January 25, 2010

விரிசல் விழுந்த நேரத்தில்

அந்த சின்ன அறையில் அவன் ஒருவன் மட்டும் உட்கார்ந்து இருக்கிறான். பக்கத்தில் ஒரு காலி நாற்காலி. எதிரில் இருந்த மேஜையில் கணிணியோ இல்லை கைவினைப் பொருளோ ஏதோ ஒன்று, அவன் வேலை பார்க்கிறான் என்பதற்கு சாட்சியாக. அவனுக்கு என்ன பெயர், என்ன வேலை செய்கிறான் என்பது முக்கியமில்லாததால் விட்டுவிடுவோம்.

‘சிலீங்’என கண்ணாடி உடையும் சத்தம். ’ஹேய்! ஹூ இஸ் தட்’ என்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து போகிறான். இந்த பக்கமிருந்து இன்னொருவன் வந்து இரண்டாவது சேரில் உட்காருகிறான்.

முதலாமவன் மீண்டும் வந்து சேரில் அமர்ந்தவாறே ”இந்த பிரச்சினை முடியவே முடியாதா? திஸ் இஸ் த தேர்ட் டைம் திஸ் வீக்... அதே பக்கத்து வீடு. அதே ரவுடிப் பசங்க. அதே ஜன்னல் கண்ணாடி... சொல்லி சொல்லி உடைக்கிறாங்கப்பா. வீ ஹேவ் டு டூ சம்திங்” என்கிறான். அவன் பேச்சிலிருந்து அந்த கண்ணாடி உடையும் நிகழ்ச்சி சமீபத்தில் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என்று தெரிகிறது. இரண்டாமவன் வந்து உட்கார்ந்ததிலிருந்து நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான். ஏதோ சொல்ல முடியாத அவஸ்தையோ அல்லது சொல்லியே ஆகவேண்டிய பெருமையோ...

இர: (மிகுந்த ஆர்வத்தோடு பதட்டமாக) நோ மச்சி... நோ. வீ ஹவ் டு டூ பிக் திங் (கண்கள் விரியச் சொல்கிறான்) பெருசா செய்யனும்பா.

முத: (அசுவாரசியமாக) என்ன சொல்ற? என்னத்த பெருசா செய்யறது? போலீசுக்கு ஃபோன் போடலாங்கறியா?

இர: போலிசா? அந்தக் கண்ணாடிய விட்றா. நான் சொல்ல வந்தது பெரிய மேட்டர். ஐ ஹவ் ஃபவுண்ட் இட் அட் லாஸ்ட். நமக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு மச்சான்.

முத: (வேலையைத் தொடர்ந்து கொண்டே) ம்ம்ம்

இர: டேய்! லுக் அட் மீ... நான் சொல்றது புரிதா? சரியா சொல்றேனான்னு தெரியல... இது... இது... இந்த பவரை வச்சுகிட்டு என்னல்லாம் சாதிக்க முடியும்னு தெரியல... பட் பட்.. ஆர் யு லிசனிங்?

முத: படுத்தாதடா..இத முடிச்சிட்டுத்தான் மறுவேலை. ஏதாவது டிஸ்டர்பன்ஸ் மாத்தி மாத்தி வந்திடேயிருக்கு. (ஒருமுறை திரும்பி கண்ணாடி உடைந்த ஜன்னலின் திசையில் பார்க்கிறான்) முடிக்கனும் இப்ப.

இர: டேய்... டேய்ய்ய்ய்... ஐயய்யோ... இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்டா... (முதலாமவன் கைகளைப் பிடித்து வேலை செய்வதை தடுக்க முயன்றுகொண்டே) ஐ ஃபவுண்ட் த க்ராக்.

முத: என்ன கிராக்? கண்ணாடியிலயா? (உடைந்த கண்ணாடியின் திசையில் மீண்டும் பார்த்துக் கொண்டே) ஆமா. அத ஃபிக்ஸ் பண்ணனும்பா. சரியான ரவுடிப் பசங்களா இருப்பானுங்க போலருக்கு. ரஸ்ஸல் கடையிலேந்து கண்ணாடி வாங்கிட்டு வந்திடறியா? நைட் படுக்கறதுக்கு முன்னாடி மாத்திடலாம்.

