 A-ல ஹெச்.பி கிளாஸ்ல...அந்த மதுவா? ஐயோ... ஹைதரபாத் போய் இருவது வருசமிருக்குமே. எப்படி இருக்க..க்க.. இருக்கீங்க... என்னால நம்பவே முடியலயே. நீங்க சினிமா கினிமான்னு பெரிய ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. திடுதிப்புன்னு உங்கள இங்க எதிர்பாக்கவே இல்லயே நானு’ சட்டென்று படபடப்பு அதிகமாகிவிட்டது மதலைகுமாருக்கு.
’என்னது ’ங்க’ ‘நொங்க’ன்னு மரியாதைல்லாம்... வாவ்.. இது என்னது இவ்வளவு பெரிய தொப்பை?’ இயல்பாக மதலைகுமாரின் வயிற்றில் குத்திக் கொண்டே வெளிப்புறம் பாத்து ‘ஷன்முகம்! இந்த வீடுதான். ஆஃப் அன் அவர் வெயிட் பண்ணுங்க’ என்றாள் அப்பொழுதுதான் அந்த பழுப்பு நிற இன்னோவா கார் வாசலில் நின்று கொண்டிருப்பதை கவனித்தார்.
‘உ...உங்க வண்டியா? அந்த ரைட்டு ரோட்டுல நெழலு இருக்கும் பாருங்க. பெரிய வேப்பமரம் இருக்கு. நல்ல பெரிய ரோடுதான். திருப்பிக்கலாம்’
ஏனோ மரியாதை தானாகவே ஒட்டிக் கொண்டுவிட்டது. எவ்வளவு மாறிவிட்டாள். இத்தனை அழகாக, வனப்பாக, எத்தனை போஸ்டர்களில் பார்த்திருக்கிறார். திரைகளில் மின்னும் தாரகையாக ஜொலித்தவள் நேரிலே... கண்ணாடியை கழற்றி விட்டு சிரிக்கும் கண்களோடு அவரைப் பார்த்தாள். அதே கொக்கிபோடும் பார்வை. மதலைகுமார் சட்டென்று சுதாரித்துக் கொண்டு,
‘உள்ளாறக்க வாங்க. இது ஆஃபீஸ் ரூம்பு. இப்படிக்கா வாங்க. தேனு... தேனு... அவளுக்கு உங்க படம்னா ரொம்ப புடிக்கும். இப்பக் கூட டிவி சீரியலல்லாம் வர்றீங்கப் போல. டேய் கோபி, அனு... யாரு வந்திருக்காங்கப் பாரு... நானு அடிக்கடி சொல்லிட்டிருப்பேன். ஏய்ய்ய்... தேனு...’ பதற்றமாக தடுக்கியபடி படியில் ஏறினார்.
‘மெல்ல... மெல்ல... குமார். மாடியெல்லாம் புதுசா இருக்கு. எப்பா... எவ்ளோ மாறிடுச்சு இங்க. முகுந்த் வீட்டுப்பக்கம் சூப்பர் மார்க்கெட்டெல்லாம் வந்திடுச்சுப் போல. அந்த வீட்டுல முன்னாடி பஜனை எல்லாம் நடக்கும்ல. இவங்கதான் வொய்ஃபா?’
டீ குடிக்கப் போயிருந்த பையன்கள் எல்லாரும் போர்டு வரைந்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்குள்ளே கூடிவிட்டார்கள். ‘மதுமிதாப்பா... சிகப்பு மல்லியில வருவாங்களே... கண்ணாடி பாப்பா போடாதே தாப்பா டான்ஸுல... அவங்களேவா? இல்ல டூப்பா? எல்லாத்துக்கும் டூப்பு உண்டு தெரியும்ல’ என்று பல கிசுகிசுப்புகளுக்கிடையே மது சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கர்சீப்பால் நெற்றியை ஒற்றிக் கொண்டாள். குழந்தைகளைப் பார்த்து ‘ஹாய் குட்டீஸ்’ என்று கைப்பையிலிருந்து குண்டு சாக்லேட்டுகளை நீட்டினாள்.
‘சத்தியம் சீரியல்ல வருவாங்களே ஆர்த்தியாம்மா இவங்க...’ ஆச்சர்யத்தோடு கேட்டான் கோபி.
