பெங்களூருவில் இருக்கும்போதுதான் Toastmasters Club பற்றிக் கேள்விப்பட்டேன். ஆம். எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ‘ஸ்ட்ராங்கா சக்கர கம்மியா’ போடும் டீ மாஸ்டர், வீச்சு ஸ்பெஷல் புரோட்டா மாஸ்டர் என்று தெரிந்து வைத்திருந்த எனக்கு ப்ரெட் டோஸ்ட் போடும் மாஸ்டர்களுக்கு சங்கமா என்று தோன்றியது. இல்லையாம். Toast என்றச் சொல்லிற்கு ‘பிரபலமான’ என்றும் ஒரு அர்த்தம் உண்டு - He is the Toast of the Town என்றுச் சொல்லப்படுவது போல. முக்கியமான நிகழ்ச்சிகளில் விழா நாயகர்களை புகழ்ந்து சில நிமிடங்கள் பேசுவதை (ஞாபகமாக கையில் ஷாம்பெய்ன் கிளாஸ் வைத்திருக்க வேண்டும்) Proposing a toast to என்பார்கள். அப்படியான ஒரு வழியில் இந்த Toastmaster சங்கமானது பல பேச்சாளர்களை உருவாக்கும் ஒரு அமைப்பு என்றும் கொள்ளலாம்.
முன்பின் தெரியாத நபரை சம்பிரதாயமாக அறிமுகப்படுத்திக் கொண்டு அப்புறம் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிப்பவரா நீங்கள்? நாம் வலியச் சென்றுப் பேசினால் மற்றவர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று தயங்குகிறீர்களா? எந்த தலைப்பில் பேசினால் மற்றவர்களுக்கு பிடிக்கும் என்று யோசித்துக் கொண்டே பேசாமலே இருந்து விடுகிறீர்களா? Toastmasters அமைப்பு உங்களுக்கானதே.
ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆறேழு நிமிடங்களுக்கு ஒரு கூட்டத்தின் முன்னர் பேசிப் பழகும் வாய்ப்பைத் தருகிறது. உங்களுக்குப் பயிற்சி தர, உங்கள் பேச்சை சீர்தூக்கி நிறைகுறைகளை அலச, மேலும் பல பொறுப்புகளை சிறப்பாக செய்ய என்று நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது வேலையிலிருக்கு இடத்தில் இருக்கும் கிளப்பில் அவ்வப்போது ஓசிச் சாப்பாடும் போட்டு ‘வந்து பேசிப் பழகு’ என்கிறார்கள். சரி என்று போன மாதம் சங்கத்தில் உறுப்பினராகி விட்டேன்.
பேசுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களின் பேச்சில் இலக்கணப் பிழை, ‘ஆம்.. ஊம்ம்...’ என்று பேச்சு வராமல் காற்று வரும் தருணங்கள், பேசும் நேரம், பேச்சின் தரம் என்றெல்லாம் எடை போடும் வேலைகளும் எடுத்து செய்யுங்கள் என்று ஊக்குவித்தார்கள்.
முதல் சந்திப்பில் 'Ah Master’ என்னும் பணியை ஏற்றுக் கொண்டு செய்தேன். பேச்சின் இடையே தடங்கலாக, சிந்தனையோட்டம் தடைபடும்போது இட்டு நிரப்பும் பொருளில்லாத சொற்களைப் பற்றி குறிப்பெடுப்பது. ‘ஆங்! அதாங்க, நான் சொன்னேன்ல, இப்ப இவரு சொல்றாரே, அன்னிக்கு அதே நிலமைல, இப்ப நீங்களே சொல்லுங்க’ என்று இட்டு நிரப்பிக் கொண்டே செல்லும் பேச்சாளர்களும் உண்டு. அவர்களுடைய பேச்சில் ‘இட்டு நிரப்பும்’ சொற்கள் எத்தனை உபயோகித்தார்கள். எத்தனை முறை உபயோகித்தார்கள் என்று குறித்துக் கொண்டு அதை தொகுத்து அளிக்கும் நக்கீரர் வேலை. சும்மா சொல்லக்கூடாது. அன்றைக்கு பேசிய அம்மணி அழகாக ஆற்றொழுக்காக பேசி முடித்துவிட்டார். நடுவில் ஒரே ஒரு ‘Ok... ' என்று தேவையில்லாமல் சொன்னார் என்று குறித்துக் கொண்டேன் (பின்ன... பிடிச்சிருவோம்ல). அடுத்து பேசிய வியட்நாமிஸ் இளைஞர் சிறப்பாக பேசி எனக்கும் சிற்றுண்டி தருவது போல சில Filler வார்த்தைகள் உபயோகித்திருந்தார். கறாரான ரிப்போர்ட் கொடுத்துவிட்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு வந்தேன்.
