மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6
இரண்டாம் நாள் - 26 ஜூலை 2009 - ஞாயிற்றுக்கிழமை
சென்ற பகுதியில் சொன்னது போல ஒரு தீவிர ஜென் கதை முயன்றுப் பார்க்கலாம். ஒரு ஜென் துறவியும், அவரது சீடரும் காரில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். நீண்ட நெடிய சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது சீடருக்கு ஒரு சந்தேகம். குருவிடம் கேட்கிறார் ‘இந்தச் சாலை எங்கேப் போகிறது?’ என்று. குரு பதில் சொல்லவில்லை. இன்னமும் கொஞ்ச தூரம் பயணிக்கிறார்கள். வந்த பாதையை திரும்பி பார்க்கும் சீடருக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. இப்பொழுது குருவிடம் கேட்கிறார். ‘இந்தச் சாலை எங்கிருந்து வருகிறது?’. குரு மௌனமாக இருக்கிறார். சட்டென சீடருக்கு ஞானோதயம் பிறக்கிறது. குருவிடம் சொல்கிறார் ‘இந்தச் சாலை எங்கிருந்து வருகிறதோ, அங்கேயேதான் போகிறது’. இதைக் கேட்டவுடன் ஜென் குரு சீடரை குண்டுகட்டாக தூக்கி காரிலிருந்து கீழே போட்டுவிடுகிறார்.
ஜென் கதைகளுக்கு தத்துவ விளக்கங்கள் எல்லாம் சொன்னால் அதன் வசீகரம் போய்விடும் என்பதால் நாம் பயணத்திற்கு மீண்டும் வருவோம்.
முதல் நாளிரவு உறங்கச் செல்லும்போது இன்னமும் இரண்டாயிரம் மைல்கள் செல்ல வேண்டுமே என்ற மலைப்பாக இருந்தது. அடுத்த நாள் செல்ல வேண்டியது நெப்ராஸ்கா (Nebraska)மாநிலத்தின் ஒமாஹா (Omaha) நகரம். வாரன் பஃபே-வின் ஊர். ஞாயிற்றுக்கிழமை பஃபே-யின் ஊரில் தங்கினால் யதேச்சையாக எங்கேயாவது அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்து போகிற போக்கில் அவரும் பெர்க்ஷைரில் ஒரு நூறு பங்குகளை பரிசாக... ம்ஹ்ம்ம்ம் முடியாது. உப்பேரியிலிருந்து (Salt Lake City) ஒமாஹா தொள்ளாயிரத்து மைல்கள் சொச்சம். ஒரே நாளில் அவ்வளவு தூரம் பயணிப்பது சாத்தியப்படாது என்பதால் ஒமாஹாவிற்கு ஐம்பது மேல்கள் மேற்கே நெப்ராஸ்காவின் தலைநகரம் Lincolnல் தங்கலாம் என்று முடிவு செய்தேன். அங்கே தேடிப் பார்த்ததில் I-80 நெடுஞ்சாலைக்கு அருகிலேயே Econo Lodge ஓரளவிற்கு கட்டுபடியாவது போல் இருந்தது. மறுநாள் இரவுக்கு அறை முன்பதிவு செய்துவிட்டு படுத்தேன். மரக்கட்டை போல் சரியான தூக்கம்.
