January 17, 2010

ஆயிரம் குழப்பங்களில் ஒருவன்

’சோழர்குலத்தை பூண்டோடு அழிக்க சபதம் பூண்ட பாண்டிய ஆபத்துதவிகள் போன்ற ஒரு இரகசியக் குழு (secret brotherhood), ஆயிரம் வருசங்கழிச்சு இந்த 2010ம் ஆண்டிலும் துப்பாக்கி கிரனேட் எல்லாம் வச்சுகிட்டு சோழர்களை துரத்திட்டேப் போறாங்க... ஆதித்தன் கரிகாலன் மரணம் படிச்சிருப்பீங்களே... அந்த மாதிரி ஒரு ப்ளாட்’

’சூப்பர்! ஆனா இது பீரியட் ஃபிலிம் மாதிரியாவா இல்ல மாடர்னாவா?'

'பல நூற்றாண்டுகளா ‘பொத்தி வைக்கைப்பட்ட’ ஒரு சோழர் நாகரீகம் இன்னமும் இருக்கு. ஒரு தீவு இருக்கு. அதுல சோழ நாட்டுக்காரங்கதான் இன்னிக்கும் இருக்காங்க. மாடர்னும் பீரியடும் கலந்து கொடுக்கிறோம்.'

'ஹ்ம்ம்... ரொம்ப டிஃபெரெண்டா இருக்கே...'

'இருங்க. இருங்க. ஒரு parallel line போட்டுக்கலாம். அந்த சோழர்களைப் பத்தி இந்திய தொல்பொருள் துறையினர் ஆராய்ச்சி செய்யறாங்க. இராணுவம், professionals குழு, எடுபிடி, ஆதிவாசிகள் எல்லாம் கலந்து ஒரு பெரிய குரூப்பா சோழர்களை அழிக்கப் போறாங்க. சுவாரசியமா, mysticalஆ பண்ணலாம்.'

'ஓ...ஓ... இப்படி ஒரு ட்ரீட்மெண்டா? ஆர்க்கியாலஜி ரிசர்ச், பழிவாங்கறது, இன மோதல்னு மூணு லைன்ல சொல்லப் போறிங்களா? கொஞ்சம் ஹெவிதான்.'

'லைட்டாக்கறதுக்கு கொஞ்சம் ஜனரஞ்சகமா பொம்பள பொறுக்கி ஹீரோ, குத்துப் பாட்டு, ஹைடெக் கெட்ட வார்த்தைன்னு, ரீமிக்ஸுன்னு பண்ணிக்கலாம்.'

'ஓ!'

'கடைசி சோழ இளவலை தலைமறைவா கொண்டுட்டுப் போற மந்திரி ஏழு அடுக்கு அரண் வைக்கிறார். கடல், பாலைவனம், ஹலுசினேஷன், Zombie இப்படி புகுந்து வெளையாடலாம்... இருநூறு வயசு வாழற பெரியவர், ஆயிரம் வருசம் வாழும் மந்திரி, நிழலை வச்சே முத்தம் கொடுக்கிற ராஜான்னு மாயாஜாலம்...’

’மந்திர தந்திரப் படம் மாதிரியா?’

’நிறம், மொழி, பண்பாடு இப்படி எல்லாத்திலேயும் சரித்திர காலத்தை காமிக்கிறோம். மூங்கிலை வளைச்சு கத்தியால தன் தலையைத்தானே அறுத்து களபலி கொடுக்கிறது, சக்கரவியூகம் மாதிரி போர்த் தந்திரங்கள், வீர விளையாட்டுத் திடல்ல ஆளுங்களப் போட்டு கொல்றது, கல்வெட்டு தமிழ்ல உரையாடறது...’

’செல்வா! Are not we shooting at many directions? ரொம்பவும் உட்டாலக்கடியா இருக்கே.’

அப்படின்னு இந்த இடத்துல யாராவது கேட்டிருக்க வேண்டும். சேணம் போடாத குதிரைல கண்ணைக் கட்டிகிட்டு பயணம் போன மாதிரி ஆகி விட்டது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்.

Gladiator, Mummy Returns, Lord of the Rings, Apocalypto, Raiders of the last ark என்று ஏகப்பட்ட பாதிப்புகளோடு தமிழில் ஒரு வரலாற்றுப் புனைவை திரைப்படமாக எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். கார்த்தி திரையில் வரும்போதெல்லாம் மக்கள் ரசித்து சிரிக்கிறார்கள். இரண்டு பெண் நாயகிகளையும் சரிக்கு சமமாக உரசி லொள்ளு செய்கிறார். ரீமாசென் மற்றும் பார்த்திபனுக்கு நல்ல காத்திரமான பாத்திரம். ஆண்ட்ரியா வந்து போகிறார். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை இரைச்சலாக இருக்கிறது. பாடல்கள் பிரபலமாகி நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. காமிரா ராம்ஜி கலக்குகிறார். மிகப்பெரிய சறுக்கல் Computer Graphics. யார் செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்கள் பெயர் சொல்லி திருஷ்டி பூசனிக்காய்க்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.

பல்வேறு திசைகளிலும் தளங்களிலும் பயணிக்கும் இந்தக் கதைக்கு இரண்டு வருடங்கள் உழைத்து முப்பது கோடிக்கு மேல் செலவழித்து திரைப்படமாக எடுத்திருக்கிறார்களாம். இயக்குநர் தன் சொந்தப் பணம் பல கோடிகள் செலவழித்து படத்தை வெளியிட்டிருக்கிறாராம். அய்யோ பாவம் செல்வா என்றிருக்கிறது.

பாலகுமாரனுக்கு டைட்டில் க்ரெடிட் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியாது. திரைப்படத்தில் பிற்பகுதியில் வரும் சோழர்கால வரலாறு முழுவதும் பாலகுமாரனின் ‘உடையாரி’லிருந்துதான் (நான் படித்ததே கொஞ்சம்தான் அதில்) எடுக்கப் பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அதுவும் அந்த மூங்கிலை வளைத்து தலையை அறுத்துக் கொள்ளும் காட்சி அவர் நிறைய கதைகளில் எழுதியிருக்கிறார். அவருடைய ஸ்டைல் ராஜா அளவிற்கு மந்திரியையும் ஹீரோவாக்குவது (அநிருத்த பிரம்மராயர், அவர் மகன் அருள்மொழி பட்டன்). இந்தப் படத்திலும் ஒரு மதியூக மந்திரி சோழ வம்சத்தை ஒளித்து வைத்துப் பாதுகாக்கிறார். மாயாஜால அரண்கள் எல்லாம் அமைத்து சூட்சும ரூபமாக காவல் காக்கிறார். ஆயிரம் வருஷங்கள் உயிர் வாழ்ந்துவிட்டு இன்னொருவனுக்கு எல்லா சக்தியையும் தத்தம் செய்கிறார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன்.

முன்பாதியில் கலகலப்பாக தொடங்கி பல சாகசங்களைக் கடந்து செல்லும் தேடுதல் குழு என்று பயணிக்கிறது கதை. பின்பாதி முழுவதும் கிபி ஆயிரமாவது ஆண்டு சோழ தேச மக்களும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் காண்பிக்கிறார்கள். நடுவில் மாயதந்திரம், களரிச் சண்டைகள், மனலுக்குள் நீச்சலடித்து வரும் போர் வீரர்கள், இராணுவத்தினரின் அட்டூழியம், என்றெல்லாம் போகிறது.

செல்வராகவன் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம் என்னவென்றால்... இம்மாதிரியான கதைகளை திரைப்படத்தில் நேரடியாக சொல்லிவிட முடியாது. சொல்லிவிடவே முடியாது. போதாததற்கு படத்தின் தொடக்கத்தில் ஒரு உரிமைதுறப்பான் (Disclaimer) போட்டு விடுகிறார்கள். இந்தப் படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் வரலாற்று சான்றில்லாத புனைவே என்று. நல்லது. அதனால் இந்தக் கதையின்பாற் ஏற்படும் கேள்விகளுக்கு எங்கு போய் விடை தேடுவது?

மேற்குறிப்பிட்ட படங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு வலுவாக நெய்யப்பட்ட முழுமையான கதை கண்டிப்பாக இருக்கிறது. ’ஆயிரத்தில் ஒருவன்’ கதையின் பின்புலம் தெரியாமல் எத்தனை கேள்விகள் எழுகின்றன? தனது கடைசி வாரிசைக் காப்பாற்றுவதற்காகவும், சோழவம்சத்தை என்றென்றும் துலங்கச் செய்யவும், நினைக்கும் அந்த சோழ ராஜா எதற்காக பாண்டியரிடமிருந்து அபகரித்த அவர்களின் குல தெய்வச் சிலையையும் இளவலோடு சேர்த்து ஒளித்து வைக்க வேண்டும்? அப்பொழுதுதான் பாண்டியர்கள் உத்தரவாதமாக அந்த இளவரசனைத் தேடி வந்து சோழர்களை அழிப்பார்களாமா?

இது போல் ஏகப்பட்ட கேள்விகள் முடிவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன. அதுவும் வெளியுறவுத் தொடர்புகளை சுத்தமாக துண்டித்துவிட்டு 'Self-reliant'ஆக இருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிய கதை என்பதால் இயற்கையாக எழும் கேள்விகள். படத்தில் பெரும்பாலும் விடைகள் இல்லை. ஒரே ஒரு பையில் குவாட்டர் ஓல்ட் மாங்கைப் போட்டுக் கொண்டு சோழர்கள் இருக்கும் தீவைத் தேடிப் போன பிரதாப் போத்தனை தேடி பெரிய கூட்டமே ஆராய்ச்சி உபகரணங்களோடு போகிறார்கள். அப்படியானால் முதலில் போன பிரதாப் ஆராய்ச்சி எதுவும் செய்யப் போகவில்லையா? வியட்நாமிற்கு சென்னையிலிருந்து கப்பலில்தான் போக வேண்டுமா? எம்ஜிஆர் பாட்டை ரீமிக்ஸ் செய்யும் வாய்ப்பை தவிர வேறு என்ன முகாந்திரம் அந்த கப்பல் பயணத்திற்கு?

ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத் தலைவி அறிவிக்க முடியுமா? ஜெராக்ஸ், மைக்ரோஃபிலிம், எல்லாம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படாததா? பழைய கால அரிய ஓலைச்சுவடிகளை அப்படியே தூக்கிக்கொண்டு சுற்றுவதுதான் எந்தவகை ஆராய்ச்சி?

பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு குழந்தைக்கு பால் கொடுக்க இளம் தாயின் மார்பில் பால் வரவில்லை இரத்தம்தான் வருகிறது என்று காட்டுகிறார்கள். அப்படி அவர்கள் என்னதான் தொழில் செய்கிறார்கள்? வேளாண்மை, வணிகம், மீன்பிடிப்பது என்று எதுவும் செய்கிறார்களா? இறைச்சியை பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்றால் வேட்டையாடுகிறார்களா? சோழர்கள் சைவர்கள் என்பதைக் காட்ட எல்லாரும் திருநீறு இட்டுக் கொண்டு ஆடிப் பாடுகிறார்கள். சாணத்திலிருந்து தயாரிக்கும் திருநீறு என்பதால் அவர்கள் கால்நடை வளர்க்கிறார்களா? வீர சைவர்களான சோழர்கள் கல்வெட்டு வழக்கில் ‘லிங்க தரிசனம்’ என்றெல்லாம் வாமாச்சார வழக்குகள் பேசுவார்களா? சோழர்கள் எந்த காலத்தில் நரம்புப் புள்ளிகளில் ஊசி குத்தும் யுனானி மருத்துவத்தை கையாண்டார்கள்? ராஜேந்திர சோழனின் காலந்தொட்டே தென்கிழக்கு ஆசியாவில் பல இடங்களில் வெற்றி கொண்ட சோழர்கள், அரேபியா, யவனம், இலங்கை, சாவகம், கடாரம் என்று வணிகம் செய்த சோழர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் கலப்பேயில்லாத சுத்த கருப்பு வண்ணதிலேயே இருக்கிறார்களாமா? பிரவாஹன் போன்றோர் முன்வைக்கும் பழுப்பு நிற திராவிடர் கருத்தாக்கம் தவறு என்று சொல்கிறார்களா? பத்தாம் நூற்றாண்டு காலத்து கலாச்சாரத்தில் சாதி பாகுபாடுகள் கிடையாதா? எதற்கு பாண்டிய வாரிசு சோழ அரசனுடன் உதிரம் கலக்க வேண்டும் என்று கன்னாபின்னாவென்று முத்தம் கொடுக்கிறார்? வியட்நாம் பக்கத்திலிருக்கும் ஒரு ஆதிவாசிக் கூட்டம் கறுப்பாக இருக்கிறது. இன்னொரு ஆதிவாசிக் கூட்டம் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறார்களே?

பாண்டியர்களின் கொடியில் மீன் இருப்பது என்பதற்காக அவர்களின் குலதெய்வத்தையும் மீனாக காட்டுவது ஏனோ? சோழனுக்கும் ஏதாவது புலித்தேவரை சாமியாக காட்டாமல் சிவனையே தெய்வமாக காட்டுவது என்னவகை கதை யோசனை?

கொலைசெய்யப் கத்தியோடு பாய்ந்து வரும ஆதிவாசிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டும் ‘hold fire' என்று சொல்லிக் கொண்டே இருக்கும் இராணுவ கமாண்டருக்கு எங்கே ட்ரெய்னிங் கொடுக்கிறார்கள்? இந்திய இராணுவத்தினரிடம் SLRம், கையெறி குண்டையும் தவிர வேறு ஆயுதமே இல்லையாமா? ஒரு பயனைட் கூட இல்லாமல் பாவம் எதிரிகளின் கத்திகளுக்கு இரையாகுகிறார்கள் பாவம். ரீமா சென்னின் கைத்துப்பாக்கியில் அதிகபட்சம் எத்தனை குண்டுகள் போடலாம்? எந்த இராணுவம் எதிரிகளைச் சுற்றி வட்டமாக நின்றுகொண்டு துப்பாக்கியால் சுடச் சொல்லித்தருகிறது? ஆவ்வ்வ்வ்.... போதும்.

இந்தக் கதையை முழுமையாக ஒரு நாவலாக செய்துகொண்டு அதை வெளியிட்டு, நல்ல முறையில் சந்தைப் படுத்தி மக்களுக்கு இந்தக் கதையின் மாந்த்ரீக, தாந்த்ரீக, கலாச்சார பின்புலனை அறிமுகம் செய்துவிட்டு திரைப்படமாக எடுத்திருக்க வேண்டும்.

இன்னமும் சில நாட்களுக்கு சுஹாசினியுடன் பேசிக்கொண்டோ, அனுவோடு காப்பிக் குடித்துக் கொண்டோ செல்வராகவன் பேட்டி கொடுப்பாரா இருக்கும். ‘இந்த genreல் தமிழிலேயே இதாங்க முதல் படம்...’. நல்லது. அடுத்த முயற்சியிலாவது கதையை முழுமையாக தயார் செய்து கொள்ளுங்கள் செல்வா.

63 மறுமொழிகள்:

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு கேள்விகள் கேட்டு இருக்கியளே

இந்த படத்தை பார்க்லாமா வேண்டாமா?

ஒரே கேள்வி! ஓஹோன்னு பதில் சொல்லுங்க :)

Sridhar Narayanan said...

//இந்த படத்தை பார்க்லாமா வேண்டாமா?//

வாங்க ஜமால் அண்ணே!

நீங்களும் ஒருக்கா படத்தைப் பாத்திட்டு் நம்ம கேள்விகளுக்கு ஏதாவது பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன். அதுக்குதானே கேள்வி கேக்குறது :))

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Cable Sankar said...

sridhar.. இதையெல்லாம் கேட்கக்கூடாதாம். ஏன்ன அவஙக் பாவம் 35 கோடி செலவு செஞ்சி.. 3 வருஷம் உழைச்சிருக்காங்களாம்.. :)

இரா. வசந்த குமார். said...

hi sridhar...

plz check :: http://kaalapayani.blogspot.com/2010/01/blog-post_15.html

tnx.

ஜெட்லி said...

நல்ல கேள்விகள்.........

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குத் தெரிந்த பதில்கள் :

பிரதாப் போத்தன் எடுத்துச் சென்றது (அ) குவார்டர் கிடையாது (ஆ) ஓல்ட் மாங்கும் கிடையாது

அவ்வளவுதாம்பா.

படம் தலைவலி :(

pappu said...

அவ்வளவா கொத்தி இருக்காங்க?

கிள்ளிவளவன் said...

//sridhar.. இதையெல்லாம் கேட்கக்கூடாதாம். ஏன்ன அவஙக் பாவம் 35 கோடி செலவு செஞ்சி.. 3 வருஷம் உழைச்சிருக்காங்களாம்.. :)//

அப்படி இல்லை சங்கர் அவர்களே. பல கோடி செலவு பண்ணி அம்புலிமாமா காப்பி அடிது எடுத்த "அவதாரை" விட இது எவ்வளவோ மேல்.

தென்றல் said...

ஸ்ரீதர் -

கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டீர்கள்!

/அதனால் இந்தக் கதையின்பாற் ஏற்படும் கேள்விகளுக்கு எங்கு போய் விடை தேடுவது?/
இதே சந்தேகம்தான் தோன்றியது 'ஹேராம்' படம் பார்த்தபிறகு..

உங்கள் 'பார்வை' பிடிச்சிருக்கு.

வரதராஜலு .பூ said...

எத்தன கேள்வி, ம்.

பாவம், ரொம்பதான் குழம்பிட்டிங்க
போல இருக்கு படத்த பாத்து.

அதிஷா said...

! - உங்க பதிவுக்கு

Mighty Maverick said...

பழைய எம்.ஜி.யார். நடித்த "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தின் கதையை சற்றே உட்டாலக்கடி செய்து, சோழர்களையும் பாண்டியர்களையும் கேவலப்படுத்தி இருக்கிறார்களே... அதனை ஏன் சொல்ல வில்லை அய்யா???

அஹோரி said...

இந்த அளவுக்கு யோசிக்கவச்சதே செல்வராகவனின் வெற்றி.
படம் நல்லா இருக்கு.

Prabhu Rajadurai said...

நீங்க என்ன வாத்தியாரா....இம்புட்டு கேள்வி கேக்குறீங்க. பாவம் விடுங்க. அழுதுடப் போறாங்க

சி.வேல் said...

வணக்கம் sridhar

சத்தியமா யாரும் இவ்வளவு துல்லியமாக பார்த்திருக்கமாட்டார்கள்,

ஃபில்டு ஒர்க் சுத்தமாக இல்லை,

காதல் படங்கள் மட்டும் செல்வா செய்யலாம், அதில் இவ்வளவு மெனக்கெடல் தேவையில்லை

காதலுக்கு கண் இல்லைன்னு ஒரு வரியில் சொல்லிடலாம்

செல்வா இவ்வளவு சொதப்புவார் என்று நினைக்கவில்லை

pappu said...

@orupakkam Below 'post ur comment' link in your blog there is a text ’இது தொடர்பாக’ written in white letters. y?

Sammy said...

உங்கள் இடுகையில் தீவிர பிழை ஒன்று உள்ளது .....

//ஒரே ஒரு பையில் குவாட்டர் ஓல்ட் மாங்கைப் போட்டுக் கொண்டு சோழர்கள் இருக்கும் தீவைத் //

அது கண்டிப்பா குவாட்டர் இல்லை ...மூன்று பெரும் சேர்ந்து மூன்றுக்கும் மேல ரவுண்டு அடிப்பார்கள்.

பாருங்க இவ்ளோ சின்ன இடுகை எழுதும் போதே பிழை பண்றீங்க .....அந்த மாதிரி தான் இயக்குனரும் ... விடுங்க சார்.

Sammy said...

//ரீமா சென்னின் கைத்துப்பாக்கியில் அதிகபட்சம் எத்தனை குண்டுகள் போடலாம்?//

கை துப்பாகினா ஆறு குண்டு தானா ? சமீபத்தில் வந்த கை துப்பாக்கி மாடல் உங்களுக்கு தெரியுமா....அந்த துப்பாக்கியில் அதிகமா எவ்ளவு குண்டு போட முடியும்னு உங்களுக்கு தெரியுமா....?

