... அதே ரெட் கொயர் ஷர்ட் கேள்விகளோடு சுற்றி வந்தவர் திடீரென அடித்து புரண்டு கொண்டு அறையை விட்டு ஓடினார். ஏதோ ஓர் சாமானை அப்பீட் செய்கிறார் என்று உணர்ந்து திரும்பிப் பார்த்தால் பெல்ட்டைக் காணோம். வழக்கம் போல் சோபாவின் பின்னால் எல்லோருக்கும் தெரியும்படி “ஒளித்து” வைத்திருந்தார்.
“ஒரு நாளைக்கு உன்னைய நான் ஒளிச்சு வச்சிடறேன் பார்” என்று சொன்னேன்.
தன்னுடைய வேடிக்கையை நினைத்து நினைத்துத் தானே சிரித்து கொண்டிருந்தவர் “எங்கே ஒளிச்சு வைப்பீங்கன்னு சொல்லுங்க” என்று எதிர் கேள்விப் போட்டார்
[...முழுவதும்...]
குறிப்புகள் - 2
...அப்பா ஆபீஸிற்கு கிளம்பியவுடன் அவரும் ஆபீஸிற்கு கிளம்பிவிடுவார். அப்பா போட்டது போலவே வொயிட் பேண்ட்தான் (ஒரு மாதிரி சாம்பல் நிறமாக இருந்தாலும் அது வொயிட்தான்) போடவேண்டும் என்பதில் ஆரம்பித்து, அலுமினியம் ஃபாயிலில் சுருட்டி வைத்த சப்பாத்தியும், டப்பாவில் கூட்டும், தண்ணீர் பாட்டிலும் சேகரித்துக் கொண்டு, ஷூவெல்லாம் மாட்டிக் கொண்டு கனஜோராக சைக்கிளில் (எனக்கு எப்ப கார் வாங்கி தருவீங்க?) புறப்பட்டு விடுவார்.
பிறகுதான் பெருத்த சந்தேகம். ‘அம்மா! என் ஆபீஸ் எங்கே இருக்கு?’
‘தோ! அந்த டைனிங் டேபிளுக்கு எதித்தாப்புல இருக்கு’
சைக்கிளில் ஏறி மெறி, மெறி, மெறி என்று மெறித்து... மூன்றே மெறியில் டைனிங் டேபிள் வந்துவிடும், ஆபிஸ் வாசலில் சைக்கிளை பார்க் செய்துவிட்டு, அம்மா பார்த்துக் கொண்டேயிருப்பதால் சங்கோஜப்பட்டு, பக்கத்து அறையில் புகுந்து கொண்டு பையிலிருந்த சப்பாத்தி சப்ஜியெல்லாம் சாப்பிடுவார். அவ்வளவுதான் ஆபிஸ் போகும் விளையாட்டு.
[...முழுவதும்...]
குறிப்புகள் - 3
...அப்பாவிகளான பெற்றோர் அசந்த பொழுதுகளில் அம்மாவின் லாப்டாப்பை அவர் முழுமையாக கைப்பற்றியிவிட்டார். அவர் தனது முக்கிய போட்டியாளராக கருதுவது அம்மாவைத்தான். யூட்யூபில் பாட்டுப் பார்க்க அம்மாவிடம் அனுமதி கோரிய காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்பொழுது தடாலடியாக அம்மாவின் கணக்கில் (ஈ-ல போனா அம்மா மெயில். பால்ல போனா தனது மெயில்) சென்று மெயில்களை எல்லாம் இல்லாதவையாகவோ (Trash) எரிதமாகவோ (Spam) செய்துவிடுகிறார்.
பாவம் அம்மாதான்,
”இவன் என்னமோ பண்ணிட்டான். ஒரு மெயிலும் காணலயே”
என்று புலம்பியபடி மெயில்களை திரும்பப் பெற என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க வேண்டியிருக்கிறது.
[...முழுவதும்...]
குறிப்புகள் - 4
...அதாவது எழுதுவது போல் சீன் போடுவார். கச்சிதமான வரி அமைப்பில் அவர் அழகாக எழுதுவது உருது போலவே (எனக்கு) தோற்றமளிக்கும். கவித்துவ மொழியான உருதுவை அந்தக் காளியே அவருக்கு வரமளித்து விட்டாரோ என்று புளகாங்கிதம் அடைந்தபொழுது, அண்டை வீட்டுக்காரர் ஒருவர் (அவர் மராட்டி) பார்த்துவிட்டு ‘ஆ... அழகாக தமிழில் எழுதுகிறானே’ என்று சிலாகித்தார். அது சரி.