‘ஆமாம்டா. முந்தாநேத்து விஜய் டிவியில சரத்குமார் படத்துல பாத்தோமே. போலிஸா வருவாங்களே. அவங்கதான்.’ தேன்மொழி சிரித்துவிட்டு ‘அய்யோ... மேடம் நீங்களா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க.. ஒரே ஷாக்கிங்கா இருக்கு. இருங்க லைட்டெல்லாம் போடறேன். அனு ஏஸியைப் போடு கண்ணு’ பெட்ரூமில் இருக்கும் ஏஸியின் குளிர்ச்சி கூடத்துக் வராவிட்டாலும், ஏஸி இருக்கும் செய்தி வருவது தேன்மொழிக்கு போதுமானதாக இருந்தது.
‘ரிலாக்ஸ். ரிலாக்ஸ். ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த தெருக்கு வர்றேன். எப்பவும் டைட் ஷெட்யூல்லயே இருந்ததுனால நெனச்ச இடத்துக்கு போறது ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. பாட்டி இறந்தபோது கூட அவுட்டோர்ல மாட்டிகிட்டேன். ப்ச்ச்ச்... ஓல்ட் மெமரிஸ். உங்க முழுப்பேரே தேன்தானா. ரொம்ப ஸ்வீட்டா இருக்கீங்க’
’தேன்மொழிங்க’ பதில் சொல்லும்போதே மயிர்காலெல்லாம் குத்திட்டுவிட்டது தேன்மொழிக்கு. ‘இவர் அப்பப்ப சொல்லுவாரு.. நீங்க எதுத்தாப்புல பாட்டி வீட்டுல இருந்து படிச்சீங்கன்னு. நான்லாம் சும்மா கத விடறாருன்னு நம்பவே இல்ல. இந்தூருல எங்கிட்டு நீங்கள்லாம் இருந்திருப்பீங்கன்னு’
‘ஓ! கமான் தேன்! குமார், திவ்யா, ஷெரீன், முக்தா, முகுந்த், கண்ணன் பெரிய செட்டே இருந்தோம். இல்ல குமார்? இப்ப இந்தத் தெரு எல்லாம் நிறைய மாறிடுச்சு. அப்ப பரமசிவம் கடை மட்டும்தான் இருக்கும். இப்ப வரும்போது மூணு நாலு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பாத்தேன். கிரீஷ் எல்லாம் எப்படி இருக்கான் குமார்? கிரிக்கெட்ல அவந்தான் எனக்கு பௌலிங் எல்லாம் சொல்லிக் கொடுத்தான்ல. லெக்ஸ்பின், கூலி.. இல்ல காலியா... என்னல்லாமோ சொல்லிக் கொடுத்தான்... ’ கைகளை மார்பில் வைத்துக் கொண்டு சிரித்தவள் ‘நான் பந்து போடும்போது பேட் பண்றதுக்கு பசங்க எல்லாரும் போட்டி போடுவாங்க. இல்ல குமார்? திவ்யாக்கு கூட ஒருதடவ கை ஃப்ராக்சர் ஆகிருச்சுல்ல’
’ஃப்ராக்சர் எல்லாம் இல்ல... ஜஸ்ட் மூட்டு விலகிருச்சு. பந்து பிடிக்கப் போய் மோதி விளுந்திருச்சு’ என்று சிரித்தார் மதலை.
‘ஹேய்.. நீதான அவளப் பிடிச்சு தள்ளின’ விடாமல் சிரித்ததில் புரைக்கேறியது மதுமிதாவிற்கு. ’குமாருக்கும் திவ்யாவுக்கும் ஆகவே ஆகாது. எப்பவும் செம சண்டை ரெண்டு பேரும்’ மதலைகுமார் மூக்குக்கண்ணாடியைப் பின்னால தள்ளிவிட்டுக் கொண்டு சிரித்தார். ‘அப்படில்லாலில்ல’
’நிறையப் பேசனும் குமார். நீ நல்லா வெயிட் போட்டுட்ட. ஆனாலும் பேச்செல்லாம் அப்படியேதான் இருக்கு. இன்னமும் மஞ்சப் பையத்தான் தூக்கிட்டுப் போறியா?’