//வியட்நாமிற்கு சென்னையிலிருந்து கப்பலில்தான் போக வேண்டுமா?///

அவர்கள் எடுத்திட்டு போகும் சாமான்கள் அதிகம் ...அதை விமானத்தில் எடுத்து செல்ல சரியாக இருந்திருக்காது...இல்லைனா அன்னிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் STRIKE இருந்திருக்கலாம்.. (ஓட்டுனர்கள் சரியா சம்பளம் கொடுகலையாமே)

Sammy said...

//Gladiator, Mummy Returns, Lord of the Rings, Apocalypto, Raiders of the last ark என்று ஏகப்பட்ட பாதிப்புகளோடு//

இந்த லிஸ்டில் எப்படி TROY விட்டீர்கள் ? ...ஒரு மைதானத்துல சண்டை போட்டா உடனே GLADIATOR மட்டும் தான் நியாபகம் வருமா ?..அப்ப மைதானம் சண்டை இனிமேல வரும் படத்தில் வரக்கூடாதா ?

//அந்த சோழ ராஜா எதற்காக பாண்டியரிடமிருந்து அபகரித்த அவர்களின் குல தெய்வச் சிலையையும் இளவலோடு சேர்த்து ஒளித்து வைக்க வேண்டும்? //

எல்லா வரலாற்றிலும் நடக்கும் செயல் தானே இது .....பிற தெய்வ சிலைகளை துக்கி கொண்டு செல்வது...

Sridhar Narayanan said...

வாங்க சங்கர் சார்!

//35 கோடி செலவு செஞ்சி.. 3 வருஷம் உழைச்சிருக்காங்களாம்..//

அதுதான் எனது ஆதங்கமும். இவ்வளவு உழைச்சுட்டு இன்னமும் பெட்டரா வந்திருக்கலாமேன்னு :)

@வசந்தகுமார்

சுட்டிக்கு மிக்க நன்றி வசந்த். அந்தக் கதையையும் படிச்சேன். எனக்கென்னமோ இந்த ‘பொத்திவைக்கப்பட்ட’ சோழர்கள் பற்றிய கதை ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் கிளர்ந்தெழுந்தது போல தோணுது :)

@ஜெட்லி

நன்றி :)

@ஜ்யோவ்ராம்

//(அ) குவார்டர் கிடையாது (ஆ) ஓல்ட் மாங்கும் கிடையாது//

நன்றி. :))))

@pappu

இன்னமும் நல்லா எடுத்திருக்கலாங்கிறதுதான் ஆதங்கம் :)

@கிள்ளிவளவன்

அவ்தார் பத்தி அடுத்த வாரம் எழுதனும்னு திட்டம். :)

அது வேற மேட்டருங்க. வருகைக்கு நன்றி :)

@தென்றல்

ஹேராம் கதை வேறங்க. குழப்பமா தெரிஞ்சாலும் அது ஒரு நல்ல முயற்சியே என்பது எனது எண்ணம். Forrest Gump பாத்திருக்கீங்களா? இதுல இந்திய சுதந்திர போராட்டத்து சில முக்கிய சம்ப்வங்கள் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்னு எடுத்த கதை. அதையும் ஒரு புத்தகமா பண்ணிட்டு படமா எடுத்திருந்தா இன்னும் சிறப்பா வந்திருக்கும்.

நன்றி :)

Sridhar Narayanan said...

@வரதராஜுலு

:)) குழம்பல... நிறைய பேரை குழப்பிட்டு இருக்கேன் போல

@அதிஷா

// ! - உங்க பதிவுக்கு //

அட! என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது. ஆனா என்ன சொல்றீங்கன்னுதான் புரிய மாட்டேங்குது :)
சரி பாராட்டாவே எடுத்துக்கறேன். நன்றி :)

@Mighty Maverick

// சோழர்களையும் பாண்டியர்களையும் கேவலப்படுத்தி இருக்கிறார்களே//

அப்படி சொல்லிட முடியாதுங்க. இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சிருந்தாங்கன்னா நல்லாவே செய்திருக்கலாம்.

@அஹோரி

//இந்த அளவுக்கு யோசிக்கவச்சதே செல்வராகவனின் வெற்றி.//

அது சரி! :)

@Prabhu Rajadurai

//பாவம் விடுங்க. அழுதுடப் போறாங்க//

குறை சொல்ற நோக்கத்தில சொல்லல்லீங்க. :)

நன்றி :)

@சி. வேல்

//ஃபில்டு ஒர்க் சுத்தமாக இல்லை,

காதல் படங்கள் மட்டும் செல்வா செய்யலாம், அதில் இவ்வளவு மெனக்கெடல் தேவையில்லை//

உழைப்பு தெரியுது. ஆனா அதை சரியா Channelise செய்திருக்கலாம். அதுக்குதான் Scoping பண்ணிகிட்டு கதையா எழுதிடனும். அப்ப ஒரு படமா / இரண்டு படமாக்கூட எடுக்கலாம் :)

நன்றி :)

@pappu

ஆமாங்க. நானும் கவனிச்சேன். CSSல திருத்தனும். செய்திடறேன் சீக்கிரமே.

@sammy

//மூன்று பெரும் சேர்ந்து மூன்றுக்கும் மேல ரவுண்டு அடிப்பார்கள்.//

//அந்த துப்பாக்கியில் அதிகமா எவ்ளவு குண்டு போட முடியும்னு உங்களுக்கு தெரியுமா....?//

//இல்லைனா அன்னிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் STRIKE இருந்திருக்கலாம்.//

:)) உங்கள் கேள்விகளை வச்சு தனியா ஒரு பதிவே போடலாம் போல. கலக்குங்க.

//அப்ப மைதானம் சண்டை இனிமேல வரும் படத்தில் வரக்கூடாதா ? //

வரலாம். ஆனா ஏதோ பலூனை பிடிச்சிகிட்டு ஆட்டிகிட்டே விடறமாதிரி இல்லாம.. கொஞ்சம் ரியாலிஸ்டிக்கா கிராஃபிக்ஸ் பண்ணினாங்கன்னு நல்லாயிருக்கும். :)

நன்றி :)

Sridhar Narayanan said...

ஏன் இந்தக் கேள்விகள்?

இந்தப் பதிவிலும், ட்விட்டரிலும் எதிர்வினையாற்றிய நண்பர்களுக்கு நன்றி. துண்டு துண்டாக ஆங்காங்கே எழுத முடியாததினால் விரிவான பதிலாக இங்கே.

முதலில் தெளிவாக ஒன்றை சொல்லி விடுகிறேன். எனக்கு திரைப்பட விமர்சனம் என்பதில் நம்பிக்கையில்லை. அதற்கு சில கோட்பாடுகள் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் விவரமாக அலச வேண்டும். என் சோம்பேறித்தனத்தில் சிலவற்றை எழுதாமலோ கவனிக்காமலோ விட்டுவிடுவேன். ஒரு படைப்பை நான் அனுபவிக்கும் விதத்தில் விவரிப்பதுதான் எனது நோக்கம்.

’இண்டர்நேஷனல் ஸ்மக்ளர் அவரு. சுத்தி ஏகப்பட்ட செக்கூரிட்டி. நீங்க வெறுங்கையோடப் போறீங்க அவரு முன்னாடி. கிட்டப் போனவுடன் டகால்னு இடுப்பு பெல்ட்டை அவுத்து உதறினா அப்படியே ஸ்வோர்டாயிடுது. அல்லாரையும் துப்பாக்கியை கீழப் போடச் சொல்றீங்க’

என்றவகையில் எடுக்கப்படும் படங்களின் மேல் நமக்கு அதிக கேள்விகள் எழுவதில்லை. பார்த்ததோடு சிரித்துவிட்டு போய்விடுவோம்.

பொதுவாக திரைப்படங்கள் தொடங்கும்போது இவ்வகை உரையாடல்கள்தான் குழுவிற்குள் நிகழ்கிறது. பதிவின் முதல் பகுதி அப்படித்தான் எழுதியிருந்தேன். இவ்வளவு பணம் செலவழிக்கும் புண்ணியவான்கள் ஏன் சில அடிப்படைக் கேள்விகளை கேட்டு விவாதித்திருக்கக் கூடாது என்ற ஆதங்கத்திலேயே அடுத்த பகுதியை எழுதியிருந்தேன். லாஜிக்கல் குற்றங்களோ, கண்டினியூட்டி தவறுகளோ கண்டுபிடித்து எள்ளி நகையாடும் நோக்கத்தில் எழுதவில்லை அந்தப் பதிவை.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சோழர்கள், பாண்டியர்கள், அவர்களுக்குள் நிகழ்ந்த சண்டைகள் என்று புனைவாக ஒருவர் கதையை எழுதியிருந்தாலும், சில அடிப்படைகளை நாம் மாற்றிவிட முடியாது இல்லையா?. பாண்டியர்கள் மீன் கொடியோடு மதுரையை ஆண்ட அரசகுடும்பம் என்பதை மாற்றி வராக கொடியோடு நாகர்கோவிலை ஆண்டார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

பத்தாம் நூற்றாண்டு பேசுதமிழாக ’உய்த்தரவு’ என்று பேசுகிறார்கள். இது ஏதோ எழுத்தாளர் எழுத்து மேசையின் முன்னால் அமர்ந்து உருவகித்துக் கொண்ட மொழியல்ல. சோழர்காலத்து கல்வெட்டுகளை, கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள் போன்ற ஆதாரங்களிலிருந்து உருவகித்துக் கொண்ட மொழி. கல்வெட்டு மொழி பேசுமொழியாக இருந்திருக்குமா என்பதிற்குள் எல்லாம் புகாமல் இந்த அளவிற்கு முயன்றதே பாராட்டுதல்குரியது என்று சொல்லலாம்.

