டாபர்மேன் போன்ற குட்டை வாலுடனும், அழுக்கான பிரவுன் நிறத்தில் முகம் மட்டும் வெள்ளையாக விநோதமாக தாவித் தாவி வாக்கிங் போய்க் கொண்டிருந்தது. கூடவே கயிற்றைப் பிடித்துக் கொண்டு வந்த பெண்மணி குதியோட்டமாக வந்தால்தான் டாகியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிந்தது. அதிகபட்சம் இரண்டரை நொடிகளுக்குள் கார் இந்தக் காட்சி பிம்பத்தை கடந்து விட்டிருந்தது.
'ம்ம்ம்'
'ஏய்... பாத்தியா இல்லயா... சும்மானாச்சுக்கும் ம்ம்ம் சொல்ற'
கண்ணாடியில் பின்சீட்டை உற்றுப் பார்த்தேன். இன்னும் தயக்கமாக,
'ம்ம்ம்ம்'
என்று கம்மலான குரலில் பதில் வந்தது. மாட்டினான்டா மனோகரன் என்ற மிதப்பில்,
'பாத்தேன்னா... அந்த டாகி என்ன கலர்னு சொல்லு பாப்போம்'
சற்று தயக்கத்திற்குப் பிறகு இப்பத் தெளிவான குரலில் பதில் வந்தது.
'நான் அந்த ஆண்ட்டியத்தான் பாத்தேன்'
இப்ப மௌனமாக இருக்க வேண்டியது என் டர்ன்.
'நீங்க டாகியப் பாத்தீங்க. நான் ஆண்ட்டியப் பாத்தேன். அதுக்குள்ள கார் கிராஸ் ஆயிட்டுப் போயிடுச்சு'
நல்லவேளை. மாத்தி சொல்லிருந்தார்னா என் மண்டை இல்ல புடைச்சிகிட்டிருக்கும் இப்ப.
5 மறுமொழிகள்:
பையன் formல இருக்கான் போலிருக்கு! ;-)
மாத்தி பார்த்ததுதான் நிதர்சனம். பைய புள்ளை பொய் சொல்லியிருச்சு போல
@பொன்ஸ் என்னத்த சொல்லப் போங்க :)
@இளா - குழந்தைகள் எப்போதும் பொய் சொல்லாதுன்னு தெரியாதா உங்களுக்கு? :)
அப்டியே அப்பனை கொண்ட்ருக்கு :))
ஒழுங்கா சொன்னாலும் மாத்திச் சொன்னாலும் இங்க மண்டை வீங்குது யுவர் ஆனர். சரி விடுங்க, வீட்டுக்கு வீடு வாசப்படி.
// ஒழுங்கா சொன்னாலும் மாத்திச் சொன்னாலும் \\ எதுவுமே சொல்லலைன்னாலும் உங்க மண்டை வீங்கத்தானே செய்யும் :)) #ஊரறிஞ்ச கள்ளனில்லையா நீர்.
அடுத்த அண்ணா பிறந்தநாளுக்காவது 'நன்னடத்தை' முன்னிட்டு ரிலீஸ் ஆயிருவீங்களா? :)) #அம்மாஞ்சி ப்ளாக் காத்து வாங்குதுய்யா...
Post a Comment