இப்பொழுது விடாமல் சிரித்தது தேன்மொழி.
‘சொன்னா கேக்கவே மாட்டார்மா. நல்லதா நாலு பை இருந்தாலும் ஏதாவது மஞ்சபைதான் ஸ்கூட்டர்ல வச்சிருப்பார் இன்னமும். ஐயோ... நீங்களா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க...’ இருபத்தேழாவது தடவையாக நம்ப முடியாமல் திணறினாள் தேன்மொழி.
’ஹலோ! உன் பேரு என்ன?’
‘அனு. அனுமிதா’
‘ஸ்வீட் நேம். மதுமிதா - அனுமிதா ரைமிங்கா இருக்குல்ல’ மதலைகுமார் சங்கடமாக நெளிந்தார். தேன்மொழி மேலுக்கு சிரித்தாலும், அவள் உள்ளுக்குள் புரண்டு கொண்டிருக்கும் பூகம்பத்தை மதலைகுமார் உணராமலில்லை.
’நாளைக்கு காலையில ஜெவெல்லரி ஷாப் இனாகுரேஷன் இருக்கு குமார். ராகமாலிகா குரூப்போடது. எர்லி மார்னிங் முகூரத். ஈவ்னிங் சி ஆர் ஸ்டேடியம்ல புரோகிராம் இருக்கு.’
வாசலைப் பார்த்து ‘ஷண்முகம்.... காம்ப்ளிமெண்டரி பாஸ் காரில இருக்கும் பாருங்க’
‘பக்கத்துல பார்க்கிங் போட்டுகிட்டிருப்பார். நான் போய் கூட்டிட்டு வாறேன்’
வெளியே வந்தவர் போஸைக் கூப்பிட்டு ‘சுகுமாரு கடையில போய் நல்லதா ரெண்டு எளநீ நல்ல தண்ணிக்காயா வெட்டிட்டு வாடா’
‘நெசமா மதுமிதாவா சார் இது. செந்திலு டூப்புனு சொல்றாப்புல’
’நானே இருவது வருசம் கழிச்சுதான் இப்பதான் நேர்ல பாக்குறேன். டூப்பு டாப்புன்னிட்டு. அப்படியே கரும்புச்சாறும் ரெண்டு கிளாஸ் வாங்கிக்க. அதுக்கு ரொம்ப பிடிக்கும். பணம் வச்சிருக்கியா?’
‘இருக்கு சார். நீங்களும் அவங்களும் ஒரே கிளாஸ்லயா சார் படிச்சீங்க?’ வியப்போடு கேட்டான்செந்தில்.
‘ம்ம்.. ஆமாம்டே. போயிட்டு வெரசா வாங்கப்பா. பல ஜோலிக்காரவுங்க, கால்ல வெந்நீத்தண்ணி விட்டுகிட்டுத்தான் வருவாங்க. அப்படியே அந்த இன்னோவால டிரைவரு இருப்பாரு. வரசொல்லிட்டுப் போயிரு.’
‘எது்னா சாப்புடறீங்களாங்க? ஏங்க.. கேளுங்க நீங்க... வெய்யில்ல வந்திருக்காங்க’ தேன்மொழி மதலைகுமாரை தூண்டினாள்.
’எல்லாம் வந்தி்ட்டே இருக்கு.’ புன்னகையுடன் சிரித்தவர் ‘எதுனா பலகாரம் கொண்டு கொடு’ என்றார்.
‘இருக்கட்டும் தேன். சினிமால இருந்தப்ப ஓடிட்டே இருந்தாச்சு. இப்பத்தான் பழச எல்லாம் அசை போடத் தோணுது. வி ஹட் லாட் ஆஃப் ஃபன் இல்ல குமார். எல்லாரையும் ஒரு வாட்டி மீட் பண்ணனும் குமார்’
‘காலனி அசோஷியேஷன்ல ஒரு ஃபங்ஷன் வச்சிருவோம்ங்க. அனுவல் டே கூட வருது. அப்ப வந்தா எல்லாரையும் கண்டிப்பா பாக்கலாம்’
‘ஓ.. யா... அனுவல் டேல எவ்ளோ கலாட்டா பண்ணியிருக்கோம். டேட்ஸ் பாத்து கண்டிப்பா சொல்றேன்.’ என்றாள்.