இர: என்னாது? கண்ணாடி கிராக்கா? இடியட். நான் சொல்ல வர்றது (நிதானமாக அழுத்தந்திருத்தமாக) Timeline Crack மச்சான்.

முத: ஆங்... சரி... (சில விநாடிகள் கழித்து, ஏதோ உறைத்தது போல இரண்டாமவன் பக்கம் திரும்பி) என்னாது? டைம் லைனா? என்னடா உளர்ற...

இர: (வெற்றிக் களிப்போட சாய்ந்து உட்கார்ந்து கொண்டு) ஆமா! டைம் லைன்... நாம இப்ப இருக்கறோமே இந்த நேரத்துக்கு நடுவுல என்னால ஒரு இடைவெளி உண்டாக்க முடியும். ஐ கேன் டூ இட். யப்பாஆஆ..... என்னாலயே நம்ப முடியல... என்னல்லாம் சாத்தியப்படும் அதனால...

முத: (அலட்சியமாக இரண்டாமவனைப் பார்த்துக்கொண்டே) லுச்சாத்தனமா உளறிட்டு இருக்காத... எதுவும் காமெடி பண்றியா என்ன... ஒன்னுமே புரியல

இர: இல்ல மச்சான். இப்ப நானும் நீயும் பேசிட்டு இருக்கோம்ல... இதுதான் நம்மளோட Timeline. இன்னும் சரியா சொல்லனும்னா நாம இப்ப இருக்கறது present. நாம pastஐ தாண்டி futureஐ நோக்கி போய்கிட்டேருக்கோம் இல்லையா? நான் இப்ப டக்குன்னு இந்த டைம்லைன்லேர்ந்து ஒரு சின்ன ஓட்டை வழியா எஸ்கேப்பாகி..... (பேசுவதை நிறுத்திவிட்டு அபிநயிக்கிறான்) இந்த டைம் லைன்ல முன்னாடி பின்னாடி எங்க வேணா வந்து சேந்துக்கலாம். மீண்டும் இதே டைம்லைன்ல நேரப்படி எல்லாம் நடந்துட்டிருக்கும். புரியுதா? த கீ இஸ் ஹவ் டு கிராக் த டைம்லைன் அண்ட் ஐ கான் டூ இட் நவ். (பெருமிதமான புன்முறுவலுடன் முதலாமவனைப் பார்க்கிறான்).

முத: சுத்தம்.. ஒண்ணும் புரியல. (இரண்டாமவன் முன்னாடி மூன்று விரல்களைக் காட்டி) இது எத்தன? (இரண்டாமவன் அலுத்துக்கொள்ள, மேஜையை சுட்டிக் காட்டி) எனக்கு இதை முதல்ல முடிக்கனும். டிஸ்டர்ப் பண்ணாத.

(சிறிது நேரம் ஆகிவிட்டது. முதலாமவன் வேலை முடிந்ததற்கு அடையாளமாக கைகளை நெட்டி முறிக்கிறான். இரண்டாமவன் சற்றே சோம்பலாக உட்கார்ந்து கொண்டு கை விரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்)

முத: (மேஜை டிராயரைத் திறந்து தேடியெடுத்து....ஒரு விசிட்டிங் கார்ட் எடுக்கிறான்) இந்தா ரஸ்ஸல் கடை ஃபோன் நம்பர். கண்ணாடிக்கு ஆர்டர் பண்ணு. ஈவ்னிங் வாங்கிட்டு வந்து மாத்திரலாம். இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டுபிடிக்கனும். (இரண்டாமவனிடம் விசிட்டிங் கார்ட் கொடுக்கிறான்)

இர: (கையிலிருந்த விசிட்டிங் கார்டை பார்த்துக் கொண்டே) எந்தக் கண்ணாடி?