ஆனால், கதையின் ஆதார முடிச்சாக சோழர்கள் பாண்டியர்களின் குலதெய்வச் சிலையை கவர்ந்து சென்று பல வருடங்களாக பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது. ஒரு அட்வெஞ்சர் திரைப்படம்னா அப்படித்தான் சிலையைத் தேடிப் போறா மாதிரி இருக்கனும் என்ற உணர்வை ஒதுக்கிவிட்டு கதையை மட்டும் பார்த்தால் குழப்பம்தான். நாட்டை விட்டு ஓடிப்போகும் சோழர்கள் அந்த சிலையையும் கூடவே தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்? அதுவும் சோழர் குலத்தின் இளவரசனை பாதுகாக்க வேண்டியிருக்கும்போது இந்த சிலையை கூடவே வைத்திருப்பது அபாயமில்லையா? அதைத்தேடி பாண்டியர்கள் வரத்தானே செய்வார்கள். அப்படி என்ன அந்த சிலை விலைமதிப்பற்ற தங்கச் சிலையா? அதனால் பாண்டியர்கள் சக்தி எதுவும் குறையுமா? பாண்டியர்கள் வெற்றி கொண்டதற்கு அடையாளமாக வைத்திருக்கிறார்களா? இப்படி கோடிட்ட இடத்தை நாமே நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான் போல. தமிழ்நாடும் பிறகு தெலுங்கு பிரதேசமும் சேர்ந்து கோலோச்சிய பாண்டிய அரச குடும்பத்தினருக்கு இவர்களாக ஏதோ குலதெய்வ சிலை என்று போகிற போக்கில் காட்டினால் என்னய்யா அர்த்தம்?இந்த சிலை விவகாரம் இப்படி ஒட்டாமல் துருத்திக் கொண்டு இருக்காமல் இன்னும் தெளிவாக கையாளப்பட்டிருக்க வேண்டும்.

இதற்கு சரித்திரத்திலேயே உதாரணம் உண்டு. வீரபாண்டியன் பிற்கால சோழர்களிடம் தோற்று மதுரையை விட்டுவிட்டு, இலங்கைக்கு தப்பி ஓடி, அங்கு அரசன் மகிந்தனிடம் தங்களது பாரம்பரிய மணி மகுடத்தையும், இந்திரன் கொடுத்ததாக சொல்லப்படும் இரத்தின ஹாரத்தையும் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கொடுத்துவிட்டான். இராஜேந்திர சோழன் இலங்கையின் மீது படையெடுத்து சென்று அந்த மணிமகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் மீட்டு கொண்டு வந்து மதுரையில் வேறு ஒரு பாண்டிய வம்ச மன்னனுக்கே பட்டாபிஷேகம் செய்தான். குலதெய்வச் சிலைக்கு என்பதற்கு பதிலாக பாண்டியர்களுக்கு இந்திரன் அளித்த இரத்தின ஹாரத்தை வைத்துப் பாருங்கள். சட்டென்று அந்த ‘முக்கியத்துவம் என்ன’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். நான் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. முழுமையில்லாமல் இருக்கிறதை சுட்டிக் காட்டவே அப்படி சொன்னேன்.

(தொடரும்)

Sridhar Narayanan said...

ஏன் இந்தக் கேள்விகள்?

சோழர்கள் சைவத்தைப் போற்றிய அரசர்கள். அதை மாற்றாமல் 2010லும் அங்கே சிவன் கோவில்கள், சோழர்கள் நெற்றியில் திருநீறு பட்டைகள் என்று கையாண்டிருக்கிறார்கள். அப்பொழுது பாண்டியர்கள் எந்த மதத்தை போற்றினர்? அவர்களும் சைவத்தை போற்றியவர்களே. வைணவத்திற்கு ஓரளவு அங்கீகாரம் இருந்திருக்கிறது. காபாலிகம், சமணம், பௌத்தம் கூட பரவியிருந்தது அந்த காலகட்டத்தில். எந்தவித ஆதாரமுமில்லாமல் பாண்டியர்களின் குலதெய்வம் என்று ஒரு மீன் முகத்தோடு கூடிய சிலையைக் காட்டுவது புனைவின் அறத்தை மீறுவதாகும் இல்லையா? இதற்கு ஏதேனும் பின்புல, தொன்மக் கதைகள் இருந்தாலாவது சரி. இன்றும் மதுரையில் எங்குமே மீன் முகக் கடவுள் கோவில்களே கிடையாது. சும்மா அடித்து விடுவதற்கு எதற்கு ‘பாண்டியர்’ என்ற பெயரை உபயோகிக்க வேண்டும்?

மாயாஜால புதிர்களைப் பற்றியோ, சுவடிக் குறிப்புகளை வைத்து அவற்றை சால்வ் செய்வது பற்றியோ எந்தப் பிரச்சினையுமில்லை. அவை எல்லாம் இம்மாதிரி Fantasy கதைக்கு தோதாக உபயோகப் படுத்திக் கொள்ளும் விஷயங்கள்தான். ஆனால் அதை புதைபொருள் ஆராய்ச்சி என்றெல்லாம் சேர்க்கும்போது அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கப்பல்கள் பெரும்பாலும் பல்லாயிர டன் எடையுள்ள சரக்குகள் ஏற்றி செல்லத்தான் அதிகம் பயன்படுகின்றன. கடல் பயணத்தில் நாட்டமுள்ளவர்கள் சொகுசு கப்பல்களில் உல்லாச பயணம் செய்கிறார்கள். மற்றபடி இன்றைய காலகட்டட்தில் பணி நிமித்தமாக பயணம் செய்பவர்கள் விமானத்தில்தானே பயணம் போவார்கள்? இது எளிமையான லாஜிக் ஆச்சே.

’அதோ அந்த பறவை போலப் பாட வேண்டும்’ பாட்டிற்காக மட்டும் இந்த திரைப்படத்தில் கப்பல் பயணம் வைப்பது திரைக்கதையை நீர்த்துப் போக செய்துவிடுகிறது. அது ரசிகர்களுக்கு பிடித்த காட்சியாக இருக்கலாம். ஆனால் கதையோட்டத்தோடு கூடிய ரசிகர்களுக்கு பிடித்த காட்சிகளே திரைப்படத்தை தூக்கி நிறுத்துகின்றன என்பது எனது புரிதல். அதுதான் முதல் பாதி பிடித்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாதி பிடிப்பதில்லை. இரண்டாம் பாதி பிடித்தவர்களுக்கு முதல் பாதி ரசிப்பதில்லை.

ஏன் அடுத்து வரும் இராணுவ பெட்டாலியன், மினிஸ்டர் எல்லாரும் ஹெலிகாப்டரில்தானே வருகிறார்கள்? அவர்கள் எல்லாம் ஏன் பாராசூட்டில் குதிக்க வேண்டும் என்றும் புரியவில்லை. அந்த அத்துவானக் காட்டில் ஹெலிகாப்டரை தரையிறக்க ஒரு வழியில்லையாமா? சரி விடுங்க. தோண்டத் தோண்ட மலை போல வந்துகிட்டே இருக்கும் போல.

உயிருக்கு அரசாங்கம் பொறுப்பில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு ஆராய்ச்சியில் பங்கேற்க பாண்டிய வம்சத்தினருக்கு வேண்டுமென்றால் வெறி இருக்கலாம். இராணுவத்தினருக்கோ, மற்ற அலுவலர்களுக்கோ அது எந்த வகையில் வசதி என்று தெரியவில்லை. அது ஏதோ அரசு பிராஜெக்ட் போலத்தான் பேப்பரில் செய்தி வெளியிடுகிறார்கள்.
வியட்நாம் தீவின் பழங்குடியினர் பற்றிய தெளிவான சிந்தனையே தெரியவில்லை. பொதுவாக பழங்குடியினரே அந்த மண்ணின் பிரதிபலிப்பாக இருப்பார்கள். Cannibals பற்றி ஐரோப்பியர்கள் உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ் எல்லாம் பழசு சார். பஞ்சத்திற்கோ, சமய சடங்குகளுக்கோ மட்டுமே நரமாமிசம் சாப்பிட்டிருக்கிறார்கள். வாளி வாளியாக வெட்டப்பட்ட கை கால்களை வைத்து முற்றத்தில் வைத்துக் கொண்டு இருப்பதாக காட்டுவது கேவலமாகத்தான் இருந்தது. ஒரு குரூப் ஆதிவாசிகளை கறுப்பாக காட்டிவிட்டோம். இன்னொரு குரூப் ஆதிவாசிகளை சிவப்பாக காட்டுவோம் என்றெல்லாம் கதை செய்யக் கூடாது. பொதுவாக பழங்குடியினர் கலப்பில்லாத குழுக்களாக இருப்பவர்கள். வியட்நாமின் ஆதிவாசிகள் மங்கோலிய இனத்தவர்களாக இருக்கலாம். இந்த படத்தில் அப்படி யாரையுமே காணோம்.

பழைய எம்ஜிஆர் படத்தில் இப்படி காண்பிப்பார்கள் (பெயர் நினைவில்லை). எதிரி நாட்டு எல்லையிலிருந்து தப்பித்து வரும் எம்ஜிஆர் ‘இந்தியா’ என்று எழுதி கைகாட்டி வைத்திருக்கும் சாலையில் மூச்சிரைக்க ஓடி தப்பிப்பார். அப்பொழுது மக்களுக்கு அந்த காட்சி பிடித்துதானிருந்தது. அவ்வகையில்தான் ஆயிரத்தில் ஒருவனை வைக்க வேண்டும் என்று விரும்பினால் நான் மேலே ஒன்றும் சொல்வதற்கில்லை.

(எதிர்வினை முற்றும்)

Sridhar Narayanan said...

பதிவர் TBCD ட்விட்டரில் சொல்லியிருந்த எதிர்வினை. முன்னமே சேர்க்க மறந்து விட்டது.

<a href="http://tinypaste.com/c301d'>http://tinypaste.com/c301d</a>
<எதற்காக பாண்டியரிடமிருந்து அபகரித்த அவர்களின் குல தெய்வச் சிலையையும் இளவலோடு சேர்த்து ஒளித்து வைக்க வேண்டும்?>>>>> - பாண்டியர்களை இழிவு செய்ய. அதை வைத்து இப்படி பின் தொடரும் அளவிற்கு அப்போதைய தொழில்நுட்பம் இருந்திருக்காதே.

