முதலில் ‘கறுப்பு வெள்ளி’ என்று கேட்டபோது எனக்கு ஏதோ துக்ககரமான சம்பவத்தை குறிக்கிறது என்றுதான் தோன்றியது. பேரரசன் சாலமனின் ஆலயத்தின் காவலர்களைப் பற்றி டா வின்சி கோடில் படித்திருப்பீர்கள். ஃப்ரெஞ்சு அரசன் நான்காம் ஃபிலிப் டெம்ப்ளார்களின் இரகசிய அமைப்பினைத் ஒட்டுமொத்தமாக தகர்த்தது ஒரு 13ம் தேதி வெள்ளிக்கிழமைதானாம். ஆனால் கறுப்பு வெள்ளிக்கு இப்படி எல்லாம் துக்க பின்னணி கிடையாது என்று சொல்கிறார்கள். பொதுவாக சொல்லப்படும் காரணம் அந்த வெள்ளிக்கிழமைதான் அமெரிக்கர்கள் மிக அதிக அளவில் ஷாப்பிங் செய்கிறார்கள்.
’நன்றி சொல்லும் தினத்தில்’ சாப்பிட்ட வான்கோழி கறி ஜீரணம் ஆகாததினாலோ என்னவோ மக்கள் விடிய விடிய கடைகள் வாசலிலும் இணைய தளத்திலும் கண் விழித்துக் காத்திருந்து சின்னக் கைக்குட்டையோ அல்லது 52” எல்சிடி டீவியோ ஏதோ ஒன்று வாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் நாள் இந்த வெள்ளிக்கிழமை. நமது ஊரில் க்டைகளில் மஞ்சளில் பெரிதாக ‘உ இலாபம்’ என்று எழுதும் வழக்கம் போல வரவுசெல்வு கணக்கு புத்தகத்தில் இலாபத்தை கறுப்பு மசியிலும், நஷ்டத்தை சிவப்பு மசியிலும் எழுதி வைக்கும் பழக்கம் உண்டு. அதை ஒட்டியே இந்த வெள்ளிக்கு கறுப்பு வெள்ளியன்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே இந்த கறுப்பு வெள்ளிக்கு நிறைய மவுசு உண்டு. ஐஃபோனில் கான்ஃபிரண்ஸ் கால் போட்டு கொள்ளைக்கூட்ட ரேஞ்சுக்கு ‘நீ காலை 5 மணிக்கு பெஸ்ட்பைல GPS டீல் பார்த்துக் கொண்டு வா, நான் வால்மார்டில் டீவி கூப்பன் பிடித்துக் கொண்டு வருகிறேன்’ என்று அணி பிரித்துக் கொண்டு வேட்டையாடுவார்கள். இரவு பண்ணிரெண்டு மணிக்கு குளிரிலிருந்து காத்துக் கொள்ள போர்வை சகிதம் கடைகளை முற்றுகையிடும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். இந்த முறை நாங்களும் களத்தில் இறங்கி வேட்டையாடி விளையாடினோம். வீடு வந்து கணக்குப் பார்த்ததில் கொஞ்சம் சேதாரம் அதிகம்தான். அடுத்த மாதம் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்டில் அதிக கறுப்பு பக்கங்கள் இருக்கும் என்பதை குறிக்கத்தான் கறுப்பு வெள்ளியோ?
சர்வேசன் நடத்தும் சிறுகதை போட்டியில் நிமித்தகாரன் கதை இரண்டாம் சுற்றிற்கு முன்னேறியிருக்கிறது. இதுவரை என் வோட்டையும் சேர்த்து மொத்தம் ஏழு வோட்டு விழுந்திருக்கிறது என்று சர்வே காட்டுகிறது. மற்றவர்களும் கதையைப் படித்து ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சர்வேசன் பெரும் தன்முனைப்போடு இம்மாதிரி ஒரு சிறுகதை போட்டியை இரண்டாம் வருடமும் தொடர்ந்து நடத்தி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள். இம்முறை சென்ஷியும் இந்தக் குழுவினரோடு கைகோர்த்துக் கொண்டிருப்பது நல்ல விஷயமே. இம்மாதிரி போட்டிகளின் வெற்றியே நிறைய புதியவர்களை புனைவுலகத்திற்கு அறிமுகப்படுத்துவதுதான். எல்லோருக்கும் வாழ்த்துகள்.
இணையத்தின் அபார வசதியில் முக்கியமான ஒன்று, ஒரு படைப்பை வாசகர்களிடம் சுலபமாக, சீக்கிரமாக கொண்டு சேர்ப்பது. இந்த எளிமைக்கு கொடுக்கும் விலையாக சிறுகதைகளும் சுருங்கிவிடுகிறது. நூறு வரி தாண்டினாலே படிக்க நேரமில்லாமல் கொட்டாவி விட்டுக் கொண்டே அடுத்தப் பதிவை பார்க்க சென்று விடுகிறார்கள். பத்தி எழுத்துகளில் தகவல்களை தொகுத்து சுவாரசியமாக எழுதுவதுதான் அதிகம் விரும்பப்படுகிறது. அதுதான் இணையத்தில் படிக்க இலகுவானதும் கூட. ஆகவே இதுவரை எழுதிய கதைகளையும் இனி எழுதப் போகும் கதைகளையும் பிடிஎஃப் கோப்பாக புத்தக வடிவிலேயே செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக கதைகளைப் படிக்கும்போது அவற்றுக்கிடையே தென்படும் தொடர்புகளும், உத்தி வேறுபாடுகளும் ஒரு தனி அனுபவம்தானே. விரைவிலேயே இங்கே போஸ்டர்கள் ஒட்டப்படும்.