இளநீரோடு வரும்போது போஸ் நியுடோன் ஸ்டுடியோ ரஃபீக்கையும் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான். வரிசையாக எல்லாரும் மதுமிதாவோடு படம் எடுத்துக் கொண்டும், ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டுமிருக்க, அவளும் சளைக்காமல் சிரித்துக் கொண்டே ஒத்துழைத்தாள். மதலைகுமாரின் தோளைப் பற்றி பக்கத்திலேயே நிறுத்திக் கொண்டாள். இன்னும் நல்ல சட்டையாக மதலைகுமார் போட்டிருந்திருக்கலாம் என்று தேன்மொழி நினைத்துக் கொண்டாள்.
‘நடிக்கிறதை விட ரசிகர்களை சமாளிக்கிறதுதான் பெரிய கஷ்டம் போல’ என்றார் மதலைகுமார்.
‘பட் அதுதான் இன்ஸ்பிரேஷனும் கூட’
‘நீங்க எல்லாரும் கண்டிப்பா ஃபங்க்ஷனுக்கு வரனும். நானும் பெர்ஃபார்ம் பண்றேன். அனு நீ டான்ஸ் ஆடுவியா குட்டி? குமார் கூட பாட்டு எல்லாம் பாடியிருக்கான் ஃபங்ஷன்ல. என்ன பாட்டு குமார் அது?’
பத்தாவது வகுப்பு படிக்கும்போது ஆண்டு விழா கொண்டாட்டத்தில், மின்னி மறையும் விளக்கொளியில் குதிரைவால் கொண்டையோடு மதுமிதா வெண்ணிலவை விண்ணைத்தாண்டி இறங்கி வரச் சொல்லியபடி காஜோலைப் போல் குதித்தாடியதும், மதலைகுமார் உள்ளங்கை வியர்வையில் கசங்கிய காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு ‘உன் பார்வையில் ஓராயிரம்’ என்று பாட்டு பாடினதும் நன்றாகவே ஞாபகத்தில் இருந்தது அவருக்கு. மைக்கில் குரல் கரகரப்பாக வேறு மாதிரி ஒலித்தது. மதுமிதா மட்டும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது போல் நிறைய நாட்களுக்கு எண்ணிக் கொண்டிருந்தார். அவள் ஹைதரபாத் போற வரைக்கும் அந்தக் கனவு இருந்தது.
‘பக்கத்து தெருல இருந்த டோபியெல்லாம் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க... ஆனா அவங்க கழுதையெல்லாம் போகவேயில்ல குமாரோட பாட்டைக் கேட்டுட்டு’ மதுமிதா தொடர்ந்து சொல்ல எல்லாரோடு சேர்ந்து மதலைகுமாரும் சிரித்தார்.
’சத்தியம் பாக்கிறீங்களா தேன்? இன்னும் நிறைய புதுசா கொண்டு வரப்போறோம். தொடர்ந்து பாருங்க. குட்டீஸ்ஸும் பாக்கிறாங்களா? புதுசா காமெடி எல்லாம் ட்ராக் பண்ணிகிட்டிருக்காங்க. ’தவளை’ முருகன்னு மிமிக்ரி ஆர்டிஸ்ட் வரப்போறார். கோபிக்கு எல்லாம் ரொம்ப புடிக்கும். நானும் கிரியேட்டிவ் டீம்ல ஆக்டிவ் ஆயிட்டேன் இப்பல்லாம்’ சிரித்துக் கொண்டே மதலைகுமாரைப் பாத்து ‘நீ பாக்கிறதில்லையா குமார்?’
‘எங்க... இங்கிட்டு வாசல்லேயே ஆபிசு வச்சிருக்கேன். நாள் மூச்சூடும் வேலதான். பண்டிக சீசன்ல பெண்டு நிமிந்திரும். அப்பப்ப உங்க சீரியல் பாக்குறதுதான்.’