ஞாயிறு காலை ஒன்பதரைக்குத்தான் புறப்பட முடிந்தது. அமெரிக்க காலையுணவாக ஆங்கிலேய மஃபினையும், எருமைக் கண் (bull's eye) அரைவேக்காடு முட்டையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டு அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கினேன். கனரக வாகனங்களும், மலைப்பாம்பு போல் நீண்ட ட்ரக்குகளும் சுற்றி வர நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தேன். அந்த நெடுஞ்சாலையின் அதிகபட்ச வேகமே எழுபத்தைந்து மைல்கள்தான். அடுத்த லேனில் வந்து கொண்டிருந்த முப்பத்தியிரண்டு சக்கரங்கள் கொண்ட நீண்ட டாங்கர், எண்பது மைல் வேகத்தில் விரட்டிக் கொண்டு வந்தது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் டூயல் (duel) படம் ஏனோ ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது. சிறிது தூரத்தில் தனது சகாவான இன்னொரு ட்ரக்கை சந்தித்ததும் சமர்த்தாக வலதுபக்க லேனிற்கு மாறி ஊர்ந்து செல்லவாரம்பித்தார். ஆங்காங்கே ‘மான்கள் ஜாக்கிரதை’ என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். வலது பக்கம் மலை முகடும், இடது பக்கம் சமவெளியுமாக அருமையான இயற்கை காட்சி கண்முன்னே விரந்தது. மலைக்காட்டில் மான்கள் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும். அவற்றின் வசிப்பிடத்தில் நாம் சாலைகளால் ஊடுருவியிருப்பது தெரியாமல் சிலசமயம் சாலைக்கு குறுக்கே வந்து வாகனங்களில் அடிபட்டுவிட வாய்ப்பு உண்டாம். வழியில் ஆறேழு இறந்த மான் உடல்கள் கிடந்ததை பார்க்க நேரிட்டது. பெரிய ட்ரக்குகளில் அடிபட்டால் வண்டியை நிறுத்திவிட்டு ஓரமாக இழுத்துப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். சிறிய கார்களின் மேல் இருநூறு பவுண்டு மான் வந்து மோதினால் என்னாவது? நல்லவேளை, அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ’வாழ்க நீ எம்மான்’ என்று அம்மான்களை வாழ்த்திவிட்டு, யூட்டாவை (Utah)கடந்து வயோமிங் மாநிலத்தில் நுழைந்தேன். பெரிய நிலபரப்பும், குறைந்த மக்கள்தொகையும் கொண்ட மாநிலம்.
cruise controlல் அதிகபட்ச வேகத்தை அமைத்துக் கொள்ளாததினால் என்னையறியாமலேயே ஆக்ஸிலேட்டரை அழுத்திக் கொண்டு மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தேன். வையோமிங்கின் எல்லைப்பகுதியில் வரிசையாக கார்களை தாண்டிக் கொண்டே ஐயோவா (Iowa)விற்குள் நுழையும் நேரம் ஒரு காவலர் சிவப்பு/நீல விளக்குகள் சுழலவிட்டுக் கொண்டே காரில் துரத்திக் கொண்டு வந்தார். ஆஹா... ஆப்பு ஆலவட்டம் போட்டுகிட்டு வருகிறதே என்று வண்டியை ஓரம் கட்டினேன்.
என்னைத் தாண்டி சென்ற போலிஸ் வண்டி சில நூறடிகளில் நின்று, அரைவட்டக் கண்ணாடியும், முழு மொட்டையுமாக இளவயது போலிஸ்காரர் ஒருவர் இறங்கினார். வண்டி பக்கத்தில் ஒயிலாக நின்றுகொண்டு விரலை அசைத்து என்னை அருகில் வரச் சொன்னார். அமெரிக்க போலிசாரிடம் ஒரு விசயத்தில் நல்ல அனுபவம் உண்டு. வண்டியை நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டு கூடுமானவரை இருக்கையிலேயே (சீட் பெல்ட்டோடு) இருந்து விடவேண்டும். சலாமடிக்கிறேன், வணக்கம் சொல்கிறேன் என்று காரிலிருந்து