நான் எனது நாற்காலியிலிருந்து எழுந்து, எனது அலுவலக அறையிலிருந்து வெளியேறி, பக்கத்திலிருந்த கூடத்திற்கு வந்தேன். அங்கே பாப் ஓடெல் இறந்த காட்சியை மீண்டும் நிகழ்த்துவதில் மும்முரமாக இருந்தார். ஓடெல் சுடப்பட்ட நிலவறையில் இருந்த எல்லா பொருட்களும் இருந்தன. ஒரு பக்கம் ஓடெல் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல் ஒரு டம்மி பொம்மை. அறை வாயிலில் பிராஸ் போல ஒரு பொம்மை.
மேகனுக்கு பாப் ஸ்மித்தை அறிமுகபடுத்தினேன் ‘பாப் ஸ்மித் எங்களுடைய தடவயியல் நிபுணர். ஓடெல் இறக்கும்போது சர்ச் பேஸ்மெண்ட்டில் என்ன நிகழந்திருக்கக் கூடும் என்பதை தடயங்கள் மூலமாக நிகழ்த்திக் காட்டுகிறார்’
பாப் ஆமோதிப்பாக தலையை மெதுவாக ஆட்டினார். மேகன் அமைதியாக நின்று கொண்டிருந்தார். பாப் மெதுவாக கனைத்துக் கொண்டே விவரிப்பை ஆரம்பித்தார்.
‘பிராஸ் தனது துப்பாக்கியில் சேஃப்டி கேட்ச் (safety catch) போடாமல் இருந்திருக்கிறார். அதனால் அவர் சுடும் நோக்கத்தோடுதான் அறைக்குள் நுழைந்திருக்கிறார் என்று தெளிவாகிறது. ஆனால் அவர் துப்பாக்க்யிலிருந்து குண்டு எதுவும் வெளியேறவில்லை. அவர் அறைக்குள் நுழைந்தவுடன் கண்ட காட்சி அவர் மனதை மாற்றியிருக்கலாம், அல்லது அவர் சுடுமுன்னரே ஓடெல் அவரைச் சுட்டிருக்கலாம்.’
ஓடெல் இருந்த திசையை சுட்டிக் காட்டி
‘ஓடெல் விழுந்திருந்த முறையும் அவர் உடையில் ஏற்பட்டிருக்கிற இரத்தக் கறைகளையும் பாருங்கள். மேலும் அவரைச் சுற்றி ஏற்பட்டிருந்த இரத்தக் கறைகளையும் வைத்துப் பார்த்தால் அவர் தெற்கு பக்கம் பார்த்தவாறு உட்கார்ந்திருந்திருக்க வேண்டும். அவர் தலையில் ஏற்பட்டிருக்கும் காயம் அறையின் உட்புறத்திலிருந்து வந்திருக்கும் துப்பாக்கி குண்டால் நேர்ந்திருக்க வேண்டும். அதாவது பிராஸ் நின்றிருக்கும் திசைக்கு நேர் எதிர்திசையிலிருந்துதான் குண்டு சுடப்பட்டிருக்க வேண்டும். ஆகவே பிராஸ் ஓடெல்லை சுட்டிருக்க வாய்ப்பே இல்லை’
மேகன் உணர்ச்சிகள் இல்லாத முகத்தோடு நின்றுகொண்டிருந்தார்.
‘எங்களுக்குப் பெரிய சவாலான கேள்வி இதுதான். அறையின் உட்புறத்திலிருந்து சுட்டது யார்? ஓடெல் தலையில் காயமேற்படுத்திய அந்த குண்டு எங்கே?’
நான் மெதுவாக ஓடெல் பொம்மைக்கு அருகில் போய் நின்று கொண்டேன். அந்த பொம்மையின் வலதுகையை தூக்கி நேராகப் பிடித்து பிராஸ் இருந்த திசை நோக்கி குறி வைத்தேன். பாப் தொடர்ந்தார்.
‘ஓடெல் வலது கைக்காரர். அவர் இறந்த போதும் துப்பாக்கி அவருடைய வலது கையில் இருந்திருக்கிறது. அவர் தலையில் துப்பாக்கி குண்டு தாக்கியபோது பீறிட்ட இரத்தம் தோளை நனைத்திருக்கிறது’
கையிலிருந்த பேனாவினால் ஓடெல் உடையிலிருந்த இரத்தக் கறையை வட்டம் போட்டுக் காட்டியவர்... மெதுவாக
‘தொடர்ந்து விலுக்கென்று கால்களை உதைத்துக் கொண்டு கீழே விழுந்திருக்கிறார். இருதயத்தில் புதைந்து இருந்த குண்டு நகர்ந்துவிட இண்டெர்னல் ஹெமரேஜ். கார்டியாக் அரெஸ்ட். உடனடி மரணம் சம்பவதித்துவிட்டது.’
கீழே குறித்து வைக்கப்பட்டிருந்த இரத்தக் கறைகளை சுட்டிக் காட்டினார்.
‘அவர் புரண்டு விழுந்த இடம் இது. நான் முக்கியமாக கவனித்தது, ஓடெலின் புறங்கையில் ஏற்பட்டிருக்கும் இரத்தக் கறை. பாருங்கள் துப்பாக்கியிலும் கூட சில கறைகள் இருக்கின்றன. அதாவது ஓடெல் தலையில் காயம் படும்போது அவருடைய வலது கை தலைக்கு அருகே இருந்திருக்க வேண்டும். இப்படி...’என்றவாறே நான் நேராகப் பிடித்து இருந்த ஓடெல் பொம்மையின் கையை மடித்து பொம்மையின் நெற்றிப் பொட்டருகே கொண்டு நிறுத்தினார்.
