August 25, 2009

இணைய சிறுகதை வடிவம்

உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு மே 2009-ல் வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தார்கள். பெருவாரியான வரவேற்பைப் பெற்ற போட்டியாக இருந்தது. தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் சிறுகதைப் போட்டி முடிவுகளை அறிவித்து தேர்ந்தெடுத்த 20 கதைகளின் பட்டியலையும் வெளியிட்டிருந்தார்கள். அதில் ஒன்றாக நான் எழுதியிருந்த ’காதோரமாய்’ என்ற கதையும் இடம் பெற்றிருந்தது. பரிசுக்குரிய படைப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் கிழக்கு பதிப்பகம் மூலமாக தனி நூலாகவும் வெளியிடப்படும் திட்டம் இருக்கிறது.

August 18, 2009

பார்த்ததில் பிடித்தது - 3

பழைய பார்த்ததில் பிடித்தது பட்டியல்

Benhur - The tale of the Christ
இந்தப் படத்தைப் பற்றி எழுதுவது என்பது பூக்கடைக்கு விளம்பரம் செய்வது போல்தான். பலரும் பலவகையிலும் ஆய்ந்து தோய்ந்து விவரித்தப் படம். 1959-ல் பதினொன்று ஆஸ்கர்களை அள்ளிச் சென்றது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த திரைப்படத்திற்கு நிகராக ஆஸ்கர் அவார்டுகளை அள்ளிச்சென்ற ஒரே படம் டைட்டானிக் மட்டுமே. Danny Boyle -ன் Slumdog Millionaire எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது என்று சொல்லிக் கொண்டாலும் ஏனோ பென்ஹர், டைட்டானிக் வரிசையில் அது வருமா என்று எனக்கு உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்திய நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அதிகமாக பங்காற்றினார்கள் என்பதால் நெஞ்சத்திற்கு கொஞ்சம் நெருக்கமானது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

August 16, 2009

மேற்கிலிருந்து கிழக்கே - 3

மேற்கிலிருந்து கிழக்கே - 1
மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6

முதல் நாள் - 25 ஜூலை 2009 - சனிக்கிழமை

ஏதோ ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்தக் கதை. ‘இந்த சாலை எங்கேப் போகிறது?’ என்று அரசன் கேட்க, வழிபோக்கன் சொல்கிறான். ‘இந்தச் சாலை எங்கேயும் போகவில்லை. நீதான் சாலை வழியே போய்க் கொண்டிருக்கிறாய்’. இதையே அப்படியே ஒரு ஜென் கதையாக மாற்றி குரு, சிஷ்யன் என்றெல்லாம் சேர்த்து ஓஷோ சொன்னதாக நினைத்துக் கொண்டால் இந்த கட்டுரைக்கு ஒரு தனி மதிப்பு வந்துவிடுகிறது. உண்மை அதுதான். சாலைகளுக்கு வரலாறு, பரம்பரை எல்லாம் இருக்கிறது. இந்த முழுப் பயணத்திலும் நான் பெரும்பாலும் சென்றது ஒரு சாலை வழியாகத்தான் I - 80. மேற்கே சான் ஃப்ராண்ஸிஸ்கோவிலிருந்து தொடங்கி கிழக்கே நியுஜெர்சி வரை சென்று முடிகிறது. கிட்டத்தட்ட இந்தச் சாலையை நான் முழுவதுமாக கடந்திருக்கிறேன். சோழ அரசர்கள் பாணியில் ‘ஐ எண்பது கொண்ட ஐக்கியவான்’ என்று ஏதாவது பட்டம் போட்டுக் கொள்ளலாம்.

August 12, 2009

உன் பார்வையில்

குமார்னு...?’

காம்பௌண்ட் கேட்டுக்கு வெளியே உயரமாக, குளிர்கண்ணாடி அணிந்து கொண்டு, பிரகாசமான புன்னகையோடு, பொங்கி வழியும் கூந்தலை தோள் மீது படரவிட்டுக் கொண்டு நின்றவளைப் பார்த்தால் மதலைகுமாருக்கு அடையாளம் தெரியவில்லை. ஏதாவது விலாசம் விசாரிக்க வந்திருப்பாளோ? பின்னே, லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுக் கொண்டு யார் இந்த விளம்பரப் பலகை நிறுவனத்தைத் தேடி வரப்போகிறார்கள்.