சுப்பையாவை எனக்கு பள்ளிக் காலத்திலிருந்தே தெரியும். கல்லூரியில் நாங்களிருவருமே கணக்கு பாடம்தான் எடுத்தோம். கணக்கின் மீது பெரிதாக விருப்பு என்றெல்லாம் இல்லை. அதுதான் கிடைத்தது. ராஜா கல்லூரி வகுப்பில்தான் பழக்கமானான். பக்கத்தில் எம்.என். காலனியில்தான் வீடு என்பதால் வெகு சீக்கிரம் தோஸ்த் ஆகிவிட்டான். சுப்பையாவிற்கும் ராஜாவிற்கும் இடையே ஒரு ஸ்பெஷல் உறவுதான் என்று சொல்ல வேண்டும்.