<ஒரே ஒரு பையில் குவாட்டர் ஓல்ட் மாங்கைப் போட்டுக் கொண்டு சோழர்கள் இருக்கும் தீவைத் தேடிப் போன பிரதாப் போத்தனை தேடி பெரிய கூட்டமே ஆராய்ச்சி உபகரணங்களோடு போகிறார்கள். ->>>>> போத்தான் எப்படி போனார், என்ன என்ன கொண்டு போனார் என்று எந்த விவரமும் இல்லை. அந்த சுவடி எழுதியவர் எப்படி போனார், ஏன் ஏழு அடுக்குக் குறித்து எழுதியவர், சோழர்களை பார்க்கவில்லை, அந்த சுவடி எப்படி இவர்கள் கையில் கிடைத்தது என்று கேட்டியிருக்கும்

<வியட்நாமிற்கு சென்னையிலிருந்து கப்பலில்தான் போக வேண்டுமா? எம்ஜிஆர் பாட்டை ரீமிக்ஸ் செய்யும் வாய்ப்பை தவிர வேறு என்ன முகாந்திரம் அந்த கப்பல் பயணத்திற்கு? >>>>>>>- நிதியளவு விமான பயனத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை :) சுமைதூக்கும் உதவியாளர்களை விமானத்தில் எப்படி அழைத்துப் போவது

<ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத் தலைவி அறிவிக்க முடியுமா? ->>>>>>> பாதுகாப்பிற்கு வருவது தனியார் படை. இது அரசாங்கத்திற்கு தெரியாமல் செய்யப்படுவதுப் போல தான் சொல்லிக்கொள்கிறார்கள். மத்திய அமைச்சர் ஆர்வமக இருக்கின்றார். உதவுகின்றார். அரசு ஆர்வமாக இருந்ததா என்று சொல்லப்படவில்லை.

<ஜெராக்ஸ், மைக்ரோஃபிலிம், எல்லாம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படாததா? பழைய கால அரிய ஓலைச்சுவடிகளை அப்படியே தூக்கிக்கொண்டு சுற்றுவதுதான் எந்தவகை ஆராய்ச்சி? ->>>>>>> அட நம்மவூரிலே இன்னும் நிலவரம் அப்படி தான் இருக்கு. அதைக் காட்டினால் ஆங்கில படம் பார்த்து அப்படியே எடுத்துட்டாங்க. நம்மவூரில் அந்த வசதிகள் எல்லாம் வரவேயில்லை என்றும் சிலர் சொல்லக்கூடும்.

<பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டு குழந்தைக்கு பால் கொடுக்க இளம் தாயின் மார்பில் பால் வரவில்லை இரத்தம்தான் வருகிறது என்று காட்டுகிறார்கள். அப்படி அவர்கள் என்னதான் தொழில் செய்கிறார்கள்? வேளாண்மை, வணிகம், மீன்பிடிப்பது என்று எதுவும் செய்கிறார்களா? இறைச்சியை பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்றால் வேட்டையாடுகிறார்களா?->>>>>>> பெரிய நகரமாக இருந்திருக்கின்றார்கள். ஒட்டகம் எல்லாம் வருது. பாலைவணம் வேற பக்கத்தில் இருக்கு. ஏதோ ஆதிவாசிகள் போல் வேட்டையாடி உண்பார்கள் போலும். ஏன் சமைக்காமலே சாப்பிடுவதுப் போல காட்டவில்லையே.

<சோழர்கள் சைவர்கள் என்பதைக் காட்ட எல்லாரும் திருநீறு இட்டுக் கொண்டு ஆடிப் பாடுகிறார்கள். சாணத்திலிருந்து தயாரிக்கும் திருநீறு என்பதால் அவர்கள் கால்நடை வளர்க்கிறார்களா? ->>>>>>> ஒட்டகம் சாணம் போடுமா..? தெரியவில்லையே

<வீர சைவர்களான சோழர்கள் கல்வெட்டு வழக்கில் ‘லிங்க தரிசனம்’ என்றெல்லாம் வாமாச்சார வழக்குகள் பேசுவார்களா? ->>>>>>>
- வீர சைவர்கள் குலவிருத்தி செய்வார்களா என்று கேட்பீங்களோ..?

<சோழர்கள் எந்த காலத்தில் நரம்புப் புள்ளிகளில் ஊசி குத்தும் யுனானி மருத்துவத்தை கையாண்டார்கள்? - >>>>>>>>அவர்கள் பின்னால் கண்டுப்பிடித்திருக்க முடியாதா. எல்லா ஊரிலும் வில்லு அம்பு இருந்திருக்கு. ஒருத்தர் கண்டுப்பிடிப்பு என்று சொல்ல முடியும்மா..??

Sridhar Narayanan said...

பதிவர் TBCD ட்விட்டரில் சொல்லியிருந்த எதிர்வினை. முன்னமே சேர்க்க மறந்து விட்டது.

<a href="http://tinypaste.com/c301d'>http://tinypaste.com</a>

<ராஜேந்திர சோழனின் காலந்தொட்டே தென்கிழக்கு ஆசியாவில் பல இடங்களில் வெற்றி கொண்ட சோழர்கள், அரேபியா, யவனம், இலங்கை, சாவகம், கடாரம் என்று வணிகம் செய்த சோழர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் கலப்பேயில்லாத சுத்த கருப்பு வண்ணதிலேயே இருக்கிறார்களாமா? - >>>>>>>>>கருமை என்பது ஏழ்மையின் குறியீடாக இருக்கலாம்.

<பிரவாஹன் போன்றோர் முன்வைக்கும் பழுப்பு நிற திராவிடர் கருத்தாக்கம் தவறு என்று சொல்கிறார்களா? பத்தாம் நூற்றாண்டு காலத்து கலாச்சாரத்தில் சாதி பாகுபாடுகள் கிடையாதா? எதற்கு பாண்டிய வாரிசு சோழ அரசனுடன் உதிரம் கலக்க வேண்டும் என்று கன்னாபின்னாவென்று முத்தம் கொடுக்கிறார்? ->>>>>>> பாண்டிய வாரிசு என்று எங்கே சொல்கின்றார்கள். ரீமா தான் அவரை வீழ்த்த வேண்டுமே என்று உடம்பை ஆயுதமாக பயன்படுத்துகின்றாராம்.

<வியட்நாம் பக்கத்திலிருக்கும் ஒரு ஆதிவாசிக் கூட்டம் கறுப்பாக இருக்கிறது. இன்னொரு ஆதிவாசிக் கூட்டம் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறார்களே? ->>>>>>>>> நம்ம ஊரில் கூட இப்படி இருக்கே. பக்கத்து வீட்டில் சிவப்பாகவும், அடுத்த வீட்டில் கறுப்பாகவும், அதற்கடுத்தவீட்டில் பழுப்பாகவும் இருக்காங்களே. பல வேறு இனக்குழுக்கள் இருப்பது இயல்பே.

<பாண்டியர்களின் கொடியில் மீன் இருப்பது என்பதற்காக அவர்களின் குலதெய்வத்தையும் மீனாக காட்டுவது ஏனோ? சோழனுக்கும் ஏதாவது புலித்தேவரை சாமியாக காட்டாமல் சிவனையே தெய்வமாக காட்டுவது என்னவகை கதை யோசனை? - >>>>>>>>>>>>இதெல்லாம் கேள்வி கேட்க வரும் என்று கேட்ட கேள்வி என்பதால் அடுத்த கேள்விக்கு தாவுகின்றேன்.

<கொலைசெய்யப் கத்தியோடு பாய்ந்து வரும ஆதிவாசிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டும் ‘hold fire' என்று சொல்லிக் கொண்டே இருக்கும் இராணுவ கமாண்டருக்கு எங்கே ட்ரெய்னிங் கொடுக்கிறார்கள்? இந்திய இராணுவத்தினரிடம் SLRம், கையெறி குண்டையும் தவிர வேறு ஆயுதமே இல்லையாமா? ஒரு பயனைட் கூட இல்லாமல் பாவம் எதிரிகளின் கத்திகளுக்கு இரையாகுகிறார்கள் பாவம்.எந்த இராணுவம் எதிரிகளைச் சுற்றி வட்டமாக நின்றுகொண்டு துப்பாக்கியால் சுடச் சொல்லித்தருகிறது? - >>>>>>>>>>>>>>> அவர்கள் தனியார் படை. இராணுவம் இல்லை.அவர்களின் குறிக்கோளே வேறு.

<ரீமா சென்னின் கைத்துப்பாக்கியில் அதிகபட்சம் எத்தனை குண்டுகள் போடலாம்? ->>>>>>>>>>>>>> நாயகன் எண்ணாதவரை எந்தப் படத்திலும் துப்பாக்கியில் குண்டுகள் எண்ணிக்கை குறைவில்லாமல் இருக்கும்.

Sridhar Narayanan said...

@tbcd

நிறைய சிரத்தை எடுத்துகிட்டு பதில் சொல்லியிருக்கீங்க. நன்றி

//அட நம்மவூரிலே இன்னும் நிலவரம் அப்படி தான் இருக்கு//

இல்லைங்க. அரிய ஓலைச்சுவடிகள்ல பாதுகாப்பா வசுகிட்டு படியெடுத்துதான் ஆராய்ச்சி செய்வாங்க.

//பெரிய நகரமாக இருந்திருக்கின்றார்கள்//

அதாங்க பிரச்சினை. பெரிய நகரமா இருந்தா இப்படி வெளியிடத்தோட சுத்தமா துண்டிச்சிட்டு இருக்கறது சாத்தியமா? அங்க கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். அகலக்கால் வைக்கிறதுன்னு அதான் சொன்னேன்.

//வீர சைவர்கள் குலவிருத்தி செய்வார்களா என்று கேட்பீங்களோ..?//

இல்லைங்க. தீவிரமா சைவத்தை பின்பற்றியவர்கள் சோழர் குலம். சைவர்கள்ல இந்த மாதிரி குறியை லிங்கமால்லாம் சொல்ல மாட்டாங்க. அதுவும் அரச குடும்பம். இந்த ‘லிங்க’ உருவகம்லாம் பிற்கால வாமாச்சார வழக்கு. இவ்வளவு சிரத்தைய மொழியை எல்லாம் ஆராய்ச்சி செய்திட்டு இப்படி ஒரு ஜோக்கு வைக்கிறதுக்கு காம்பிரமைஸ் செய்துக்கனுமா என்ன? :)

//எல்லா ஊரிலும் வில்லு அம்பு இருந்திருக்கு//

யுனானி மருத்துவம் சீனர்களின் முறைங்க. இன்றளவுக்கும் அவங்கதான் பண்ணிட்டிருக்காங்க. நமக்கு சித்த மருத்துவம், ஆயுர்வேதம்னு நிறைய இருக்கு. பத்து நூற்றாண்டுகள்ல அவங்க புதுசா கண்டுபிடிச்சிட்டாங்கன்னா... நிறயவே அப்படிச் சொல்லலாமே. பாவம் வில்லும், கத்தியும் வச்சுகிட்டு ஏன் சண்ட போடனும்? இல்லையா?