‘சரி நான் கிளம்பறேன் குமார்’ என்று சொல்லிவிட்டு, தேன்மொழியை அணைத்துக் கொண்டுவிட்டு, கோபிக்கும், அனுவிற்கும் முத்தம் கொடுத்துவிட்டு மதலைகுமாரின் கையைப் பற்றி குலுக்கிவிட்டு காரிலேறி சென்றாள்.
‘கல்யாணம் ஆயிருச்சா என்ன அவங்களுக்கு’ தேன்மொழியின் கேள்விக்கு பதில் தெரியவில்லை. ‘இப்ப என்னாத்தை கேட்டுட்டேன்னு இந்த முறை முறைக்கறீங்க’
அடுத்த ஒரு மாதமும் தேன்மொழி எல்லா இடங்களிலும் மதுமிதா புராணம்தான் பாடிக் கொண்டிருந்தாள். ‘புடவை கம்பூட்டர் டிசைந்தாண்டி ஆனா அவங்க கலருக்கு எடுப்பா இருந்திச்சு. ரெண்டாயிரத்துக்கு மேல இருக்காது’ மதுமிதாவின் வாசம் இருந்து கொண்டே இருந்தது அந்த வீட்டில்.
ஆறேழு வாரங்களாக நகராட்சி அதிகாரியோடு மாரடித்துக் கொண்டிருந்த கமிஷன் தகராறை பைசல் பண்ணி அச்சாரம் கொடுத்துவிட்டு மதலைகுமார் வீட்டுக்கு திரும்பியபோது தேன்மொழி பூ தொடுத்துக் கொண்டே தொலைக்காட்சித் திரையில் ஒன்றிப் போயிருந்தாள். ‘சத்தியம்’ தொடர் ஓடிக் கொண்டிருந்தது.
மூக்கின் மேல் கண்ணாடியை தள்ளிவிட்டுக் கொண்டு மதலைகுமாரும் அவர்களுக்கிடையேப் போய் உட்கார்ந்து கொண்டு ‘என்னா கதைம்மா போயிட்டிருக்கு? மது வருதா இன்னைக்கு?’ என்றார்.
’ஆமாம். அவங்கள ஜெயில்ல போட்டு பத்திரம் எல்லாம் மாத்திடறாங்க. பாவம்.’ என்றவள் சட்டென சிரிப்பு தொற்றிக்கொள்ள ‘தவளை முருகன் இருக்காரில்லங்க. அவர்தான் மதுவோட மாமா. காமெடி மிமிக்ரி எல்லாம் பண்ணுவாரே... அவரேதான். மதுவை பெயில்ல கூட்டிட்டு வர்றாரு. லவ்ஸ் பாட்டு எல்லாம் பாடறாப்புல. பாருங்க’
டிவித் திரையில் ’தவளை’ முருகன் மஞ்சள் நிறச் சட்டை அணிந்து கொண்டு, ஹார்மோனியத்தை வாசித்துக் கொண்டே, மதுமிதாவைப் பார்த்துப் பாடுகிறார் ‘உன் பார்வையில் ஓராயிரம்...’.
அவர் ரொமாண்டிக்காக பார்த்துக் கொண்டு பாடுவதை பார்த்து கோபியும் அனுவும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ‘செம காமெடிப்பா இந்தாளோட’ என்று தேன்மொழியும் சிரிக்கிறாள்.
o0O0o0O0o0O0o0O0o0O0o0O0o0O0o0O0o0O0o0O0o0O0o0O0o
கல்கி நினைவு சிறுகதைப் போட்டிக்கு எழுதியது. போட்டியில் தேர்வாகவில்லை. நிறைய மாற்றங்களோடு இங்கே பதிந்திருக்கிறேன். எல்லாம் நீங்க படிப்பீர்கள் என்ற தைரியம்தான் :)போட்டிக்கான இறுதி தினம் வரை எதுவும் எழுதாமல் இழுத்தடித்துவிட்டு கடைசி நிமிடத்தில் எழுதியது.
இந்தக் கதையை காகிதத்தில் பிரதி எடுத்து கல்கி அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பி உதவி செய்து, முடிவுகள் தெரிவிக்கப்பட்டதும் ஞாபகமாக தொடர்புகொண்டு தெரியப்படுத்திய நண்பர் என். சொக்கனுக்கு நன்றிகள் பல.

