January 29, 2010

செத்த மொழி பேசும் இரு சித்திரங்கள்

குறிப்பு:- கடந்த வருடம் ‘வார்த்தை’ இதழில் வெளியான இந்தக் கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களில் பேசப்படும் மொழி அதன் இலக்கு நேயர் (target audience) வட்டத்தை தீர்மானிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. நீளமான, நாக்கு தள்ளும் செவ்வியல் வசனங்களுக்காகவே நாடகங்களும், திரைப்படங்களும் வெற்றி பெற்ற காலம் மலையேறிப் போய் யதார்த்த சினிமாக்கள் கோலோச்சும் காலத்தில் ’இறந்த’ மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணுகின்றன. நமது தாய்மொழியல்லாத பிறமொழி படங்கள் என்றால் பெரும்பாலும் உதவி-வசன எழுத்துகள் (sub-titles) தேவைப்படுகின்றன. அதுவும் அராமைக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் கொஞ்சம் ’கிர்’ரடிக்கத்தான் செய்யும்.

January 28, 2010

சுட்டாச்சு சுட்டாச்சு - 4

முந்தய பகுதிகள் - 1, 2, 3

மின்சாரம் பாய்கின்ற ஒரு இரும்புக் கம்பியை உங்களைத் தொட்டுப் பார்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? மிகவும் ஜாக்கிரதையாக எச்சரிக்கையுடன் தொடுவீர்கள். ஆனாலும் அந்தக் கடைசி நொடியில் ஒரு தயக்கம் இருக்குமில்லையா? அதுதான் Instinct reaction. குற்ற விசாரணையில் இது பாலபாடம்.

ஓடெல்லை காதலித்தீர்களா என்றுக் கேள்விக்கு மேகன் சின்ன அதிர்ச்சியோடு பதிலளித்தார். இருந்தாலும் அந்தக் கேள்விக்காக அவர் காத்திருந்த மாதிரி ஒரு சிறிய மின்னல் அவர் கண்களில் தோன்றி மறைந்தது என்று நினைக்கிறேன். Instinct reaction.

சந்தன நிற ஷெர்வானி

புதுக்கோட்டையில் பெரியப்பா வீட்டில்தான் முதன் முதலில் ஷெர்வானி உடையைப் பார்த்தான் ஆவுடையப்பன். பெரியப்பா, தாத்தாவெல்லாம் அந்த உடையில் போட்டோ எடுத்து ஃபிரேம் போட்டு சுவரில் மாட்டியிருந்தார்கள். ஏனோ அந்த நீள அங்கி உடை ஆவுடையப்பனுக்கு அதி மயக்கத்தை கொடுத்தது. ஆவுடையப்பனின் தந்தை குருசாமி மதுரை ஆர்டிஓ அலுவலகத்தில் புரோக்கர் வேலை பார்த்து வந்தார்.

January 27, 2010

சுட்டாச்சு சுட்டாச்சு - 3

முந்தைய பகுதிகள் - 1, 2

ஓடெல் கொலை சம்பந்தமாக இன்று முதல் மீட்டிங் நடந்தது. பிராசிக்யூஷன் அலுவலகத்திலிருந்து வக்கீல் ஆண்ட்ரூ வந்திருந்தார். மரியோ மற்றும் ரிக்கி கூட இருந்தார்கள். வக்கீல்கள் எப்படித்தான் இவ்வளவு பக்கங்களுக்கு குறிப்புகள் எழுதிக்கொள்கிறார்களோ. ஆண்ட்ருவின் அனுமதியோடு அவருடைய மீட்டிங் குறிப்புகளை கீழே தந்திருக்கிறேன்.

January 26, 2010

நீரும், நெருப்பும், நிலமும் மற்றும் சில பெண்களும்

குறிப்பு: ‘வார்த்தை’ இதழிற்காக திரைப்பட தொடர் ஒன்றிற்காக எழுதியது. இங்கேயும் பதிவு செய்கிறேன்.


ராதா, சீதா, சாந்தா, பப்பு, சூயியா, மதுமதி, கல்யாணி, சகுந்தலா என்று எத்தனை பெண்களை இந்த நெருப்பும், நிலமும், நீரும் சீரழித்திருக்கின்றன என்பதுதான் தீபா மேத்தாவின் திரைப்படங்கள் சொல்லும் செய்தி. இந்தியாவில் பிறந்து கனடாவில் குடியேறிய தீபா மேத்தாவின் மூன்று திரைப்படங்களான Fire, Earth மற்றும் Water முன்வைக்கும் பார்வைகள் பல்வேறு பரிமானங்களில், பல்வேறு காலகட்டங்களில் பாரதப் பெண்களை, அவர்கள் அனுபவித்த கொடுமைகளை, அடக்குமுறைகளை சித்தரிக்கின்றன. தேர்ந்த படைப்பாளிகள் அடுத்தடுத்த படைப்புகளில் வெவ்வேறு திசைகளில் நகர்கிறார்கள். குறைந்தபட்சம் மூன்று படைப்புகளில் அந்த படைப்பாளிகளின் பயணம் நம்மிடையே ஒரு முப்பரிமாண காட்சியை உண்டாக்குகிறது.