பிரபல எழுத்தாளர் சொக்கனின் பதிவில் ரிலேட்டிவிட்டி பற்றி லிமரிக்குகள் கேட்டு ஒரு இடுகை இட்டிருந்தார். சுவாரசியமான லிமரிக்குகள் காணக் கிடைத்தன. நல்ல லிமரிக்குக்கு என்று மீட்டர் சட்டங்கள் திட்டமாகவே இட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக லிமரிக்குகளில் இறுதியில் ஒரு நகைச்சுவை முக்கிய தேவை. மாதிரி லிமரிக்குகளைப் படித்து பார்த்தால் Whose line is anyway டிவித் தொடரில் வரும் ஐரிஷ் பாடல்கள் நினைவிற்கு வருகிறது. அந்தத் தொடரில் அதிரடியாக ஒரு சூழலைக் கொடுத்து வரிசையாக ஐரிஷ் பாடல் பாணியில் பாடி பகடி செய்வார்கள். ரியான் ஸ்டைல்ஸும் (Ryan Stiles) காலின் மோக்ரியும் (Colin Mochirie) எனக்கு பிடித்த சிறப்பான நகைச்சுவையாளர்கள். ஒரு எபிஸோடில் இருவரும் காமெடிக்காக முத்தமிட்டுக் கொள்வதைக் கூட பார்த்த ஞாபகம் உண்டு. கடந்த ஒரு வாரமாக தமிழில் சில சேனல்களை ChannelLive மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். நகைச்சுவைக்கு என்று ஒரு தொடர்கூட இதுவரை கண்ணில் படவில்லை. பட்டிமன்றம் என்ற பெயரில் துணுக்குத் தோரணங்கள் மட்டும்தான் கிடைக்கிறது. ஒருவேளை இந்த தொலைகாட்சிகளைப் பார்ப்பதே ஒரு நகைச்சுவையான விஷயம் என்பதால் தனியாக எந்த நிகழ்ச்சியும் செய்யவில்லையோ என்னவோ.
9 மறுமொழிகள்:
//விரைவிலேயே இங்கே போஸ்டர்கள் ஒட்டப்படும்//
ஏற்கனவே ஒட்டியாச்சு போலிருக்கே, அல்லது இது வேற போஸ்டரா..? :))
சர்வேசன் போட்டிக்கு இதோ ஒட்டு போட கிளம்பறேன். உங்களுக்கு மதுரைன்னு எனக்கு தெரியும், ஒரு ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்க..? :))
ஆமா, எல்லா சேனல்களிலும் நகைசுவை பஞ்சம் தலையை விரிச்சு போட்டு ஆடுது. :))
விஜய் கொஞ்சம் பெட்டர், நடன நிகழ்ச்சிகளை கூட காமடியா மாத்திடறாங்க. :p
Hey Sridhar, Good Write up, as usual:-).
Friday is definitely spl, the reasons may differ though....Does'nt it bring the excitement of the weekend??!!
Cheers, Viji
வாங்க அம்பி!
நீங்க எப்பவும் நம்மள ஓட்டறவர்தான். இருந்தாலும் இப்ப voteயியதற்கு ஸ்பெஷல் நன்றி தல :)
//ஒரு ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்க..? //
அதான் சூசகமா இனி கதையெல்லாம் பதிவுல போட்டு இம்சை பண்ண மாட்டோம்னு சொல்லிருக்கோம்ல. அத விட பெரிய சலுகை வேறெதாவது வேணுமா என்ன? :))
உங்கள் தொடர் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி அம்பி.
//Does'nt it bring the excitement of the weekend??!!//
மிகச் சரி. அதுவும் வெள்ளிக்கிழமை மாலை கிடைக்கும் உற்சாகம் தனிதான்.
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
//இனி கதையெல்லாம் பதிவுல போட்டு இம்சை பண்ண மாட்டோம்னு சொல்லிருக்கோம்ல//
அப்ப இனிமே PDF கோப்பா ஈமெயிலுல அனுப்பிடுவீங்களா? எதுக்கு இந்த வீர விளையாட்டு?
நீங்க சுவாரசியமா தான் எழுதறீங்க, அப்படியே ஏதாச்சும் மிஸ்ஸாச்சுனா பிரிச்சு மேய நாங்க இருக்கோம். :))இங்கயே பதியுங்க. நாளைக்கு வர போற சந்ததியினரும் படிச்சு தெளிஞ்சுக்கலாம். :p
ஜொள்ள மறந்துடேன், எங்க ஆபிஸ்ல வெள்ளினா ஒரு ஸ்பெஷல். என்னனு விலாவரியா சொல்ல மாட்டேன். :p
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, வெள்ளி வந்துட்டாலே பெண்களூர்ல... வேணாம் விடுங்க. :))
//அப்ப இனிமே PDF கோப்பா ஈமெயிலுல அனுப்பிடுவீங்களா?//
அதுக்குதான் யோசனை செஞ்சிட்டிருக்கேன். சரியாவே பண்ணிருவோம்ண்ணே.
//அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, வெள்ளி வந்துட்டாலே பெண்களூர்ல... வேணாம் விடுங்க. :))//
அது என்னாதுண்ணா? ஏதோ புதுசா சொல்ற மாதிரி இருக்கே? சபையில சொல்ல கூச்சமாயிருந்தா நமக்கு ஒரு தனி மெயில் போடுங்க vnsridhar னு gmail க்கு மெயில் போடுங்கண்ணா.
ஆக கருப்பு வெள்ளி முடிந்து க்ரெடிட் கார்ட் ஸ்டேட்மண்டை நினைச்சு வெளீர் ஸ்ரீதர் ஆகிட்டீங்கன்னு தெரியுது. :)
Post a Comment