இரண்டு வாரத்தில் அடுத்த சந்திப்பு வந்துவிட்டது. இம்முறை பேசுவதற்கு ஆசையிருந்தாலும், எதைப் பற்றி பேசுவது என்று முடிவு செய்யாததினால், Time Master என்ற பொறுப்பை எடுத்துக் கொண்டேன். பிரச்சினையில்லாத வேலை. நமது பட்டிமன்றங்களில் ‘கிர்ர்’என்று மணியடிக்க அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்களே... அதே வேலைதான். மணிக்கு பதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற அட்டைகளை பேச்சாளர் பார்வையில் படுமாறு காட்ட வேண்டும். அன்றைக்கு என்று ஒரு அம்மணி கராத்தே டெமான்ஸ்ட்ரேஷன் எல்லாம் காட்டினார். பாதுகாப்பான இடைவெளியில் அமர்ந்து கொண்டு சிவப்பு கார்டு மட்டும் காட்டவேக் கூடாது தீர்மானித்துக் கொண்டேன். ரிஸ்க் இல்லையா. நல்லவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கராத்தே பற்றி சொற்பொழிவாற்றிவிட்டு அமர்ந்து விட்டார்.
மூன்றாவது மீட்டிங்கில் ‘புறப்படு பாண்டியா’ என்று பேசுவதற்கு பெயர் கொடுத்துவிட்டேன். இந்த வருடத்தின் கடைசி சந்திப்பு என்று பீட்ஸா கோக்கெல்லாம் ஃப்ரீயாக உண்டு என்று வேறுச் சொல்லியிருந்ததினால் கிட்டத்தட்ட முப்பது பேர்வரை வந்து விட்டார்கள். தலைப்பே சிக்காமல் இருக்கும்போது, ட்விட்டரில் Srikan2 என்ற நண்பர் ஒரு Spark கொடுத்தார். எழுதும் போது நம்மை அறியாமல் ஏற்படும் குளறுபடிகளை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். 'Hi Tim!' என்று டிம் பேய்ன்ஸ் என்னும் வாடிக்கையாளருக்கு மெய்ல் அனுப்பும்போதெல்லாம் அவர் பெயரை ‘Time' என்றே டைப்பி விடுவது என் வழக்கம். இது போல பேசும்போது ஏற்படும் சொதப்பல்கள் Spoonerism என்று சொல்லப்படும். இதற்கு விளக்கமாக ‘Tips of Slung' என்று சொல்வார்கள். அதாவது Slip of Tongue (நாக்கு தவறுதல்) என்று சொல்ல நினைத்து அதை தவறிப் போய் Tip of the Slung என்று சொல்கிறார்களாம் :)
இந்த வார்த்தைக்கும், பழக்கத்திற்கும் சுவாரசியமான வரலாறு உண்டு. இங்கே ஒரு வலைத்தளமே இருக்கிறது. படித்து பயன்பெறுங்கள்.
ஆறு நிமிடங்களுக்கான என்னுடைய கன்னிப் பேச்சை (Icebreaker) தயார் செய்து கொண்டேன். நாக்குழறலிலால் ஏற்படும் வார்த்தை விளையாட்டுகளை நகைச்சுவையோடு சொல்ல வேண்டும் என்பது நோக்கம். நான் தேர்ந்தெடுத்த சில சுவையான Spoonersimகளை சில சம்பவங்களோடு தொகுத்து பேசி முடித்தேன். நல்ல வரவேற்பு மற்றும் ஊக்குவிப்பு இருந்தது. ஒரு சில முன்-தயக்கங்கள் தவிர பெரும்பாலும் சகஜமாக பேச முடிந்தது.