26 மறுமொழிகள்:
:-)
நல்லா இருக்கு கதை! நல்லதே பிடிக்காது சிலருக்கு.. நாம என்ன பண்ண :-)
மதலைக்குமார் - பேரே வித்தியாசமா இருக்கு.
-------------------
முழுசா படிச்சாச்சி பாஸ்.
ஒகே.. அப்படியே நான் கூட ரெண்டு கதை எழுதியிருக்கேன்.. வந்து பாத்துட்டு ஒரு கருத்த சொல்லுங்க..
விகடன் கையில வாங்கினது மூச்சு விடாம படிக்குற மாதிரி உங்கபதிவை பார்த்ததும் வேலையை மறந்துட்டு படிக்க வேண்டியிருக்குது.
வழக்கமான சுவாரஸ்ய நடை, கதாபாத்திர அறிமுகம் எல்லாம் இருந்தும் ஏதோ ஒண்ணு குறையறா மாதிரியே இருக்குது.
ஒருவேளை குமாரோட ஃபீலிங்க் எனக்கு சரியா புரியலைன்னு நினைக்குறேன். :-(
When Madhumitha is a popular actor, how come Kumar could not recognise her in the begining??
:)
//புண்ணகையுடன் சிரித்தவர் //
யு மீன் புன்னகை? :))
புண்ணாக்கு - இதுக்கு தான் மூனு சுழி ண.
கதை நல்லா இருக்கு. கடைசில ஏதோ மிஸ்ஸாகற மாதிரி இருக்கு.
ஒரு வேளை எங்க வாசிப்பனுபவத்தை நீங்க உயர்த்தி விட்டதால் அப்படி தோணுதோ என்னவோ? (மீதியை ஜ்யோவ்ராம் சுந்தர் வந்து கும்முவார்) :))
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்
வாங்க யாத்ரீகன்!
:) :) உங்க வருகைக்கும் சிரிப்புக்கும் மிக்க நன்றிகள்.
பினாத்தல் சார்!
//நல்லா இருக்கு கதை! நல்லதே பிடிக்காது சிலருக்கு.. நாம என்ன பண்ண :-)//
:)) ’கால்குலேட்’ பண்ணி கமெண்ட் போட உங்கள விட்டா ஆளே இல்லையே :)
ஆனா... இந்த கதையை ஆரம்ப வடிவத்திலேந்து நிறைய மாற்றிவிட்டேன். அது சாதகமா பாதகமான்னு இரண்டு வடிவமும் படிச்ச சொக்கன் வந்து சொன்னாத்தான் தெரியும்.
உங்க வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி.
வாங்க ஜமால்,
ஆமாம். வித்தியாசமான பேருதான் :) ஒரு நண்பருண்டு அந்தப் பேருல.
வாங்க சங்கர்!
கண்டிப்பாக படிக்கிறேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க சென்சஷி!
:) விகடன் மாதிரி உள்ளடக்கம் ஒண்ணுமில்லைன்னு சொல்றீங்கன்னு புரியுது.
முடிவை நோக்கி கதை நகர்வதை தவிர்க்க முயற்சி செஞ்சேன். ஆனாலும் உள்ள ஒரு சின்ன லாஜிக் முடிச்சு இருக்கத்தான் செய்யுது. மொழி நடை இன்னமும் யதார்த்தமா இருந்தா நல்லா இருந்திருக்குமோ என்னவோ.
முயற்சி பண்ணிட்டேயிருக்கேன் பாஸ் :)
//how come Kumar could not recognise her in the begining??//
பிரபலமானவங்க முன்னறிவிப்பு இல்லாம, நேர்ல, எதிர்பார்க்காத தருணத்தில, தனியா வந்தா உடனே கண்டுபிடிச்சிற முடியாது. :) இல்லையா?
வாங்க சங்கர்ஜி!
டாங்க்ஸ் ஃபார் த ஸ்மைல் :)
வாங்க அம்பி!
