கதைசொல்லி+

மெமரி ப்ளஸ்
July 29th, 2011

அவர் பெயர் ஏதோ இளவரசியோ, கலையரசியோ என்று சொன்னதாக நினைவு. முதலில் தயக்கத்துடன் தலையைக் குனிந்தவாறே மறுத்தவரை உற்சாகப்படுத்தி மேலும் இரண்டு மூன்று முறை வற்புறுத்திய பிறகு, உதட்டில் உறைந்த வெட்கச் சிரிப்போடு, எல்லாரையும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு என் பக்கமாக கை நீட்டினார்.

சட்டென அத்தனை ஜோடிக் கண்களும் என்பக்கம் திரும்ப இரத்த ஓட்டமெல்லாம் குளிர்ந்து போய், உள்ளங்கை காலெல்லாம் வியர்த்து பிசுபிசுக்க எழுந்து நின்றேன்.

கண்ணாடிக்காரர் காரியத்திலே கண்ணாக 'வாங்க சார் இந்தப் பக்கம்' என்று அறைக்கு வெளியே என்னைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டு,

'இரண்டே நிமிஷம்தான் இருக்கு... பாருங்க சார்... ரொம்ப சிம்பிள். அப்படியே ஒரு சினிமாப் படம் மாதிரி நினச்சுகுங்க. ரஜினிகாந்த் வந்து எட்டி ஃபுட்பாலை உதைக்கிறார். அது அப்படியே பறந்து போய் மேகத்துக்கு மேல பேரடைஸுக்கு போகுது. அங்கே ரம்பா, மேனகையோட நமீதாவும் இருக்கார்... [...முழுவதும்...]

அஞ்சு பொண்டாட்டி ரங்கசாமி
July 30th, 2011

மொத்தத்தில் மூன்றில் இரண்டு பகுதி கிரவுண்டு 'அஞ்சு பொண்டாட்டி'க்காரர் ஆளுமையில்தான் இருந்தது. தெனாலிராமன் வளர்த்த பூனை போல் நான் அவர் பக்கமே போகமாட்டேன். அவருடனான என் முதல் அனுபவமே கொதிக்கும் பாலை ருசி பார்த்த கதைதான்.

"கிரிக்கெட்லாம் ஒரு விளையாட்டாலே... தளுக்கு பிளுக்குன்ட்டு... குச்சியை பிடிச்சுகிட்டே நின்னுகிட்டிருப்பானுவ. எம்பூஊஊட்டு நேரம்... வெளங்குமா... இல்ல வெளங்குமான்னு கேக்கறேன்?"

இரண்டுங்கெட்டான்களான எங்களுக்கு அவர் என்ன சொன்னாலும் இரட்டை அர்த்தமாகத்தான் தொனிக்கும். 'குச்சி' என்றவுடன் முத்துகண்ணன் கிளுகிளுத்து சிரிக்க ஆரம்பித்துவிடுவான். சங்கரநாராயணன் சிரிப்பை அடக்க கஷ்டப்பட்டு 'ப்ர்ர்' 'ப்ர்ர்' என்று மூக்கால் பீறிட எல்லாரும் பக்பகவென சிரித்துக் கொட்டுவார்கள். [...முழுவதும்...]

வெண்டிங் மெஷின்
July 31st, 2011

அந்த பாட்டிலை அப்படியே எடுத்து, வெண்டிங் மெஷின் மேலிருந்த மஞ்சள் ஸ்டிக்கரை அதன் மேல் ஒட்டி, கூடவே 'மெஷினில் கண்டெடுத்தது' என்று குறிப்பெழுதி வெண்டிங் மெஷின் அருகில் மேஜை மீது வைத்துவிட்டால், காசை பறிகொடுத்த அப்பாவி வந்து பார்க்கும்வரை எப்பாவிகளும் அதை சீந்தமாட்டார்கள். கார்லோஸுக்கும் கணக்கை சரிசெய்ய வசதியாக இருக்கும்.

ஆனால், என் நேரம்...

அஷ்டமத்து சனி அல்பமாய் சிரிக்க, அந்த பாட்டிலை அப்படியே அபேஸ் செய்து கொண்டு சீட்டிற்குப் போய்விட்டேன். எக்ஸ்டிராவாய் இருநூறு மில்லி குளிர்பானம் குடித்ததற்கு பரிகாரமாக இருபது நிமிஷம் எக்ஸ்ட்ரா வேலை செய்து மனசாட்சியை சமாதானபடுத்திக் கொண்டேன்.