தடால் புடால் என்று இறங்கினால் நாம் ஏதோ எதிர்ப்பு காட்டுகிறோம் என்று பரபரப்படைந்து கச்சா முச்சாவென்று கத்துவார்கள். மதுரையில் ஒருமுறை பைக்கிலிருந்து இறங்கி நின்று பதில் பேசவில்லையென்று போலீஸ்காரர் ‘துரைக்கு இறங்கி நின்னு பேசத் தெரியாதோ’ என்று மிரட்டியது ஞாபகம் வந்தது. இந்தப் போலிஸ்காரர் விரலை ஆட்டி ’வா அருகே’ என்றது என்னையல்ல, காரைத்தான் என்று ஒரு மாதிரி புரிந்து கொண்டு அவரை நோக்கி சில அடிகள் உருட்டிச் சென்றேன். போதும் என்று சைகை செய்துவிட்டு காரருகே நடந்து வந்தார். இடுப்பைச் சுற்றி சலங்கையோடு இருக்கும் அரைஞாண்க் கொடி போல கைக்காப்பு, குறுந்தடி, வாக்கி டாக்கி, துப்பாக்கி என்று எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கோடு பெல்ட் அணிந்துகொண்டு, கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் படங்களில் காணப்படும் கௌபாய் தொப்பியோடு அருகில் வந்தவர் சம்பிரதாய வசனங்களில் நான் அதிகபட்ச வேகத்தின் அளவை மீறி வண்டி ஓட்டி சென்ற குற்றத்தைக் கூறினார். ஒருமாதிரி தந்தியடித்துக் கொண்டே நான் crosscountry ஓட்டிக் கொண்டு செல்கிறேன் என்பதை கூறி முடித்தேன். கொஞ்சம் சமாதானமானவர் ‘இருந்தாலும் இப்படி இருபது வண்டிகளை ஒருசேர ஓவர்டேக் செய்வது ரொம்பவும் ஓவர்’ என்றுச் சொல்லி ஒரு டிக்கெட் கொடுத்துவிட்டார். ஊருக்குப் போய் அபராதத் தொகையை ஒழுங்காக மணியார்டர் செய்து விடவேண்டும். அசந்து மறந்து கட்டத் தவறினால் அரெஸ்ட் வாரண்ட் போட்டு விடுவார்கள். அமெரிக்க கோர்டுகள் நின்று கொல்லும் தெய்வம் மாதிரி. முப்பது வருடங்கள் கழித்தும் எப்பொழுதாவது வயோமிங் மாநிலத்தில் நுழைந்தால், இதே போலிஸ்காரர் எல்லையில் கைவிலங்கோடு காத்துக் கொண்டிருக்கலாம்.
பிரயாணத்தின் இந்தப் பகுதி பெரும்பாலும் பசுமையாகவே இருந்தது. நெப்ராஸ்காவின் கிழக்குபகுதி CST Timezoneல் வருவதால், இன்று இன்னொரு மணி நேரம் பறிபோனது.
லிங்கனை அடைந்து எக்கோனா லாட்ஜை அடையும்போது இரவு மணி பத்து. வரவேற்பு மேசையில் இருந்த இந்தியர் ’உங்களுக்கு தவறுதலாக புகைக்கும் அறை பதிவு செய்துவிட்டார்கள். உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை உண்டா?’ என்றுக் கரிசனத்தோடு கேட்டார். ஓரிரவு தங்குவதில் எந்த அறையாக இருந்தால் என்ன என்று மிதப்பாக ‘பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது புகைக்கும் அறை என்பது சுருட்டு கோடவுன் போல நாற்றமடிக்கும் அறை என்று. அதில் படுக்கை விரிப்புகளில் நெருப்பு பொத்தல்கள் வேறு. மறுநாள் ஓஹையோவின் டொலீடோவில் தங்குவதற்கு சிவப்பு கூரை விடுதியில் (Red Roof Inn) முன்பதிவு செய்துவிட்டு படுக்கையில் விழுந்தேன்.
மேற்கிலிருந்து கிழக்கே - 1
மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6
20 மறுமொழிகள்:
???
:-)
டுயல் பத்தி நானே கேக்கனும்னு நினைச்சேன். உங்களுக்கே தோணிருக்கு!
///லிங்கனை அடைந்து எக்கோனா லாட்ஜை அடையும்போது இரவு மணி பத்து. வரவேற்பு மேசையில் இருந்த இந்தியர் ////
நம்ம இந்தியரா? இல்ல நேடிவ் அமெரிக்கனா? அவங்கள இப்ப இந்தியருன்னு சொல்றதில்லயாமே! அவங்கள்ளாம் இன்னும் இருக்காங்களா?