தயார் செய்து பேசுவது ஒரு முறை என்றால் திடீரென்று பேசும் முறை Impromptu Speech என்கிறார்கள். எல்லாரும் டேபிளில் சுற்றி உட்கார்ந்து கொண்டு இருக்க ஒருவர் தொடங்குகிறார் ‘நாங்கள் விடுமுறைக்கு வண்டியில் போய்க் கொண்டிருக்கும்போது 422 சாலையில் பிரேக் டவுன் ஆகிவிட்டது. அப்போது...’ என்று அவர் ஒரு நிமிடத்திற்கு அளந்து விடுகிறார். அவர் விட்ட இடத்திலிருந்து மற்றொருவர் தொடங்கி ‘AAAக்கு ஃபோன் செய்ய ஃபோனில் பேட்டரி இல்லை. டயர் மாற்ற ஜாக்கி இல்லை’ என்று தொடர்ந்து பேசவேண்டும்.
இந்த கலகல பேச்சில் கலந்து கொள்ள ஆரம்ப தயக்கத்தை தாண்டி நாம் நுழையும்போது கிட்டத்தட்ட எல்லாவித சிச்சுவேஷன்களையும் பேசி முடித்து விடுகிறார்கள். புதியதாக ஏதாவது நுனியைக் கண்டுபிடித்து பேச்சை கடத்திக் கொண்டு போக வேண்டும். நானும் ஏழாவதாக கலந்து கொண்டு ஒரு அதிரடி திருப்பம் எல்லாம் கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். பேசிக் கொண்டே இருக்கிறேன். அடுத்து பங்கேற்க யாரும் முன்வரவேயில்லை. ‘ஆகவே இதிலிருந்து நாம் அறியும் பாடம் என்னவென்றால், இன்பச் சுற்றுலா போகும்போது செல்ஃபோன், ஜாக்கியெல்லாம் இருக்கிறதோ இல்லையோ... நமக்கு அடுத்துப் பேச கட்டாயம் ஒரு ஆள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று முடித்துக் கொண்டேன்.
சில சுவாரசியமான நாக்குழறல்கள் இங்கே.
வக்கீல் நண்பன் சிகரெட் பற்றவைக்கும்போது சிரமப்படுகிறான். ‘என்னப்பா செய்ய முயற்சிக்கிறாய்’ என்று கேட்டால் 'I am Fighting a liar' என்று சொல்கிறான். அவன் சொல்ல நினைத்தது 'I am lighting a fire' என்று.
ஆனால் அந்த லைட்டர் அல்லவா ‘நான் பொய்யனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்ல வேண்டும்? :)
Shake the Tower - குளிக்கப் போனதுக்காக டெர்ரரிஸ்ட் ஆக்ட்ல அரெஸ்ட் பண்றது டூ மச்சு. (Take the Shower)
Chewing the Doors - வீட்டு வேலை செய்யனுமேங்கிறதுக்காக கதவையா கடிச்சு சாப்பிடறது? (Doing the Chores)
Chipping the Flannel - டிவியில் சேனல் மாத்தறதுக்காக எதுக்கு துணியைப் போய் நோண்டனும்? (Flipping the Channel)
Lack of Pies - ஆமாம். அப்படிச் சொல்லித்தான் அந்தப் பெண்மணி டைவர்ஸ் செய்தார் கணவனை. (Pack of Lies)
Ease my Tears - ரொமாண்டிக்காக Tease my Ears னு சொல்ல நினைத்து செண்டிமெண்டலாக முடிஞ்சது பாருங்க.
Roaring with Pain - மழை பெய்கிறது என்பதை ஒரு மிருகக்காட்சி சாலையிலிருந்து சொல்லும்போது இப்படி நாக்குழறினால்? கேட்கிறவர்களுக்கு கொஞ்சம் எந்த மிருகம் கத்துதோன்னு ‘பக்’என்று இருக்குமே.