முத: அதான்பா மதியம் அந்த ரவுடிப் பசங்க உடைச்சாங்களே... (என்றவாறே திரும்பிப் பார்க்கிறான். அதிர்ச்சியோடு மீண்டும் சுற்றுமுற்றும் பார்க்கிறான்) இந்தக் கண்ணாடிதானப்பா... நான் கூட போய் எட்டிப் பாத்தேனே (சுற்றுமுற்றும் பார்க்கிறான்) வேற கண்ணாடிய பாத்திட்டு குழம்பிட்டேனா?

இர: இதே கண்ணாடிதான்... பட் நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.

முத: என்னாது ஃபிக்ஸ் பண்ணிட்டியா? இப்பதானேடா உடஞ்சது...

இர: ஆமாப்பா.... நாம பேசிகிட்டு இருக்கோம்ல... அப்புறம் கிச்சன்ல போய் தக்காளி சாதம் வெங்காயப் பச்சடி சாப்பிட்டுட்டு ரஸ்ஸல் கடைக்குப் போகப் போறோம். அங்க கண்ணாடி வாங்கிட்டு அங்கிருந்து டைம்லைன்ல ஒரு சின்ன கிராக் ஏற்படுத்தி pastக்கு போய் கண்ணாடி உடயறதுக்கு முன்னாடியே இங்க வந்திட்டேன். கண்ணாடி உடஞ்சவுடன அத ஃபிக்ஸ் பண்ணிட்டேன். (மீண்டும் பெருமித சிரிப்பு)

முத: என்னாது? இனிமே போய் கண்ணாடியை வாங்கிட்டு வந்து ஏற்கனெவே ஃபிக்ஸ் பண்ணிட்டியா? என்னடா உளர்ற? (மீண்டும் கண்ணாடியைப் பார்க்கிறான். இரண்டாமவனைப் பார்க்கிறான்)

இர: வேற வழியில்ல... உன்ன நம்பவைக்கறதுக்காக இதெல்லாம் செய்ய வேண்டியதாப் போச்சு. இத விடு... இன்னும் பெருசா எதுனா பண்ணனும். வீ ஹேவ் டு டூ சம்திங் ரியலி பிக் மச்சி.... கேர்ஃபுல்லா பிளான் பண்ணினா எவ்வளவோ பண்ணலாம். பழய காலத்துக்கு போய் மைக்ரோசாஃப்ட்டுக்கு ஏஞ்சல் ஃபண்ட் பண்ணலாம்... ஏன் நாமளே ஒரு கம்பெனி ஆரம்பிச்சு மைக்ரோசாஃப்டுக்கு பதிலா ஐபிஎம்மோட பார்டனர்ஷிப் போடலாம். ஏன்... நாமளே ஐபிஎம்மை ஆரம்பிக்கலாம்.... ஹோ... இதுக்கு முடிவே இல்லப்பா. (தீவிரமான முகத்தோடு முதலாமவனைப் பார்த்து, நிதானமாக) ஆனா ரொம்ப கேர்ஃபுல்லா திட்டம் போடனும்.

முத: (இன்னமும் அதிர்ச்சி மாறாமல் திறந்த வாயோடு இரண்டாமவனையும் உடைந்த கண்ணாடி இருந்த திசையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்கிறான்)

இர: ஆனா இதுல ஒரு சின்ன ரிஸ்க் இருக்கு மச்சி.

முத: (திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென நிறுத்திவிட்டு இரண்டாமவனை மட்டும் பார்க்கிறான்)

இர: இந்த டைம்லைன் இருக்குல்ல... ஒரு கிராக் வழியா வெளில போயிட்டு அதே கிராக் வழியா உள்ள வந்திட்டா பிரச்சினையில்லை. வேற கிராக் வழியா வந்தா...... ரிஸ்குதான். அதுவும் pastல போயிட்டு வந்தா பெரிய ரிஸ்க்.

முத: ..........

இர: என்னடா? என்ன ரிஸ்க்குனு கேக்க மாட்டியா?

முத: (திறந்த வாயை மூடாமல்... மெல்லிய குரலில் தடுமாறியபடி) என்ன ரிஸ்க்கு?

இர: இப்ப நாம ரஸ்ஸல் கடைக்குப் போகப் போறோம்ல.. அங்க கண்ணாடி வாங்கிட்டு டைம்லைன் கிராக்கு வழியா வெளில போகப் போறேன்ல...

