September 15, 2009
‘சுபாஜி, கையைக் காட்டுங்கள்’ புன்சிரிப்போடு கேட்டான். கூட்டாளிகள் இல்லாத தனி ஆட்களாக நாங்கள் இருவரும் அவசர கூட்டணியாக சேர வேண்டியதாகிவிட்டது. அப்பொழுதுதான் நெருக்கத்தில் அவன் கண்களைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன். நீலத்தில் மிதக்கும் கனவுக் கண்கள். எனது புறங்கையை சுரண்டி
‘இதோ! இப்பொழுது உங்கள் முறை’ என்று இன்னொரு கயிற்றை நீட்டினான்.
கிருபா செய்து காட்டியது போல் செய்ததில் இருவரின் மணிக்கட்டையும் சுற்றி கைவிலங்குகள். ஆனால் நடுவில் இருக்கும் கயிறு ஒன்றுக்குள் ஒன்று பின்னிக் கொண்டு ஒரேச் சங்கிலியின் இரண்டு கண்ணிகள் போல் ஆகி விட்டது...[...முழுவதும்...]
உன் பார்வையில்
August 12, 2009
...உ...உங்க வண்டியா? அந்த ரைட்டு ரோட்டுல நெழலு இருக்கும் பாருங்க. பெரிய வேப்பமரம் இருக்கு. நல்ல பெரிய ரோடுதான். திருப்பிக்கலாம்’
ஏனோ மரியாதை தானாகவே ஒட்டிக் கொண்டுவிட்டது. எவ்வளவு மாறிவிட்டாள். இத்தனை அழகாக, வனப்பாக, எத்தனை போஸ்டர்களில் பார்த்திருக்கிறார். திரைகளில் மின்னும் தாரகையாக ஜொலித்தவள் நேரிலே... கண்ணாடியை கழற்றி விட்டு சிரிக்கும் கண்களோடு அவரைப் பார்த்தாள். அதே கொக்கிபோடும் பார்வை. மதலைகுமார் சட்டென்று சுதாரித்துக் கொண்டு,
‘உள்ளாறக்க வாங்க. இது ஆஃபீஸ் ரூம்பு. இப்படிக்கா வாங்க. தேனு... தேனு... அவளுக்கு உங்க படம்னா ரொம்ப புடிக்கும். இப்பக் கூட டிவி சீரியலல்லாம் வர்றீங்கப் போல. டேய் கோபி, அனு... யாரு வந்திருக்காங்கப் பாரு... நானு அடிக்கடி சொல்லிட்டிருப்பேன். ஏய்ய்ய்... தேனு...’ பதற்றமாக தடுக்கியபடி படியில் ஏறினார்...[...முழுவதும்...]
29C அபாயம்!
May 30, 2010
...மூன்று மாதங்களுக்கு முன்னர் பிரதாப் பெருமையாக சொன்னது இந்த பாதுகாப்பு சிஸ்டம் பற்றிதான்.
”பாண்டி! உங்க போஸ்டைத் தாண்டி அக்செஸ் கார்டு இல்லாம யாரும் உள்ளப் போயிற முடியாது. நீங்க பாக்காட்டினாலும் இந்த சிஸ்டம கப்புன்னு பிடிச்சிரும். பாருங்க பயோமெட்ரிக் ப்ரொஃபைலிங் கூட இருக்கு. முன்னெச்சரிக்கையா அபாயங்களை கண்டுபிடிச்சிடலாம்’
அவன் சொல்லாமல் நானாக புரிந்து கொண்டது இனி இந்த பாதுகாப்பு ராட்சசன்தான் அவர்களுக்கு தேவை. நான் தேவையில்லை...[...முழுவதும்...]
பிரக்ஞை
October 15, 2010
...‘இவந்தானே பாரதிராஜா சீரியல்ல போலிஸ்காரனா வர்றது... என்னது இது... சக்கர மாத்திரையா? இப்பதானே அரைமணி முன்ன சாப்பிட்டேன்’ என்று மாத்திரையை பார்த்தார்.
கலைந்து இருந்த கொண்டையை இறுக்கிக் கொண்டே அரை சாய்மான சேரில் தொப்பென்று உட்கார்ந்தவர் டிவியை அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டே ”இதிலேயும் காமினிதானே... எல்லாக் கதைலேயும் இவதானே நடிக்கிறா...” பிறகு தணிகையை திரும்பிப் பார்த்து
“உங்களுக்குத்தான் எப்பவும் டிவி சீரியல் பாத்திட்டு இருந்தாப் போறுமே. மாத்திரை, மருந்து, மண்ணாங்கட்டி ஒண்ணும் நியாபகத்துல இருக்காதே. சாப்பிட்டா சாப்பிடுங்க. இல்லாட்டி விடுங்க. நாளைக்கு உள்ளங்கால்ல அரிக்குதுன்னு விஸ்வநாதன்கிட்டப் போய்ட்டு வந்து எதுக்கெடுத்தாலும் ஊசியப் போட்டுடறான்னு சாபம் மட்டும் கொடுங்க. ஆள விடுங்க சாமி”...[...முழுவதும்...]
