November 4, 2011

ஹிந்தி பேசும் வடிவேலுவின் ஸ்பெல்லிங் என்ன?

"ஆரவ்-க்கு மராட்டி தெரியும்" ஆரவ், நமது ஜூனியரின் பள்ளித் தோழர்.

"ஓ. ஆனா அவனுக்கு தமிழ் தெரியுமா?"

"தெரியாது. ஆனா சுவாமிக்குத் தெரியும்"

"ஓ"

"ரோஹனுக்கு தெலுங்கு. நேத்து டயர்டா இருக்குன்னு அழுதான்"

"தெலுங்கிலயா?"

"இல்ல. இங்க்லீஷ்லதான். ஆனா அவன் மம்மியோட தெலுங்குல பேசுவான்"

ஏசியன் என்று பொதுவாக குறிப்பிடப்படும் இனத்தவர்களான இந்த அண்டை ஊர்க்காரர்களின் தாய்மொழியில் இவ்வளவு வேறுபாடா என்று அவர்கள் பள்ளி ஆசிரியை எப்படி வியந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே,

"தமிழ், தெலுங்கு, மராட்டி...சரி, ஹிந்தி பேசறவங்க யாருமில்லையாடா?"

"தெரியல. இன்னிக்குப் போய்க் கேட்கிறேன்"

லேசாக அதிர்ந்து,

"யார்கிட்டடா கேக்கப் போறே?"

"ஃப்ரெண்ட்ஸ்கிட்டத்தான்"

"சீச்சீ... அப்படில்லாம் கேக்கக் கூடாது. அதெல்லாம் அவங்கவங்க பர்சனல் டீடெய்ல்ஸ். Its not a good practice" என்று அறிவுரையை தொடங்கினேன். பின்னே, நாமும் பொறுப்பான தந்தைதான் என்று நிலைநாட்ட வேண்டுமே.

சற்று சும்மா இருந்த ஜூனியர் "கேக்காம பின்ன எப்படித்தான் அவங்க லாங்க்வேஜ் தெரிஞ்சிக்கிறது?"

அது சரி. அடுத்தவரின் அந்தரங்கத்தைப் பற்றி கேட்காமல் இருப்பதுதான் நாகரீகம். வெளியே அப்படிக் காட்டிக் கொண்டாலும், மனதிற்குள்ளே நாமாக அனுமானங்கள் செய்து கொண்டு, சக நண்பர்களை ஜட்ஜ் செய்து கொண்டுதானே இருக்கப் போகிறோம்?

வளர்ந்த பிறகு அந்த சாதுர்யங்களை எல்லாம் கற்றுக் கொண்டு விடுவார் என்று விட்டுவிட்டேன்.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கொஞ்ச நாட்களாக 'வடிவேலு' பார்ப்பதில் வெகு ஆர்வமாக இருக்கிறார் ஜூனியர். "வடிவேலு" என்பது, அவர் அகராதியில், தமிழ் தொலைகாட்சிகளில் வரும் சினிமா காமெடிகளுக்கான ஆகுபெயர்.

"டாடி, இந்த வடிவேலுகிட்ட பேர் என்னன்னு கேட்டா சிநேக் பாபு, பாடி சோடான்னுல்லாம் சொல்றான். வடிவேலுன்னே சொல்ல மாட்டேங்கிறான்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

எதையெல்லாம் கவனிக்கிறார் என்று நினைத்துக் கொண்டே,

"அது ஒவ்வொரு ஃபில்மிலும் ஒவ்வொரு பேர்டா" என்றேன்.

"ஃபில்ம்னா?"

"மூவிடா. காமெடி டைம்ல நிறைய மூவிஸ்லேர்ந்து கட் பண்ணித்தானே போடறாங்க"

"பட், விஜய் அங்கிள் அப்படியில்ல. எல்லா மூவிலேயும் ஒரே மாதிரிதான் இருப்பார். ஹி ஹிஸ் த ஸ்ட்ராங்க் அன்ட் ஹெல்ப்ஸ் எவ்ரிபடி. ஈவன் த பேட் பாய்ஸ்"

அடப்பாவி, விஜய் படம் பற்றியும் உனக்கும் தெரிஞ்சுப் போச்சா...

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

டாடு, டாடா, டாடூட்டி என்று இஷ்டத்துக்கு புதுப்புது பெயர்களாக உருவாக்கி அழைப்பது ஜூனியரின் வழக்கம். பாப்பாவிற்கு 'ஹக்கூ' என்று அவர் சூட்டிய பெயரையே நாங்களும் செல்லப் பெயராக சுவீகரித்து அப்படியே பின்பற்றி வருகிறோம். இன்னும் பேபாத்தி, டாமிட்டி என்று எங்களுக்கு விளங்காத பல சொற்களை அவர் உருவாக்கி அதற்கு தினுசுதினுசான அர்த்தங்கள் எல்லாம் சொல்லி வருவார்.

திடீரென அன்று Refrigerator-க்கு ஸ்பெல்லிங் கேட்டு கேட்டு சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் சோகமாகத்தான் இருந்தது. Education ruins!

6 மறுமொழிகள்:

ILA(@)இளா said...

நீங்களுமா விஜயை கலாய்க்கிறீங்க(ஆமா, ஜூனியல் கலாய்ச்சாரா? உண்மையைச் சொன்னாரா?)

இலவசக்கொத்தனார் said...

ஹைய்யா! இந்த பதிவு புரியற மாதிரியே இருக்கே!!!

/திடீரென அன்று Refrigerator-க்கு ஸ்பெல்லிங் கேட்டு கேட்டு சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் சோகமாகத்தான் இருந்தது. Education ruins!/

அவர் கேட்ட பொழுது நீங்க சொல்லித்தராம வழக்கம் போல அம்மிணி கிட்ட அந்த வேலையை விட்டு இருப்பீங்க என நம்புவோமாக. ஆமென்.

ஸ்ரீதர் நாராயணன் said...

@இளா - // ஜூனியர் கலாய்ச்சாரா? உண்மையைச் சொன்னாரா? \\ தெரியலயே. பின்னாடி விவரம் தெரிஞ்சு 'நானா அப்படி இருந்தேன்'னு வெக்கப்படறதுக்குப் பதிலா 'அதெல்லாம்... சும்மா கலாய்ச்சேன்'னு சொல்வாரா இருக்கும் :))

@இலவசம் // வழக்கம் போல அம்மிணி கிட்ட அந்த வேலையை விட்டு \\ இதெல்லாம் கரெக்டா கண்டுபிடிச்சிருவீங்களே. அவங்க படிக்கும்போது இந்த கமெண்ட் மட்டும் பெரிய ஃபாண்ட்ல போல்டா தெரியும் :))

ஸ்வர்ணரேக்கா said...

//இந்த வடிவேலுகிட்ட பேர் என்னன்னு கேட்டா சிநேக் பாபு, பாடி சோடான்னுல்லாம் சொல்றான். வடிவேலுன்னே சொல்ல மாட்டேங்கிறான //

ஜூனியர் செம ஷார்ப்...

ஸ்ரீதர் நாராயணன் said...

நன்றி ஸ்வர்ணரேக்கா :)

வானம்பாடிகள் said...

:)))