காமிரா கதைகள்

ஏழுவரை எண்ணு
February 6, 2010

...’ஆன் த கவுண்ட் ஆஃப் செவன்... சுட்டுடு சின்னு!’

அவர்கள் எப்பொழுது நுழைந்தார்கள், எப்படி நுழைந்தார்கள் என்று நாம் நினைத்துப் பார்க்கும் முன்னர் அவர்கள் இருவரும் அந்த அறையினுள் நுழைந்து முழுக் கட்டுபாட்டையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அறையின் நடுவே பெரிய் மேஜை இருக்க, இந்தப்புறம் வலதுபக்கமாக நின்று கொண்டிருக்கிறவன் மேற்சொன்ன வசனத்தை சொல்லி முடிக்கும் முன்னரே மேஜைக்கு அந்தப் பக்கம் இடது பக்கம் நின்றிருந்த, சின்னு என்று அழைக்கப்பட்டவன், துப்பாக்கியை தூக்கி நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் சந்தன பொட்டுக்காரரின் நெற்றிப் பொட்டில் வைக்கின்றான்.

‘க்ளக்’ என்று சத்தத்தோடு காக்-அப் செய்யும் சத்தம் கேட்கிறதா? வலது முழங்கையை நேராக்கி கீழுதட்டை கடித்துக் கொண்டு இறுகிய தாடையுடன் துப்பாக்கியின் குதிரையில் ஆட்காட்டி விரலை அழுந்த பதித்துக் கொள்கிறான் சின்னு.

‘ஒண்ணு... ரெண்டு...’ என எண்ண ஆரம்பித்தவனை இடைமறிக்கும் விதமாக
...[...முழுவதும்...]

விரிசல் விழுந்த நேரத்தில்
January 25, 2010

...இர: டேய்! லுக் அட் மீ... நான் சொல்றது புரிதா? சரியா சொல்றேனான்னு தெரியல... இது... இது... இந்த பவரை வச்சுகிட்டு என்னல்லாம் சாதிக்க முடியும்னு தெரியல... பட் பட்.. ஆர் யு லிசனிங்?

முத: படுத்தாதடா..இத முடிச்சிட்டுத்தான் மறுவேலை. ஏதாவது டிஸ்டர்பன்ஸ் மாத்தி மாத்தி வந்திடேயிருக்கு. (ஒருமுறை திரும்பி கண்ணாடி உடைந்த ஜன்னலின் திசையில் பார்க்கிறான்) முடிக்கனும் இப்ப.

இர: டேய்... டேய்ய்ய்ய்... ஐயய்யோ... இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்டா... (முதலாமவன் கைகளைப் பிடித்து வேலை செய்வதை தடுக்க முயன்றுகொண்டே) ஐ ஃபவுண்ட் த க்ராக்.

முத: என்ன கிராக்? கண்ணாடியிலயா? (உடைந்த கண்ணாடியின் திசையில் மீண்டும் பார்த்துக் கொண்டே) ஆமா. அத ஃபிக்ஸ் பண்ணனும்பா. சரியான ரவுடிப் பசங்களா இருப்பானுங்க போலருக்கு. ரஸ்ஸல் கடையிலேந்து கண்ணாடி வாங்கிட்டு வந்திடறியா? நைட் படுக்கறதுக்கு முன்னாடி மாத்திடலாம்.

இர: என்னாது? கண்ணாடி கிராக்கா? இடியட். நான் சொல்ல வர்றது (நிதானமாக அழுத்தந்திருத்தமாக) Timeline Crack மச்சான்...[...முழுவதும்...]

வாட்டர் கன்!
November 7, 2010

...”சின்ன உதவி வேணுமே”

“சொல்லுங்க” (பெண் குரல்)

“இந்த வாட்டர் கன் வேலை செய்யாதுன்னு பையன்கிட்ட சொல்ல முடியுமா? வீடு முழுசும் தண்ணீரா ஆக்கிடறான். அடம் தாங்க முடியல”

என்ன பேசுகிறார்கள் என்று புரியாத சிறுவன் குழப்ப முகத்தோடு... பேண்ட் கால்களை மீண்டும் பிடித்து இழுக்க...

“இருடா...”