Driving in the Right Lane - சிறு மழையில் (light rain) வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கும், வலது பக்கம் (right lane) வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? அதுவும் இந்தியாவில் வலது பக்கம் ஓட்டுகிறேன் என்றால் கேட்பவருக்கு இன்னமும் பதற்றம்.
Bean Dizzy - Dean Busyதான் ஆனால் அதற்காக காஃபி கொட்டையை தூங்கி வழியனுமா?
Dear Queen - என்று சொல்ல நினைத்து அந்தப் பெண்ணின் அப்பாவிடம் Queer Dean என்று சொல்லிவிட்டால்? அவர்தான் Dean வேற :)
25 மறுமொழிகள்:
nice. வாழ்த்துக்கள், கன்னிப்பேச்சை முடித்ததற்கு.
நானும் ஒரு தொடை நடுங்கிதான், கூட்டத்தை பாத்து பேசணும்னா. ஆனா, இதை சரி செஞ்சுக்கணும். இல்லன்னா, அரசியல்வியாதி ஆகரது எப்படி? ;)
நல்ல பகிர்வு. பெங்களூரு toastmasters club நினைவை கிளறிய பகிர்வு.
இதே நல்லதொரு பேச்சா அமைந்துவிட்டதே. எனக்குத் தெரிந்த ஒருவர்(மகனின் நண்பர்)
குழந்தைகளைப் பேச்சுப் பயிற்சியில் ஈடுபடுத்தி அற்புதமாகச் செயல் படுவார்.
அவருக்குத் தெரியாத விஷயமே இருக்க முடியாது,.
வேலையெல்லாம் மறந்து அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருப்போம்:)
அன்பின் ஸ்ரீதர்
Ice breaker , கன்னிப் பேச்சு ரெண்டும் வேறன்னு நெனைக்கிறேன்..
அப்புறம் நர்சிம் spoonerism வச்சி ஒரு கதை எழுதினார் சமீபத்தில், நேரம் கிடைச்சா படிங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
டோஸ்ட் மாஸ்டர்ஸ் மீட்டிங்க் அப்படின்னுட்டு இங்க நிறைய தடவை நடந்து அது போட்டோவ்வெல்லாம் பேப்பர்ல பார்த்ததுண்டு! - மெய்யாலுமே நான் புரோட்டா மாஸ்டர் கணக்காத்தான் நினைச்சுக்கிட்டிருந்தேன் பயமக்க எல்லாம் பெரிய பெரிய ரேஞ்சுல சமையல்கார பார்ட்டீங்களா இருக்கும்ன்னு - இதுவரைக்கும் கூட அந்த பேருக்கான அர்த்தத்தை தெரிஞ்சுக்க டிரை செஞ்சது இல்ல !
இப்ப டீட்டெயிலா தெரிஞ்சுக்கிட்டேன் டாங்கீஸு :)
ரொம்ப சுவாரஸ்யமான மேட்டருங்க இது, இன்னும் கொஞ்ச நாள் கழித்து ‘மேடைப் பேச்சில் பின்னுவது எப்படி’ன்னு ஒரு பெரிய போஸ்ட் வரும்தானே?
- என். சொக்கன்,
பெங்களூரு.
நல்லா கீது...சென்னையில் இதுபோல கிளப் உண்டா?
கலக்கிட்டீங்க சாரே! எங்கே ஆபிசில் விழாயக்கிழமை தோறும் நடக்கும் இந்த டோஸ்ட்மாஸ்டர் செஷன்ல கலந்துக்க (பேச)வெட்கப்பட்டுக்கொண்டு ரொம்ப யோசித்துகொண்டிருக்கிறேன், 2010லயாவது இந்த பதிவை பார்த்து வெட்கப்படாமல் கல்ந்துக்க முடிவு பண்னியிருக்கேன். நன்றி, என் கண்களை திறந்ததற்கு :-)
Ice breaker , கன்னிப் பேச்சு ரெண்டும் வேறன்னு நெனைக்கிறேன்..///
exactly. cherry breaking.. இல்ல? :)
கொஞ்சம் வெவகாரம் தான்!
தமிழில் spoonerism:
குடிக்க கஞ்சியில்லாமல் அலைகிறான் (நன்றி: சுஜாதா) :)
நல்ல பதிவு. எழுத்தை போல பேச்சிலும் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.