சுட்டாச்சு சுட்டாச்சு - 2

முந்தைய பகுதிகள் - 1

முப்பத்தி ஏழு பேரை விசாரணை செய்துவிட்டு, இறந்து போன ஓடெல் மற்றும் கோமாவிலிருக்கும் பிராஸிடமிருந்து கைப்பற்றிய துப்பாக்கிகளையும், நிலவறையிலிருந்து சேகரித்த குப்பை கூடை முதல் மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள்வரை மூட்டைக் கட்டிக் கொண்டு ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன். ரிக்கி மதிய சாப்பாட்டிற்கு வெளியில் சென்று விட்டிருந்தான். சர்ச்சை சீல் வைத்து மூடிவிட்டு மரியோ ஏதோ பள்ளி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பை மேற்பார்வையிட சென்றுவிட்டார்.

சீன் ஆஃப் த கிரைம் இதுதான் என்று ஒரு சித்திரம் உருவாகிவிட்டது இப்பொழுது. பிராஸ் துப்பாக்கியோடு ஓடெல்லை சுட வந்திருக்க வேண்டும். அவர் சுட்டது ஓடெல் தலையைத் தாக்கியிருக்கிறது. ஓடெல் பதிலுக்கு சுட்டுவிட்டு பிறகு இரத்த இழப்பினாலும் மூளை செயலிழந்ததினாலும் இறந்துவிட்டார். பாஸிபிள். பதிலுக்கு ஓடெல்லும் சுட்டிருக்கிறார். காயமடைந்த பிராஸ் நினைவிழந்துவிட்டார். ஆஸ்பத்திரியிலிருந்து செய்தி ஏதும் இல்லை இதுவரை.

மோடிவ்? விசாரணையில் நண்பர்களிடையே பல வருடங்களாக பகை புகைந்து கொண்டிருந்தது தெரிகிறது. பகைக்கான காரணம் தீர்க்கமாக தெரியவில்லை. பிராஸின் மனைவி மேகனுடன் இளம்வயதில் ஓடெல் நட்பாக இருதிருக்கிறார். இன்றுவரை ஓடெல் திருமணம் செய்து கொள்ளாததற்கு அதுவும் ஒரு காரணமோ? பிராஸ் ஓடெலின் சிநேகிதியை கவர்ந்து கொண்டாரா? கேள்விகளுக்கு விடைதெரியவில்லை.

ஃபாரம் ஃபாரம்களாக நிரப்பி, கொணர்ந்து வந்த பொருட்களை எல்லாம் பட்டியலிட ஆரம்பித்தேன். துப்பு துலக்குவதில் இருக்கும் பெரும் தலைவலி இந்த தகவலகளை ஒழுங்கு படுத்துவதுதான். மாலைக்குள் இவைகளை சில்வியாவிடம் ஒப்படைத்துவிட்டு கிரைம் ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும். லென்னியோடு சந்திக்கும் போது குற்றம் நிகழ்ந்த விவரம் முழுவதும் தெளிவானால் நல்லது.

ஓடெல் கையில் இருந்த துப்பாக்கி .38 ஸ்மித் & வெஸ்ஸன். பழைய சரக்கு. இதை வைத்து மான் வேட்டைக்கு போயிருக்கிறாரா என்ன. பிராஸிடமிருந்தது 6.5m ரைஃபிள். இத்தாலியத் தயாரிப்பாக இருக்க வேண்டும். எவிடென்ஸ் துறைக்கு குறிப்பு எழுதிக் கொண்டு இருக்கும்போதுதான் ’திடுமெ’ன அது உறைத்தது. கொண்டுவந்த குப்பைகளையும், சாதனங்களையும், ஏனைய பொருட்களையும், ஆதாரங்களையும் முழுவதுமாக மீண்டும் சோதித்துப் பார்த்ததில் உறுதியானது. சர்ச் நிலவறையிலிருந்து ஒரு கார்ட்ரிட்ஜ்தான் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி சுட்டிருந்தால் இரண்டு குண்டுகள் வெளியேறியிருந்திருக்க வேண்டும். இரண்டு கார்ட்ரிட்ஜ்கள் கிடைத்திருக்க வேண்டும்.