//பல வேறு இனக்குழுக்கள் இருப்பது இயல்பே//

இல்லைங்க. பழங்குடியினர் அப்படி தங்களுக்கு சம்பந்தமில்லாத இடத்தில் இருக்க மாட்டார்கள். கலப்பில்லாத ஆதிகுடிகள் அவர்கள்.

Sammy said...

நண்பரே ..உங்களுடைய நிறைய கேள்வி, கேள்வி கேட்க வேண்டும் என்ற ஒரு சிரத்துடன் கேட்ட மாதிரி இருக்கு....அதாவது ஆராயப்பட்ட ஒரு கேள்வி ...திரைப்படம் போகும் வெகுஜன மக்கள் அதை பற்றி கவலை படுவார்களா ? ...டிஸ்கி போட்டதற்கு பிறகும் ..சோழர் -பாண்டியர் உண்மையான வரலாற்று ரீதியா இந்த படத்தை விமர்சினம் பன்னுவதும் சரியல்ல.

//எதிரி நாட்டு எல்லையிலிருந்து தப்பித்து வரும் எம்ஜிஆர் ‘இந்தியா’ என்று எழுதி கைகாட்டி வைத்திருக்கும் சாலையில் மூச்சிரைக்க ஓடி தப்பிப்பார். அப்பொழுது மக்களுக்கு அந்த காட்சி பிடித்துதானிருந்தது. அவ்வகையில்தான் ஆயிரத்தில் ஒருவனை வைக்க வேண்டும் என்று விரும்பினால் நான் மேலே ஒன்றும் சொல்வதற்கில்லை.
///

உங்கள் கேள்வியை நியாய படுத்த நீங்கள் எழுதியது .....நிச்சயமா நான் இந்த படத்தை பார்க்க வில்லை, ஆனால் நீங்கள் எழுதியதை பார்க்கும் போது அதில் குறை ஒன்றும் தெரியவில்லை.

உண்மையிலேயே நாட்டு எல்லையில் இருக்கும் சாலைகளை பார்ப்பீர்கள் என்றால் ...அப்படி தான் 'இந்தியா' என்று எழுதி கைகாட்டி வைத்திருப்பார்கள்.. :-) ....point of the matter is ...there will be little truth behind all this messups....if we understand that truth we can enjoy the film...my humblest opinion alone. :-)

Sridhar Narayanan said...

வாங்க சாமுவேல்,

//திரைப்படம் போகும் வெகுஜன மக்கள் அதை பற்றி கவலை படுவார்களா ? ...டிஸ்கி போட்டதற்கு பிறகும் ..சோழர் -பாண்டியர் உண்மையான வரலாற்று ரீதியா இந்த படத்தை விமர்சினம் பன்னுவதும் சரியல்ல.//

இது வெகுஜன கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இடுகை அல்ல. ஆதலால் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்.

நான் மேலே எழுதியதை எல்லாம் படித்துவிட்டு உங்களுக்கு ஏதாவது பதில் கருத்து இருந்தால் சொல்லுங்கள். நீங்க எதையும் படிக்காமலேயெ மறுப்பதற்கு நான் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாதில்லையா?

இம்மாதிரி சரித்திர வரலாற்றில் நீட்டித்து புனைவு செய்வது வழக்கம்தான். ஆனால் அது நீட்சியாக இருக்குமே தவிர, அடிப்படையை மறுப்பதாக இருக்காது.

நீங்க என்னதான் ‘புனைவு கதைன்னு’ சொல்லிட்டு தமிழ்படம் எடுத்தா அதில மலையாளத்துல வசனம் வைக்க முடியாதில்லையா? அது போலத்தான் சோழர்னு சொல்லிட்டு நீங்க கற்பனையா ராஜா பேர் எழுதிக்கலாம். ஆனா அவங்களோட கொடி, அவங்க மொழி, அவங்க ஆண்ட ஊர் எல்லாம் மாத்த முடியாது. :)

அப்படித்தான் எடுக்கனும்னா நீங்க அதுக்கும் கற்பனையா வேற ஒரு ராஜவம்சம் வச்சிக்க வேண்டியதுதான்.


//அப்படி தான் 'இந்தியா' என்று எழுதி கைகாட்டி வைத்திருப்பார்கள்.. :-) ....point of the matter is ...there will be little truth behind all this messups....if we understand that truth we can enjoy the film...my humblest opinion alone. :-)//

அய்யா... சாமுவேல் அய்யா... இப்படிக் கொல்றீங்களே என்னை... :)

முதலில் - எம்ஜியார் படத்தில் எல்லையில் காண்பிக்கும் கைகாட்டி மரத்தில் ‘இந்தியா’ என்று தமிழில் எழுதியிருக்கும். அதுக்கும் ஏதாவது விளக்கம் எடுத்திட்டு ஓடி வந்திராதீங்க.

இரண்டாவது - அந்தப் படத்தில் அவர்கள் காண்பிக்க நினைத்தது இந்திய எல்லைப்பகுதியில் நுழைந்துவிட்டார் என்பதற்காக அப்படி ஒரு காட்சி. ஆனால் உண்மையில் எல்லைப் பகுதி என்பது பல கிலோமீட்டர்கள் No man's land எல்லாம் கடந்துதான் பிரவேசிக்க முடியும். அதுவும் பல சென்ஸிடிவ் செக் போஸ்டுகள் உண்டு. Wired fencing எல்லாம் உண்டு. :))

முரளிகண்ணன் said...

வரலாறுடன் சேர்ந்து புனைவைச் சொல்வதில் இது தமிழில் முதல் படம் கிடையாது. ஹேராமுக்கே அந்த கிரெடிட் போக வேண்டும். இதில் சோழர், அதில் காந்தி.

SurveySan said...

//ஆவ்வ்வ்வ்.... போது//

same blood!

pappu said...

. இராஜேந்திர சோழன் இலங்கையின் மீது படையெடுத்து சென்று அந்த மணிமகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் மீட்டு கொண்டு வந்து மதுரையில் வேறு ஒரு பாண்டிய வம்ச மன்னனுக்கே பட்டாபிஷேகம் செய்தான்./////

ரத்தின ஹாரம் பற்றீய விஷயம் எவ்வளவு உண்மை? கல்கியின் சோடிப்பா?

அதை விடுங்கள், ராசேந்திரன் பாண்டியனுக்கு சூட்டினானா? சோழர்களே ‘சோழ பாண்டியர்கள்’ என சூட்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது என கேள்வி பட்டதுண்டு.
புலவரே உமது அறிக்கையில் பொருள் குற்றம் உள்ளது :)

கொசுறு - அந்த காலத்தில ராஜேந்திரன் என இருந்திருக்குமா இல்லை ராசேந்திரன் என இருந்திருக்குமா?

மோகன் குமார் said...

உங்க கேள்விகளில் பல நியாயமானவை.. ஆனால் நீங்கள் நான் உட்பட படத்தை திட்டும் பலரும் "படத்தை பாக்கலாமா.. வேண்டாமா?" என்ற கேள்விக்கு " ஒரு முறை பாருங்க" என்றே சொல்லி கொண்டிருக்கிறோம்..

Anonymous said...

padam nalla than irukku.. summa kutham solrathu easy.

சுரேஷ் கண்ணன் said...

உங்க பதிவ படிக்கறதுக்கே கண்ணைக்கட்டுது. அதனால படத்தை இப்போதைக்கு பாக்கறதா இல்ல. :-)

சரி. செல்வராகவனின் பேட்டியை படித்தீர்களா? ஒரு தமிழில் நிகழும் புது முயற்சியைப் பாராட்டாமல் ஆயிரம் நொட்டை நொள்ளை சொல்றீங்களேன்னு நொந்து போய் பேசியிருக்கார். உங்க பதிவ ஒருவேளை படிச்சிருந்தாருன்னா என்ன ஆவாருன்னு தெரியல.

கரவெட்டியான் said...

உங்கள் விமர்சனம் படம் பார்த்த எங்கள் கடுப்பை இன்னமும் கூட்டிவிட்டிருக்கின்றது.
ஆங்கிலப் படப் பட்டியலில் 300 ஐயும் சேர்த்திருக்கவேண்டும்.சோழர்களையும் பாண்டியர்களையும் இங்கு கொண்டு வந்திருக்கவே தேவையில்லை. ரீமா சென்னுக்கு அம்மா எதோ சொல்லிக்கொடுத்து வளர்த்ததாக ஒரு வசனம் வரும்..... நல்ல பாண்டிய வம்சத்து அம்மா.பாண்டிய வம்சம் அவ்வளவுகேவலமானதா?
கொலைக்களத்தில் இரும்புக் குண்டு...மன்னிக்கவும்...பலூனால் கைதிகள் அடித்துக் கொல்லப்படும்போது சோழ மன்னனும் மக்களும் கைகொட்டிச் சிரித்து மகிழ்கின்றார்களாம். சோழர்கள் அவ்வளவு கொடூரமானவர்களா? சோழர்களையும் பாண்டியர்களையும் எப்படியெல்லாம் அவமதிக்கின்றார்கள்? ரீமா சென், சிறுநீர் கழிக்கும் காட்சியும் கார்த்தியோடு நாயகியர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்டியணைத்துக் குளிர் காயும் காட்சியும் 'துள்ளுவதோ இளமை' படத்தில் இடம் பெற்றிருக்கவேண்டிய காட்சிகள்.நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கவைத்துக் கழுத்தறுத்துவிட்டார்கள். திரையரங்கில் மட்டுமே பார்ப்போமென்று போன எனக்கு இது போதாது. இங்கு Toronto வில் பெம்மானே...... பாடலையும் படத்தில் காணவில்லை. பின்னணி இசை ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியமென்று செல்வராகவனுக்கு இன்னமும் தெரியாதா?

pappu said...

