கனவுகளின் காதலி

October 20, 2009

பதிவர் உண்மைத்தமிழனின் இடுகையை தாமதமாகத்தான் படிக்க நேரிட்டது. திருவாரூர் மாவட்ட பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 2009-2010 என்கிற தலைப்பில் சிறுகதை / குறும்படம் போட்டி நடத்துகிறது. அக். 31க்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும். மேலதிக தகவல்கள் பலவும் உண்மைத் தமிழனின் இடுகையில் இருக்கிறது.

குறும்படம் எடுக்கும் ஆர்வம் / வசதி உள்ளவர்கள் விருப்பப்பட்டால் நான் தற்சமயம் எழுதி வைத்திருக்கும் (இன்னமும் வெளியிடாத) ‘கனவுகளின் காதலி’ என்ற கதையை படமாக எடுக்கலாம். எளிமையான, சற்றே Mystical தன்மை கொண்ட கதை. மூன்று பாத்திரங்களுடம் அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு வரக்கூடிய கதைதான். அதிக லொக்கேஷன்கள், இசைக்கோர்வை போன்ற செலவுகள் பிடிக்காத, குறுகிய அவகாசத்தில் செய்யக்கூடிய, ஆனால் சுவாரசியமான படமாக வர வாய்ப்புள்ள கதை. விருப்பப்பட்டவர்கள் பின்னூட்டம் வழியாக உங்களைத் தொடர்பு கொள்ள தொலைபேசி / மெயில் ஐடி கொடுத்தால் உடனடியாக தொடர்பு கொள்கிறேன்.

இந்தப் பதிவில் கதையை வெளியிட்டால் போட்டி விதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம் என்பதால் தற்சமயம் வெளியிடவில்லை. யாரும் தொடர்புகொள்ளாத பட்சத்தில் இந்தப் பதிவிலேயே சீக்கிரத்தில் இட்டுவிடுகிறேன்.

நான் ஏற்கெனவே எழுதியிருந்த ஒரு குறும்படக் கதை இங்கே காணலாம்.

இப்பொழுது நீங்கள் பார்க்க ஒரு அருமையான குறும்படம் - கீழே:

8 மறுமொழிகள்:

சென்ஷி said...

/
நான் ஏற்கெனவே எழுதியிருந்த ஒரு குறும்படக் கதை இங்கே காணலாம்.//

??

உ.த. பதிவுக்கு லிங்க் போகுது :-(

Cable Sankar said...

கவிதையின் கடைசி இரண்டு வரிகள் அருமை. ஒருவனின் வாழ்க்கையின் தேடல்

ambi said...

யார் வேணா கு.படம் எடுங்க. நடிக்க ஆள் வேணும்னா என் இமெயில் முகவிக்கு அணுகவும்.

ஸ்டார் ஹோட்டல் ரூம் எல்லாம் கேக்க மாட்டேன்.

நயன், அல்லது கோபிகா கால்ஷீட் வாங்கி கொண்டு வரவும். :))

ambi said...

உ.த அண்ணாச்சி பதிவை லேட்டா படிக்க நேர்ந்ததா? அல்லது பதிவை படிக்கவே லேட் ஆச்சா? :))

ஆயில்யன் said...

ப்ளாக் ஹோல் பார்க்க பார்க்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருந்தாலும் கடைசியில போய் மாட்டிக்கிறதுதான் திக் திக்ன்னு இருக்கு :)
பயபுள்ள அதிகமாவே ஆசைப்பட்டிருச்சு!

SRK said...

//நான் ஏற்கெனவே எழுதியிருந்த ஒரு குறும்படக் கதை இங்கே காணலாம்.//

சரியான லின்க் தரவும்!

Sridhar Narayanan said...

வாங்க சென்ஷி!

மன்னிக்கவும். இப்பொழுது உரலை திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

வாங்க சங்கர் சார்!

//கவிதையின் கடைசி இரண்டு வரிகள் அருமை. ஒருவனின் வாழ்க்கையின் தேடல்//

உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. அப்படியே அந்த கவிதையும் பின்னூட்டத்தில் போட்டுட்டீங்கன்னா நாங்களும் படிச்சிருவோம்ல :)).

வேற பதிவுல போட நினச்ச கமெண்ட் போல.

இன்னொரு கமெண்டுல மெயில்ஐடி தந்ததற்கு நன்றி. தனி மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்க.

வாங்க அம்பிண்ணா!

//நடிக்க ஆள் வேணும்னா//

கண்டிப்பாக. அம்மாஞ்சி கேரக்டர் ஒண்ணு இருக்கு அம்பி. உங்கள விட்டா வேற யாரு பொருத்தம்?

நயன் / கோபிகா கால்ஷீட் எதுக்கு? முழுஷீட்டே இருக்கற மாதிரி காலண்டரா பாத்து வாங்கிருவோம். சரியா?

//அல்லது பதிவை படிக்கவே லேட் ஆச்சா? :))//

:)))))

வாங்க ஆயில்யன்,

//பயபுள்ள அதிகமாவே ஆசைப்பட்டிருச்சு!//

ட்விட்டர்ல இந்த குறும்படம் பத்தி பேசிட்டிருந்தோம்னு நினைவிருக்கு. இந்த ப்ளாகில ‘பார்த்ததில் பிடித்தது’ சீரிஸில் இன்னும் சில குறும்படங்கள் போட்டிருக்கேன். நேரம் இருக்கும் போது பாருங்க.

வாங்க SRK தல,

லிங்க் இப்ப சரி பண்ணிட்டேன். மன்னிக்கவும் :)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

sreedhar sir..

தாமதத்திற்கு மன்னிக்கணும். இப்போதுதான் இதனை பார்த்தேன்.

இணைப்புக் கொடுத்து தகவலை விளம்பரப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள் ஸார்..!