கையில் உறை மாட்டிக்கொண்டு ஏற்கெனவே பதிந்திருக்கும் கைரேகைத் தடங்கள் அழியாதவாறு ஓடெல்லின் துப்பாக்கியை சோதித்து பார்த்ததில் ஒரு குண்டு வெளியேறியிருக்கிறது என்பது உறுதியானது. பிராஸ்ஸின் ரைஃபிளில் அன்-காக் செய்து பார்த்தால் குண்டு அறையில் ஒரு குண்டு முழுவதுமாக இருந்தது. அது ஒரு குண்டு மட்டும் லோட் செய்யக் கூடிய ரைஃபிள். ஓடெல்லை சுட்டுவிட்டு இன்னொரு குண்டை அதில் மீண்டும் லோட் செய்திருப்பாரா? அதற்குபிறகா ஓடெல் இவரை திருப்பிச் சுட்டிருப்பார்? ஓடெல் முதலில் சுட்டிருந்தால்...

ஒன்று தெளிவாக புரிந்தது. பிராஸ் துப்பாக்கியை உபயோகித்திருக்க அதிக சாத்தியம் இல்லை. அப்படியென்றால் ஓடெல்லை சுட்டது யார்? மூன்றாவது ஆள் யாரேனும்?

ரிக்கி வந்துவிட்டான். ’இந்தா சீஃப்... ஓடெல் பற்றிய டாஸ்ஸியர் (dossier). பிராஸ் மற்றும் மேகன் பற்றியும் தயார் செய்துவிட்டேன். ஏதாவது தவறு இருந்தால்...’ நெஞ்சைத் தட்டிக் காண்பித்து ‘என்னைக் கேள்’ என்றான். அவனுடைய திறமை மேல் அபார நம்பிக்கை. ரிக்கி இருக்கட்டும். இப்பொழுது உடனடியாக தெரியவேண்டியது பிராஸ்ஸின் நிலமை. யார் ஓடெல்லை சுட்டார்கள் என்பது அவரால் மட்டும்தான் சரியாகச் சொல்ல முடியும்.

ஃபோனில் வந்த டாக்டரின் படபட பேச்சு சுத்தமாக புரியவில்லை. பெயர் மட்டும் ‘நிஜு ஜார்ஜ்’ என்று ஏதோ பாதி புரிந்தது. ‘கொஞ்சம் நிதானமாக சொல்லு’ என்றேன். ஈஸ்டன் ஆஸ்பத்திரியில் நிறைய அயல்நாட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.

பிராஸ்ஸின் மணிக்கட்டை துளைத்துக் கொண்டு நெஞ்சில் பாய்ந்து இருக்கிறது குண்டு. இதயத்திற்கு சேதமில்லை. உடலுறுப்புகள் வேலை செய்கின்றன. பாஸிபிள் கோமா. கிழிந்தது.நான் உருவாக்கி வைத்திருந்த குற்றக் காட்சி முற்றிலும் தவறு போலத் தெரிகிறது. நாளை பிராஸ்ஸின் மனைவியை சந்தித்து விரிவாக பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டேன். இரவு லென்னியை சந்தித்தபோது மூன்றாம் நபர் இருந்திருக்கலாம் என்ற ஹேஷ்யத்தை வெளியிடவில்லை.

இரவு விதவிதமான கனவுகள். எல்லாவற்றிலும் ஓடெல் துப்பாக்கியோடு தன்னை தற்காத்துக் கொள்ள ஓடுவது போலவும் முடிவில் திரும்பி சுடுவது போலவும் காட்சிகள். மறுநாள் எக்ஸ்பிரஸ் டைம்ஸில் பெரிய செய்தியாக ஓடெல் கொலை வெளியாகிருந்தது. பிராஸ் ரெய்ல் பற்றி நிறைய துக்கடா செய்திகள் போட்டிருந்தார்கள். அவர் நடத்தும் ரெஸ்டாரெண்ட் பற்றி ஒரு பெட்டி செய்தி இருந்தது. இவரா கொலை செய்தார்? துப்பு துலக்குகிறவர்களுக்கு உள்ளுணர்வு வேலை செய்யும் என்பார்களே? எங்கே எனது உள்ளுணர்வு?