அடுத்த வாரம் சனிபகவான் இன்னமும் அகலமாக சிரிக்க ஆரம்பித்தார். [...முழுவதும்...]

நிராகரித்தல்
August 19th, 2011

'உனிக்கு ரூம் காட்ட முடியாதுப்பா. நீ கெளம்பு' உடனடியாக தமிழில் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறியவர்,

'இத்தக் கேட்டா அதுங்கிற. அத்தக் கேட்டா இதுங்கிற. வெளிச்சம் வராதாம், கண்ணு தெரியாதாம்' கோபமும் எரிச்சலுமாய் முகத்துக்கு நேரே கையை ஆட்டி ஆட்டிப் பேசியவர்,

காம்பௌண்ட் கேட்டை நோக்கி கையைக் காட்டி 'போ..போ... உனிக்கெல்லாம் இங்க ரூமே கெட்யாது' என்றார்.

அப்படி ஒரு அப்பட்டமான நிராகரித்தலை நான் சந்தித்ததே இல்லை. குப்பென வியர்த்து விட... பதட்டமாகி விட்டேன்.

'இல்லை சார். டே லைட் இருந்தா ஹெல்த்தியா இருக்கும். இங்க என்னமோ பழைய துணியைப் போட்டு வச்ச மாதிரி ஸ்டிங்கிங் ஸ்மல்...'

'இன்னா சுமெல்லு? ஆளுங்க இருக்கத்தான் செய்யறாங்கல்ல. இன்னா ஜூலயா கொணாந்து வச்சிருக்கோம்? நீ அங்க பெருக்கற பொண்ணை சைட்டடிச்சுனுதான இர்ந்த. உன்ன உள்ள விட்டாத்தான் சுமெல்லு வரும் இங்க. நீ போ. போ. உனக்கு இங்க ரூமு கெடயாது' [...முழுவதும்...]

விக்ரோம்
August 24th, 2011

மூணாவதோ நாலாவதோ ஏதோ ஒரு வகுப்பில் குமாரி மிஸ் கிளாஸ் எடுக்கும்போது அது நிகழ்ந்ததாம். வரிசையாக காம்போஸிஷன் நோட் வைக்க எலாரும் நின்றிருக்க, அழகருக்கு முன்னால் சௌரி. 'நெக்ஸ்ட்' என்று குமாரி மிஸ் கூப்பிட்டாராம். சௌரி ஒரு அடி எடுத்து வைக்க 'பீயோங்க்க்' என்று ஒரு சத்தம். அடுத்த ஓரிரு நொடிகளில் அபான வாயுவின் நாற்றம் மூக்கை துளைக்க குமாரி மிஸ் கையிலிருந்த நோட்டு புத்தகத்தை மேஜையில் தூக்கிப் போட்டுவிட்டு மூக்கைப் பொத்திக் கொண்டு வகுப்பறையிலிருந்து வெளியேறி விட்டாராம். அப்பொழுது கமல் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வெளிவந்து ஓரிரு வருடங்கள் ஆகியிருந்ததாம். அதில் வரும் பாடலான 'விக்ரோம்' ட்யூனைப் போலவே அந்த 'பீயோங்க்க்' சத்தம் இருந்ததாம். இன்றும் சௌரியிடம் 'விக்ரோம்' பாட்டைப் பாடினால் செம டென்ஷனாகிவிடுவான் என்று சிரித்தான் அழகர்.[...முழுவதும்...]

கமிஷன் மண்டி சுப்பையா
March 20, 2009

ராஜாவிற்கு ஒருவனை பார்த்தவுடன் எடை போடுகிற திறமை இருந்தது. அல்லது அப்படி இருப்பதாக சொல்லிக் கொள்வான். பழுப்பு நிற பல்லோடு, அழுத்தி பின்னோக்கி சீவிய தலையோடு, கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு மாதிரி ஸ்டைலாகத்தான் வருவான். பேச்சில் பத்து சதவீதம் கூட உண்மை இருக்காது. ஆனால் தன்னம்பிக்கையோடு எல்லாரையும் வளைத்து விடுவான். சுப்பையாவின் அப்பா மாட்டுத் தரகு கமிஷன் மண்டி வைத்திருந்தபடியால் ராஜா அப்படித்தான் அவனை விளிப்பான். கல்லூரி முழுவதும் சுப்பையா ‘கமிஷன் மண்டி’ சுப்பையாதான். எனக்கும் ராஜாவிற்கும் வெகு சீக்கிரம் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகி கல்லூரியில் பிரபலம் ஆகிவிட்டோம். எங்களையறியாமல் சுப்பையாவும் எங்கள் செட்டில் ஐக்கியமாகியிருந்தான். ராஜா காலால் சொல்வதை தலையால் செய்யும் ஆதர்ச அல்லக்கை ஆகிவிட்டிருந்தான்... [...முழுவதும்...]