////முப்பது வருடங்கள் கழித்தும் எப்பொழுதாவது வயோமிங் மாநிலத்தில் நுழைந்தால், இதே போலிஸ்காரர் எல்லையில் கைவிலங்கோடு காத்துக் கொண்டிருக்கலாம். ///
ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் தனி சட்டம்ல? முப்பது வருஷம் கழிச்சுன்னா வெள்ளை விக்கோட காத்திருப்பார். இல்ல, விக்கே இழந்திருப்பார்.
அண்ணாச்சி
பயணக்கட்டுரை நல்லா சுவாரசியமா போய்க்கிட்டிருக்கு..தொடருங்கள்
படமும் காட்டுவீங்களா இல்லை பாடம் மட்டும்தானா? :)
நீங்க குறிப்பிட்டு இருக்கும் ஜென் கதையை ஒரு நண்பர் கிட்ட சொல்லணுமுன்னு தமிழில் தட்டச்சும் போது கிரந்தம் இல்லாமல் " சென் கதை சொல்ரேன்" அப்படீன்னு சொன்னா உடனே சொல்லு சொல்லு அந்தக்காலத்து மூன் மூன் சென் கதையா இல்லை அவர் பொண்ணு ரீமா சென் கதையா இல்லை உலக அழகி சுஷ்மிதா சென் கதையா அப்படீன்னு கேக்குறார் :)
வாங்க அனானி!
:))
?? - கேள்விக்கு அர்த்தம்... எப்படா முடிச்சு தொலையப் போறே’ன்னு கேக்கறீங்களா?
அதுக்கும் :)) தாங்க பதில் :)
//டுயல் பத்தி நானே கேக்கனும்னு நினைச்சேன். உங்களுக்கே தோணிருக்கு! //
ஆமாம். எப்பவும் எனக்கு அந்தப் படம் ஞாபகத்துக்கு வந்திட்டே இருக்கும். :)
//நம்ம இந்தியரா? இல்ல நேடிவ் அமெரிக்கனா? அவங்கள இப்ப இந்தியருன்னு சொல்றதில்லயாமே! அவங்கள்ளாம் இன்னும் இருக்காங்களா?//
Desi-தாங்க. நம்மூர் படேல்கள்தானே இங்க நிறைய ஓட்டல் நடத்தறாங்க.
செவ்விந்தியப் பழங்குடியினர் மில்லியன் கணக்குல இருக்காங்களே.
//வெள்ளை விக்கோட காத்திருப்பார்//
நோ சான்ஸ். அவர் முழுசா மொட்டை போட்டிருந்தார் :)
// மூன் மூன் சென் கதையா இல்லை அவர் பொண்ணு ரீமா சென் கதையா இல்லை உலக அழகி சுஷ்மிதா சென் //
மூன் மூன் சென் யாரு? நீங்க ஏன் அவரப்பத்தி நீங்க பேசறீங்க சங்கர் அங்கிள்? :))
உங்க வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சங்கர்ஜி.
///மூன் மூன் சென் யாரு? நீங்க ஏன் அவரப்பத்தி நீங்க பேசறீங்க சங்கர் அங்கிள்? :))///
உங்க சமகாலத்தவர் அப்படீன்னு நெனைச்சுக்கிட்டு மூன் மூன் சென் பேரைச் சொன்னேன்..அவரைத் தெரியலையா..சரி சரி என் ஸ்கூல்மேட் ரீமா சென் கிட்ட அவங்க பாட்டி பேர் என்னன்னு கேட்டு சொல்ரேன்.அப்ப உங்களுக்கு அடையாளம் புரியும் ஸ்ரீதர் தாத்தா :)))
பயண கட்டுரை நல்லா இருக்கு. கேமரா என்ற ஒரு வஸ்து எல்லாம் பயணத்தில் கொண்டு போற வழக்கம் இல்லையா? :))
என்ன இருந்தாலும் ஒல்ட் இஸ் கோல்டுனு சங்கர் முணுமுணுக்கறாரு.