இதுக்கே கொதிச்சீங்கன்னா நீங்க நியாயமா Indiana jones - temple of the doom ல காட்டின இந்தியாவைப் பார்த்தால் ஸ்பீல்பெர்க்கை துப்ப வேண்டியதான்.
ஸ்கிரிப்டை நொட்டை சொல்லலாம். ஆனா சரித்திர ஆதாரங்கள் கேட்பது கொஞ்சம் அதிகம் தானே! அதாவது நிஜமில்லாத விஷயங்களல்லவா! ராஜராஜன் கதை எடுத்திருந்தால் கேட்கலாம். சிவாஜியின் ராஜராஜன் விட அதிக இன்சைட் கிடப்பது போலதான் சொல்கிறீர்கள். நான் பார்க்காத அந்த படத்தை டிஃபெண்ட் பண்ணல. சும்மா சரித்திர மேட்டர்களை விவாதிக்கிறேன்.

இன்னொரு கொசுறு - மதுரையில் பாண்டியன் ஆண்டதற்கான பெரிய அளவு நினைவுச் சின்னங்கள் இல்லை. மீனாட்சி அம்மன் கோவில் கூட முஸ்லீம் படையெடுப்பில் மொத்தமாக அழிந்து நாயக்கரால் கட்டப் பெற்றவை. இப்படியாக பாண்டியன் கட்டியதாக ஒரு தூண் இருப்பதாக தெரியவில்லை. இன்னும் தேடிவிட்டு இதை உறுதி படுத்துகிறேன். இவற்றை சும்மா சொன்னேன். இது விவாதத்திற்கு அல்ல.

Anonymous said...

ஐயா, உங்களை செல்வராகன் தேடிக் கொண்டிருக்கிறாராம்.படத்தை வலைப்பதிவுகளில் கிழிகிழி என்று கிழித்திருக்கும் ஆயிரம் வலைப்பதிவர்களுக்கு தனி கவனிப்பாம்.அதில் முதல் பத்தில் உங்கள் பெயரும் உண்டாம். அடுத்த படத்தில் 40 கிலோ எடை கொண்ட உடையை உங்களுக்கு அணிவித்து
அழகு பார்ப்பாராம்.
ஸ்மைலி ஸ்மைலி.

Sridhar Narayanan said...

வாங்க முரளி கண்ணன்!

ஹேராம் ஒரு புனைவு என்றாலும் அதில் வரும் சரித்திர கால சம்பவங்கள் நிஜமானவை. கல்கத்த கலவரம் தொட்டு பாபர் மசூதி இடிப்புவரை ஒரு அகண்ட பாதையில் செல்லும் கதை என்பதால் மக்களுக்கு குழப்பம் இருந்திருக்கலாம்.

ஆனால் அந்தப் படத்தின் Authenticityயில் எந்த பிரச்சினையும் இல்லை.

இந்தப் படத்தில் புனைவு விதிகளையெல்லாம் மீறி செய்திருக்க மாதிரி பட்டது. அதான் வருத்தமே.

நன்றி :)

Sridhar Narayanan said...

@surveysan

//same blood// :))

நன்றி :)

@pappu

இரத்தின ஹாரம் என்று நான் சொன்னது அது ஆதாரபூர்வமான செய்திங்கிறதுக்காக இல்லை. வேறு ஏதாவது பதக்கம்னு சொல்லிக்கலாம். ஆனால் அப்ப அந்த பொருளோட மதிப்பு அதை ஏன் சோழர்கள் எடுத்துகிட்டு ஓடறாங்கன்னு எல்லாம் புரியுதில்லையா?

குலதெய்வச் சிலைன்னா... அதுக்கு என்ன Significanceனு நிறைய குழப்பம் வருதே...

’சோழ பாண்டியர்கள்’ இருந்திருக்கலாம். :) ’ஜ’வன்னா பல்லவர் காலத்திலேர்ந்து நிறையவே பயன்படுத்தப்பட்டிருக்கு. கல்வெட்டுகளில், அரசு உத்தரவுகளில் கிரந்த எழுத்துகள் இல்லாத இடமேயில்லை என்று சொல்லலாம். :)

Sridhar Narayanan said...

@மோகன் குமார்

//" ஒரு முறை பாருங்க"//

பல முறையும் பார்ககலாமே. பார்க்கக் கூடாதுன்னு தடுக்கறது எல்லாம் செய்ய மாட்டேன் :)

இவ்வளவு செலவழிச்சு எடுக்கறீங்க... இன்னும் தெளிவா சிந்திச்சு எடுத்திருக்கலாமேன்னுதான் சொல்றோம்.

நன்றி -:)

வாங்க அனானி!

//summa kutham solrathu easy//

:)) சும்மா பாராட்டறது மட்டும் என்ன கஷ்டங்களா? அதுவும் ஈஸிதானே

நன்றி :)

@சுரேஷ் கண்ணன்!

//ஆயிரம் நொட்டை நொள்ளை சொல்றீங்களேன்னு நொந்து போய் //

நொட்டை சொல்வது எனது நோக்கமில்லைங்க. இன்னும் தெளிவாச் செய்யலாங்கிறதுதான் எண்ணமே. :)

படம் கண்டிப்பா பாத்திட்டு உங்க கருத்தையும் பதிவு செய்யுங்க :)

நன்றி :)

@கரவெட்டியான்

//கொலைக்களத்தில் இரும்புக் குண்டு...மன்னிக்கவும்...பலூனால் //

:)) மிகவும் ஏமாற்றமளித்த காட்சி அது

நன்றி :-)

வாங்க பப்பு!

ரொம்பவே கடுப்பாயிட்டீங்கப் போல

//சரித்திர ஆதாரங்கள் கேட்பது கொஞ்சம் அதிகம் தானே//

கேக்கலயே. எங்க கேட்டிருக்கேன்?

படத்துல காட்டற காட்சியைத்தானே கேக்கறேன். சோழர் குலத்துக் கொடி ‘புலிக்கொடி’ன்னுதானே காமிக்க முடியும்? வராகக் கொடிதான் உங்களுக்கு இஷ்டம்னா... சோழர் குலம்னு சொல்லாதீங்க. கரெக்டுதானே? :)

மதுரையில் தற்போது ‘மீன் உருவ’ச் சிலை இல்லையென்று ஏன் சொன்னேன் என்றால்... ஒரு அரச குடும்பத்தின் குலதெய்வமானது அந்த நாட்டிற்கே முக்கிய்மானதாகிவிடும். ஆக்கி விடுவார்கள் அப்படி. அதன் எச்சம் ஏதாவது பின்னர் இருக்கலாம். சும்மானாச்சுக்கும் பாண்டியர் தேனியில் அரண்மனை வைத்திருந்தார்கள் பின்னர் அழிந்து போய்விட்டது என்று கதை எழுதலாம். ஆனால் குலதெய்வ வழிபாடு என்பதெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக கையாள வேண்டிய விஷயம்.

அம்புட்டுதாஙக் :)

விரிவான் விவாதத்திற்கு நன்றி :)

@அனானி

//40 கிலோ எடை கொண்ட உடையை உங்களுக்கு அணிவித்து
அழகு பார்ப்பாராம்.//

40 கிலோ எடையா? அந்த குலதெய்வ பாத்திரமா சிலையா நின்னுக்கிட வேண்டியதுதான். :))))

Anonymous said...

முட்டை இடுகிற கோழிக்கு தான் பிட்டி வலிக்கும். ஆம்லேட் சாப்பிடுற ஆளு ஹாயா சாப்பிட்டு விட்டு போயிடலாம்.

உங்களோட இன்றைய டைம்பாஸ் ப(ப்ப)ரபரப்பான பதிவிற்கு செல்வராகவன் ஸ்பான்சர்.

உங்கள் குழப்பங்கள் தீர கும்மிகளை குறைத்தால் போதும்.

நீங்க லாஜிக் மீறாம ஒரு கதை எழுதி உங்க செல்போன்லயாவது படமா எடுத்து பதிவா போடுங்க. நாங்க வந்து பார்த்துட்டு ஆயிரம் கேள்வியெல்லாம் கேட்க மாட்டோம். நல்ல முயற்சின்னு பாராட்டத்தான் செய்வோம்.

Sridhar Narayanan said...

//முட்டை இடுகிற கோழிக்கு தான் பிட்டி வலிக்கும். ஆம்லேட் சாப்பிடுற ஆளு ஹாயா சாப்பிட்டு விட்டு போயிடலாம்.//

:)) 32 கோடி செலவழிச்சு நல்லாவே ஆரோக்கியமா முட்டை போடலாமேன்னு ஆதங்கம்தான் நண்பரே. முழுசும் படிச்சுப் பாருங்க.

//நல்ல முயற்சின்னு பாராட்டத்தான் செய்வோம்.//

அப்படியா? ஒரு பதிவெழுதினாலே திட்டறீங்க. படமெடுத்தா?

உங்களுக்கு என்ன எரிச்சலோ... ஃப்ரீயா விடுங்க பாஸு

pappu said...

கடுப்பா? ச்சேச்சே... எல்லாம் சும்மா விவாவதம் தான். இப்படி யோசிச்சா என்னன்னு கேக்குறேன். இப்படி தப்பு இருக்குன்னு சொல்றீங்க. அம்புட்டுதான் :)

ஒரு படத்துக்காக இவ்வளவு காரசார வாக்குவாதம் ஓவர்தான் பதிவுலகில.

pappu said...

ஆனாலும் டெம்பிள் ஆஃப் த டூம் இல் கொஞ்சம் கடுப்பு உண்டு. பாத்திருக்கீங்கல்ல? குரங்கு மண்டய வெட்டி அப்படியே பச்சையா ஸ்பூன் போட்டு சாப்பிடுபவாங்க, பச்சையா நெளியும் பாம்ப சாப்பிடுவாங்க - இந்தியனாம். ஒரு இந்தியனா தற்காலிக கோவம் வருது. நீங்க பாண்டியனா? :)

தென்றல் said...

கண்ணை கட்டுது, தலை!


/ஹேராம் கதை வேறங்க. குழப்பமா தெரிஞ்சாலும் அது ஒரு நல்ல முயற்சியே என்பது எனது எண்ணம்./
நல்ல முயற்சிதான்! படம் பார்த்திட்டு வரும் சந்தேகத்திற்கு பதில் எங்க தேடுறது...உ.தா: காந்தியை எத்தனை பேர் 'இப்படி தீத்துகட்டணும்' காத்துகிட்டு இருந்தாங்க..?