இந்தியக் குடியரசு தின வாழ்த்துகள்

இன்று இந்தியா தனது 61வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இன்னொரு விதத்தில் இது இந்தியாவின் 81வது சுதந்திர தினம் என்றும் சொல்லலாம். 1930ம் வருடம் ஜனவரி 26 அன்றுதான் இந்திய தேசிய காங்கிரஸ் ‘பூரண சுதந்திரம்’ என்று பிரகடனம் செய்து அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு லாகூரில் இந்திய மூவர்ணக் கொடியேற்றினார். இன்று முதல் ஜனவரி 26ஐ சுதந்திர தினமாக கொண்டாடுங்கள் என்று காங்கிரஸ் இயக்கம் இந்திய நாட்டு மக்களையும் கேட்டுக் கொண்டது.

January 25, 2010

சுட்டாச்சு சுட்டாச்சு - 1

A Scene of the Crime என்ற தலைப்பில் கிறிஸ்டோஃபர் அர்பையோ (Christopher Arpaio) தனது 25 வருட FBI அனுபவங்களைப் பற்றி எழுதப்போகும் புத்தகம் பிறகு வெளிவரலாம்.  அதிலிருந்து உருவிய ஒரு சுவாரசியமான சம்பவம் இது.

டெல் ஓய்ந்து விட்டார்’ என்ற ஃபோன் செய்தியோடு அந்த நாள் விடிந்தது. மரியோ ஆண்டிரைட்டின் சிக்கனமான செய்தி.

‘யார் ஓடெல்?’

‘ஓடெல் துர்மன் (Odel Thurman). தெற்கு ஈஸ்டனில் இருக்கும் புனித சூசை ஆலயத்தின் நிலவறையில் கொலை நிகழ்ந்திருக்கிறது. உடனே புறப்பட்டு வா’ பரபரப்பில்லாத செய்தி சொல்லும் குரல். மரியோ மிகவும் எளிமையான அதே சமயம் ஆழமான போலிஸ்காரர். சிசிலியனுக்கேயுரிய பல கரடுமுரடு குணாதிசயங்களோடு மிகவும் விசுவாசமானவர். ஒருவனை நண்பன் என்று நம்பிவிட்டால் போதும் உயிரையும் கொடுக்க துணிந்துவிடும் முரட்டுக் குழந்தை அவர்.

விரிசல் விழுந்த நேரத்தில்

அந்த சின்ன அறையில் அவன் ஒருவன் மட்டும் உட்கார்ந்து இருக்கிறான். பக்கத்தில் ஒரு காலி நாற்காலி. எதிரில் இருந்த மேஜையில் கணிணியோ இல்லை கைவினைப் பொருளோ ஏதோ ஒன்று, அவன் வேலை பார்க்கிறான் என்பதற்கு சாட்சியாக. அவனுக்கு என்ன பெயர், என்ன வேலை செய்கிறான் என்பது முக்கியமில்லாததால் விட்டுவிடுவோம்.

‘சிலீங்’என கண்ணாடி உடையும் சத்தம். ’ஹேய்! ஹூ இஸ் தட்’ என்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து போகிறான். இந்த பக்கமிருந்து இன்னொருவன் வந்து இரண்டாவது சேரில் உட்காருகிறான்.

January 17, 2010

ஆயிரம் குழப்பங்களில் ஒருவன்

’சோழர்குலத்தை பூண்டோடு அழிக்க சபதம் பூண்ட பாண்டிய ஆபத்துதவிகள் போன்ற ஒரு இரகசியக் குழு (secret brotherhood), ஆயிரம் வருசங்கழிச்சு இந்த 2010ம் ஆண்டிலும் துப்பாக்கி கிரனேட் எல்லாம் வச்சுகிட்டு சோழர்களை துரத்திட்டேப் போறாங்க... ஆதித்தன் கரிகாலன் மரணம் படிச்சிருப்பீங்களே... அந்த மாதிரி ஒரு ப்ளாட்’

’சூப்பர்! ஆனா இது பீரியட் ஃபிலிம் மாதிரியாவா இல்ல மாடர்னாவா?'

'பல நூற்றாண்டுகளா ‘பொத்தி வைக்கைப்பட்ட’ ஒரு சோழர் நாகரீகம் இன்னமும் இருக்கு. ஒரு தீவு இருக்கு. அதுல சோழ நாட்டுக்காரங்கதான் இன்னிக்கும் இருக்காங்க. மாடர்னும் பீரியடும் கலந்து கொடுக்கிறோம்.'

January 13, 2010

கறுப்பியின் வெஞ்சினம்

நாடு போச்சு! நகரம் போச்சு!
மானம் போச்சு! மகுடம் போச்சு!
நம்பி வைத்த தனமெல்லாம்
கும்பி எரிய கொடுத்துப்புட்டேனே.