February 28, 2009
திருத்தி எழுதியவன்
வசுமதி அக்கா நல்ல நெகுநெகுவென்று உயரமாக செம்பு நிறத்தில் இருப்பார். சாட்டை போல் நீண்டிருக்கும் பின்னலை முன்னாடி எடுத்து விட்டு நீவிக் கொண்டே காதருகே குனிந்து ‘என்னதான் சொல்றார் உங்க சார்?’ என்று அவர் கேட்கும்போது கண்களில் குறும்பு மின்னும். பாலமுருகன் சார் கொடுக்கும் கடிதத்தை பாதுகாப்பாக அரைஞான் கொடியின் பக்கவாட்டில் சொருகி வைத்திருந்து வசுமதி அக்காவிடம் கொடுப்பதுதான் அப்போதைய எனது முக்கிய பணி. அதுவும் கூடத்து ஊஞ்சலில் ஹாண்டில் பார் மீசையோடு உட்கார்ந்திருக்கும் ரகோத்தமன் மாமாவிற்கு சந்தேகம் வராமல் கடிதத்தை அக்காவிடம் சேர்ப்பிக்க வேண்டும். ’போடா அந்தண்டை’ என்று என்னை துரத்தி விட்டு மொட்டை மாடி கைப்பிடிச் சுவரின் குறுகிய நிழலில் அமர்ந்து அக்கா அந்த கடிதத்தை திரும்பி திரும்பி படிப்பாள். அருகே எப்போதும் ரேடியோ பாடிக் கொண்டே இருக்கும். ரஙகநாயகி மாமி ‘ஏடி! எங்கடி தொலஞ்ச’ என்று குரல் கொடுக்கும் வரை ஒரே கடிதத்தை மாற்றி மாற்றி படிப்பாள்.
வகைகள்:
அறிவியல் புனைவு,
ஆழி பதிப்பகம்,
சிறுகதை,
சிறுகதை போட்டி,
சுஜாதா
February 11, 2009
அரைகுறை கடவுள்
அகோரி, பிச்சைக்காரர்களின் உலகம், pirates of the caribeean sea போன்ற photo-shoot, இளையராஜாவின் இசை, ஜெமோவின் கதை-வசனம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வந்த படம் பாலாவின் ‘நான் கடவுள்’. வணிகரீதியாக ஓரளவிற்கு வெற்றியடைந்திருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஒரு படைப்பாக தோல்விதான்.
வகைகள்:
சினிமா,
ஜெமோ,
நான் கடவுள்,
பாலா
Subscribe to:
Posts (Atom)