என்று மெயில் வந்தது. இது என்னடா செய்தி என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்ததில், 'கதாநாயகன்' எஸ்விசேகர் புண்ணியத்தில் இது ஒரு சங்கேத மொழி என்றுப் புரிந்தது. உடனே பதிலுக்கு
'வாழைப்பழத்தை உரிச்சுதான் சாப்பிடனும்'
என்று பதில் அனுப்பினேன்.
'சபாஷ். நீங்கதான் இந்தக் கதைப் போட்டிக்கு நடுவரா இருக்கனும். கூட இன்னும் இரண்டு பேர் நடுவர்கள். ஆனா அவஙக் யாருங்கறது சஸ்பென்ஸ். நீங்க கேட்டாலும் சொல்ல மாட்டோம்'
என்று ஆதி பதில் போட்டார்.
'அவங்க கேட்டா நானும் ஒரு நடுவர்னு சொல்வீங்களா?'
'சேச்சே... அப்படியெல்லாம் அனுஜன்யா கேக்க மாட்டார். கேட்டாலும் சொல்ல மாட்டோம்'
என்றார் பரிசல்.
ஓ... இந்த 'கிவ் & டேக்' பாலிஸி நன்றாக இருக்கிறதே என்று நானும் தொடர்ந்து,
'அப்ப கார்க்கி கேட்டா சொல்வீங்களா?'
'கார்க்கி எதுக்கு கேக்கப் போறான்? அவன்தான் நடுவரே இல்லையே'
'அப்ப வெண்பூ கேட்டா சொல்வீங்களா?'
இதற்கு மேல் ஆட்டத்தை வளர்த்த வேண்டாம் என்று போட்டி அமைப்பாளர்கள், எலலா நடுவர்களுக்கும் பொதுவாக ஒரு மெயில் அனுப்பி, போட்டி விதிகள், மதிப்பிட வேண்டிய முறைகள், கைட்லைன்ஸ் என்று மொத்தமாக அனுப்பி 'என்னமோ செய்யுங்கப்பா' என்று சொல்லிவிட்டார்கள்.
கவிக்கோ அனுஜன்யாவும், அரசியல் விடிவெள்ளி அப்துல்லாவும் சக நடுவர்கள். ஆகா அருமையான டீம். பெருக்கெடுத்து ஓடப் போகும் இலக்கிய ஆற்றில் குதிப்பதற்கு டவுசரை இறுக்கிக் கொண்டு தயாரானேன்.
இந்தப் போட்டியை அதிகம் பேருக்கு கொண்டு செல்ல வேண்டுமென 'சவால் போட்டி' என்று ட்விட்டர், பஸ் ஐடியெல்லாம் உருவாக்கி, அதன் மூலம் சிறுகதைகள் டிப்ஸ் என்று வெளியிடலாம் என்றெல்லாம் ஐடியாக்கள் இருந்தன். முதல் செட்டாக ஒரு இருபது கதைகள் அனுப்பினார்கள். இருநூறு பக்கம் நாவல் எல்லாம் இரண்டு நாட்களில் படித்து விடுவோமே, இருபது சிறுகதைகள் படிப்பது என்ன சிரமம் என்று இறுமாப்போடுதான் தொடங்கினேன்.
ஆனால் நாவல் படிப்பது போல் அவ்வளவு சுகமான, சுலபமான காரியம் இல்லை என்றுப் புரிந்தது. ஒவ்வொரு கதையையும் முழுமையாக படித்து குறிப்புகள் எடுத்து, கதையின் எந்தப் பகுதியையும் விட்டுவிடாமல் கணிப்பில் இருத்தி, ஒவ்வொரு காரணியாக மதிப்பிட்டு... அயர்ச்சியான வேலைதான். அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொண்டால்தான் அடுத்தடுத்து கதைகளை ஃப்ரெஷ்ஷாக வாசிக்க முடிந்தது.
அடுத்த பட்டியலில் இன்னொரு அறுபது கதைகளை சேர்த்துப் போட்டு அனுப்பியிருந்தார்கள். அதிகாலைகள், பின்னிரவுகள், வாரயிறுதிகள் எல்லாம் சங்கேத குறியீடுகளோடு மல்லுகட்ட வேண்டியதானது. ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து, போட்டி அமைப்பாளர்கள் முடிவுகளை அறிவித்த போது பிள்ளைப் பெற்று பிழைத்தார்ப் போல் ஒரு நிம்மதி.
இம்மாதிரி இரண்டரை மாத கால அவகாசத்தில் ஒரு சிறுகதைப் போட்டியை சிறப்புற நடத்தியிருப்பது, அதிலும் என்னைப் போன்ற முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு நிகழ்த்தியது, பெரிய சாதனைதான்.
கவிப்பேரரசு அனுஜன்யாவோடு தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு ஒருமுறை வாய்த்தது. "கவிப்பேரரசு, கவிக்கோன்னு எல்லாம் சொல்லாதப்பா. எனக்கு கூச்சமா இருக்கு. வேணும்னா மகாகவின்னு சொல்லிக்கோ. அப்படித்தான் நிறைய பேர் கூப்பிடறாங்க" என்று அடக்கமான குரலில் சொன்னார். இவ்வளவு சாந்தமானவரா இப்படி 'கடாமுடா' கவிதைகள் எல்லாம் எழுதுகிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. ஏதாவது மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ்-ஆர்டராக இருக்கும்.
அப்துல்லா, அனுஜன்யா, ஆதி, பரிசல் மற்றும் அருமையான அனுபவத்தை கொடுத்த போட்டியாளர்கள் எல்லோருக்கும் நன்றிகள் பல.
போட்டிக்கு வந்தக் கதைகளைப் பற்றி விரிவான விமர்சனங்களை இங்குக் காணலாம்.
முதல் பகுதி, இரண்டாம் பகுதி
போட்டி முடிவுகள்
அடுத்த வருடம் இன்னுமொரு பரிணாமத்தில் பரிமளிக்கப் போகும் சவால் சிறுகதைப் போட்டியை எதிர்நோக்கி...
8 மறுமொழிகள்:
நன்றிகள் பல!
செம பதிவு... :)
நடுவர்கள் செமயா உழைச்சிருக்கீங்க.. பாராட்டுகள் உங்க மூணு பேருக்கும்..
செமையா ஆரம்பிச்சுட்டு.. இன்னும் கலக்குவீங்கனு நினைச்சா டக்குனு முடிச்சுட்டீங்க..
நன்றி ஸ்ரீதர்.
@இளா @வெண்பூ @ஆதி - நன்றிகள் :)
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். முதல் வாழ்த்து போட்டி நடத்திய ஆதி, பரிசலுக்கு
அடுத்து, சுறுசுறுன்னு கதைகளைப் படித்து தேர்வு செய்த நடுவர்களான உங்க மூணு பேர்களுக்கு
கடைசியாய் ஆர்வத்துடன் கலந்துக் கொண்ட அனைவருக்கும். ஸ்பெஷல் வாழ்த்து பரிசு பெற்ற
சக பதிவாளர்களுக்கு!
ஸ்ரீதர் சார் அப்படியே இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப உங்களோட கதையும் எழுதி பிரசுரிக்கலாமே...
நன்று... நல்ல எழுதியிருக்கீங்க...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.
வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!
Post a Comment