//கதை நல்லா இருக்கு. கடைசில ஏதோ மிஸ்ஸாகற மாதிரி இருக்கு.//
ஆமாம். நீங்க என்ன ‘ண’கரப் பிழை கண்டுபிடிப்பீங்களோகிற பயத்துல கிளைமேக்ஸை வைக்கல :))
பார்வைக்கு - perspective ன்னும் ஒரு அர்த்தம் உண்டில்லையா... என்னதான் நண்பர்களா இருந்தாலும் அவளோட perspective-ல எப்படிங்கிறதுக்கு அந்த சீரியல் காட்சி ஒரு உதாரணமாச் சொல்லியிருந்தேன். அவ்வளவுதான்.
கதைக்கெல்லா விளக்கம் சொன்னா நிஜமாகவே ஜ்யோவ்ராம் கும்முவார். :)
ஸ்ரீதர், விறுவிறுப்பா கதை சொல்லியிருக்கீங்க. சரி, அதைத் தாண்டிப் பார்த்தால்... மிகச் சாதாரணமான பத்திரிகைக் கதை; அவ்வளவுதான்.
அப்புறம், இந்தக் கடைசி நேர பரபரப்பை விடவே மாட்டீங்களா... (சுஜாதா நினைவுப் போட்டிக் கதைக்கும் இப்படித்தான் ஆச்சு). அதுவே பல பிரச்சனைகளுக்குக் காரணம்னு நினைக்கறேன்.
//அதுவே பல பிரச்சனைகளுக்குக்//
அதெல்லாம் கூடவே பொறந்த குணம். அப்படி ஒரு நேர நெருக்கடி இருந்தாத்தான் கவனம் குவியுதுன்னு நினைக்கிறேன் (எனக்கு) :))
மாத்திக்க முயற்சி செய்யறேன் :)
//ஒருவேளை குமாரோட ஃபீலிங்க் எனக்கு சரியா புரியலைன்னு நினைக்குறேன். :-(//
எனக்கும் இதே..
அதோடு முடிவும் கொஞ்சம் தட்டையா இருப்பதாக தோன்றுகிறது.
மற்றபடி கதையின் வேகமும், உரையாடல்களும் அருமை..
நல்லா இருந்தது ஸ்ரீதர். தூக்கலா சுஜாதாவோட வாசனை. சுஜாதாவ ரொம்பப் படிச்சவங்க அத தவிர்க்கவும் முடியாதுதான். மதுமிதாவின் மீது மதலைகுமாருக்கு இருந்த பதின்ம வயது காதல்,அதை எரி்ச்சலாக உணர்ந்து கணவனை காமெடியனுடன் மறைமுகமாக ஒப்பிட்டுச் சிரிக்கிற தேன்மொழி..ன்னு நல்லாவே வந்திருக்கு. ஆனா... ஏதோ ஒரு குறை இதை நிறைவான படைப்புன்னு சொல்ல வர்றத தடுக்குது. அத மாத்திரம் கண்டுபிடிச்சுட்டோம்னா... :-)
//அதோடு முடிவும் கொஞ்சம் தட்டையா இருப்பதாக தோன்றுகிறது.//
வாங்க புபட்டியன்!
உங்க பேரை எப்போ படிச்சாலும் எனக்கு அது என்ன ‘புபட்டியன்’னு கேள்வி மனசுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு. :)
முடிவு ‘சுள்’ளுன்னு வரணும்னுதான் முயற்சி பண்ணினேன். இன்னமும் யோசிக்கனுமோ என்னவோ :) அடுத்த முறை நன்றாக முயற்சிக்கிறேன்.
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//அத மாத்திரம் கண்டுபிடிச்சுட்டோம்னா... :-)//
வாங்க சுரேஷ். அத மாத்திரம் கண்டுபிடிச்சிட்டோம்னா... ம்ம்ம்ம் :))
ட்விட்டரில உங்களப் பத்திதான் பேசிட்டு இருந்தோம். பொக்கிஷம் பாத்துட்டீங்களா?
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே வந்து சப்புனு முடிஞ்சுட்டா மாதிரியிருக்குங்கோ!
//சில்வர்பிளஸ்ல// இந்த ஒரு வார்த்தையில் ஒர் 15 வருஷம், 500 கி.மீ பின்னாடி போயிட்டேன்! படிக்கத் தூண்டும் சுவாரசியமான நடை! இன்னும் உங்ககிட்ட அதிகமா எதிர்பார்க்கிறேன்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
Oru velai neenga kalkila reject aagiruchunnu eludirukka koodaatho??
