January 25, 2010
அந்த சின்ன அறையில் அவன் ஒருவன் மட்டும் உட்கார்ந்து இருக்கிறான். பக்கத்தில் ஒரு காலி நாற்காலி. எதிரில் இருந்த மேஜையில் கணிணியோ இல்லை கைவினைப் பொருளோ ஏதோ ஒன்று, அவன் வேலை பார்க்கிறான் என்பதற்கு சாட்சியாக. அவனுக்கு என்ன பெயர், என்ன வேலை செய்கிறான் என்பது முக்கியமில்லாததால் விட்டுவிடுவோம்....
முங்காவின் முத்தம்
June 11, 2009
'இலியாஸ்! இலியாஸ்!’ என்று கண்ணாடி சுவற்றை தனது முட்டை வாயால் இடித்துக் கொண்டிருந்தான் முங்கா. நீரின் அடியில் இருந்த காவி நிறக்கற்களை வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்து கண்ணாடி சுவற்றின் மேல் இடித்தான். அகல இலைகளோடு மிதந்து கொண்டிருந்த லில்லி ’இங்கேருந்து கத்தினா அவனுக்கு எப்படி கேட்கும்?. மேலே போய் கத்து’ என்றது.
’நான் அவளை மீண்டும் பாத்தேன் இன்றைக்கு. வட்டவடிவமாக பிரகாசமான பொன் மஞ்சள் நிலவைப் போல் சிரித்த முகத்துடன் தோன்றினாள். அவள் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம் தெரிந்தது.’
திருத்தி எழுதியவன்
February 28, 2009
வசுமதி அக்கா நல்ல நெகுநெகுவென்று உயரமாக செம்பு நிறத்தில் இருப்பார். சாட்டை போல் நீண்டிருக்கும் பின்னலை முன்னாடி எடுத்து விட்டு நீவிக் கொண்டே காதருகே குனிந்து ‘என்னதான் சொல்றார் உங்க சார்?’ என்று அவர் கேட்கும்போது கண்களில் குறும்பு மின்னும். பாலமுருகன் சார் கொடுக்கும் கடிதத்தை பாதுகாப்பாக அரைஞான் கொடியின் பக்கவாட்டில் சொருகி வைத்திருந்து வசுமதி அக்காவிடம் கொடுப்பதுதான் அப்போதைய எனது முக்கிய பணி. அதுவும் கூடத்து ஊஞ்சலில் ஹாண்டில் பார் மீசையோடு உட்கார்ந்திருக்கும் ரகோத்தமன் மாமாவிற்கு சந்தேகம் வராமல் கடிதத்தை அக்காவிடம் சேர்ப்பிக்க வேண்டும். ’போடா அந்தண்டை’ என்று என்னை துரத்தி விட்டு மொட்டை மாடி கைப்பிடிச் சுவரின் குறுகிய நிழலில் அமர்ந்து அக்கா அந்த கடிதத்தை திரும்பி திரும்பி படிப்பாள். அருகே எப்போதும் ரேடியோ பாடிக் கொண்டே இருக்கும். ரஙகநாயகி மாமி ‘ஏடி! எங்கடி தொலஞ்ச’ என்று குரல் கொடுக்கும் வரை ஒரே கடிதத்தை மாற்றி மாற்றி படிப்பாள்
ரசவாதம் சில குறிப்புகள்
August 1, 2008
அன்பிற்குரிய ரா.கே,
உங்களின் கடின உழைப்பு எல்லாரும் அறிந்ததே. இந்த 'சுவர்க் கோழியின் சங்கீதம்' சிறுகதை தொகுப்பு பொறுக்கியெடுத்த முத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுவர்க்கோழிகளின் 'க்ரீச்ச்' சத்தத்தின் இடையே ஒலிக்கும் அந்த மௌனத்தை சஙகீதம் என்று சொல்லாமல் எப்படி சொல்வதாம்? இழந்து கொண்டிருக்கும் சுயத்தை இந்த சுவர்கோழிகள் சத்தமாகவே சொல்கின்றன. உங்கள் நடை அப்படி இருந்தாற்ப்போல இருந்த சுழட்டி விட்டு விடுகிறது. தெளிவான நீரோடையில் திடீரென்று சுழித்து கொண்டு ஓடும் காட்டாறு போல், காலடியிலிருந்து கம்பளத்தை உருவி விட்டு விடுகிறீர்கள். உங்கள் பலமே சம்பவங்களை அடுக்கடுக்காக அமைத்து படிப்பவனை புரட்டிப் போடுவதில்தான் இருக்கிறது. அந்த சம்பாஷணைகள் எல்லாம் என்னை எனது கல்லூரிக் காலத்திற்கு கொண்டு தள்ளுகிறது. ஒரு சமயம் நீங்கள் இன்னமும் விரிவாக விவாதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை வாசகன் அதை பூர்த்தி செய்யட்டும் என்று விட்டுவிட்டீர்களோ?