ஒரு முத்தத்தைத் தொடர்ந்து...

October 31, 2008

திடுமென்று அந்தக் காட்சி உறைத்தது. பக்கத்தில் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கைகளை மாலை போல் போட்டுக் கொண்டு அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். வெகு சுதந்திரமாக லஜ்ஜையில்லாமல் அவர்கள் இருவரும் மோன நிலையில் இருக்க, அறைக்குள் வந்து ராஜ்குமாருக்கும், கார்த்திக்கும் சமிக்ஞை செய்தேன். மூவருமாக மாறிமாறி அந்தக் காட்சியை பாத்ரூம் ஜன்னல் சதுரத்தில் வழியே எட்டிப் பார்க்க, ராஜ்குமார் அந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கிவிட்டான்... [...முழுவதும்...]

சவரம் செய்த முகம்

September 17, 2008

...தாத்தாவிற்கும் வேலுவிற்கும் இடையே சம்பாஷனைகள் எப்பொழுதும் நடப்பதில்லை. தாத்தா வெள்ளை நிறத் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு சப்பனமிட்டு உட்கார்ந்து கொள்வார். ஒரு மக்கிப்போன பிரஷ்ஷினால் அந்த் சோப்புக் கட்டியை சுழற்றி சுழற்றி நுரையை அவர் முகத்தில் பூச சவரம் தொடங்கிவிடும். சின்ன வயதில் வேலுவின் முழு சம்ரக்ஷணையையும் பார்ப்பது பாப்பாவிற்கு ஒரு பொழுதுபோக்கு. எல்லாம் முடிந்தவுடன் தாத்தா எழுந்து குளிக்க உள்ளே சென்றுவிட, பணப் பட்டுவாடா செய்வது பாப்பாவின் வேலை. பாட்டி கொடுத்தாலும் சரி பாப்பா கொடுத்தாலும் சரி வேலு இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் இறங்கிப் போவார். எப்பவாவது வாசத் திண்ணையில் தனது கருவிகளை கழுவி துடைத்துக் கொண்டிருக்கையில் 'என்ன படிக்கிறே பாப்பா?' என்று கேட்பார்...[...முழுவதும்...]

பைசல் ஆன பழைய கணக்கு!
September 17, 2008

...அவருக்கு இந்த அடையாளத்தில் கிட்டத்தட்ட 10 பேர்கள் ஞாபகம் வந்தது. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் 'எப்படிப்பா இருக்கே, என்ன விஷயம்' என்று கேட்டு வைத்தார்.

"உங்களைப் பாக்கத்தான் காலையில சென்னையிலேந்து வந்தேன். ஒரு வாரம்தான் இந்தியாவுல இருக்கேன். திடீர்னு ஒரு யோசனை மின்னல் மாதிரி. உடனே கார் எடுத்திட்டு நேரா வர்றேன்".

அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

'உக்காருப்பா. காபி கீபி சாப்பிடறயா?' கார் எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருக்கானே என்று யோசனையாக இருந்தது.

'அமெரிக்காவில, மிக்சிகன் யூனிவர்சிடியில ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கேன் சார். நம்பர் தியரில அண்ட் கிளாஸ் ஃபீல்டு தியரி. இந்த வருசம் முடிஞ்சுரும்.' என்றான்

பாசோக்கு ஒரே உற்சாகமாக இருந்தது. ஒரு சர்வதேச பல்கலைகழக ஆராய்ச்சி மாணவன் தன்னைத் தேடி வந்திருப்பதா அல்லது தன்னிடம் படித்த மாணவன் இவ்வளவு தூரம் முன்னேறி இருப்பதா என்று திக்குமுக்காடிப் போனார்...[...முழுவதும்...]