//மூன் மூன் சென் யாரு? //
ஆயுத எழுத்துல சூர்யா அம்மாவா வருவாங்களே அவங்க தான் மூன் மூன் சென். சரியா தப்பானு சங்கர் சொல்லுவார். :))
கங்கனா சென், 'ரீமா சென்'களை வேண்டுமென்றே புறக்கணித்தமைக்கு என் கடும் கண்டனங்கள். :))
Sridhar annavukulla oru Paul theroux ah?? Neenga yaen Paul theroux maadhiri world around train try panna koodathu???
Intha thodar katturaya naan eppavo ethirpaarthaen..pattai theeti thareenga...
Konjama vellai kaaranoda mannerisms/gimmicks pathiyum eludhungalaen... innum nalla irukkum
//ஆயுத எழுத்துல சூர்யா அம்மாவா வருவாங்களே அவங்க தான் மூன் மூன் சென். சரியா தப்பானு சங்கர் சொல்லுவார். :)) ///
" ஆன்டி "க்களை எல்லாம் நல்லா நோட் பண்ணி வச்சுக்குங்க. அப்புறம் சரியா, தப்பான்னு அப்பாவி மாதிரி கேளுங்க...நல்லா இருங்க.
ஆனாலும் நீங்க சொன்னது சரிதான். ஃ ல வர அம்மாதான். அவங்க என் க்ளோஸ் ஃப்ரெண்டோட ( ரீமா) அம்மான்றதுனால எனக்கு தெரிஞ்சிருக்கு :)
அம்பிக்கு மட்டும் ஒரு க்விஸ் :- தன்னோட கடந்த மூணு, நாலு பதிவுக்குள்ள ஸ்ரீதர் நாராயணன் போட்ட பெஸ்ட் பின்னூட்டம் எது சொல்லுங்க பாப்போம் :)
//என் ஸ்கூல்மேட் ரீமா சென் கிட்ட //
ஆஹா... நீங்க பெரிய செலிப்ரிட்டிதான் போல. துடுக்குத்தனமா பேசியிருந்தா மன்னிச்சுக்குங்க அங்கிள். இந்த ‘தாஜ்மகால்’ல ஒன்னரைக்கண்ணால பாப்பாங்களே அந்த ரியா சென் ஆண்டியோட அக்காங்களா ரீமா சென் ஆண்ட்டி?
//கேமரா என்ற ஒரு வஸ்து எல்லாம் //
படம் போடாததற்கு சில காரணங்கள்.
1. கேமரா கொண்டு போகலைங்கிறது உண்மை. செல்ஃபோன் கேமரா இருந்தாலும் உபயோகப்படுத்தல.
2. பெட்ரோல் (வண்டிக்கும் + வயித்துக்கும்) போடற டைம் தவிர முடிஞ்சவரைக்கும் வண்டியை ஓட்டிட்டே இருந்தேன். நடுவுல எங்கேயும் ஃபோட்டோ எடுக்கனும்னு நினச்சு நிப்பாட்டினா பயண வேகம் தடைபட்டிருமோன்னுதான்.
3. தனியா அவ்வளவு தூரம் ஓட்டிகிட்டு போகும்போது digression இருந்தா போட்ட திட்டம் குழம்பிப் போகும் வாய்ப்பு அதிகம்னு ஒரு யோசனை கூட.
அப்புறம் இந்த பக்கம் ஊர் சுத்தும்போது சில படங்கள் எடுத்திருக்கோம்.