[...முழுவதும்...]
குறிப்புகள் - 5
...மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜனவரியில் ஒரு நாள்தான் ஜூனியர் முதல்முறையாக பேசத் தொடங்கினார். அவர் முதலில் பகர்ந்த சொல்லானது ‘நோ’. ஆஹா... அருமையாக பேசுகிறாரே என்று பெற்றோர் புளகாகிதமடைந்ததை கண்டு கொண்டவர் தொடர்ந்து அதையே வெவ்வேறு வடிவங்களில் சொல்லி தனது புரட்சி பிம்பத்தை கட்டி எழுப்பி வருகிறார்.
[...முழுவதும்...]
குறிப்புகள் - 6
...பக்கம் முழுவதும் படங்களும் அடியில் ஒன்றரை அடி வரிகளுமாக இருக்கும் கதை புத்தகம். ‘அப்பா குறட்டை விடுகிறார்’ என்று கதையாம். பத்து பதினைந்து பக்கங்களுக்கு அப்பா விதவிதமாக குறட்டை விடுகிறார். அம்மா, குழந்தைகள், நாய், பூனை, பல்லி எல்லாம் தூங்க முடியாமல் அவதிப்படுகிறதாம். கௌண்டமணி ஸ்டைலில் ‘இந்தக் கதை ஏன் என் முன்னாடி படிக்கிறீங்க’ என்று ரவுசு விடாமல்...
[...முழுவதும்...]
குறிப்புகள் - 7
...என்று எங்கள் பாட்டி சொன்ன கதையை சொல்ல, மகுடிக்கு மயங்கிய நாகம் போல் ஆகிவிட்டார். அவர் மனக்கண்ணில் ஆடும் மாடும், அம்மையார்ப் பாட்டியும் குளம் குளமாக மிதக்க பெரும் பரவசத்துடன் 'குவ்வி... குவ்வி...' என்று கூவிக்கொண்டே எல்லா வேலைகளுக்கும் கோவாப்பரேட் செய்ய ஆரம்பித்தார்...
[...முழுவதும்...]
குறிப்புகள் - 8
...'டேய், டிவி அப்புறமா பார்க்கலாம். டின்னர் சாப்பிடுடா' என்று அதட்டினால், பதிலுக்கு ஒற்றை விரலை ஆட்டி, கண்களை உருட்டி மிரட்டி 'பேசாமப் போங்க அந்தபக்கம்' என்று கோபப்படுவார். எல்லாம் பத்து நிமிடங்களுக்கு முன்னால் பெற்றோர் காண்பித்த பாவனைகள்தான். அப்படியே அதை பிரதியெடுத்து புதுசாக ஃபிலிம் காட்டுவதில் சமர்த்தர். சரி, இவரிடம் உருட்டி மிரட்டி எதையும் சாதிக்க முடியாது என்று முடிவெடுத்த அம்மா எடுத்த அடுத்த ஆயுதம்தான் 'டே கேர்' (Day Care) அஸ்திரம்.
முதலில் 'உன்னை டே கேர்ல கொண்டு விடனும். அப்பதான் நீ திருந்துவே' என்று மிரட்டியபோது கொஞ்சம் எஃபெக்ட் தெரிந்தது. சட்டென அடங்கிப் போய் மம்மு எல்லாம் சாப்பிட்டு விடுவார். நாளடைவில், 'குரைக்கிற நாய்கள் கடிக்காது' என்னும் தத்துவத்தை புரிந்து கொண்டவர் தனது வழக்கமான் பாணியில்...
[...முழுவதும்...]
குறிப்புகள் - 9
... ஜூனியர் தின்றுகொண்டிருந்த லாலிபாப்பை முடித்துவிட்டாரா, டிவியில் வடிவேலு காமெடி முடிந்துவிட்டதா, அன்றைய கோட்டா சைக்கிள் ஓட்டம் முடிந்துவிட்டதா, பார்க்கில் அவருடைய ஃபேவரைட் குக்கிங் விளையாட்டெல்லாம ஆச்சா என்று சர்வ ஜாக்கிரதையாக யோசித்துவிட்டு ஒருவருக்கொருவர் கண்ணைக் காட்டிவிட்டு மெதுவாக குமான் செய்ய வேண்டுமே என்று ஆரம்பிப்போம். ஹெர்மியானி கிரேஞ்சர் செய்வது போல கெட்டியான பாதுகாப்பு சுவரில் பட்டு தெறித்து விழும் எங்கள் அஸ்திரங்கள். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கும்போது கோலியாத்தை மடக்கும் டேவிட் போல...[...முழுவதும்...]