ஜெய்காந்த்
வாங்க சர்வேசன்!
//அரசியல்வியாதி ஆகரது // நீர் அல்ரெடி அரசியல்வியாதின்னு இல்ல இந்த பதிவுலகம் நம்பிட்டிருக்கு :)
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தல.
வாங்க கபீஷ்!
பெங்களூரு கிளப் பற்றி எனக்கு அதிக தகவல் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்திக்கிறாங்கன்னு தெரியும். போனதே இல்லை.
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாங்க வல்லி மேடம்!
உங்கள் நண்பர் தயார் செய்யற மாதிரி எங்க தாத்தா செய்வார். அவர் எழுதிக் கொடுத்ததைப் பேசி போட்டியில் எல்லாம் பரிசு வாங்கிய ஞாபகம் இருக்கு. ஆனா கலகலப்பா நேயர்களை ஈர்க்கிற பாணியில் பேசறதுக்கு ஆசை மட்டும்தான் இருந்தது :)
உங்கள் நண்பர் பேசுவதை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், விஷயங்களை விட அதை சொல்லும் விதத்தில் அவர் எல்லாரையும் கொள்ளை கொள்கிறார் என்பது புரியும். சிலருக்கு அந்த திறமை இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. சிலருக்கு அதை வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. :)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா.
வாங்க பாஸ்டன் ஸ்ரீராம், பப்பு (பிரபுகுமார்),
//Ice breaker , கன்னிப் பேச்சு ரெண்டும் வேறன்னு நெனைக்கிறேன்..//
கன்னிப் பேச்சு என்று நான் குறிப்பிட்டது மொழியாக்கமில்லை. Toastmaster சங்கத்தில் முதல் பேச்சை Icebreaker என்று குறிப்பிடுகிறோம். பாராளுமன்றத்தில் முதல் பேச்சை கன்னிபேச்சு என்று குறிப்பிடுவார்கள். :)
நர்சிம் எழுதிய கதையை வாசித்திருக்கிறேன் ஏற்கெனவே :)
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே.
வாங்க ஆயில்ஸ்!
//டாங்கீஸு :)//
நீங்கள் எப்பொழுதும் வரவேற்கபடுகிறீர்கள்! :))
வாங்க #1 எழுத்தாளரே!
//‘மேடைப் பேச்சில் பின்னுவது எப்படி’ன்னு //
கஷ்டங்க. பின்னுகிற அளவுக்கு தலைமுடி எல்லாம் வளக்குறதுமில்லை நான். இதுக்காக வாடகைக்கு ஆள் வச்சு கூட்டிட்டுப் போய் மேடைப் பேச்சில் பின்னிக் காட்டி.... நெறய பிராப்ளம்ஸ் பாருங்க :)
இருந்தாலும் வரும் புது வருடத்தில் முயற்சி பண்றேன் தலைவரே.
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கோவ்.
வாங்க ISR
சென்னையிலும் இருக்கே. பிரதி ஞாயிறு 4-6 Presidency Clubல் சந்திக்கிறார்கள். இங்கே பாருங்க - Chennai Toastmasters Club
வாங்க ரவி!
//என் கண்களை திறந்ததற்கு //
மீண்டும் மூடறதுக்குள்ள மெம்பராயிடுங்க. அப்புறமா நாம ட்விட்டர்ல பேசியே சண்டை போடுவோம் :)
பப்பு,
// cherry breaking//
ம்ஹூம்ம்ம்... No Comments. :))
வாங்க மணிவண்ணன்!
//(நன்றி: சுஜாதா)//
:)) எப்பவோ சின்ன வயசுல கேட்ட ஜோக்கு. வாத்தியாரும் கற்றதும் பெற்றதுமில் போட்டு பிரபலபடுத்திட்டாரு. நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி.
அன்பின் ஸ்ரீதர்
மொதல்ல ஒரு விஷயம்: நான் சொன்னது கன்னிப்பேச்சுக்கான வழக்கத்தில் இருக்கும் பதம் Maiden Speech, அது Icebreaker அல்ல.
