வெற்றியாளர்களை எழுத்தாளர் ஜெயமோகன் தேர்ந்தெடுத்தார். [...முழுவதும்...]
முடிவுகள் இங்கே
ரசவாதம் - சில குறிப்புகள்
June 26th, 2008
எங்கள் முப்பாட்டன்களில் ஒருவர் கடல்கடந்து கப்பலில் பிரயானம் எல்லாம் செய்திருக்கிறாராம். அப்பொழுது கடல்கடந்த சீமையில் ஒரு முனிவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அம்மா அப்படித்தான் சொன்னார்கள். பரசீல முனிவர் என்று பெயர்கூட சொன்ன மாதிரி ஞாபகம். அந்த முனிவர் நடத்திக் காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ரசவாதம். இரும்பை அப்படியே சொக்கத் தங்கமாக்கி காட்டும் அற்புதம். எங்கள் முப்பாட்டன் ஒரு நல்ல நேரமாகப் பார்த்து அந்த ரசவாத குறிப்புகளை திருடிக் கொண்டு பாரதம் ஓடி வந்துவிட்டார். கூடவே வந்தது ஏழு தலைமுறை சாபம். அந்த ரசவாத ஆராய்ச்சி ஒரு சைத்தான் போல எங்கள் குடும்பத்தை பீடித்தது. தலைமுறையில் யாராவது ஒருவரை அதற்கு தீனியாக கொடுக்க வேண்டும் போல. அந்த முப்பாட்டன் திருடிக் கொண்டு வந்த குறிப்புகள் ஏதோ புரியாத மொழியில்தான் இருக்கும். எங்கள் பரம்பரையில் ஒவ்வொருவரும் அந்த குறிப்புகளை தங்களுக்குத் தெரிந்த முறையில் ஆய்ந்து தோய்ந்து அரைப் பைத்தியமாகவே ஆகியிருந்தனர். நிறைய உபகுறிப்புகள் சேர்ந்து அது ஒரு பெரும் ஆராய்ச்சி புதினமாகவே மாறி விட்டிருந்தது. அம்மாவின் கணக்குப்படி முத்துத் தாத்தாவோடு தலைமுறை கணக்கு முடிந்து சாபம் விலகிவிட வேண்டும். தாத்தா எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி என்று ஒருவித பைத்தியமான நிலையில்தான் இருந்து வந்தார். எப்போதும் ஏதாவது மூலிகை, உலோகம், வடிகட்டுதல் என்று கிறுக்குப் பிடித்த மாதிரி. நாங்கள் (முக்கியமாக ஆண் வாரிசுகள்) அந்த ஆராய்ச்சியின் காற்றுப் படாமல் ஜாக்கிரதையாக வளர்க்கப் பட்டோம். இரண்டு மாதங்கள் முன்னர்தான் முத்து தாத்தாவை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. [...முழுவதும்...]
உரையாடல் அமைப்பு சிறுகதைப் போட்டி
காதோரமாய்
June 18th, 2009
சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தான் சந்துரு.
”ஷங்கி... உனக்குத் தெரியுமா... நீ செத்துப் போய்விட்டாய். நாலு மாசம் முன்னாடியே செத்துப் போய்விட்டாய். அது தெரியாம சுத்திட்டு இருக்கியா?” [...முழுவதும்...]
சங்கமம் போட்டி
எரனைக்கல் மோதிரம்
May 3, 2009
ஒரு பேருந்தின் உட்புறம். வால்வோ பேருந்தில் உள்ளது போல அகலமான ஜன்னல் கண்ணாடியுடன் கூடிய, பேருந்தின் வலதுபுறத்தில் இருக்கும், இருவர் உட்கார்ந்து கொள்ளக்கூடிய முதல் வரிசை இருக்கை. இருக்கைக்கு இடது பக்கம் பேருந்தின் நடுவில் இருக்கக்கூடிய கம்பம் இருக்கிறது. காலை நேரத்து சூரிய வெளிச்சம் உள்ளே பரவியிருக்கிறது. பேருந்து நின்றிருப்பதால் எந்தவித அசைவும் தெரியாமல் இருக்கிறது.[...முழுவதும்...]