மேகன் தனது கைகளை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு அதிர்ச்சியோடு பக்கத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். பாப் தொடர்ந்தார்.
‘ஆம். ஓடெல் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பிராஸ் உள்ளே நுழைந்திருக்க வேண்டும். கவனம் சிதறியதால், ஓடெல்லின் துப்பாக்கி விலகி குண்டு கபாலத்தை உராய்ந்து கொண்டு சென்று எதிரில் நின்ற பிராஸின் நெஞ்சை தாக்கிவிட்டது.’
தனது உரையை முடிப்பது போல முத்தாய்ப்பாக ‘இது ஒரு தற்கொலை. ப்ளெய்ன் சூயிஸைட்’ என்றார் பார் ஸ்மித்.
‘ஒரே ஒரு துப்பாக்கிதான் சுட்டிருக்கிறது மேகன். ஒரே ஒரு குண்டுதான் வெளியேறியிருக்கிறது. அது இரு உயிரையும் மாய்த்துவிட்டது. வெல்... ஓடெல் ஏற்கெனவே பாதி இறந்துவிட்டார் என்றாலும்..’ என்றேன் நான். பிறகு மேகன் அருகில் சென்று...
‘ஆம் மேகன். நீங்கள் நினைத்தது போல் பிராஸ் இரண்டாம் முறையாக ஓடெல்லை சுடவில்லை. இம்முறை ஓடெல் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.’
‘ஒருவேளை அவருக்கு வியட்நாம் கதை தெரிந்திருக்குமோ’ என்று கேட்டார் மேகன்.
‘இருக்கலாம். உங்களுடன் உரையாடிய பிறகு அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் நடந்தது ஒரு தற்கொலை’ என்றேன்
எங்கள் அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது மேகனுக்கு அவருடைய கோட்டை அணிவிக்க உதவினேன். சட்டென்று எனது கைகளைப் பற்றிக் கொண்டார். அவருடைய கொந்தளிக்கும் மனது அந்த கைகளின் துடிப்பில் தெரிந்தது. அவர் கன்னத்தில் வழிந்த கண்ணீருக்கு பதிலாக என்னால் மௌனமாக எனது கைக்குட்டையை எடுத்துக் கொடுக்கமட்டுமே முடிந்தது. ஓரிடு நொடிகளில் அவர் தன்னை சுதாரித்துக் கொண்டு கம்பீரமாக வெளியேறினார்.
சில மாதங்கள் கழித்து நானும் மேகனின் ‘நம்பிக்கை’ கூட்டத்தில் கலந்து கொண்டு என்னுடைய அந்தரங்கத்தை எழுத்தின் மூலம் அவருக்கு தெரியப்படுத்தினேன். அதைப் படிக்கும்போது அவர் புன்முறுவல் பூத்தார் என்றே நினைக்கிறேன். நினைவு திரும்பாமல் கோமாவில் இருந்த பிராஸ்ஸை சுற்றியே மேகனின் உலகம் சுருங்கிவிட்டது.
ஓடெல் கேஸ் முடிவுற்ற வாரயிறுதியில் லென்னியுடன் செமினிட்டியில் கோல்ஃப் விளையாடச் சென்றேன். என்னைப் போன்ற கற்றுக் குட்டிகளுக்கு லென்னியோடு கால்ஃப் விளையாடும் வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிது. ஓடெல் வழக்கில் போலிஸின் தியரி முழுவதையும் கேட்டுக் கொண்டவர் எதுவும் பதில் பேசவில்லை. பதினெட்டாவது குழியை பேர்டி (birdie) மூலம் முடித்ததில் குழந்தை போல குதூகலம் அவருக்கு. பிறகு என்னிடம் கேட்டார்.
‘நீங்கள் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள்? ஓடெல் இறந்தது கொலையா? தற்கொலையா?’
என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.
’நீங்கள் ஏன் சீன் ஆஃப் த கிரைம் என்று நமது பத்திரிகையில் உங்களது சுவாரசியமான புலனாய்வு அனுபவங்களை தொடராக எழுதக்கூடாது?’ என்றுக் கேட்டார் லியனார்ட் மேயர்ஸ்
6 மறுமொழிகள்:
புரியல!!!:(((
மிகவும் சுவாரஸ்யமான தொடர். ஆங்கில நாவல் தாக்கம் தெரிகிறது. CSI தொடர் பார்த்த பாதிப்பா.
ஜெய்காந்த்
வாங்க gulf-tamilan
//புரியல!!!:(((//
ஒருவேளை சேர்த்து வைத்து படித்தால் புரியலாம் என்று நினைக்கிறேன். :)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் :)
வாங்க ஜெயகாந்த்!
அப்பாடா! உங்க ஒருத்தருக்காவது சுவாரஸ்யமா இருந்ததே... அடுத்த முறை இன்னமும் நல்ல சுவாரஸ்யமாக செய்ய முடிகிறதா என்று பார்ப்போம் :)
//CSI தொடர் பார்த்த பாதிப்பா.//
இல்லை :)) சும்மா ஒரு பரபரப்பு தொடர்னு ஆசப்பட்டதுதான்.
பிராஸ் கையில் ஏன் துப்பாக்கி இருந்தது?
ஊருக்கெல்லாம் போய்டு வந்து இப்பதான் படிக்க சமயம் வாய்த்தது
Post a Comment