Ada enna than korayudhunnu ungalukkaavadhu theriyuma??
Enakku therinju:
1. Antha kumaroda irukkuravangalaam idhu madhumitha dupe oh nnu nenachadhu konjam naadakathanama irundhuchu..
2. Madhumitha engalaam varuvaangannu sonnadhu konjam neraya sonna maadhiri irundhuchi.. idhu naddola vandhadhaala konjam momentum korachiduchu..
Aanaal starting super... 'Kumarnu...' super..
Madhumitha...Anumitha & selection of songs so good.
//சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே வந்து சப்புனு முடிஞ்சுட்டா மாதிரியிருக்குங்கோ!//
வாங்க மௌலி சார்! ஃப்ரீயா விடுங்க... அடுத்த கதையில சரி செஞ்சிடலாம் :)
//இந்த ஒரு வார்த்தையில் //
வாங்க வெங்கிடரமணன். ஒளி ஆண்டு கணக்கு மாதிரி அது என்ன 15 வருஷத்துல 500 கிமிதான் பின்னாடிப் போக முடிஞ்சதா? :)
நானும்தான் அதிகம் எதிர்பாக்குறேன். வர்றதுதான் இம்புட்டுத்தான் :) முயற்சி செய்யறேன் சார்.
வாங்க ஸ்ரீ!
எழுதற வரைக்கும்தாங்க குறை / நிறை எல்லாம் யோசிக்கிறது. எழுதி முடிச்சபிறகு வாசகர்கள் சொல்றதுதான் தீர்ப்பு :)
உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி :)
// dupe oh nnu nenachadhu konjam naadakathanama irundhuchu..//
அம்மாதிரி நினைத்த நண்பர்களைப் பார்த்திருக்கிறேனே :)
ட்விட்டர் விவாதம் தொடர்பாக பின்னூட்டமிட்ட அனானி அன்பரே!
நீங்களே பதிவிற்கு சம்பந்மில்லை என்று சொல்லிவிட்டதால் பின்னூட்டத்தை வெளியிட முடியவில்லை.
மற்றபடி உங்கள் தகவலுக்கு நன்றி. நானே சினிமா பற்றி பல குப்பைச் செய்திகளை தேவையில்லாமல் சுமந்து கொண்டிருக்கிறேனோ என்று நினைத்தால் நீங்கள் இன்னமும் ஒரு படி முன்னேறி கரகாட்டகாரன் கார் ரேஞ்சிற்கு பல விஷயங்கள் கைவசம் வைத்திருப்பீர்கள் போலிருக்கிறதே :)
வருகைக்கு நன்றி.
//பிரபலமானவங்க முன்னறிவிப்பு இல்லாம, நேர்ல, எதிர்பார்க்காத தருணத்தில, தனியா வந்தா உடனே கண்டுபிடிச்சிற முடியாது. :) இல்லையா?//
அட முன்னறிவிப்போட வந்தாலே கண்டுபிடிக்கமுடியாதுங்க - ஒரு விழாவிலே எல்லாரும் ராகுல் திராவிடுக்காகக் காத்திருந்தோம், அவர் என் கண் முன்னாடி ரெண்டு அடி தூரத்தில நடந்து போறார், எங்களுக்கு சுத்தமா அடையாளம் தெரியலை, பலர் அவர் தாண்டிப் போனப்புறம் தெரிஞ்சுகிட்டு மொபைல் கேமெராவை எடுத்து அவர் முதுகைமட்டும் படம் பிடிச்சாங்க :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
பதிவைப் படிகாம நேரப் பின்னூட்டம் படிச்சு கமெண்டுப் போடும் குரூப்புல நீங்களும் சேந்திட்டீங்கப் போல :)
சரி கதை உங்களைக் கவரவில்லைப் போல :)
//- என். சொக்கன்,
பெங்களூர்.//
குர்கானிலிருந்து கமெண்ட் போட்டிருந்தா ‘குர்கான்’ன்னு போடுவீங்களோ? சும்மா ஒரு சந்தேகம்தான்.
Post a Comment