சர்வேசன் ‘நச்’ சிறுகதைப் போட்டி
நிமித்தக்காரன்
November 15, 2009
காட்சி - 1
இருட்டுப் பின்னணியில் சுருள் சுருளாகப் வெண்மையானப் புகை பரவுகிறது. ஒரு கட்டு நிறைய ஊதுவத்தி கொளுத்தியது போல் திரையில் ஆங்காங்கே புகை புறப்பட்டு பரவ, தொடர்ந்து மெலிதாக வெளிச்சம் திரையில் விரவி அந்தப் பெண்ணின் முகம் தெரிகிறது. பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் உற்சாக சிரிப்பு. அழகாக தலையசைத்தவாறே ஏதோ பேசுவது தெரிகிறது. ஆனால் சத்தம் கேட்கவில்லை. பின்னணியில் மெல்லிய பியானோ இசை ஒலிக்க, அந்த அழகி பேசிக் கொண்டே காமெராவை நோக்கி சற்றே முன்னே வருகிறாள். ஓர் அதிர்வுடன் திரையில் அலைஅலையாக பரவி காட்சி கலங்கி சட்டென்று புள்ளியாக அடங்கி இருட்டாகிவிடுகிறது. பின்னணியிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது
பின்னணி குரல்: ’இதாங்க என் பிரச்சினை. இந்தப் பெண்தான். யார் இவள், என்ன சொல்ல வருகிறாள்னு எதுவும் தெரிய மாட்டேங்குது. இந்தக் கனவு மட்டும் அடிக்கடி வருது. ஆனா ஒண்ணு. இந்தப் பெண் ஏற்கெனவே அறிமுகமான மாதிரி, ரொம்பவே பழகின பெண்ணா தெரியறா. எங்கே, எப்படி சந்திச்சேன்னு தெரியல. இந்தக் கனவும் அரைகுறையா அறுந்து போன மாதிரி நின்னுடுது. கடைசிவரைக்கும் அவள் என்னமோ சொல்ல வர்றது தெரியுது. என்ன சொல்றான்னே கேக்க மாட்டேங்குது. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நேரம் கனவு தொடர்ந்திருந்தா அவள் கிட்ட்த்தில வந்து என்னமோ கேக்கறது விளங்கிருக்கும். இப்படி பலவருசமா என் கனவுல தொடர்ந்து வந்திட்டிருக்கா’ [...முழுவதும்...]
சவால் சிறுகதைப் போட்டி
பிரளயம்
September 29, 2010
இவளா காமினி? இவளையா தேடிவந்தோம்? பார்த்தால் சாதாரண மானிடப் பெண்ணாக தெரிகிறாளே. பரந்தாமனுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. அப்படியே, ஹோமோசேப்பியன் (Homosapiens) ஜாடையில் இருக்கிறாள். இன்னும் இரண்டுமணி நேரத்தில் பெரும் பிரளயம் வந்து மொத்த மானிட இனமும் அழியப் போகிறது. இவள் மட்டும் எப்படி தப்பித்து... எங்கோ... ஏதோ... தவறு நிகழ்ந்திருக்கிறது. சிவாவும், மான், மழு, உடுக்கை சகிதமாய் சான் ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு வந்து சேர்ந்துவிட்டதாக சிக்னல் கிடைத்திருக்கிறது. அருகில் ஏதோ மில்க்வுட் மோட்டலில்தான் தங்கியிருக்கிறாராம். அவருக்கென்ன... இனி ஆனந்த ஊழித் தாண்டவம்தான். நமக்குதான் எப்போதும் கண்டினியூட்டி ஆஃப் லிவிங் ஸ்தாபிக்க வேண்டியிருக்கிறது. அலுப்பாக இருந்தது பரந்தாமனுக்கு.[...முழுவதும்...]