உங்க மெயில் ஐடி கொடுங்க. அனுப்பிருவோம் :)
//ஆனாலும் நீங்க சொன்னது சரிதான். ஃ ல வர அம்மாதான். அவங்க என் க்ளோஸ் ஃப்ரெண்டோட ( ரீமா) அம்மான்றதுனால எனக்கு தெரிஞ்சிருக்கு :)//
அம்பி எப்போதும் சாக்லேட் ஹீரோதான். ஆண்ட்டி ஹீரோவாக அவர மாத்திறாதீங்க :))
//அம்பிக்கு மட்டும் ஒரு க்விஸ் :- தன்னோட கடந்த மூணு, நாலு பதிவுக்குள்ள ஸ்ரீதர் நாராயணன் போட்ட பெஸ்ட் பின்னூட்டம் எது சொல்லுங்க பாப்போம் :)//
நீங்க எடுத்துக் கொடுக்கவே வேண்டாம். அதெல்லாம் அம்பி கரெக்டா நோட் பண்ணிருப்பார். கீதாம்மாவுக்கும் அவருக்கும் ‘போட்டு வாங்கறது’ல நிறைய அண்டர்ஸ்டாண்டிங் உண்டே :))
//அம்பிக்கு மட்டும் ஒரு க்விஸ் :- தன்னோட கடந்த மூணு, நாலு பதிவுக்குள்ள ஸ்ரீதர் நாராயணன் போட்ட பெஸ்ட் பின்னூட்டம் எது சொல்லுங்க பாப்போம் //
Ans: சேதுபதி பள்ளியில் நான் 1984லிருந்து 1990வரை படித்தேன். :)
- என்ற ஸ்ரீதரின் ஒப்புதல் வாக்குமூலம் தான். :))
நான் இந்த காலகட்டத்தில் பிறக்கவேயில்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க? :p
//அவங்க என் க்ளோஸ் ஃப்ரெண்டோட ( ரீமா) அம்மான்றதுனால எனக்கு தெரிஞ்சிருக்கு //
@sankar, என்னது ரியா, ரீமா என்ற இரு லட்டுக்களை பெற்றெடுத்தது மூன் மூன் அத்தையா? :))
(வைரமுத்துவே ஜொள்ளி இருக்காரே, அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்று அர்த்தம்!) :)
/// Ans: சேதுபதி பள்ளியில் நான் 1984லிருந்து 1990வரை படித்தேன். :)
- என்ற ஸ்ரீதரின் ஒப்புதல் வாக்குமூலம் தான். :))
நான் இந்த காலகட்டத்தில் பிறக்கவேயில்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க? :p ///
ஸ்ரீதர் போன கதையில் டிடெக்டிவ் வக்கீல் டாக்டருக்கு ??!!! யுவராஜ் என்று பெயர் வைத்தத்ற்குப் பதில் அம்பி என்று வைத்திருக்கலாம். :)
Tail piece:1984லிருந்து 87வரை 9th அப்புறம் 88, 89,90 ல் 10,+1 மற்றும் +2 அப்படீங்குறதை சொல்ல மறந்துட்டார் !!!! :)
/// நான் இந்த காலகட்டத்தில் பிறக்கவேயில்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க? :p ///
இதற்கு முற்பட்ட காலகட்டம் அப்படீன்னு நீங்களா ஏன் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்குறீங்க :)
//@sankar, என்னது ரியா, ரீமா என்ற இரு லட்டுக்களை பெற்றெடுத்தது மூன் மூன் அத்தையா? :)) ///
இந்த டேடாவெல்லாம் விரல் நுனில வச்சுருக்க வேண்டாமா :)
வாங்க சங்கர்ஜி, அம்பிண்ணா!
தீபிகா படுகோனேயையே ஆண்ட்டி ரேஞ்சுக்கு பேசி பில்டப்பு கொடுத்திட்டிருக்கும்போது மூன்மூன் சென்-லாம் தேவையா என்ன? :)
இறைவா இந்தமாதிரி நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறென் :))
//யுவராஜ் என்று பெயர் வைத்தத்ற்குப் பதில் அம்பி என்று வைத்திருக்கலாம்//
பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கும் சங்கர்ஜியின் நுண்ணரசியலை மெச்சினேன். :))
அதுக்கும் முந்தின கதைல வர அந்த இந்திரன் கேரக்டருக்கு சங்கர்னு பெயர் வெச்சு இருக்கலாம்னு நான் சொல்வேன் என்ற நப்பாசை அவருக்கு. நான் சொல்ல மாட்டேனே! :))
ஆஹாஹாஹா ... ரொம்ப நல்லா இருக்கு. நமக்கெல்லாம் மத்தியிலிருந்து கிழக்கு அனுபவம்-தான். (டெக்ஸாஸ் முதல் பென்சில்வேனியா வரை) ஆனா 3.5 நாள்ள 3000 மைல்கள் ... ரொம்ப டூ மச்.
அன்புடன்
முத்து
Post a Comment