உங்கள் குழுவில் அதற்கு அப்படி பெயரிட்டு இருப்பது எனக்கு தெரியாது.
பொதுவாக Icebreaker என்பது ஒரு சொற்பொழிவிலோ / training session இலோ audience கவனத்தை ஈர்ப்பதற்கு சொல்லப் படுவது. புதிதாக ஒருவரை சந்திக்கும் போதும் - உங்க சர்ட் நல்லா இருக்கு, இன்னிக்கு உஙக ஏரியால நல்ல மழையான்னெல்லாம் கேட்பது - Icebreaker Statements.
இந்த பப்பு - பய புள்ள என்னமா கோத்து விடுது... இதப் பிடிச்சிக்கிட்டு வேறெங்க போயிட்டார்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..
வாங்க ஸ்ரீராம்!
//இந்த பப்பு - பய புள்ள என்னமா கோத்து விடுது//
அவர் அப்படித்தான். அவரத் தனியா ட்விட்டர்ல டீல் பண்ணிகிடுவோம். :)
Toastmaster Curriculum படி முதல் பேச்சை Icebreaker என்று குறிப்பிடுவார்கள். மேலும் பல தகவல்களும் அவர்கள் இணையதளத்தில் கிடைக்கும் :)
வாங்க ஜெயகாந்த்!
//எழுத்தை போல பேச்சிலும் //
அவ்வ்வ்வ்... :)
உன்னுடைய தொடர் உரையாடலுக்கும், ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி. அடுத்த ஆண்டில் மேலும் நிறைய உரையாடுவோம். :)
பிறக்கப் போகும் (ஏற்கெனவே இந்தியாவில் பிறந்துவிட்ட) 2010ம் புத்தாண்டு உங்கள் எல்லோருக்கும் சகல நன்மைகளும் பெற்று தர வாழ்த்துகள். :)
ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. :)
//பள்லியில்//
பள்ளியில்
என்ன வழக்கம் போல கீபோர்ட் குழறி விட்டதா? :p
(என் கடமையை ஒழுங்கா செய்யனுமில்ல?) :))
இதெல்லாம் நம்ம முன்னோர்கள் எப்பவோ சொல்லி வெச்சுட்டாங்க.
யாரு தெச்ச சட்டை?
தாத்தா தெச்ச சட்டை
(வேகமா நாலு தடவை சொல்லுங்க பாப்போம்).
இத மாதிரி பேச்சுக்களை வீடியோ எடுத்து நீங்களே போட்டு பாத்தா இன்னும் நெறைய்ய திருத்திக்கலாம். அனுபவத்துல சொல்றேன்.
இதோட அட்வான்ஸ்ச் ஸ்டேஜ் தான் எலிவேட்டர் ஸ்பீச்.
உங்களோட லிப்ட்டுல நயன் தாரா வந்தா மூனு நிமிஷத்துல என்ன பேசுவீங்க/கேப்பீங்க? :))
பி.கு: (பிரபு தேவா கூட இல்லாம இருக்கனும்)
வாங்க கார்த்தி!
உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
வாங்க அம்பி!
புது வருட கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சதா?
//இதோட அட்வான்ஸ்ச் ஸ்டேஜ் தான் எலிவேட்டர் ஸ்பீச்//
எலிவேட்டர் ஸ்பீச் பத்தி ஏற்கெனவே இங்கே எழுதியிருக்கேனே...
எல்லா எழுத்தும் எழுத்தல்ல
உங்கள் இருவருக்கும் எனது உளங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!
கலக்குறீங்க..!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாங்க நண்பரே!
//now keep it up!//
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா!
வாங்க தென்றல்ண்ணே!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். பாட்லக்ல கலந்துகிட்டதற்கும் மிக்க நன்றிண்ணா.
தயார் பண்ணிக்கிட்டு போனா மேடைப் பேச்சுல பாதி பயம் போயிரும்..கண்ணாடிக்கு முன்னாடி நின்னு பேசிப் பாருங்க..தன்னம்பிக்கை வளரும் :)
Nice site, nice and easy on the eyes and great content too.
Thank you, I have recently been searching for information about this topic for ages and yours is the best I have discovered so far.
Post a Comment