ஆண்டிரமீடா ஆதி மனிதர்கள்
July 30, 2008
வாடிக்கையாளர் சேவை பிரிவில் அந்தப் பெண் உற்சாகமாக கையசைத்தாள். பார்பி பொம்மை போல் ஒரு தோற்றம். 'ப்ளீஸ்... உங்களூக்கு எப்படி உதவி செய்வது?' என்றாள்.
'ஹி..ஹி... பாருங்கள்... இதை வாங்கி ஒரு வாரம் ஆகின்றது. ஆனால் காதில் செருகினால் வலி ஏற்படுகிறது. வேறு ஏதாவது மாற்றிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்'
'ஓ... ' என்றவள் நான் கொடுத்த ப்ளூடூத் காதணியை பார்த்தாள். செல்போனை காதில் வைத்து பேசுவதின் அபாயத்தைக் குறைக்க பயன்படும் கம்பியில்லா சாதனம். காதோடு மாட்டிக்கொண்டு காற்றோடு பேசுவது போல் பேசலாம். பொதுவாக இது மாதிரி வாங்கிய பொருளை மாற்றவோ / திரும்பி கொடுக்கவோ சென்றால் இந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் அதிகம் கேள்வி கேட்க மாட்டார்கள்
மீண்டும் ஒரு காதல் கதை!
July 24, 2008
கதை எழுதுவது எவ்வளவு சுலபம் பாருங்கள். மிகவும் இலகுவான வேலை. எங்கள் சேவை தளத்தில் பதிந்து கொள்ளுங்கள். நீங்கள் வெறும் குறிப்புகளை மட்டும் கொடுத்தால் போதும். முழுக் கதையையும் நிமிடங்களில் தயார். எழுத்தாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். "
"இந்த தானியங்கி கதை சொல்லியின் மூலம் நீங்கள் எவ்வளவு பெரிய புதினம் கூட எழுதலாம். 'போரும் அமைதியும்' போன்ற படைப்பை வெகு எளிதாக, விரைவாக உருவாக்க முடியும். "
இப்பொழுதுதான் சுரேஷ் அந்த கேள்வியை எழுப்பினான்.
சாயா சந்திரனின் பதிவுகள் சில...
July 21, 2008
சாயா சந்திரனின் பதிவுகள் சில உங்கள் பார்வைக்கு:
கவிதையாக நான்...
July 22, 2058
நேற்றைய எனது கவிதைக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். இவ்வளவு பேர் என் உணர்வுகளை பகிர்ந்து கொண்டது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தக் கவிதைகளை செல்பேசிகள் மூலம் உங்கள் காதலரிடையே பரிமாறிக் கொள்ளுங்கள். செம எஃபக்ட் இருக்கும் :-) என்ன எஃபகடா? சாரி. 40 வயதுக்கு மேலானவர்கள் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். :-)
கடவுளும் கந்தசாமியும்
July 18, 2008
கந்தசாமி முதன்முதலில் அந்த இடத்தைப் பார்க்கின்றார். எங்கும் ஒரு சுகந்த நறுமணம். பளிச்சென்று துடைத்து வைத்தார்ப் போல சுற்றுபுறம் தெளிவாக இருக்கிறது. நிறைய நடமாட்டங்களோடு, ஆனால் ஆரவாரம் இல்லாமல் இருக்கிறது. யாரும் பரபரப்போ, வேகமோ இல்லாமல் நேரத்தை நிறுத்தி வைத்த மாதிரி அமைதியாக இருக்கிறார்கள்.
அட அந்தப் பெரும் வலி என்னதான் ஆனது? இப்பொழுது என்னவோ எடைகுறைந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அருகே ஒரு குரல்
வெடிப்பு
July 11, 2008
என்னாது? வெடிக்கப் போறாங்களா?
ஆமாம்! எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். புதுசா கேக்குற?
எங்க?
இப்படிக்கா போவனும். தொலைவுல... நான் அங்கிட்டுதான் போயிட்டிருக்கேன். வாரதுன்னா, சுருக்க வா.
நான் வந்து என்னா பண்ணப் போறேன். நீங்க போங்க.