January 13, 2012

எந்தரோ மஹானுபாவுலு

2012-ம் வருடம் புத்தாண்டு பிறந்த சமயம் ‘வம்சி சிறுகதை’ போட்டியில் என்னுடைய ‘அசரீரி’ கதை தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்தது. நாஞ்சில் நாடன், பிரபஞ்சன் மற்றும் தமிழ்நதி நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு வென்ற நண்பர்கள் எம். ரிஷான் ஷெரீஃப், ரா.கிரிதரன் அப்பாதுரை, மற்றும் தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிற அற்புதமான படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள். சமூக ஆர்வலர், நண்பர் மாதவராஜ் அவர்களும் ‘வம்சி’ பதிப்பகத்தாரும் இணைந்து நடத்திய இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், புத்தகமாக இவ்வருட புத்தக கண்காட்சிக்கே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுப்பு பெருமளவில் வெற்றி பெற வம்சி பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள். நடுவர் பெருந்தகைகளுக்கும், அமைப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பண்புடன் இணைய இதழுக்கு புத்தாண்டு சிறப்பிதழுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது மற்றுமொரு நிறைவான அனுபவம். இவ்வருடம் முழுவதும் மாதத்துக்கு ஒரு பொறுப்பாசிரியர் ‘பண்புடன்’ இதழை தொகுக்கப் போகிறார்களாம். பிப்ரவரி மாத இதழுக்கு பொறுப்பாசிரியராகப் போகும் நண்பர் பரிசல்காரனுக்கு வாழ்த்துகள்.

பண்புடன் சிறப்பிதழுக்கு பொறுப்பேற்று தொகுத்தளித்தது நிறைவான அனுபவமாக இருந்தது. பண்புடன் குழுமத்தினருக்கு என் வந்தனங்கள். உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து, முகமறியா பல நட்புகளோடு, மகிழ்ச்சியாக கை கோர்த்துக் கொண்டு உலா வந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த இதழில் இடம்பெற்ற அத்தனை படைப்பாளிகளும் என் தனிப்பட்ட கோரிக்கைக்கு மதிப்பளித்து தங்களுடைய விலைமதிப்பற்ற நேரத்தை செலவிட்டு படைப்புகளை அனுப்பியிருக்கிறார்கள். Its a humbling Experience! பிரிய நண்பர் கிரிதரன் அவர் பங்குக்கு பல நண்பர்களை தொடர்புகொண்டு படைப்புகள் திரட்டி அளித்தார்.

இதழின் உள்ளடக்கம் ஒரு பறவைப் பார்வை...



ஒரு முன்னோட்டம்...



இதழின் உள்ளடக்கமும், செறிவும் பெருவாரியான பாராட்டுகள் பெற்றிருக்கிறது. பண்புடன் இதழ் குழுவினரின் மகத்தான ஒத்துழைப்புதான் முக்கிய காரணம். இன்னும் நிறைய சாதித்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது. இந்த இதழை கூடிய சீக்கிரம் ஈ-புக் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் உண்டு. நேரமும் காலமும் கூடி வரவேண்டும்.

நேசக்கரம் நீட்டி அரவணத்துக் கொண்ட நட்புகளுக்கும், உற்சாகபடுத்தி ஊக்கமளித்த நல்லிதயங்களுக்கும், கோரிக்கைக்கு மதிப்பளித்து பெருமைபடுத்திய பெருந்தகைகளுக்கும், தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைத்த தோழமைகளுக்கும்...

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு!

8 மறுமொழிகள்:

♠ ராஜு ♠ said...

பண்புடன் பார்த்தேன். அதில் உங்க கொலேஜ் கதையையும் பார்த்தேன். கலக்கலான கதைண்ணே!

ஞானி,மாமல்லன்,உம்மாச்சி,அய்யனார், ஜேகே,பரிசல்,ஆதி,இலவச கொத்த்னார்ன்னு இரகளையான இரசனைய்யா உமக்கு! ஒரு ‘அன்லிமிட்டெட் ஃபுல் மீல்ஸ்’ சாப்பிட்ட உணர்வு.

அதிலும்,பெனாத்தலாரின் ‘ரத்து’ கலக்கலோ கலக்கல்!
:-)

இராஜராஜேஸ்வரி said...

2012-ம் வருடம் புத்தாண்டு பிறந்த சமயம் ‘வம்சி சிறுகதை’ போட்டியில் என்னுடைய ‘அசரீரி’ கதை தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்தது.

வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

SRK said...

வம்சி தேர்வுக்கு வாழ்த்துகள்.

பண்புடன் - உங்கள் உழைப்பும், ஒருங்கிணைப்பும் அபரிமிதமாயுள்ளது. கொலாஜ் கதையும் அழகு.

ஸ்ரீதர் நாராயணன் said...

// அன்லிமிட்டெட் ஃபுல் மீல்ஸ் //

மிகவும் நன்றி ராஜு! :)

வாழ்த்துகளுக்கு நன்றிகள் இராஜராஜேஸ்வரி!

@சத்யராஜ்குமார் - உங்கள் அன்பிற்கும், பாராட்டுகளுக்கும் நன்றிகள்.

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் ஸ்ரீதர்:)

ஸ்ரீதர் நாராயணன் said...

நன்றி ஆசானே! :)

மத்யமர் said...

வாழ்த்துகள் ஸ்ரீதர்

Krishna Moorthy. S. said...

பண்புடன் இணைய இதழ் உங்கள் தயாரிப்பில் மிக நன்றாக வெளி வந்திருந்தது~ ஒரு நல்ல கூட்டு முயற்சியாகவும் இதழ் மெருகேறி வெளி வந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. அதற்கும் சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!