(மாற்று மொழியில்) இப்போக் கூட பிறந்த நாளுக்கு பெரிய சைக்கிள் வாங்கியிருக்கோம். ஆனாலும் இந்த வாட்டர் கன் வேணும்னு ஒரே ரோதனை. நான் சொன்னா ஒத்துக்கமாட்டான். கொஞ்சம் நீங்க சொல்ல முடியுமா”

சிறுவன் அருகில் ஒரு பெண் குனிந்து மண்டியிட்டு அமர்கிறாள். அவன் கன்னத்தை வருடிக் கொடுத்து புன்னகைக்கிறாள்....[...முழுவதும்...]

நிமித்தகாரன்
November 15, 2009

...நிமி: (ஒரு இளக்காரச் சிரிப்பு சிரித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து மெதுவாக விடுகிறார். கண்களைத் திறந்து தீர்க்கமாக அவனைப் பார்த்துக் கொண்டு) கனவுகளில் தோன்றுவது எல்லாம் குறியீடுகள். உன் கனவில பூனை வந்தா உனக்கு எதிரிகள் உருவாயிட்டாங்கன்னு அர்த்தம். ஒட்டகம் வந்தா பெரிய செல்வம் கிடைக்கப் போகுது. அதேது நண்டு வந்தா love is brewing somewhere. ’நண்டுபிடி’ங்கிறது அதுதானே(சிரிப்பு). கனவில் வரும் இருட்டு எப்பவும் தனிமையையும், மாறுதலையும் குறிக்குது. சிற்சில உரசல்களின் போது ஏற்படும் சங்கட உணர்ச்சியைக் காட்டுது. வெள்ளை நிறம் உத்வேகத்தை குறிக்குது. ரோஜா நிறம் காதலைக் காட்டும். கனவுகளில் ஒருவர் படிகளில் ஏறிப் போற மாதிரி பாத்தா அது எதிர்பார்ப்புகளைக் குறிக்குது. ஓடிக்கிட்டு இருக்கற மாதிரி கனவு வந்தா சுதந்திரம்னு அர்த்தம். வானத்தைப் பாத்தா அளவில்லா சுதந்திரம்...

இளை: (மிகுந்த ஆர்வத்துடன்) கனவுல பொண்ணு வந்தா? நான் முழு நம்பிக்கையோடத்தான் கேக்கறேன். சொல்லுங்க ப்ளீஸ்... ப்ளீஸ்...[...முழுவதும்...]

எரனைக்கல் மோதிரம்
May 3, 2009

...லக்ஷ்: தமிழ் படிக்கவே தெரியுங்களா... ரொம்ப நல்லது. நான் டைரக்டர் எல்லாம் இல்லை. ரைட்டர் சினிமாவுக்கு கதை எழுதுவேன். சின்னச் சின்ன டிராக், டைரக்டருக்கு சீன் சொல்றது... இந்த மாதிரி. நீங்க தமிழ் சினிமா பாப்பீங்களா?

மனோ: இல்ல. நாட் மச். நான் சினிமாவே அவ்வளவா பாக்குறது இல்ல

லக்ஷ்: மாயவலைன்னு ஒரு த்ரில்லர் படம் லேட்டஸ்டா வந்திருக்கு பாருங்க. டைட்டில்ல என் பேர் கூட வரும். ரெண்டு மூணு க்ரௌட் சீன்ல கூட வருவேன். மொத்தம் முப்பத்தேழு செகண்ட் (கெக்கெக்கென என்ற சிரித்தவாறே) சின்ன வயசிலேந்து கதை கேட்டு, சொல்லி, எப்பவும் கதை நெனப்புதான் நமக்கு. (மனோவிடம் நெருங்கினாப்போல வந்து சத்தத்தை சற்றே குறைத்துக் கொண்டு) நம்மளத் தேடி கதைத் தானா வரும்.

மனோ: (அசுவாரசியமாக) ஓ!

லக்ஷ்: (இன்னமும் உற்சாகமாக) இப்பப் பாருங்க. இந்த பஸ்சோட டிரைவரை நீஙகளும் பாத்தீங்க. நானும் பாத்தேன். அவர நல்லா கவனிச்சீங்களா? அவருகிட்ட ஒரு கதை கிடைச்சுது. (கண்ணைச் சிமிட்டிக்கொண்டே) நாம பாக்க வேண்டிய இடத்துல சரியா பாத்தா... கெடச்சுரும்...[...முழுவதும்...]