முத: ......

இர: அப்படியே pastக்குப் போயி வேற ஒரு கிராக் வழியா உள்ள வந்திட்டேன். கண்ணாடியை மாத்தியாச்சு.... இப்ப திரும்ப Present.. இல்லயா? ஆனா மீண்டும் futureல ரஸ்ஸல் கடைக்குப் போகும்போது.... அப்ப அந்த பழைய கிராக் இருக்கும். (பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு) அங்க... அதத் தாண்டிப் போயிரனும். அதுதான் ரிஸ்க்கு.

முத: (முதல் முறையாக குரலை உயர்த்தி) என்னாது?

இர: ஆமாம்பா. அந்த கிராக்கை தாண்டறது சிக்கல். சமயத்துல ஸ்லிப் ஆயி திரும்பவும் கிராக்குல போயிருவேன். (முதலாமவனை பார்த்துவிட்டு, அவன் புஜத்தை சட்டென இறுக்கமாக பிடித்துக் கொள்கிறான்)

முத: (இன்னமும் குழப்பமான முகபாவத்தோடு) அப்புறம்?

இர: அப்புறம் என்னா... திரும்ப pastக்கு போயிட்டு டைம்லைன் உள்ளாற வந்திட்டு திரும்பவும் ப்ரெசெண்ட், ஃப்யூச்சர், திரும்பவும் அதே ரிஸ்க். கிராக் வழியா வெளில போயி... பாஸ்ட் கிராக்குல உள்ள வந்து.... திரும்ப வெளில போய்... உள்ள வந்து... திரும்ப திரும்ப...

முத: ஆங்......

இர: எப்ப கிராக்கைத் தாண்டிப் போவோம்னு உத்தரவாதமில்லை... (முதலாமவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறான்) ரிஸ்குக்கு எல்லாம் பயப்படலாமா? அப்புறம் எப்படி மைக்ரோசாஃப்ட் வாங்கறது, ஐபிஎம்மோட டீல் போடறது? (முதலாமவனின் தோளைத்தட்டி) இப்பத்தான் நீயும் கூட இருக்க இல்ல... டைம்லைன் கிராக்கைத் தாண்டிரலாம்னு நம்பிக்கை இருக்கு.

முதலாமவன் அதிர்ச்சி முற்றிலும் விலகாமல் பார்க்கிறான். இரண்டாமவனின் கையைத் தள்ளிவிட முயற்சிக்கிறான். அவன் இன்னமும் இறுக்கமாக பிடித்துக் கொள்கிறான். விளக்கணைந்து அந்த அறை இருள்கிறது.

மீண்டும் விளக்கெரிகிறது. ‘சிலீங்’என கண்ணாடி உடையும் சத்தம். ’ஹேய்! ஹூ இஸ் தட்’ என்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே முதலாமவன் எழுந்து செல்..... செல்லும் முன்னர் திரும்பி பார்க்கிறான். இரண்டாவது சேரில் இரண்டாமவன் ஏற்கெனவே உட்கார்ந்திருக்கிறான். தோள்களை உயர்த்தி கையை விரித்து ’என்ன செய்யறது’ என்பது போல உதட்டை பிதுக்குகிறான். அவன் நாற்காலி பக்கத்தில் புதிய கண்ணாடி ஒன்றும் இருக்கிறது.

இந்த இரண்டாமவன் எந்த விரிசல் வழியாக டைம்லைனுக்குள் வந்தான் என்று தெரியவில்லை. தெரிந்தால் நாமாவது இந்த முடிவில்லா டைம்லைன் சுழலிலிருந்து தப்பிக்கலாம். மீண்டும் ‘சிலீங்’. மீண்டும் ‘ஹூ இஸ் தட்?’

23 மறுமொழிகள்:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்கு

செ.சரவணக்குமார் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்

gulf-tamilan said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

பைத்தியக்காரன் said...

முதல்ல இரண்டு வாழ்த்துகள் ஸ்ரீதர்.

ஒண்ணு நட்சத்திர வாரத்துக்கு.

இன்னொன்னு இந்த இடுகைக்கு.