/Forrest Gump பாத்திருக்கீங்களா? .... அதையும் ஒரு புத்தகமா பண்ணிட்டு படமா எடுத்திருந்தா இன்னும் சிறப்பா வந்திருக்கும்./

நாவல் வந்ததுக்கு அப்புறம்தான் படமா எடுத்தாங்க!

Sridhar Narayanan said...

//உ.தா: காந்தியை எத்தனை பேர் 'இப்படி தீத்துகட்டணும்' காத்துகிட்டு இருந்தாங்க..?//

வாங்க தென்றல்!

காந்தி படுகொலையைப் பற்றி ’ரகமி’ தினமணிக்கதிர்ல முழுவதுமா எழுதியிருந்தார். என்னால் படத்தை ஒன்றிப் பார்க்க முடிந்தது.

தவிர சாகேதராமனின் வாழ்க்கை ’ரசு நல்ல பெருமாள்’ எழுதிய ’கல்லுக்குள் ஈரம்’ கதையை ஒத்திருந்தது.

//நாவல் வந்ததுக்கு அப்புறம்தான் படமா எடுத்தாங்க!//

நான் சொல்ல வந்தது (Forrest Gump மாதிரி) ஹேராம் நாவலாக செய்துவிட்டு சினிமாவாக எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்ற எண்ணத்தை.

Forrest Gumpல் சரித்திர நிகழ்வுகளை நாயகனின் வாழ்க்கையோடு ஒட்டி சொல்லிருப்பார்கள். நகைச்சுவையோடு. ஹேராம் கிட்டத்தட்ட அந்த மாதிரிதாஅன். நேரடியாக படமாக்கியதால் பார்ப்பவர்களுக்கு சற்று குழப்பமாகிவிட்டது.

Kalyan said...

Good.. Padam parthu vantha kelviya vida.. Unga blog padichu innum neraiya kelvi thoonuthu

ச.சங்கர் said...

:) படத்தைப் பாக்கணுமோ அப்படீன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்

நன்றி

கோவி.கண்ணன் said...

நட்சத்திர வாழ்த்துகள்

Vijayashankar said...

படத்தை விட உங்கள் விமர்சனம் அருமை. படம் பார்க்க போன போது, எதிர்பார்ப்பு குறைவு! இப்போது மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்!

குப்பன்.யாஹூ said...

urimai turappan=disclaimer, wow super word.

good review

பொன்னியின் செல்வன் said...

உங்க கேள்வி எல்லாத்துக்கும் என்கிட்ட கற்பனையான ஒரு பதில் இருக்கு.
தப்பித்தவறி இதுவே உண்மையாகவும் இருக்கலாம்.

எவரேனும் செல்வாவுக்கு, “இதுவரைக்கும் சோழர்களை ஆரியர்களைப் போல கல்கி, பாலகுமாரன் போன்ற பார்ப்பனர்கள் சித்தரிச்சுட்டாங்க. நீங்களாவது அவர்களை திராவிடர்கள் போல சித்தரிங்க!” அப்படின்னு ஆலோசனை சொல்லியிருக்கலாம்.

செல்வாவும் திராவிடர்கள் என்றால் தன்னைப் போல perverted என நினைத்து இப்படி எடுத்து விட்டாரோ?

Anonymous said...

இக்கதைகளில் வருபவை யாவும் கற்பனை, நன்றி வணக்கம்.

Sridhar Narayanan said...

கல்யாண்!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க சங்கர்!

படத்தை பாருங்க...

வாங்க கோவிஜி!

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க.

வாங்க விஜய்சங்கர்!

மிக்க நன்றிங்க. பாருங்க பாருங்க.

வாங்க குப்பன்.யாஹு

பாராட்டுக்கு நன்றி.

வாங்க பொன்னியின் செல்வன்!

சோழர்கள் திராவிடர்கள்தானே. அதில் பிரச்சினையில்லை. அக்காலத்து நாகரீகம் பற்றியும் எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழமாக எதிர்பார்த்தேன். சற்றே ஏமாற்றம்தான்.

வாங்க அனானி!

கற்பனையாகவே இருக்கட்டுமே. கற்பனையாக சென்னையில் பர்மிங்ஹாம் பாலஸ் இருப்பது போல எடுக்க முடியாதில்லையா? அது போல சில அடிப்படைகளை மீற முடியாதே.

சு.செந்தில் குமரன் said...

ஸ்ரீதர்...
ஆயிரத்தில் ஒருவனில் ஏகப் பட்ட குறைகள் இருக்கலாம்.
ஆனால் அது ஒரு நல்ல முயற்சி.
அதை முதலில் பாரட்டக் கற்றுக் கொள்ளுங்கள்..
இதே ஆங்கிலப் படங்களில் இது போல ஆயிரம் குறைகள் இருந்தாலும் பார்த்து
பாராட்டுகிறீர்கள்.
ஆனால் இருக்கிற சூழலில் தமிழில் எதாவது புதிய முடற்சிகள் வந்தால்தான்
உங்களுக்கு எல்லாம் மூளை ஓவர்டைம் வேலை செய்கிறது.

பால குமாரனுக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்று நீங்கள் லாலிபாப்
குழந்தையாக அழும்போதே உங்கள் மன நிலை புரிகிறது. சோழர் வரலாற்றை
பாலகுமாரன் சோழன் பக்கத்தில் உட்கார்ந்து எழுதினாரா?
மூங்கில் தலை அறுப்பு விவகாரம் கல்வெட்டில் இருந்து பல வரலாற்று
நாவல்களில் வந்த பின்பு பால குமாரனால் பயன்படுத்தப் பட்டது
உடையார் நூலில் அவர்களுக்கு எல்லாம் பாலகுமாரன் நன்றி சொல்லியுள்ளாரா?

இருங்கள்
அடுத்தடுத்து செல்வராகவன் துள்ளுவதோ இளமைகளாக தருவார்.
பாராட்டி எழுத தயாராகுங்கள்

பழூர் கார்த்தி said...

நல்ல பதிவு, நிறைய நுணுக்கமான, நியாயமான கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள், இதோ என் கற்பனைக்கு எட்டிய பதில்கள்

Anonymous said...

எனக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை எடுத்தவரை இந்தப் படத்தை செல்வராகவன் தந்து மனைவி சோனியா அக்ர்வாலுக்குப் போட்டுக் காட்டியதால் அவர்களுக்குள் விவாகரத்து நேர்ந்திருக்குமோ?

Sridhar Narayanan said...

வாங்க செந்தில்குமரன்,

//அதை முதலில் பாரட்டக் கற்றுக் கொள்ளுங்கள்..//

நன்றிங்க. நான் எதைப் பாராட்டினேன் எதை விமர்சித்தேன் என்று உங்களுக்கு தெரிந்திருந்தால் நல்லதுதான். இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய முயற்சி என்பதை சுட்டிக் காட்டவே இதை எழுதினேன்.

இப்பொழுது நீங்கள் என்னை விமர்சிப்பதில்லையா? அது போலத்தான் :))

//பால குமாரனுக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்று நீங்கள் லாலிபாப்
குழந்தையாக அழும்போதே உங்கள் மன நிலை புரிகிறது. சோழர் வரலாற்றை
பாலகுமாரன் சோழன் பக்கத்தில் உட்கார்ந்து எழுதினாரா?
மூங்கில் தலை அறுப்பு விவகாரம் கல்வெட்டில் இருந்து பல வரலாற்று
நாவல்களில் வந்த பின்பு பால குமாரனால் பயன்படுத்தப் பட்டது
உடையார் நூலில் அவர்களுக்கு எல்லாம் பாலகுமாரன் நன்றி சொல்லியுள்ளாரா?//

குழப்பறீங்களே. பாலகுமாரனுக்கு கிரெடிட் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றுதானே எழுதியிருந்தேன். கொடுக்கவேண்டும் என்று சண்டை போடவில்லையே.

நீங்க நிறையப் படிச்சிருக்கிங்கன்னு தெரியுது. அப்ப நீங்களும் செய்திகளை பகிர்ந்திக்கலாமே.

//அடுத்தடுத்து செல்வராகவன் துள்ளுவதோ இளமைகளாக தருவார்.//

தரட்டுமே. நேர்த்தியாக உருவாக்கப்படும் எந்தப் படைப்புமே தாழ்ந்ததில்லை நண்பரே.

Sridhar Narayanan said...

பழூர் கார்த்தி

உங்க பதிவுலேயே வந்து விடையளித்திருக்கிறேன். இங்கும் நிறைய விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நேரமும் விழைவும் இருந்தால் படித்துப் பாருங்க்ள்.

@அனானி,

செல்வாவின் சொந்த வாழ்க்கையைப் பற்றி விவாதம் வேண்டாமே ப்ளீஸ். நன்றி

அபி அப்பா said...

பிரதாப் எடுத்து போனது "கட்டை பாட்டில்" என செல்லமாக அழைக்கப்படும் எம்.சி (ஃபுல்) பாட்டில். அதில் அவரு 180 மில்லி அடிச்சிட்டு பின்னே சாயரட்சைக்கு அடிக்க மீதி வச்சிருந்தார்!

அப்பாடா ஒரு கேள்விக்கு பதில் ஜொல்லிட்டேன்:-))

கும்க்கி said...

உஸ்ஸ்ஸப்பா.....

அனுவை பிளந்து கருவை எடுத்து காண்பிக்கிறீர்களே ....
நானெல்லாம் பதிவு போட்டதே வேஸ்ட்.

தங்ஸ் said...

ரொம்ப நுணுக்கமாக எழுதியிருக்கிறீர்கள்..
உங்க ப்ரெண்டு ராஜேஷ், ரீமாசென் ஏன் அப்படி ஒன்பாத்ரூம் போனா-ன்னு குழப்பத்துல டெய்லி சரக்கடிச்சுட்டு இருக்கார்:-)

Anonymous said...

spary paint my shoes http://www.thefashionhouse.us/men-type1r.html ice shoes rubber [url=http://www.thefashionhouse.us/yellow-men-underwear-color44.html]chinese clothes[/url] best fashion blogs
http://www.thefashionhouse.us/-shorts-and-capri-new-category59.html barbie fashion bag [url=http://www.thefashionhouse.us/pink-bags-color10.html]designer clothes[/url]