சந்தன நிற ஷெர்வானி
January 28, 2010
...தட்சிணாமூர்த்தி சிங்கப்பூருக்கு வேறு வேலை கிடைத்துப் போய்விட, ஆவுடை கூட வேலை செய்யும் சேவியரின் குடித்தன பர்டனராக அல்சூருக்கு ஜாகை மாறினான். ஆவுடையின் கூச்ச சுபாவத்திற்கும் சேவியரின் கலகலப்பிற்கும் நன்றாக ஒத்துப் போனது. கலகலப்பாக இருந்தாலும் சேவியர் மிகவும் ஆழமான ஆளாக இருந்தான். அவனுக்கு சொந்த ஊர் நாகர்கோவில். சேவியர் மிகவும் தீவிரமாக காதலித்து வந்தான் என்பது அவன் நடவடிக்கையிலிருந்து தெரிந்தது. நைட் ஷிஃப்டில் வேலையை வைத்துக் கொண்டு பகலில் காதலியோடு நிறைய ஊர் சுற்றினான். சில நாட்கள் வீட்டில் கண்ணாடியில் இருக்கும் ஒட்டு பொட்டுகளை பார்த்து ஆவுடை வெட்கப்பட்டிருக்கிறான். காதலின் மிச்ச விவரங்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இருவரும் நெருக்கமாகவில்லை...[...முழுவதும்...]
குட்டிசாத்தானும் மாயச் சங்கிலியும்
November 23, 2009
...ஆனா அதுக்காக பாய்ஸ்கிட்ட ஒரேயடியா சரண்டர் ஆயிற முடியுமா என்ன? முடிஞ்சவரைக்கும் முனைப்பா கேள்வி கேட்டு வெறுப்பேத்திகிட்டு இருக்கா.
சிட்டி மர்மச் சிரிப்போடச் சொல்றான் ‘அவனேதான் மேஜிக் பென்சில். தலகீழா நின்னு அவன் படம் வரஞ்சா அப்படியே அந்த சாமான் நெசத்துல வந்திரும்’
ராக்கி தலகீழா நின்னு காமிக்கிறான். அப்படியே பேலன்ஸ் பண்ணி மேல கீழ நடக்குறான்...[...முழுவதும்...]
பீஷ்ம பரம்பரை
September 24, 2009
’கணேஷ் & வசந்த்’ என்று இடது பக்கம் கண்ணாடியில் வர்ண ஸ்டிக்கர்களில் பெரிதாக எழுதியிருக்க வலது பக்கம் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். முதல் நாள் என்பதால் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. மாயா கண்களாலேயே வரவேற்றுவிட்டு ஃபோனில் யாருடனோ தொடர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் ரகுராமனும், செந்திலும் ஏதோ ஆவணங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பரபரப்பில் தெரிந்தது. இன்று அப்பாசாமி கேஸின் ஹியரிங் என்றுச் சொன்ன ஞாபகம். எனக்கு என்று அளிக்கப்பட்ட சின்னக் கூண்டு புதிய கணிணி, குறிப்பு புத்தகம், பேணா பென்சில் என்று எல்லாவித சாமக்கிரியைகளுடன் தயாராகவே இருந்தது. வழக்கறிஞனாகவோ, வழக்குரைஞனாகவோ சட்ட சூத்திரங்களில் ஜிலேபி சுற்றிக் கொண்டு சாதாரணமாக முடிந்து போயிருக்க வேண்டிய எனது முதல்நாள் திடீரென தடம் மாறியது மாயாவின் தொலைபேசி அழைப்பால்...[...முழுவதும்...]
குரு பெயர்ச்சி
September 13, 2009
...ஆமை புகுந்த வீடு மாதிரி இந்த இராமநாதன் என்ற பெயர் எனது வாழ்க்கையில் எதிர்ப்படும் போதெல்லாம் ஏதாவது சிக்கல்தான் என்று எனக்கு புரிய ஆரம்பித்தத்து அப்பொழுதுதான்.
மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒரு எம்.சி.ஏ படித்து புவனேஷ்வர் பக்கம் ஒரு வேலையும் தேடிக் கொண்டு விட்டேன். இரண்டாயிரம் ஆண்டு பிறந்தவுடன் கணிணிகள் எல்லாம் செயலற்றுப் போய்விடும் என்று ஊரெல்லாம் வதந்தியாக இருந்தக் காலம் அது. ’ஐ அம் ராம். ராம்நாத்’ என்று ஸ்டைலாக அறிமுகப்படுத்திக் கொண்டான் இராமநாதன் எம்பிஏ. ஐஐஎம்-மில் படித்துவிட்டு மார்கெட்டிங் மானேஜராக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தான். சரியாக இரண்டு மாதங்களில் y2k எல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை என்று மொத்தமாக பிளக்கை புடுங்கி புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அன்று எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இராமநாதன் என்று யார் எனது வாழ்க்கையில் வந்தாலும் உத்தரவாதமாக இரண்டு மாதங்களில் குரு பெயர்ச்சிதான்...[...முழுவதும்...]