கொஞ்சம் எடிட் செய்திருந்தா, இன்னும் ஷார்ப்பா இருந்திருக்கும். டைம் லைன் க்ராக்குக்குள்ள போகாமலேயே இதை சொல்லிடறேன் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Sangkavi said...

நட்சத்திர வாழ்த்துக்கள்...

Mohan said...

கொஞ்சம் 'Past' டைம் லைன் க்ராக்குக்குள்ள சுத்திக்கிட்டு இருந்ததாலே உங்களுடைய இந்த பதிவை பார்க்க தாமதாமாயிடுச்சு.நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்!

முனைவர்.இரா.குணசீலன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே..

மஞ்சூர் ராசா said...

வாழ்த்துகள் ஸ்ரீதர்.

கதை நல்லாயிருக்கு. இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தல ;))

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

ச.செந்தில்வேலன் said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்!!

தென்றல் said...

ஸ்ரீதர் -

இப்போதைக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்!
இந்த பதிவை படிச்சிட்டு மறுபடியும் வரேன்!

PS: 'சூர்யா' மாதிரி இருப்பீங்கனு நினைச்சேன்.. 'விக்ரம்' மாதிரி இருக்கீங்க ;)

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீதர்

தமிழ் மண நடசத்திரமாக ஒளிர நல்வாழ்த்துகள்

புனைவு அருமை - டைம்லைன் கிராக் வித்தியாசமான சிந்தனை - ரிஸ்க் எடுத்துச் செயல்பட வேண்டுமா - பாவம் முதலாமவன்.

Sridhar Narayanan said...

வாங்க சதீஷ்!

நன்றி :)

வாங்க சரவணக்குமார்

நன்றி :)

வாழ்த்துக்கு நன்றி ஈரோடு கதிர் :)

@gulf-tamilan நன்றிங்க :)

Sridhar Narayanan said...

வாங்க சிவராமன்!

//டைம் லைன் க்ராக்குக்குள்ள போகாமலேயே இதை சொல்லிடறேன் :)//

:)) மிக்க நன்றி.

வாங்க சங்கவி!

நன்றி :)

வாங்க மோகன்!

வாழ்த்துகளுக்கு நன்றி :)

வாழ்த்துகளுக்கு நன்றி முனைவர் இரா. குணசீலன்.

வாங்க மஞ்சூர் ராசா!

மிக்க நன்றிங்க.

வாங்க கோபிநாத்!

மிக்க நன்றி :)

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பழமைபேசி

வாங்க செந்தில்வேலன். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

வாங்க தென்றல்!

//'சூர்யா' மாதிரி இருப்பீங்கனு நினைச்சேன்.. 'விக்ரம்' மாதிரி இருக்கீங்க ;)//

யாரு சூர்யா? யாரு விக்ரம்? :))

கெக்கே பிக்குணி said...

முதல்ல பிடியுங்க நட்சத்திர வாழ்த்துகள்.

கதை சொன்ன விதம் நல்லா இருக்கு. க்ராக்குக்குள்ள கண்ணாடி எடுத்துட்டு வர முடியுமா? க்ராக்கு வழியா (Hanzel & Gretel போல‌?!) நூல்கண்டு எடுத்துட்டு வர முடியாதா? :-)

தென்றல் said...

ஸ்ரீதர் -

வித்தியாசமான கதையோட்டம்!

நாடக பாணில இல்லாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோ..?

ஜோதிஜி said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்

Anonymous said...

அருமை.

பெயரில்லா கதா-பாத்திரங்கள் எதாவது நவீனத்துவமா?

ஜெய்காந்த்

nchokkan said...

ஏதோ லேசாப் புரியறமாதிரி இருக்கு. ஆனா புரியலை :) இது புத்திசாலிங்களுக்கான கதை போலிருக்கு, நான் ஜூட்!

- என். சொக்கன்,
பெங்களூரு.

பரிசல்காரன் said...

என்ன தாட்!! ச்சான்ஸே இல்ல!!

Vijayashankar said...

கதை சூப்பர் குரு!

இன்னுமா தமிழ்மணத்தை மக்கள் யூஸ் பண்றாங்க?